Dhundiraj Govind Phalke - இதுதான் இவரின் இயற்பெயர். நாசிக் நகரிலிருந்து 30 கிமீ தூரத்தில் இருக்கும் திரிம்பகேஷ்வர் என்னும் ஊரில் ஏப்ரல் 30, 1870 அன்று பிறந்தார். தந்தை ஒரு சமஸ்கிருத பண்டிதர். பரோடாவில் கலா பவனில் படித்த இவர், அங்கு சிற்பம், ஒவியம் மற்றும் புகைப்படக் கலைகளை பயின்றார். கோத்ராவில் ஒரு புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் துவங்கிய பால்கே, வெற்றியின் முதல் படியை மிதிக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது. ஆம், தோல்விதான்....ஒரு வகையான ப்ளேக் நோயால் அவருடைய மனைவியும், குழந்தையும் பால்கேவின் எதிர்கால சாதனைகளைப் பார்க்காமலேயே நிரந்தரமாக உறங்கச் சென்றனர்.
அதன்பின் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் சில நாட்கள், ஒவியர் ராஜா ரவிவர்மாவிடம் உதவியாளராக சில நாட்கள். ஆனால் பணியில் முழு திருப்தி அடையாத பால்கே, நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அச்சகத்தை ஆரம்பித்தார். ஆரம்பித்த சில நாட்களிலேயே நண்பர்களிடையே கருத்துவேறுபாடு எழ, அச்சகத்திலிருந்து விலகினார். அதற்கு முக்கிய காரணம் "The Life of Christ" என்னும் ஒரு மெளனப்படம். முதல்முறையாக பால்கேவின் கவனம் சினிமா மீது திரும்பியது.
இயேசு கிறிஸ்து வாழ்க்கையை பிரதிபலித்த அந்த படம்தான் பால்கேவை இந்திய சினிமாவுக்கு ஒரு பிள்ளையார் சுழி போடவைத்தது. நாமும் இந்திய கடவுள்களைப் பற்றி படம் எடுக்கலாமே என்ற எண்ணம் தோன்ற, 1912ல் "ராஜா ஹரிச்சந்திரா" பிறந்தார். பிறந்து, தவழ்ந்து, விழுந்து எழுந்து, அன்றைய பாம்பேயில் இருந்த காரோனேஷன் சினிமாவில் மே 3, 1913 அன்று "ராஜா ஹரிச்சந்திரா" அங்கு சூழ்ந்திருந்த மக்கள் கடலில், ராஜநடை போட ஆரம்பித்தார். ஆம், மே 3, 1913 மக்கள் கண்டு களித்த, முதல் இந்திய சினிமா வெளியான நாள், இந்த நாளை இந்திய சினிமாவின் பிறந்த நாள் என்றே கூறலாம். படத்தைப் பார்த்த அந்த நாற்பது நிமிடங்களும், மக்கள் ஒரு காணமுடியாத அதிசயத்தை கண்ட, வார்த்தைகளில் விவரிக்கமுடியாத ஒருவிதமான உணர்ச்சியில் இருந்தனர் என்பதே உண்மை.
"ராஜா ஹரிச்சந்திரா"வின் வெற்றி அப்போது, இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று முழித்துக்கொண்டிருந்த, பாம்பேயில் இருந்த ஐம்பெரும் செல்வந்தர்களை ஈர்க்க, அவர்கள் பால்கேவை தொடர்புகொண்டனர். பால்கேவும் அவர்களுடன் சேர்ந்து "ஹிந்துஸ்தான் பிலிம்ஸ்" கம்பெனியை ஆரம்பித்தார். 1918ல் "ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா", 1919ல் "கலிய மர்தன்" போன்ற படங்களை எடுத்த பால்கே, எவ்வாறு கலையை மேலும் மெருகேற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, மற்ற ஐவரும் எவ்வாறு திரைப்படத்தின் மூலம் அடுத்த இரண்டு, மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.
நண்பர்களுடன் ஆரம்பித்த அச்சக அனுபவம் மீண்டும் தன் வாழ்வில் நடப்பது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பால்கே "ஹிந்துஸ்தான் பிலிம்"ஸில் இருந்து வெளியேறி, சினிமாவில் இருந்தே வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் வெகு சில நாட்களிலேயே சச்சின் டெண்டுல்கர் இல்லாத இந்திய அணியைப் போல, பால்கே இல்லாமல் "ஹிந்துஸ்தான் பிலிம்ஸ்" தள்ளாட ஆரம்பித்தது. யாரால் வெளியேற வேண்டிய நிலை வந்ததோ, அதே நபர்களால் மீண்டும் பால்கே ஹிந்துஸ்தான் பிலிம்ஸிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன்பின் 1923ல் "சேது பந்தன்" வெளிவந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பேசும் படங்களுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதனால், 1923ல் வெளிவந்த "சேது பந்தன்" பால்கேவின் கடைசி மெளனப்படம் என்று பெயர் பெற்று, பிற்காலத்தில் ராஜ் கபூர்களும், சிவாஜிகளும், கமல்களும் தெரிந்துகொள்ளட்டும் என்று வரலாற்றில் சென்று அமர்ந்துகொண்டது. பின்பு பிண்ணணிக் குரல்கள் பதிவு செய்து 1932ல் மீண்டும் "சேது பந்த"னை வெளியிட்டார் பால்கே. அதன் பின் 1937ல் வெளிவந்த "கங்காவதரன்" படமே பால்கேவின் கடைசிப்படம். "கங்காவதர"னுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி நாசிக் நகரில் தன் முதுமை காலத்தைக் கழித்த பால்கேவுக்கு , 73 வயதில், பிப்ரவரி 16, 1944 அன்று, கடவுள் "The End" கார்ட் போட வேண்டிய நேரம் வந்தது. ஆம், இன்று தாதா சாஹேப் பால்கேவின் நினைவு தினம்.
