Tuesday, December 22, 2009
கவுணடமணியும், ப்ரியாமணியும் - பார்ட் 2
க: ஐ, லேடீஸ் லேடீஸ்!!
ப்.ம: (அழுதுகொண்டே செல்போனில்) உன்ன எனக்கு புடிக்குண்டா, ரொம்ப புடிக்குண்டா, ஏண்டா உனக்கு அது தெரியமாட்டேங்குது?
க: (செந்திலிடம்) அ..ஆப்பிரிக்கன் பிரதர், லேடீஸ் வராங்க, நீங்க கொஞ்சம் ஓரமா நில்லுங்க
செ: (தன் தலைமுடியை கோதிக்கொண்டே) சே, அழகா ஒருத்தன் வரகூடாதே, உடனே தேடி வந்துடுவாங்க
க: அய்ய்யோ, இந்த பேச்சல்லாம் கேக்கவேண்டியதா இருக்குதே, டேய் படுவா, ஓரமா போய் நில்லுடா.......அ.....ஹேஹேய் ஹேஹேய், தாவணி போட்ட தீபாவளி வந்தது என்னோட கடைக்கு....மேடம், வெல்கம் மேடம், ஏதாவது சிடி வாங்கறீங்களா மேடம், நீங்க ஒண்ணு வாங்குனா, பத்து ஃப்ரீ மேடம்
ப்.ம: இல்லண்ணே, நான் சிடி வாங்க வரல
க: என்னது அண்ணனா???
செ: ஹிஹி...ஹிஹி...அண்ணே, அண்ணே!
(கவுண்டமணி டென்ஷனாக முறைக்கிறார்)
ப்.ம: அண்ணே, என் மொறப்பையன் என்னை கண்டுக்கவே மாட்டேங்கறான், என் ஃப்ரெண்டுகிட்ட சொன்னபோது அவதான் உங்க பேர சொன்னா, நீங்கதான்னே எனக்கு ஹெல்ப் பண்ணணும்
க: யம்மா, இந்த "ஷாஜஹான்" வேலல்லாம் நான் பண்றது இல்லம்மா, சட்டைல எத்தனை பட்டன் இருந்தாலும் ஒண்ணுத்தகூட போடாம ஒருத்தன் சுத்திகிட்டிருப்பான், அவன போய் பாரு
ப்.ம.: அவர்கிட்டயும் சொன்னேன்ணே, ஆனா நான் என்ன சொன்னாலும், அவர் மூஞ்சில ரியாக்ஸனே காட்ட மாட்டேங்கறாரு. அதான் உங்ககிட்ட வந்தேன்.
க: அய்யோ, இந்த நேரத்துல வந்திருக்கியேம்மா, நான் வேற சாயங்காலம் டெல்லி போறேன். பிரதமர் வாஜ்பாயி என்னை வந்து பாக்கமுடியுமான்னு எஸ்எம்எஸ் அனுப்பிருக்காரு. வெரி கிரிட்டிகல் சிச்சுவேஸன், வாட் டு டூ?
ப்.ம: அண்ணே, இப்போ பிரதமர், மன்மோகன் சிங், வாஜ்பாய் இல்ல
க: (மனதுக்குள்) ம்ஹூம், இதெல்லாம் கரெக்டா சொல்லு...சர்ரி சர்ரி அரசியல்லே இதெல்லாம்...
செ: சாதாரணமப்பா...அதானே?
க: டே, ப்ளூ ரே மண்டையா, அது என் டயலாக்டா! சரிம்மா...உன் மொறப்பையனுக்கு கால் பண்ணு, நான் பேசறேன். ஐய்யோ...எங்கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதான், பிரச்சனைன்னு ஒருத்தர் வந்துட்டா, அத தீர்க்காம நான் சோறு தண்ணியகூட நினக்குறதில்ல. ஹா.....ஜென்ரலா என்னை பத்தி நானே பெருமையா பேசிக்கமாட்டேன். உனக்கு உதவி பண்றேன், ஆனா ஒரு கண்டிசன்
ப்.ம: என்னண்ணே?
க: அடச்சே, நிறுத்தும்மா, அதென்ன வார்த்தைக்கு வார்த்தை என்னண்ணே, நொன்னண்ணேன்னிகிட்டு, (சற்று ஃபீலிங்ஸுடன்) heart hurt ஆகுதும்மா...இனிமே, என்ன சார்ர்ர், வாங்க சார்ர்ர், போங்க சார்ர்ர்னுதான் கூப்புடணும், ஓகேவா?
(தலையாட்டிவிட்டு, ப்ரியாமணி தன் முறைப்பையனுக்கு (பருத்திவீரன் கார்த்தி) கால் பண்ணி செல்போனை கவுண்டமணியிடம் தருகிறார்)
க: அல்லோ, நான் அகில உலக புகழ் சிடி கடை சின்ராசு பேசறேன், ஒரு பர்சனல் மேட்டர், உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?
கா: என்ன மாமா சவுக்யமா?
க: டேய், நீ இன்னும் இந்த டயலாக வுடவேல்லியா, படத்துல பேசன சரி, எந்த மேடையில ஏறுனாலும் இதையேதான் பேசற, இப்போ போன்லயும் இதையேதான் பேசற, நீ திருந்தவே மாட்டியா?
