Sunday, February 21, 2010

ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கு

எல்லா நாளைப்போல‌வே இன்றும் காலை எழுந்து, ஒரு கையில் காபியும், இன்னொரு கையில் செய்தித்தாளையும் எடுத்துப்பார்க்க‌, முத‌ல் ப‌க்க‌த்திலேயே "ர‌ஜினியும், வ‌டிவேலுவும் கொலை வ‌ழ‌க்கில் கைது!" என்று இருந்தால் உங்க‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்? குறைந்த‌ப‌ட்ச‌ம், புருவ‌ங்க‌ள் உய‌ர்ந்து, க‌ண்க‌ள் அக‌ல‌மாகி, கோப்பையில் இருந்து காபி சிறிது சிந்தி செய்தித்தாளில் ப‌ட்டு, உங்க‌ளுக்கு புரையேறும் அல்ல‌வா. ஏற‌க்குறைய‌ இதே நிலைதான் ஏற்ப‌ட்ட‌து ந‌வ‌ம்ப‌ர் 28, 1944 அன்று செய்தித்தாள் ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு.

ந‌வ‌ம்ப‌ர் 27, 1944 - இன்று சினிமாவில் இருக்கும் மூத்த‌ க‌லைஞ‌ர்க‌ள் யாராலும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நாள் இது. இந்த‌ நாளில்தான் அன்றைய‌ சூப்ப‌ர் ஸ்டார் எம்.கே.தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ரும், ந‌கைச்சுவை ந‌டிப்பில் பிராத‌ன‌ ந‌டிகராக‌ இருந்த‌ என்.எஸ்.கிருஷ்ண‌னும் ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கிற்காக‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.


யார் இந்த‌ ல‌ட்சுமிகாந்த‌ன்?

ஒரு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ஆக‌வேண்டும் என்ற‌ நியாய‌மான‌ ஆசை கொண்டிருந்த‌வ‌ர்தான் ல‌ட்சுமிகாந்த‌ன். ஆனால் குடும்ப‌ச் சூழ்நிலை கார‌ண‌மாக‌ அவ‌ரால் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ இய‌லாம‌ல் போன‌து. ஆனாலும் ச‌ட்ட‌ம் ப‌ற்றிய‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிந்திருந்தார். ச‌ட்ட‌த்தின் உத‌வியால் ஒரு "ட‌வுட்"ஆக‌வே (Tout - ப‌ண‌த்திற்காக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கு கேஸ் பிடித்து த‌ருவ‌து) வாழ்க்கையில் ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்தார்.

ஒரு ப‌த்திர‌த்தில் பொய் கையெழுத்திட்ட‌த‌ற்காக‌ ஃபோர்ஜ‌ரி வ‌ழ‌க்கில் கைது ப‌ண்ணி, போலீஸார் ல‌ட்சுமிகாந்த‌னை ராஜ‌முந்திரியில் உள்ள‌ சிறைச்சாலைக்கு, ர‌யில் மூல‌ம் அழைத்துச் சென்ற‌போது, ர‌யிலில் இருந்து குதித்துவிட்டார். பின்பு ஏற்ப‌ட்ட‌ தொட‌ர் விசார‌ணையில் இவ‌ர் ப‌ல‌ குற்ற‌வாளிக‌ளோடு தொட‌ர்பு கொண்டிருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. த‌ப்பித்த‌ சில‌ நாட்க‌ளிலேயே மீண்டும் போலீஸாரிட‌ம் வ‌ச‌மாக‌ மாட்டிக்கொள்ள‌, இம்முறை அந்த‌மான் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டார். பின்பு விடுத‌லையாகி மீண்டும் ம‌த‌றாஸுக்கு வ‌ந்த‌போது அவ‌ருக்கு தோன்றிய‌ ஒரே எண்ண‌ம், ஒரு ப‌த்திரிக்கை ஆர‌ம்பிப்ப‌‌து.

ந‌ய‌ன்தாரா ந‌டித்த‌ ச‌மீப‌ கால‌ ப‌ட‌ங்க‌ளில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிய‌ பட‌ம் என்ன‌?..........அடுத்த‌ வ‌ரி ப‌டிக்காம‌ல் ச‌ற்று யோசியுங்க‌ள். ஆத‌வ‌ன்? (காமெடி ப‌ண்ணாதீங்க‌:)), வில்லு? ஏக‌ன்? ச‌த்ய‌ம்? குசேல‌ன்? ஹூஹூம்....ப‌தில்...யார‌டி நீ மோகினி. ஆனாலும் எப்ப‌டி இன்னும் ந‌ய‌ன்தாராவால் லைம்லைட்டில் இருக்க‌முடிகிற‌து? சிம்பிள், எப்போதும் அவ‌ரைப் ப‌ற்றிய‌ கிசுகிசு வ‌ந்துகொண்டேயிருக்கிற‌து. இன்று வேண்டுமானால் சினிமாவில் நீடித்து இருப்ப‌த‌ற்கு இந்த‌ கிசுகிசுக்க‌ள் பெரும் உத‌வி செய்ய‌லாம். ஆனால் 1940க‌ளில் கிசுகிசு என்றாலே ஒருவித‌ அச்ச‌த்துட‌னே இருந்த‌ன‌ர் ந‌டிக‌, ந‌டிகைக‌ள்.

