Thursday, December 17, 2009

க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும்


டிஸ்கி: இக்க‌தையில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ள், டேபிள்க‌ள், சேர்க‌ள் எல்லாம் உண்மைதான். ஆனா க‌தை மட்டும் க‌ற்ப‌னை. இத‌ன் மூல‌ம் யார் ம‌ன‌மாவ‌து புண்ப‌ட்டால் ந‌ல்ல‌ ஒரு மெடிக்க‌ல் ஷாப்பில் ஆயின்மெண்ட் வாங்கி த‌ட‌விக்கொள்ளுமாறு அன்புட‌ன் கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்

தலைப்பு பாத்து ஏதோ "கிளுகிளு"ன்னுலாம் நினைக்க‌கூடாது. அது ச்சும்மா ஒரு பில்ட‌ப்புக்காக‌. இன்னைக்கு தூங்கிட்ருந்த‌ப்போ க‌ன‌வுல‌ க‌வுண்ட‌ர் வ‌ந்து "ஏண்டா குருமா (குறும்ப‌னைத்தான்!), உன் போட்டோக்கு கீழே 'க‌வுண்ட‌ம‌ணியின் மான‌சீக‌ சிஷ்ய‌ன்'னு போட்டிருக்கியே, என்னைக்காவ‌து என்னை ப‌த்தி எழுதியிருக்கியாடா"ன்னு கேக்க‌, "ம‌ன்னிச்சுக்க‌ த‌ல‌ (என‌க்கு த‌ல‌ க‌வுண்ட‌ருதாங்க‌), இன்னைக்கு எழுதிட‌றேன்"னு சொல்லிட்டேன்.

டிய‌ர் சாந்தாக்க‌ளே, இந்த‌ ப‌திவு என்னும் இம்சை ஆற்றில் நீந்த‌ ஓடோடி வ‌ந்த‌ உங்க‌ள் அனைவ‌ரையும் இப்பொழுது ப‌ர்மா ப‌ஜார் ஏரியாவுக்கு அழைத்துகொண்டு போகிறேன், வாருங்க‌ள்!

ப‌ர்மா ப‌ஜார் ஏரியா, சிடி க‌டை வெச்சிருக்கறார் க‌வுண்ட‌ம‌ணி. அவர் க‌டைக்கு வ‌ர்றார் ஒரு க‌ஸ்ட‌ம‌ர். யாரா? ஹும்...அப்துல் கலாமா வ‌ருவாரு? "ஊஊ" ஒண்டிப்புலி கெட்ட‌ப்புல‌, ப்ளீச்சிங் ஹேர் ஸ்டைலோடு ந‌ம்ம‌ செந்தில்தாங்க‌.




க: சார், வாங்க‌ சார், வாங்க‌ சார்...அர்ர்ருமையான‌ ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ள் சார், ஒரிஜின‌ல் சிடி வெறும் ப‌தின‌ஞ்சு ரூபாதான் சார். ஒரு மொக்க‌ ப‌ட‌ம் வாங்குனீங்க‌ன்னா இன்னொரு மொக்க‌ ப‌ட‌ம் ஃப்ரீ சார்

செ: என்ன‌ன்ணே நீங்க‌, ப‌ழைய‌ ப‌ட‌ம்னு சொல்றீங்க‌, புது ப‌ட‌ம்லாம் இல்லியா?

க‌: யார்ரா அவ‌ன்...ஏண்டா கார‌ குழ‌ம்பு த‌லையா, புது ப‌ட‌ம் விக்க‌ற‌த‌லாமாடா ச‌த்த‌ம் போட்டு வியாபார‌ம் ப‌ண்ண‌ முடியும்

செ: இருக்க‌ற‌த‌ சொல்ல‌ணும்ணே, வியாபார‌த்துல‌ ஒரு நேர்மை வேணாமா?

