தீபாவளி எல்லாருக்கும் நல்லபடியா போச்சா? ஸ்வீட்டெல்லாம் சாப்புட்டு நல்லா என்சாய் பண்ணியிருப்பீங்களே...நல்லாருங்கப்பு, நல்லாருங்க! ஏன் உனக்கு ஸ்டொமக் பர்னிங்னா கேக்கறீங்க? ஒரு பண்டிகையும் அதுவுமா உடம்பு சரியில்லாம 2 இட்லி, கொஞ்சம் ரசம் சாதம்னு சாப்ட்டு பாருங்க, அப்போ தெரியும்.
சரி, இப்படி ஓரு தியாகத்துக்கு அப்புறமும் இந்த பச்சமண்ணு களத்துல இறங்கியிருக்குன்னு அப்ரிஷியேட் பண்ணி எனக்கு விருதுலாம் எதுவும் குடுக்க வேண்டாம் ப்ளீஸ்...ப்ளீஸ் சொன்னா கேளுங்க...ப்ச்...அய்யோ, அடம் புடிப்பீங்களே! சரி, அப்புறம் உங்க இஷ்டம்!
***************************************************************************
நேத்து வி.சிறுத்தைகள் திருமாவளவனோட பேட்டிய ஜு.வில படிச்சேன். அதுல எனக்கு புடிச்ச வரிகள் "பலியிடுவது ஆடுகளைத்தான், சிங்கங்களை அல்ல" ப்பா...நல்ல பவர்ஃபுல்லான வார்த்தைகள். திருமா சார், எங்கயாவது இந்த இளவட்ட நடிகர்கள பாத்தீங்கன்னா ஒதுங்கிடுங்க. இல்லன்னா பஞ்ச் டயலாக் எழுதிதர சொல்லி, பயபுள்ளைக, உங்கள வசனகர்த்தாங்கற பேர்ல காமெடியனா ஆக்கிடுவாங்க.
நடிகர் விவேக்கை ஹீரோவா போட்டு ஆரம்பிச்சா, அந்த படங்களின் தயாரிப்பாளர்கள்லாம் ஏதாவது ஒரு பிரச்னையில மாட்டிக்கறாங்கன்னு கிசுகிசு பாணியில "நக்கீரன்" செய்தி வெளியிட்டிருக்கு. அட, புவனேஸ்வரி மேட்டர்ல விவேக், டவுசர் பாண்டி ரேஞ்சுக்கு பேசுனார் இல்ல, அதுக்கான பழிவாங்கல் இது. இத படிச்சதுலருந்து இனிமே நக்கீரன் வாங்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
இவ்ளோ கோபம் இருக்கறவங்க எதுக்கு இன்னும் சினிமா நியூஸை போட்டு பத்திரிகை நடத்தறாங்க. ஏன்னா, தமிழ்நாட்டுல துக்ளக் மாதிரி ஒண்ணு ரெண்டு பத்திரிகைகள் தவிர மத்தது எல்லாம் சினிமாவ நம்பிதான் இருக்கு. இவங்களுக்கு ஒரு பக்கத்துலயாவது சினிமா நியூஸை போட்டு பக்கத்துலேயே கவர்ச்சியா ஒரு ஹீரோயினோட ஸ்டில் போட்டாதான் மோட்சம் கிடைக்கும் போல!
விவேக்கை வெச்சு இதே டைப் கிசுகிசுவை குமுதமும் வெளியிட்டிருக்கு. அட ராமா! இதுல கூடவா உங்க ஒத்துமைய காட்டுவீங்க? ரொம்ப ஃபீல் பண்ண வெக்குறீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
***************************************************************************
இயக்குனர் பாலா அடுத்தது காமெடி படம் எடுக்கறாராம். ஓ காட், என்னால நம்பவே முடியல, பாலாவுக்கு ஏதாவது ஆயிடுச்சா? முதல் படத்துலருந்தே (ஒவ்வொரு படத்துலயும்), க்ளைமேக்ஸ்ல யாரவது ஒருத்தரை போட்டு தள்ளிகிட்டேதானே இருக்கறாரு. இப்போ காமெடின்னா என்ன பண்ணுவாரு? சே! எப்பேர்ப்பட்ட இயக்குனருக்கு இப்படி ஒரு தர்மசங்கடம்!
இந்த மேட்டருக்கும் மேல இருக்கற ஃபோட்டோக்கும் என்ன சம்பந்தம்? ஆங்ங்...பம்மல் கே. சம்பந்தம்..அட நீங்க வேற, நெட்ல தேடி பாத்ததுல பாலா சிரிக்கற மாதிரி கிடைச்ச ஒரே ஃபோட்டோ இதுதான்!
***************************************************************************
அதென்னடா இந்த பதிவுக்கு இப்படி ஒரு டைட்டில்னு நினைக்காதீங்க. ரெண்டு, மூணு மேட்டர் கலந்து குடுக்குறோம்ல, அதான்!
udambu epdi iruku
ReplyDeleteudambu sari illanu sonenga le athan ketten