Sunday, February 14, 2010

யாருக்கும் தெரியாமல்...

டிஸ்கி: நானே ஒத்துக்க‌றேங்க‌, கொஞ்ச‌ம் கெள‌த‌ம் ப‌ட‌ ஸ்மெல் அடிக்கும். இருந்தாலும் க‌ர்ச்சீப் க‌ட்டிகிட்டு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ('க‌'னாவுக்கு, 'க‌'னாவுக்கு, 'க‌'னா...எப்பூடி!) ப‌டிச்சிடுங்க‌. ஓட்டெல்லாம் போட‌ணும்னு அவ‌சிய‌ம் இல்ல‌, க‌மெண்ட் போட்டாகூட‌ போதும். என்னோட‌ எழுத்தை திருத்திக்க‌ற‌துக்கு உப‌யோக‌மா இருக்கும்:)


திங்க‌ள் காலை 8:42

அவ‌ளைப் பார்த்த‌வுட‌ன்....ம‌ன்னிக்க‌வும்....அதைப் பார்த்த‌வுட‌ன் சுல‌ப‌மாக‌த் தெரிந்த‌து, இது த‌ற்கொலை அல்ல‌, கொலைதான் என்று. க‌ண்க‌ள் இர‌ண்டும் அக‌ல‌மாக‌ விரிந்துகிட‌க்க‌, ஹால் சோபாவில் இதோ இந்த‌ வார்த்தையைப் போல‌ து-லை-க‌-ந் கிட‌ந்தாள்...ம‌றுப‌டியும் ம‌ன்னியுங்க‌ள்..கிட‌ந்த‌து. பார்த்த‌வுட‌ன் இது கொலைதான் என்று சொல்வ‌த‌ற்கு நீங்க‌ள் என்னைப் போல‌ ராம‌ச்ச‌ந்திர‌ன் ஐபிஎஸ்ஸாக‌ இருக்க‌ வேண்டிய‌தில்லை. நிறைய‌ த்ரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ளை பார்த்திருந்தாலே போதுமான‌து.

விதவித‌மான‌ ஆங்கிளில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தன‌ர், ஸ்மைல் செய்திருந்தால் அழ‌காக‌த்தான் இருந்திருப்பாள். வீட்டை சுற்றிப் பார்த்தேன், எதுவும் திருடு போன‌த‌ற்கான‌ அடையாள‌ம் இல்லை. குறைந்த‌ப‌ட்ச‌ம் ப‌டுக்கை அறை பீரோகூட‌ திற‌க்க‌வில்லை. ஹாலிலும் எதுவும் க‌லைந்து இருக்க‌வில்லை. அவ‌ள் (ஒரு தேவ‌தையை அது என்று சொல்ல‌ என்னால் இய‌ல‌வில்லை, ஆம்...இற‌ந்தாலும் அவ‌ள் தேவ‌தை போல‌த்தான் இருந்தாள்) அம‌ர்ந்திருந்த‌ சோபா ம‌ட்டும்தான் கீழே விழுந்திருந்த‌து.

நான் அவ‌ள் அது என்று சினிமா டைட்டிலைப்போல் சொல்லிக்கொண்டேயிருந்தால் உங்க‌ளுக்கு விவ‌ர‌ம் தெரிய‌வேண்டாமா? ம், சொல்கிறேன்....ஒரு நிமிட‌ம், அவ‌ளை போஸ்ட்மார்ட்ட‌த்திற்கு அனுப்பிவிட்டு வ‌ருகிறேன்......இருங்க‌ள், சில‌ ஃபார்மாலிட்டீஸ் வேறு இருக்கிற‌து......மாலை சொல்கிறேனே.



மாலை 4:00

ம், இப்போது சொல்கிறேன்......அது சாம‌ர்ஸ் அபார்ட்மெண்ட்ஸின் (Charmers Apartments) நான்காவ‌து மாடி, இந்த‌ ஃப்ளாட்டில் வ‌சிக்கும் சுந‌ந்தாதான் கொலை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறாள். சுந‌ந்தா கால் செண்ட‌ரில் ப‌ணிபுரிப‌(ந்த‌)வ‌ள். 24 வ‌ய‌து, சினிமா ஹீரோயின் போல‌ இல்லாவிட்டாலும், பார்க்கும் யாரையும் வ‌சீக‌ரிக்க‌க்கூடிய‌, அழ‌கு, அள‌வு, உய‌ர‌ம் அனைத்தும் கொண்ட‌வ‌ள். கொலை ந‌ட‌ந்த‌து நான் வ‌சிக்கும் ஏரியாவில் என்ப‌தால் நானே நேர‌டியாக‌க் க‌ள‌மிற‌ங்கியிருக்கிறேன்.