பி.கு 1: ஏன் என்று தெரியவில்லை, "தாதா சாஹேப் டோர்ன்" என்றழைக்கப்படும் "ராமச்சந்திர கோபால்" 1912லேயே "புண்ட்லிக்" (22 நிமிடங்கள்) என்ற திரைப்படத்தை அதே காரோனேஷன் சினிமாவில் வெளியிட்டும் இன்று வரை தாதா சாஹேப் பால்கேதான் (ராஜா ஹரிச்சந்திரா 1913) இந்திய சினிமாவின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். முதன் முதலாக செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்ட இந்திய சினிமாவும் "புண்ட்லிக்"தான். மே 25, 1912ல் வெளியான "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வில், விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பி.கு 2: பால்கேவை கெளரவிக்கும் விதத்தில் மத்திய அரசு, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் என்று ஒவ்வொரு வருடமும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 1969 முதல் "தாதா சாஹேப் பால்கே" விருது வழங்கி வருகிறது. முதல் விருது பெற்றவர் ஆந்திராவைச் சேர்ந்த தேவிகா ராணி. தமிழ் நாட்டிலிருந்து இந்த விருதை வாங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (1996ல்) மட்டுமே. அதுவும் ராஜ் கபூர், அசோக் குமார், லதா மங்கேஷ்கர், நாகேஸ்வர ராவ், திலீப் குமார், ராஜ் குமார் என்று பலருக்கும் வழங்கிய பின்புதான் தமிழகத்திலிருந்து கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்தது. மத்திய அரசும் சரி வம்பு வேண்டாம் என்று நடிப்பின் இமயத்துக்கு விருது தந்து விருதுக்கு பெருமை சேர்த்தது.
பி.கு 3: 2009ல் பரேஷ் மோகாஷி இயக்கிய "ஹரிச்சந்திரச்சி ஃபேக்டரி" (Harishchandrachi Factory) என்னும் மராத்தி மொழி திரைப்படம்தான் இந்தியாவிலிருந்து, 'சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட'த்திற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாவ், அருமையான பதிவு ரகு. குறும்பனிலிருந்து ரகுன்னு மாறினது இப்படி உருப்படியா எழுதத் தானா...
ReplyDeleteநல்ல தகவல்களுள்ள பதிவு. வாழ்த்துக்கள், உங்க ட்ரேக் மாறுவதற்கு.
ரகு,
ReplyDeleteநல்ல தகவல்கள். குறிப்பாக, 'பி.கு 2' பகுதியின் கடைசி 4 வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
அடடா ரகு இந்த மாதிரில்லாம் கூட எழுதுவீங்களா? அசத்துங்க..
ReplyDeleteநேத்து தான் 'ஹரிச்சந்திராச்சி பாக்டரி" பார்த்தேன். மிகவும் அருமையான திரைப்படம். ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.
ReplyDelete(ஆஹா ரகு இப்படி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாரே:))
ReplyDeleteவெரி நைஸ்!!!
ரொம்ப நல்லாயிருக்கு இந்த பதிவு!!
ReplyDeleteநன்றி விக்கி, அப்போ இந்த ட்ராக் கரெக்ட்டுங்கறிங்களா?
ReplyDeleteநன்றி ஹரீஷ், நீங்க குறிப்பிட்டிருக்கறது அவார்ட் பாலிடிக்ஸ்க்கு சரியான உதாரணம்
நன்றி மோகன், என்ன சொல்லவர்றீங்கன்னு புரியுது;))
ReplyDeleteநன்றி வைத்தீஸ்வரன், ஆஸ்கர் கிடைக்குமா?
நன்றி ப்ரியா, நாங்களும் திருந்த வேணாமா:))
ReplyDeleteநன்றி மேனகா மேடம், வருகைக்கும், கருத்துக்கும், பாலோவர் ஆனதற்கும்:)
பயனுள்ள தகவல்கள்.படிக்க படிக்க ஆர்வம் அதிகம் ஆனது.நன்றி
ReplyDeletevery nice post. ரொம்ப நல்லாயிருக்கு
ReplyDeleteநன்றி மின்னல்
ReplyDeleteநன்றி வித்யா
அப்படியா, நன்றி தல இந்த விருது வரலாறு பற்றிய தகவலுக்கு.
ReplyDeleteவருகைக்கு நன்றி சைவகொத்துபரோட்டா, நம்மள போய் எதுக்குங்க 'தல'ன்னுட்டு, ரகுன்னே சொல்லலாம், நான் ரொம்ப சாதாரணமானவன்ங்க:)
ReplyDeleteநல்ல தகவல்கள்.
ReplyDeleteநன்றி பிரபு
ReplyDeleteஎழுத்தில் மெருகு தெரிகிறது.வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ராஜ நடராஜன்
ReplyDelete