விருதுக்கு நன்றி விக்கி:) பாத்துக்கோங்கப்பா நம்மளையும் மதிச்சு விருது குடுத்துட்டாங்க, இனிமே நாங்களும் ரவுடிதான், நாங்களும் ரவுடிதான்! ஒரு மாசம் முன்னாடி ஈ மட்டும் இல்ல, இருக்கற எல்லா பூச்சிகளும் அடிச்சிட்டிருந்த வலைப்பூ இது. தமிழிஷ்ல 'என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்கப்பா'ன்னப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம சனங்க தலையும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. நல்லவேளை ப்ளாகர்லயோ, தமிழிஷ்லயோ எலிஜிபிலிட்டியா மினிமம் இவ்ளோ ஃபாலோவர்ஸ் இருக்கணும்னு இல்ல. அப்படி இருந்ததுன்னா நான் எப்பயோ கடைய கட்டிருப்பேன்.
இந்த விருதை நானும் ரெண்டு பேருக்கு குடுக்கணும்னு நினைக்குறேன். ஆக்சுவலா நிறைய பேருக்கு குடுக்கணும்னுதான் ஆசை. ஆனா அவங்கள்லாம் ஏற்கனவே வாங்கிட்டாங்க. அப்படி வாங்குனவங்களுக்கும் மறுபடியும் குடுக்கலாமான்னு தெரியல. 'லாம்'னா பின்னூட்டத்துல தெரிவிச்சிடுங்க. அடுத்த பதிவுல குடுத்துடுவோம்.
ப்ரியா - இவங்களோட ஓவியங்களுக்காகவே தாராளமா இந்த விருதை குடுக்கலாம். இவங்களும் என்னை போல் பதிவுலகத்துக்கு புதியவர்ங்கறதால இந்த விருது அவங்களுக்கு உற்சாகத்தை குடுக்கும்னு நம்புறேன்.
மோகன் - கொஞ்ச நாளா இவரோட பதிவுகளை ஒரு சைலண்ட் ரீடராகத்தான் படிச்சிட்டு வந்தேன். இப்போதான் பின்னூட்ட ஆரம்பிச்சிருக்கேன். இவரோட எளிமையான நடை (அவர் நடக்கும்போது நீ பாத்தியான்னுலாம் கேக்ககூடாது) ரொம்பவும் அருமையா இருக்கும். பதிவுலகத்துல நீங்க எனக்கு சீனியர்தான், இருந்தாலும் பரவால்லைன்னு (விஜய் கையால சிறந்த நடிகர் விருதை கமல் வாங்கின மாதிரி) கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வாங்கிக்கோங்க சார்.
****************
வர்ற வெள்ளிகிழமை "வேட்டைக்காரன்" தவிர்த்து இன்னும் ரெண்டு முக்கியமான விஷயமும் சினிமால இருக்கு. ஒண்ணு ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய "அவதார்" ரிலீஸ், இன்னொண்ணு "விண்ணை தாண்டி வருவாயா" ஆடியோ ரிலீஸ். கெளதம் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷன்ங்கறதால பெரிய ஹைப் க்ரியேட் ஆயிருக்கு. லண்டன்லதான் ஆடியோ ரிலீஸாம். ஏன்யா, உங்களுக்குலாம் ரிஸஷன்னா என்னன்னே தெரியாதா?