நான் என்றால்? அதான் முத‌ல் ப‌த்தியிலேயே சொன்னேனே, ச‌ரி விடுங்க‌ள், இத‌ற்காக‌ நீங்க‌ள் ம‌றுப‌டியும் முத‌ல் ப‌த்தி ப‌டிக்க‌வேண்டாம். நான் ராம‌ச்ச‌ந்திர‌ன் ஐபிஎஸ், அஸிஸ்டெண்ட் க‌மிஷ‌ன‌ர் ஆஃப் போலீஸ். சொல்வ‌த‌ற்கே கொஞ்ச‌ம் கூச்ச‌மாக‌த்தான் இருக்கிற‌து. முன்பெல்லாம் த‌மிழ் சினிமாவில் போலீஸை வைத்து காமெடி செய்வ‌தென்றால், க்ளைமேக்ஸில் ச‌ண்டை முடிந்த‌ பிற‌கு போலீஸார் வ‌ருவார்க‌ள். இப்போதேல்லாம் ஹீரோவை அஸிஸ்டெண்ட் க‌மிஷ‌ன‌ராக‌ காட்டி காமெடி செய்கிறார்க‌ள்.

சமீப‌ நாட்க‌ளில் ஏன் அபார்ட்மெண்ட்டுக‌ளில் திருட்டு, கொலை போன்ற‌வை ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ நட‌க்கிற‌து? அக்க‌ம் ப‌க்க‌ம் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து ஒதுங்கியே இருப்ப‌துதான். திடீரென்று ஒரு உத‌வி தேவைப்ப‌ட்டால், ந‌ண்ப‌ர்க‌ளோ, உற‌வின‌ர்க‌ளோ....அப்புற‌ம்தான். முத‌லில் ப‌க்க‌த்து ஃப்ளாட்டில்/வீட்டில் குடியிருப்ப‌வ‌ர்க‌ளால்தான் உத‌வ‌ முடியும். நான் அறிவுரை கூற‌வில்லை, உங்க‌ள் ந‌ல்......இதோ அடாப்ஸி ரிப்போர்ட் வ‌ந்துவிட்ட‌து (நான் அவ‌ச‌ர‌ப்ப‌டுத்திய‌த‌ன் கார‌ண‌த்தால்). ம்...பெய‌ர், வ‌ய‌து, உய‌ர‌ம்...இதெல்லாம் என‌க்குத் தெரியும். இதோ...என‌க்கு வேண்டிய‌து, கொலையுண்ட‌ வித‌ம் - த‌லைய‌ணையை வைத்து முக‌த்தில் அழுத்தி மூச்சுத் திண‌ற‌ திண‌ற‌ சாக‌டித்திருக்கிருக்கிறான். ஆம், 'றான்'தான், ஒரு பெண் இப்ப‌டி கொலை செய்திருப்பாள் என்று என‌க்குத் தோன்ற‌வில்லை.

இர‌வு 9:15

இதுதான் அவ‌ள் ப‌ணிபுரிந்த‌ கால் செண்ட‌ர். பெய‌ர் கேட்காதீர்க‌ள், இப்போது அது முக்கிய‌மில்லை. ஒரு க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ ஹாலை அங்க‌ங்கு பிரித்து கேபின்க‌ளால் நிர‌ப்பிய‌து போலிருந்த‌து அந்த‌ ஃப்ளோர். காலையிலேயே அபார்ட்மெண்ட்டில் உள்ள‌வ‌ர்க‌ளையெல்லாம் விசாரித்து முடித்துவிட்டேன். சுந‌‌ந்தாவின் டீமில் இருப்ப‌வ‌ர்க‌ளையெல்லாம் இப்போது விசாரிக்க‌வேண்டும். போலீஸ் உடையில் இல்லாம‌ல், அவ‌ர்க‌ளில் ஒருவ‌னைப்போல‌ சாதார‌ண‌மாக‌, க்ரே நிற‌ டிஷ‌ர்ட்டிலும், க‌றுப்பு நிற‌ ஜீன்ஸிலும் புகுந்திருந்தேன்.