இந்த‌ அச்ச‌த்தை ந‌ன்றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டார் ல‌ட்சுமிகாந்த‌ன். "சினிமா தூது" என்றொரு மூன்றாம்த‌ர‌ ம‌ஞ்ச‌ள் ப‌த்திரிக்கையை ஆர‌ம்பித்து, அப்போது புக‌ழின் உச்சியில் இருந்த‌ அனைத்து க‌லைஞ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கையைப் ப‌ற்றி எழுத‌ ஆர‌ம்பித்தார். ஆர‌ம்பித்து வைத்த‌ இந்த‌ சுவார‌ஸ்ய‌ம் ம‌க்க‌ளின் ம‌த்தியில் ப‌சியெடுத்த‌ க‌ட‌ல் போல‌ ப‌ர‌வ‌, சுனாமி வ‌ந்த‌து என்ன‌வோ க‌லைஞ‌ர்க‌ளின் வாழ்க்கையில். வாரா வார‌ம் இப்ப‌த்திரிக்கையில் த‌வ‌றாது இட‌ம்பெற்ற‌வ‌ர்க‌ள், எம்.கே.தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கிருஷ்ண‌ன், திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ர் ஸ்ரீராமுலு நாயுடு ம‌ற்றும் டி.ஆர்.ராஜ‌குமாரி. ப‌ல‌ க‌லைஞ‌ர்க‌ள் ப‌ண‌ம் என்னும் உண‌வால் ல‌ட்சுமிகாந்த‌னின் வாயை அடைத்த‌ன‌ர், அடைத்த‌வ‌ரையெல்லாம் தூ‌ற்றி எழுத‌ ல‌ட்சுமிகாந்த‌னின் பேனாவுக்கு கூட‌ ம‌ன‌து வ‌ராது.

இவ‌ரின் எழுத்தால் வெறுத்துப்போன‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கே ம‌ற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர், அப்போது ம‌த‌றாஸ் க‌வ‌ர்ன‌ராக‌ இருந்த‌ ஆர்த‌ர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிட‌ம் (Arthur Oswald James Hope), "சினிமா தூது" ப‌த்திரிக்கை ப‌ற்றி விரிவாக‌ கூறி, அத‌னுடைய‌ ப‌திப்பை ர‌த்து செய்ய‌வேண்டும் என்றொரு ம‌னு ச‌ம‌ர்ப்பித்த‌ன‌ர். "தூது" வ‌ருவ‌தும் நின்ற‌து. ஆனால் ம‌ஞ்ச‌ள் ப‌த்திரிக்கைக்கு ம‌க்க‌ளிட‌ம் கிடைத்த‌ வ‌ர‌வேற்பை இழ‌க்க‌ ல‌ட்சுமிகாந்த‌ன் த‌யாராக‌ இல்லை. எப்ப‌டியாவ‌து மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்ற‌ வெறி கொண்டிருந்த‌ நேர‌ம‌து.

அப்போது லிங்கிச்செட்டித் தெருவில் "ஹிந்து நேச‌ன்" என்றொரு ப‌த்திரிக்கையை அன‌ந்த‌ய்ய‌ர் என்ப‌வ‌ர் ந‌ட‌த்திக்கொண்டிருந்தார். வெகு சுமாராக‌ போய்க்கொண்டிருந்த‌ இந்த‌ ப‌த்திரிக்கைதான் ல‌ட்சுமிகாந்த‌னுக்கு, வீட்டில் யாருமில்லாத‌போது ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌ரின் க‌ண்ணில் பட்ட‌ இனிப்பு போல‌ ஆன‌து. ப‌ண‌த்தைக் கொடுத்தார். வேலை முடிந்த‌து. அடுத்த‌ இத‌ழ் வெளியான‌து, ப‌திப்பாசிரிய‌ர் அன‌ந்த‌ய்ய‌ர், ஆசிரிய‌ர் ல‌ட்சுமிகாந்த‌ன்! :D அடித்தால் வ‌ரும் ஸ்மைலியைப் போல் ப‌ல் இளித்த‌ப்டியே மீண்டும் உலாவ‌ர‌த் தொட‌ங்கிய‌து பிர‌ப‌ல‌ங்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கை!