க: ஓ..தோடா...வ‌ந்துட்டாரு சசிகுமாரு, நேர்மைய‌ ப‌த்தி பேச‌ற‌துக்கு..ப‌தின‌ஞ்சு ரூபா குடுத்து வாங்குற‌ நாயி பேசுற‌ பேச்சு பாரு

செ: ஹ‌லோ பிர‌த‌ர்..கிவ் ரெஸ்ப‌க்ட் டேக் ரெஸ்ப‌க்ட்..நான் ஒரு ப‌த்து ப‌ட‌ம் வாங்குலாம்னு நினைக்குறேன். உங்க‌ளுக்கு எப்ப‌டி வ‌ச‌தி? நான் வேண்ணா ப‌க்க‌த்து க‌டைக்கு போயிட‌வா?

க: நோ மிஸ்ட‌ர் ஆப்பிரிக்க‌ன் ம‌ங்கி, சும்மா த‌மாஸ் ப‌ண்ணா, அதுக்குள்ள‌, இல்லாத‌ சூடு சொர‌ணைய‌ இருக்க‌ற‌ மாதிரி காட்டுறீங்க‌...(ம‌ன‌துக்குள்) நீ வாங்கி முடிடீ அப்ப‌ற‌ம் இருக்கு உன‌க்கு

செ: என்ன‌து ம‌ங்கியா? என்னை பாத்து க‌ழுதைன்னா திட்ட‌றீங்க‌? நான் ப‌க்க‌த்து க‌டையிலேயே...

க‌: (ம‌ன‌துக்குள்) அட‌ங்கொன்னியா, இத்த‌ சொல்லியே மெர‌ட்ட‌றானே.....நோவ் நோவ், உங்க‌ள‌ நான் கிங்குன்னு சொன்ன‌து உங்க‌ காதுல‌ ம‌ங்கின்னு கேட்டுருக்கும்..ஆ...நீங்க‌ சிடி பாருங்க‌ சார்..என்ன‌ வேணுமோ பாருங்க‌

செ: ஹிஹி..என‌க்கு ம‌ருத‌நாய‌க‌ம் ப‌ட‌ம் வேணும்ணே

க‌: ர்ர்ர்ர்ர்...ஏண்டா எரும‌நாய‌க‌ம், இன்னும் அந்த‌ ப‌ட‌ம் எடுக்க‌வே ஆர‌ம்பிக்க‌ல‌....(ச‌ற்று பொறுமையாக‌) வேணாம் த‌ம்பி, வ‌ந்தோமா, இருக்க‌ற‌ ப‌ட‌த்த‌ வாங்குனோமோ போனோமான்னு இருக்க‌ணும், அனாவ‌சிய‌மா என்னை கொலைகார‌னா ஆக்காத‌

செ: ம்ஹூம், உங்க‌கிட்ட‌ இல்ல‌ன்னு சொல்லுங்க‌, அத‌விட்டுட்டு எடுக்க‌ல‌ன்னு சொல்லிகிட்டு.. நான் ப‌க்க‌த்து க‌டையிலேயே...

க: (ம‌ன‌துக்குள்) அய்யோ ராமா! இந்த‌ க‌ழிச‌டைகிட்ட‌ இருந்து என்னை காப்பாத்த‌ மாட்டியா? ஆப்பிரிக்க‌ன் பிர‌த‌ர், ம‌ருத‌நாய‌க‌ம் இல்ல‌, ஆனா உங்க‌ சைஸ்ல‌ இருக்க‌ற‌ ஒருத்த‌ர் ந‌டிச்ச‌ "நாய‌க‌ன்"னு ஒரு பட‌ம் இருக்கு, அத‌ வேண்ணா பாக்குறீங்க‌ளா...