நான் விசாரிப்ப‌த‌ற்கென்று த‌னி க‌ண்ணாடி அறையை ஒதுக்கியிருந்தார்க‌ள். உள்ளே பேசுவ‌து வெளியே கேட்காது. முத‌லில் அவ‌ர்க‌ளுடைய‌ இன்றைய‌ அட்டெண்டென்ஸை கேட்டேன். வ‌ந்த‌து. விநாய‌க், பாலாஜி, சுந்த‌ர், ராம்பாபு ஆகியோர் டூர் சென்றிருப்ப‌தால் லீவில் இருப்ப‌தாக‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து. உட‌ல் நிலை ச‌ரியில்லாத‌ கார‌ண‌த்தால் க‌ல்ப‌னா, ப்ரிய‌த‌ர்ஷினி, கிருஷ் ஆகியோர் வ‌ர‌வில்லை. முகேஷ் ஷ‌ர்மா...வ‌ர‌வில்லை, நோ இன்ஃப‌ர்மேஷ‌ன் என்றிருந்த‌து. ம்ம்...ஏன் நோ இன்ஃப‌ர்மேஷ‌ன்? போலீஸ்கார‌ன் புத்தி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்த‌து.....முகேஷ், உன்னை மைண்ட்ல‌ வெச்சுக்க‌றேன்.

பொறுமையாக‌ ஒவ்வொருவ‌ரையும் விசாரித்தேன். எல்லோரும் த‌ன்னுட‌ன் ப‌ணிபுரிந்த‌ ஒரு பெண் கொலை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறாள் என்ற‌ அதிர்ச்சியைத்தான் வெளிப்ப‌டுத்தினார்க‌ளே த‌விர‌, என‌க்கு உப‌யோக‌மாக‌ ஒரு த‌க‌வ‌லும் கிடைக்க‌வில்லை. டீம் மெம்ப‌ர்ஸ் எல்லோரையும் விசாரித்தாகிவிட்ட‌து. இன்னும் டீம் லீட் ச‌ஞ்ச‌ய் ம‌ட்டுமே பாக்கி. ம‌ணி பார்த்தேன், 11:40. சஞ்ச‌ய் உள்ளே வ‌ர‌....

"ஹலோ ஸார், ஐ'ம் ச‌ஞ்ச‌ய்"

"ஹ‌லோ ச‌ஞ்ச‌ய், இந்நேர‌ம் உங்க‌ளுக்கு தெரிஞ்சிருக்கும், எல்லாரும் சொல்லியிருப்பாங்க‌, நான் ஏஸிபி ராம‌ச்ச‌ந்திர‌ன்"

"ஓ யா, சொன்னாங்க‌ ஸார், ஹ‌வ் கேன் ஐ ஹெல்ப் யூ?"

ச‌ம்பிர‌தாய‌ ம‌ற்றும் ச‌ந்தேக‌ கேள்விக‌ளைக் கேட்டேன். ஹூஹூம், ப‌தில்க‌ள் எல்லாமே க‌ட‌ந்த‌ இர‌ண்டு ம‌ணி நேர‌மாக‌ எல்லோரும் அரைத்த‌ அதே மாவுதான். ச‌ட்டென்று தோன்றிய‌து, கேட்டேன்.

"ச‌ஞ்ச‌ய், இங்க‌ முகேஷ்ங்க‌ற‌வ‌ர் யாரு?"

"யூ மீன் முகேஷ் ஷ‌ர்மா?"

"யெஸ்"

"முகேஷும் ஒரு டீம் லீட்தான் ஸார், என்னோட‌ ஃப்ரெண்டுதான்"

"அவ‌ர் இன்னைக்கு ஏன் வ‌ர‌லைன்னு உங்க‌ளுக்குத் தெரியுமா?"