ந‌வ‌ம்ப‌ர் 8, 1944

வேப்பேரியில் உள்ள‌ த‌ன் ந‌ண்ப‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ருமான‌ ந‌ற்குண‌ம் என்ப‌வ‌ரை ச‌ந்தித்துவிட்டு, புர‌சைவாக்க‌த்தில் உள்ள‌ த‌ன் வீட்டுக்கு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தார் ல‌ட்சுமிகாந்த‌ன். திடீரென்று சைக்கிள் ரிக்ஷா பின்ப‌க்க‌மாக‌ சாய்ந்து விழுந்த‌து! ரிக்ஷாவின் பின்புற‌ம் இருவ‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர் - வ‌டிவேலு & நாக‌லிங்க‌ம் (வ‌டிவேலுவுக்கும் ல‌ட்சுமிகாந்த‌னுக்கும் வீடு காலி செய்யும் விஷ‌ய‌த்தில் பிர‌ச்னை ஏற்ப‌ட்டு ஏற்க‌ன‌வே முன்விரோத‌ம் இருந்த‌து).

இந்த‌ நேர‌த்தில் ம‌ல்லாந்து விழுந்து கிட‌ந்த‌ ல‌ட்சுமிகாந்த‌னை வ‌டிவேலு க‌த்தியால் குத்தினான். திகைத்து நின்ற‌ ரிக்ஷாக்கார‌ரை நாக‌லிங்க‌ம் அடித்து விர‌ட்டினான். பின்பு த‌ன் ப‌ங்குங்கு நாக‌லிங்க‌மும் கையிலிருந்த‌ பேனாக‌த்தியால் ல‌ட்சுமிகாந்த‌னை குத்தினான். வ‌ந்த‌ வேலை முடிந்த‌வுட‌ன் அங்கிருந்து த‌ப்பித்து ஓடின‌ர் இருவ‌ரும். ஆனால் ல‌ட்சுமிகாந்த‌ன் சாக‌வில்லை........

முடிவு அடுத்த‌ (பிப்ர‌வ‌ரி 25, 2010) ப‌திவில்.......

28 comments:

  1. சுவாரசியமாய் இருக்கிறது, அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  2. தெரிந்த பெயர்கள் ஆனால் அறியாத தகவல்கள்.தொடருங்கள்.

    ReplyDelete
  3. //முடிவு அடுத்த‌ (பிப்ர‌வ‌ரி 25, 2010) ப‌திவில்.......//

    அதென்ன சரியா பிப்ரவரி முன் திட்டம்:)

    ReplyDelete
  4. நான் 25 ஆம் தேதி கேள்வி கேக்குறேன்... :))

    ReplyDelete
  5. அருமைங்க. தெரிந்த விஷயத்தை கூடுதல் தகவல்களோடு அழகாய் சொல்லியிருக்கீங்க! நடையும் அருமை. வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  6. ரகு,
    க்ரைம் ரிப்போர்ட்டர் ஸ்டைல்ல கொலை கேஸை நல்லா எழுதியிருக்கீங்க...

    வாழ்த்துக்கள்...

    வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி வரை தீர்ப்பு ஒத்திவைப்பு என்று ஜட்ஜ் சொல்ற மாதிரி சொல்லி ஆவலை கிளப்பி விட்டுட்டீங்க...

    காத்திருக்கிறேன்...

    -
    ட்ரீமர்

    ReplyDelete
  7. படம் தொடங்கவே இல்லை அதற்குள் இடைவேளையா?

    ReplyDelete
  8. நானும் லட்சுமிகாந்தன் பெயரை கேள்விப்பட்டிருக்கேன்.இப்போதான் அவரைபற்றிய தகவல் தெரிந்துக்கொண்டேன்.அதற்க்குள் தொடரும் போட்டுட்டிங்களே...

    ReplyDelete
  9. இது ரொம்பப் பிரபலமான வழக்கு. அடிக்கடி கேள்விப்பட்ட பெயர். ஆனால், இப்போ உங்க பதிவிலிருந்து தான் விஷயம் தெரியுது. நல்ல தகவல்கள் ரகு.

    என்ன, ஒரே சீரியஸ் களமா இறங்கிட்டீங்க.

    ReplyDelete
  10. நல்ல சுவாரசியம். அடுத்த தொடருக்கு வெய்ட்டிங். சீக்கிரம் போடுங்க.