*****************
போன வாரம் "Phone Booth"னு ஒரு படம் டிவிடில பாத்தேன் (ஒரிஜினல் டிவிடின்னு சொன்னா நீங்க நம்பவாபோறீங்க, அதனாலதான் ஒரிஜினல்ல பாக்கல). 2003ல வந்த படம். Phone Booth இருக்கற அந்த ஒரே ஒரு லொகேஷனை வெச்சுகிட்டு சும்மா ஒண்ணேகால் மணி நேரம் பின்னி எடுத்துருக்காங்க. செம த்ரில்லர்! அந்த பூத்தை விட்டு வெளியே வந்தினா சுட்டுபுடுவேன்னு ஹீரோவ மிரட்டுறார் வில்லன். ஏன் வில்லன் அப்படி பண்றார்? எப்படி ஹீரோ தப்பிக்கறார்? படத்தை பாருங்க, ஆனா குழந்தைகளை பக்கத்துல வெச்சுகிட்டு பாக்கவேணாம். வார்த்தைக்கு வார்த்தை ஹீரோ F*** வார்த்தைய யூஸ் பண்றார்
******************
போன பதிவுல எழுதுன கதைய படிச்சிட்டு வோட்டு போட்ட, பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் எனது நன்றிகள். அடுத்த கதை எப்போன்னுலாம் வேற பின்னூட்டிருக்காங்க. கலாய்க்கறாங்களா இல்ல உண்மையா கேக்குறாங்களான்னு தெரியல. இந்த வலைப்பூ ஆரம்பிச்சப்போ நான் எழுதின ரெண்டு கதைகளோட லிங்க் கீழே குடுக்கறேன். புடிச்சிருந்தாலும், புடிக்காட்டாலும் பின்னூட்டிடுங்க. அப்போதான் ஃப்யூச்சர்ல உங்கள அதிகம் சோதிக்காம இருப்பேன்.
கதை ஒண்ணு க்ளைமேக்ஸ் ரெண்டு
ஏதோ ஒண்ணு எழுதணுமேன்னு எழுதின கதை
ரொம்ப நன்றி குறும்பன்.. தங்கள் அன்பு விருதுக்கு. தங்கள் blog-ல் நிறைய படித்தும் இது வரை நான் கமெண்ட் போட்டதில்லை. இது என் மனதை உறுத்துகிறது.
ReplyDeleteசிறியவர் பெரியவர் என்ற பாகு பாடெல்லாம் இல்லை. வலை உலகில் இளையவர்கள் பலர் கலக்குறாங்க.
எழுதும் அனைவரும் பாராட்டை விரும்பவே செய்வர்.
தங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. மீண்டும் நன்றிகள்
விருதிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletePhone Booth - நல்ல படம்னு கேள்விப்பட்டேன். பாக்கணும்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!
விருது வாங்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteரொம்ப சந்தோஷம்(அதிலும் உங்க கையாலே விருதுன்னா ச்சும்மாவ:))....மிக்க நன்றி!
//(விஜய் கையால சிறந்த நடிகர் விருதை கமல் வாங்கின மாதிரி)//...விஜய் ரேஞ்சுக்கு வந்தாச்சு, அப்புறமென்ன...அடுத்தது, சூப்பர் ஸ்டார்தான்!
"Phone Booth"...நானும் பார்த்திருக்கேன்!செம த்ரில்லர்!
நிஜமாவே நல்லா கதை எழுதுறிங்க...அதிலும்"அந்த பதினைந்து நிமிடங்கள்!"....சூப்பர்!
ரவுடியானதுக்கும்.. விருதுகள் வழகியதுக்கும் வாழ்த்துக்கள், விருது பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்...
ReplyDelete//இது வரை நான் கமெண்ட் போட்டதில்லை. இது என் மனதை உறுத்துகிறது//
ReplyDeleteவாங்க மோகன் சார், நோ ஃபீலிங்ஸ், இனி தொடர்ந்து வாங்க, கமெண்ட்டுங்க:)
விருதிற்கு நன்றி விக்கி:)
நன்றி ஏஞ்சல், தொடர்ந்து வாங்க:)
ReplyDelete//வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!//
ந.க.க.க.க.போ! - நன்றி கலையரசன், கருத்துகளை கச்சிதமாக கவ்விக்கொண்டீர் போங்கள்!
நன்றி ப்ளஸ் வாழ்த்துக்கள் ப்ரியா
ReplyDelete//அதிலும் உங்க கையாலே விருதுன்னா//
ஐயையோ, இதெல்லாம் 200 மச்ங்க!
//அடுத்தது, சூப்பர் ஸ்டார்தான்//
ஏங்க? ஏன்? ஒய் திஸ் மர்டர் வெறி?:)))))
//"அந்த பதினைந்து நிமிடங்கள்!"....சூப்பர்//
அப்போ மத்த ரெண்டு கதையும் மொக்கையா:(
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மலிக்கா, முதல் முறை வந்திருக்கீங்க, தொடர்ந்து வாங்க!
ReplyDelete