"தெரிய‌ல‌ ஸார், இன்னைக்கு காலைல‌ ஒரு ப‌ட‌ம் போக‌லாம்னு ப்ளான் ப‌ண்ணியிருந்தோம், நைன் த‌ர்ட்டிக்கு நான் கால் ப‌ண்ணேன், ப‌ட் நாட் ரீச்ச‌பிள்னே வ‌ந்துகிட்டு இருந்த‌து. எங்கே போனான்னே தெரிய‌ல‌"

"ஆஃபிஸ்க்கும் இன்ஃப‌ர்ம் ப‌ண்ண‌ல‌, அதான் உங்க‌கிட்ட‌..."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே ச‌ஞ்சய்யின் மொபைலில் "ஆறரை கோடி பேர்க‌ளில் ஒருவ‌ன், அடியேன் த‌மிழ‌ன் நான் உங்க‌ள் ந‌ண்ப‌ன்" என்று ர‌ஹ்மான் பாட ஆர‌ம்பித்தார்.

"இருங்க‌ ஸார், ஏதோ புது ந‌ம்ப‌ரா இருக்கு, அட்டெண்ட் ப‌ண்ணிட்டு வ‌ர்றேன்" வெளியே கிள‌ம்ப் ச‌ஞ்ச‌ய் முய‌ற்சிக்க‌, ச‌ட்டென்று ஒரு பொறி அல்ல‌, தீப்ப‌ந்த‌மே த‌ட்டிய‌து.

"மிஸ்ட‌ர் ச‌ஞ்ச‌ய், இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்க‌ இங்கேயே ல‌வுட்ஸ்பீக்க‌ர்ல‌ போட்டு பேச‌முடியுமா....ப‌ர்ச‌ன‌ல்னா ஓகே, நோ ப்ராப்ள‌ம், புது ந‌ம்ப‌ர்னு சொல்ல‌வேதான் கேக்குறேன், ப‌ட் ஐ வோன்ட் இன்ஸிஸ்ட் யூ"

"ஷ்யூர் ஸார், இட்ஸ் நாட் அட் ஆல் எ ப்ராப்ள‌ம்". ச‌ஞ்ச‌ய் ப‌ச்சை ப‌ட்ட‌னை அழுத்தி ல‌வுட்ஸ்பீக்க‌ரில் வைத்தான்.

"ஹலோ, சஞ்சய்! முகேஷ் பேச‌றேன்டா"

"ஏ, முகேஷ், எங்க‌டாயிருக்க‌? யார் ந‌ம்ப‌ர் இது?"

"மச்சான், நான் இப்போ பெங்களூரூல சித்த‌ப்பா வீட்ல இருக்கேன். ஆஃபிஸ்ல‌ ஒரு மாசம் லீவு சொல்லிடு, கேட்டா டைபாய்டு ஃபீவ‌ர்னு சொல்லு, ஓகே? இதுதான் என்னோட புது மொபைல் ந‌ம்ப‌ர், யாருக்கும் தரவேணாம். உனக்கு நாளைக்கு நைட் கால் பண்றேன், ஓகேவா, பை"

சஞ்ச‌ய் கால் க‌ட் செய்துவிட்டு என்னை பார்த்தான். அவ‌ன் முக‌ம் மாறிய‌து. என் முக‌த்தில் தெரிந்த‌ ஒரு சின்ன‌ ஸ்மைலை பார்த்த‌ அவ‌ன்.....

"இல்ல‌ ஸார், முகேஷ் ரொம்ப‌ ந‌ல்ல‌ டைப், அவ‌னா இருக்கா..." அவ‌ன் பேசி முடிப்ப‌த‌ற்குள் "வாங்க‌ போலாம்" என்றேன்.

செவ்வாய் காலை 5:27

முகேஷ் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான், தான் ஒருதலையாக சுநந்தாவை காதலித்தது (சஞ்சய்யிடம் கூட இந்த விஷயத்தை பகிர்ந்துகொள்ளவில்லை), ப்ரோபோஸ் பண்ண சுந‌‌ந்தாவின் அபார்ட்மெண்ட்டுக்குச் சென்றது, தான் இன்னொருவரை காதலிப்பதாக அவள் சொன்னது, அவர்களுக்குள் வாக்குவாதங்கள் நடந்தது, பிறகு அவளை கோபத்தில் சோபாவில் கிட‌ந்த‌ தலையணையை வைத்துக் கொலை செய்தது, அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

லீக‌ல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, ராம‌ச்ச‌ந்திர‌ன் மாலை 6:30 மணிக்கு மீடியாவுக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தார். சில கேள்விகளுக்குப் பின், "இப்போதைக்கு அவ்வளவுதான், இதுக்கு மேல கேக்காதீங்க, ப்ளீஸ்" என்றார்.