செ: என்ன நீங்க‌ வியாபார‌ம் ப‌ண்றீங்க‌? எத‌ கேட்டாலும் இல்ல‌ இல்ல‌ன்னுட்டு...ச‌ரி ஏதோ ஒண்ணு குடுங்க‌

(க‌வுண்ட‌ம‌ணி, வீர‌த்த‌ள‌ப‌தி ஜேகேஆர் MP ந‌டித்த‌ நாய‌க‌ன் ப‌ட‌ டிவிடியை எடுத்து குடுக்கிறார். செந்தில் டிவிடி க‌வ‌ரை பார்த்துக்கொண்டிருக்க‌, நாலு க‌டை முன் ப்ரியாம‌ணி செல்போனில் பேசிக்கொண்டே க‌வுண்ட‌ம‌ணியின் க‌டையை நோக்கி வ‌ந்து கொண்டிருக்கிறார்)

க: ஐ, லேடீஸ் லேடீஸ்!!

ப்.ம‌: (அழுதுகொண்டே செல்போனில்) உன்ன‌ என‌க்கு புடிக்குண்டா, ரொம்ப‌ புடிக்குண்டா, ஏண்டா உன‌க்கு அது தெரிய‌மாட்டேங்குது?

இதோட‌ பார்ட் 1 முடியுது...என்ன‌து இதுல‌ கூட‌ பார்ட்லாம் இருக்குதான்னு கேக்காதீங்க‌. ஜீவ‌ன் ந‌டிச்ச‌ 'நான் அவ‌ன் இல்லை'லாம் பார்ட் பார்ட்டா வ‌ருது. க‌வுண்ட‌ர் எந்த‌ வித‌த்துல‌ ஜீவ‌னுக்கு கொறைஞ்சுட்டாரு? சோ, வெயிட் ஃபார் க‌வுண்ட‌ம‌ணியும், ப்ரியாம‌ணியும் பார்ட் 2....


9 comments:

  1. காமெடி ந‌டிக‌ர்க‌ளை வ‌ச்சே காமெடியா?......

    ReplyDelete
  2. அட்டகாசம், அடுத்த பார்ட்டுக்கு வெய்ட்டிங்

    ReplyDelete
  3. க‌வுண்ட‌ம‌ணி, வீர‌த்த‌ள‌ப‌தி ஜேகேஆர் MP ந‌டித்த‌ நாய‌க‌ன் ப‌ட‌ டிவிடியை எடுத்து குடுக்கிறார்.

    neenga avanga fanah?

    haha avanaya nee

    ReplyDelete
  4. ஹி..ஹி..சும்மா ஒரு சோத‌னை (ப‌டிக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு) முய‌ற்சிதான், ந‌ன்றி‌ ம‌ஹா:)

    ந‌ன்றி ச‌ங்க‌ர், அடுத்த‌ பார்ட் ரெடியாயிட்டே.....யிருக்கு:)

    ReplyDelete
  5. வாங்க‌ வித்யா:)

    வாங்க‌ ஏஞ்சல், நான் அவ‌ன் இல்ல‌ங்க‌, நான் அவ‌ன் இல்ல‌ங்க‌!

    நான் க‌‌வுண்ட‌ருக்கு ம‌ட்டும்தாங்க‌ ஃபேன், ஏசி, மிக்ஸிலாம்:)

    ReplyDelete
  6. கவுண்டமணி செந்தில் காம்பினேஷன் இப்ப இல்ல, இருந்திருந்தா.. நீங்க திரைப்படத்துறையில் சேர்ந்து அவங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியிருக்கலாம்:-)

    அடுத்த பார்ட்ல வர ப்ரியாமணிக்கு இப்பவே டைட்டில் போட்டாச்சா... சோ, வெயிடிங்.....

    ReplyDelete
  7. வழக்கம் போல் குறும்பு தெறிக்க உள்ளது.

    ReplyDelete
  8. ந‌ன்றி ப்ரியா, ஹி..ஹி..நீங்க‌ என்னை வெச்சு ஏதும் காமெடி கீம‌டி ப‌ண்ண‌லியே?:)

    ந‌ன்றி விக்கி:)

    ReplyDelete