    ReplyDelete
  11. விறுவிறுப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, ப‌திவு ரொம்ப‌ நீள‌மா போகுதோன்னு ஒரு ஃபீல் இருந்த‌து. அத‌னால‌தான் முடிவு அடுத்த‌ ப‌திவில்னு போட்டுட்டேன்:)

    ந‌ன்றி ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன், ஒரு திட்ட‌மும் இல்ல‌ங்க‌, சும்மா ரெண்டு மூணு நாள் இடைவெளி விட்டு எழுத‌லாமேன்னுதான்:)

    ReplyDelete
  13. ந‌ன்றி ஜெட்லி, நீங்க‌ அதுக்கு முன்னாடியேகூட‌ கேக்க‌லாம், த‌ப்பேயில்ல‌:)

    ந‌ன்றி பிர‌பாக‌ர், முத‌ல் க‌ருத்துக்கும் வ‌ருகைக்கும்:)

    ReplyDelete
  14. ந‌ன்றி ஹ‌ரீஷ், க்ரைம் க‌தைக‌ள்தான் எழுத‌ வ‌ர‌மாட்டேங்குது, ச‌ரி ஒரு க்ரைம் கேஸையாவ‌து எழுத‌லாம்னுதான்:)

    ந‌ன்றி ம‌ல‌ர், ல‌ட்சுமிகாந்த‌ன் ஃப்ளாஷ்பேக்லாம் ப‌ட‌த்துல‌ சேத்துக்க‌மாட்டீங்க‌ளா?....:)

    ReplyDelete
  15. ந‌ன்றி மேன‌கா மேட‌ம், நிறைய‌ எழுதினா போர‌டிச்சுடுமோன்னுதான் இதோட‌ நிறுத்திட்டேன், அடுத்த‌ ப‌திவுல‌ க‌ண்டிப்பா நிறைவு அடைஞ்சுடும்:)

    ந‌ன்றி விக்கி, ரொம்ப‌ மொக்கையாவே எழுத‌வேணாம்னுதான் இப்போ கொஞ்ச‌ம் சீரிய‌ஸ்:)

    ந‌ன்றி வித்யா, வ‌ருகைக்கு ந‌ன்றி:)

    ReplyDelete
  16. தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  17. நல்ல ஃப்ளோ பாஸ்..!

    ReplyDelete
  18. You compared the past and present and said, such a news of murder in which their heroes are involved, will shock people today.

    In my opinion, it wont. Today such revenge murders out of previous enmity is so common that yesterday a lawyer was murdered in the SAME FASHION Lakshmikaanthan was murdered, while travelling by a rickshaw, in broaddaylight in a chennai street.

    If cine actors get caught, too, it wont raise eyebrows, because people will know the actors will easily escape by engaging good lawyers, and finally, make people believe they are character-assassinated. Their fans will ensure that correct stories are propogated about them to brainwash people,as we see today in blogs about Ajit case.

    Since cinema was just a fledgling industry then, and famous actors were held in high esteem then, people were shocked to know that their icons could murder.

    Today, they wont get shocked. They know their icons are as ordinary as anyone in real life.

    ***

    You have written well with lots of wits. I have heard about this case, exactly as you describe, and yet, continue.

    ReplyDelete
  19. ந‌ன்றி ஜோதிஜி

    ந‌ன்றி ராஜு

    ReplyDelete
  20. //If cine actors get caught, too, it wont raise eyebrows//

    Thanks for your comment Jo, But I can't accept what you said.

    Hope you might have seen the news channels when Salman Khan's infamous hit-and-run case happened. This case had been read in headlines even before any political news.

    So I feel it would definitely be a shock when you come to know that your favorite celebrity is involved in a murder. I guess generally people would feel the same.

    I didn't say you should feel the shock. I said you may feel. But you think in another way. After all, opinion differs:)

    ReplyDelete
  21. ந‌ன்றி பேநா மூடி

    ReplyDelete
  22. சுவாரஸ்யமா இருக்கு...

    ReplyDelete
  23. சுவாரசியமாய் இருக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  24. ந‌ன்றி அண்ணாம‌லையான்

    ந‌ன்றி நிகே

    ReplyDelete
  25. பதிவை துவங்கிய விதமே அட்டகாசம் ரகு. பதிவை படிக்கும் ஆர்வத்தை முதல் வரியில் கொண்டு வந்து விட்டீர்கள். இந்த வழக்கு பற்றி அறிந்தாலும் நீங்கள் செம detailed ஆக எழுதி உள்ளீர்கள். நிறைய home work செய்து இந்த பதிவு எழுதி உள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
  26. வ‌ழ‌க்க‌றிஞர்கிட்டேயிருந்தே பாராட்டு, இத‌விட‌ வேற‌ என்ன‌ வேணும், ந‌ன்றி யுவ‌ர் ஹான‌ர்:)

    ReplyDelete
  27. How are you Raghu? I think you are busy since there are no posts for a long time.

    உங்களின் இந்த பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

    ReplyDelete