இரவு 9:45

ராம‌ச்ச‌ந்திர‌ன் தன்னுடைய வீட்டிற்கு வந்தார். இரண்டு நாட்களாக தூங்காததில் அவரது இரு கண்களும் சிவந்திருந்தது. வீட்டின் உள்ளே வந்து கதவை தாழிட்டார். டிவி ஆன் செய்து ஆதித்யா சேன‌லை பார்‌த்தார். வ‌டிவேலு "நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்" என்று அறிவித்துக்கொண்டிருந்தார். முகேஷ் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தார். அதில் கொஞ்சம் வெற்றியின் பெருமிதம் இருந்தது........

புதன் காலை 11:00

க‌மிஷ‌ன‌ர், "என்ன ராம், கண்ணெல்லாம் இப்படி வீங்கீயிருக்கு, என்னாச்சு?" என்றார்.

"ஒண்ணுமில்ல சார், சுந‌ந்தா ம‌ர்ட‌ர் கேஸ்ல ரெண்டு நாளா பிஸியா இருந்துட்டேன், சரியா தூக்கமில்ல அதான்".

"டேக் கேர் ஆஃப் யுவ‌ர் ஹெல்த் ராம், இன்னைக்கு லீவ் எடுத்துக்கோங்க. நாளைக்கு உங்கள பழையபடி என‌ர்ஜ‌டிக்கா நான் பாக்கணும், கிள‌ம்புங்க‌ முத‌ல்ல‌"

"ஓகே, தேங்க்யூ ஸார்"

ராம‌ச்ச‌ந்திர‌ன் வீட்டுக்குத் திரும்பினார்.தூக்கமில்லாததுதான் அவருடைய தளர்வுக்குக் காரணம். ஆனால் அது மட்டும்தானா? முன் நாள் இரவு நடந்ததை நினைவு கூர்ந்தார். டிவி ஆன் செய்து ஆதித்யா சேன‌லை பார்‌த்தார். வால்யூம் ச‌ற்று அதிகமாக வைத்துவிட்டு கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தார். அதில் கொஞ்சம் வெற்றியின் பெருமிதம் இருந்தது. இரண்டு நிமிடம்தான், அதற்கு மேல் அவரால் முடியவில்லை, அழுதார், வாய்விட்டு அழுதார். இரவு முழுக்க அழுதுகொண்டேயிருந்தார். அவர் அழுவதை யாருக்கும் தெரியாமல் வ‌டிவேலு, விவேக், ச‌ந்தான‌ம் ஆகியோர் காப்பாற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அழுதுகொண்டேயிருந்தார், கொலை செய்யப்பட்ட தன் காதலி சுந‌ந்தாவை நினைத்து நினைத்து......காக்கிச் சட்டை தோற்று, காதல் ஜெயித்துக்கொண்டிருந்தது.....

21 comments:

  1. பாஸ்.. நல்லா இருக்கு..! அந்த அடைப்புக்குறிகளுக்குள்ள வர்றது தேவையில்லாதது மாதிரி தெரியுது பாஸ். அத போடாம இருந்திருந்தா, நல்ல Impact இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. இன்னைக்குத் தான் உங்க வலைப்பூவைப் பார்க்கிறேன். நல்லா இருக்கு.
    கதை நல்ல த்ரில்லர். காதலர் தினமும் அதுவுமா ஒரு காதல் த்ரில்லர். சூப்பர்!

    ReplyDelete
  3. ரொம்ப Artificial இல்லாம, எதார்த்தமா இருந்தது...
    ரசித்தேன்...

    ReplyDelete
  4. ரொம்ப சுஜாதாவை வாசிக்காதிங்கன்னா கேக்குறீங்களா...

    ம், நல்ல முயற்சி.

    ReplyDelete
  5. நல்ல ட்ரை. அங்கங்க கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது:))

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்குது

    ReplyDelete
  7. சுஜாதா ஸ்டைல்....
    ஈரம் படம் மாதிரி இருந்தது....