கா: என்ன மாமா சவுக்யமா?
க: டேய் நிறுத்துடா, அதென்ன ஹீரோ எல்லாருக்கும் நான் மாமாவா? அந்த வளர்ந்தவன் (சத்யராஜ்) வந்தாலும் மாமான்னுதான் கூப்புடறான், வெத்தலை போட்ட மாதிரி பேசறவனும் (இது யாருன்னு சொல்லணுமா என்ன?) மாமான்னுதான் கூப்புடறான். ரெண்டு பேருக்கும் என்னை விட ஒரு நாலு வயசு கம்மி, ரெண்டு பேரும் என்னை மாதிரியே 'விக்' வெக்குறானுங்க, அப்புறம் என்ன என்னை எப்போ பாத்தாலும் மாமா நோமான்னுட்டு?
கா: சரி விடு சித்தப்பா
க: அ..திஸ் ஈஸ் பெட்டர்...ஐ அப்ரிஸியேட் யூ.....மேட்டருக்கு வர்றேன், ஏண்டா இந்த பொண்ண வேணாண்ட்ற?
கார்த்தியின் பதில் என்ன? கவுண்டர் பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்று, வரலாற்றில் நிரந்தர மாமாவாக இடம் பிடித்தாரா?
முடிவு அடுத்த பதிவில்! (சீக்கிரம் முடிச்சு தொலைடான்னு நீங்க திட்டறது தெரியுது...கோலங்களையே பொறுத்துகிட்டீங்க, இத கொஞ்சம் பொறுத்துக்கமாட்டீங்களா)
டிஸ்கி: மேலே இருக்கற படத்துக்கும் இந்த கதையோட சிச்சுவேஷனுக்கும் சம்பந்தமே இல்லியேன்னுலாம் கமெண்ட் போடக்கூடாது...அப்புறம் அடுத்த பதிவுல மேக்கப் போடாத ப்ரியாமணி ஃபோட்டோ போட்டுடுவேன் பரவாயில்லியா...ஹாங்..அது!
Subscribe to:
Post Comments (Atom)
காமெடி உங்களுக்கு சரளமாக வருகிறது.
ReplyDelete/பட்டன் போடாத சட்டைகாரன்/
ஒரே தமாஷ் தான் போங்க ....
சட்டைல எத்தனை பட்டன் இருந்தாலும் ஒண்ணுத்தகூட போடாம ஒருத்தன் சுத்திகிட்டிருப்பான்
ReplyDeleteillaye mutha rendu illana munu button thane poda mataru?
சம்பந்தமே இல்லியேன்னுலாம் கமெண்ட் போடக்கூடாது.
samantham irukunga
தாவணி போட்ட தீபாவளி வந்தது என்னோட கடைக்கு.
ena athu thavani ithu saree nu ninaikren
ரெண்டு பார்ட்டுமே சூப்பர்.. :))))))))))
ReplyDelete//கா: என்ன மாமா சவுக்யமா?
ReplyDeleteக: டேய், நீ இன்னும் இந்த டயலாக வுடவேல்லியா, படத்துல பேசன சரி, எந்த மேடையில ஏறுனாலும் இதையேதான் பேசற, இப்போ போன்லயும் இதையேதான் பேசற, நீ திருந்தவே மாட்டியா?//..........ஆமா, இது அவரோட ஸ்லோகன் மாதிரியே ஆயிடுச்சு!
//கோலங்களையே பொறுத்துகிட்டீங்க, இத கொஞ்சம் பொறுத்துக்கமாட்டீங்களா//.....
எவ்வளவோ பொறுத்துகிட்டோம், இதை பொறுத்துக்க மாட்டோமா.... நீங்க தைரியமா எழுதுங்க!
//காமெடி உங்களுக்கு சரளமாக வருகிறது//
ReplyDeleteநன்றி புலம்பெயர், உங்க பெயரே வித்தியாசமா இருக்கு:)
//illaye mutha rendu illana munu button thane poda mataru?//
ReplyDeleteநன்றி ஏஞ்சல், நான் யார சொன்னேன்னு புரியலையா? திருப்பாச்சியில திருமலைன்னு ஒரு அழகிய தமிழ் மகன் இருக்கார், சரியான போக்கிரி பயபுள்ள.
//ena athu thavani ithu saree nu ninaikren//
பரவால்ல, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க, ஃபோட்டோ நல்லாருக்கா அத சொல்லுங்க:)
வருகைக்கு நன்றி ஸ்ரீமதி, முதல்முறையா வந்திருக்கீங்க, தொடர்ந்து வாங்க:)
ReplyDelete//எவ்வளவோ பொறுத்துகிட்டோம், இதை பொறுத்துக்க மாட்டோமா.... நீங்க தைரியமா எழுதுங்க//
ReplyDeleteநன்றி ப்ரியா, உங்களுக்குத்தான் எவ்ளோ சகிப்புத்தன்மை...ரொம்ப நல்லவங்ங்ங்ங்ங்க நீங்க:)
கவுண்டமணி சிஷ்யரே, கலக்குங்க (வயித்தை அல்ல, காமெடியில்) . வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சித்ரா:)
ReplyDelete:-))))))
ReplyDelete