    ReplyDelete
  8. ந‌ன்றி இய‌ற்கை

    ந‌ன்றி ராஜு, சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ரொம்ப‌ நீட்டி சொல்ல‌வேணாம்னு அடைப்புக்குறிக்குள்ளேயே போட்டுட்டேன், குறிப்பிட்ட‌மைக்கு ந‌ன்றி, அடுத்த‌ முறை மாத்திட‌றேன்

    ந‌ன்றி அண்ணாம‌லையான்

    ReplyDelete
  9. ந‌ன்றி பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை, ஏங்க‌ பெய‌ரை சொல்ல‌லாமே:)

    ந‌ன்றி த‌ர்மா

    ReplyDelete
  10. என்ன‌ ப‌ண்ற‌து விக்கி, த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள் த்ரில்ல‌ர் ப‌க்க‌ம் அதிக‌ம் வ‌ர‌மாட்டேங்குறாங்க‌ளே, அதான் சுஜாதா வ‌ண்டியிலேயே ப‌ய‌ணம் தொட‌ருது, ந‌ன்றி:)

    ந‌ன்றி வித்யா, அடுத்த‌ முறை எழுதும்போது கொஞ்ச‌ம் பெட்டரா ட்ரை ப‌ண்றேன்

    ReplyDelete
  11. ந‌ன்றி சாருஸ்ரீராஜ்

    //சுஜாதா ஸ்டைல்....
    ஈரம் படம் மாதிரி இருந்தது....//

    ந‌ன்றி ஜெட்லி, ஆனா இது ரெண்டு வ‌ருஷ‌ம் முன்னாடியே எழுதின‌து (சீன் போட‌ல‌, உண்மை), இப்போ கொஞ்ச‌ம் மாத்தியிருக்கேன்.

    ReplyDelete
  12. நல்லா இருக்கு

    ReplyDelete
  13. ரகு,
    கதை ஏற்கனவே நான் உங்கள் எழுத்தில் சுவைத்தது, மீண்டும் சுவைத்தேன். இந்த கதையை பிரசுரிக்கும்படி நானே உங்களிடம் சொல்ல்லாம் என்றிருந்தேன்.

    ஈரம் படம் பார்த்ததும், எனது படக்குழு நண்பர்களிடம் முதலில் சொன்னது இதுதான், 2 வருஷம் முன்னாடி என் நண்பர் ரகு, எங்க 'ஜஸ்ட் லுக்' மேகஸைன்ல இதே மாதிரி ஒரு கதை எழுதியிருக்காருன்னு...

    வாழ்த்துக்கள்...

    தொடர்ந்து கதை எழுதுங்க...

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete
  14. call center attendence list vanthaudan result terinju pochi

    ReplyDelete
  15. ந‌ன்றி பேநா மூடி

    ந‌ன்றி ஹ‌ரீஷ், என் த‌ம்பியும் பட‌ம் பாத்துட்டு வ‌ந்து சொன்னான், "ஈர‌ம் ப‌ட‌ம் பாத்துட்டியா, ஃபர்ஸ்ட் வ‌ர்ற‌ சீன்லாம் நீ எழுத‌ன‌ க‌தைதான் ஞாப‌க‌த்துக்கு வ‌ந்த‌து"ன்னு, அதுக்க‌ப்புற‌ம்தான் நான் போய் பார்த்தேன்....:)

    ReplyDelete
  16. ந‌ன்றி LK, அடுத்த‌ த‌ட‌வை கொஞ்ச‌ம் உஷாரா இருக்கேன்:))

    ReplyDelete
  17. கதையெல்லாம் எழுதி கலக்குறீங்க ரகு.... தொடர என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. ந‌ன்றி ப்ரியா:)

    ReplyDelete
  19. ரகு நல்ல ட்ரை..மிகவும் ஈசியா கண்டுபிடிச்சிட்டாரு ஹீரோ.. அப்புறம் பாதி கதை வரை நான் என்கிறதொனியில் இருந்த கதை அவர் அழும் போது மட்டும் தேர்ட் பர்சனில் இருக்கிறது.. கவனிக்கவும்.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  20. வாங்க‌ கேபிள், அட! பாருங்க‌ இதை மிஸ் ப‌ண்ணிட்டேன், சுட்டிக்காட்டிய‌த‌ற்கு ந‌ன்றி, பீ கேர்புல், நான் என்னைச் சொன்னேன்:))

    ReplyDelete