டிஸ்கி: மேலே படத்துல இருக்கற பாட்டில்ல என்ன இருக்குன்னுலாம் என்னை கேக்காதீங்க. எனக்கு தெரியாது. ஹும்...may be இளநீரா இருக்கலாம்.
அஜித், விக்ரம், சூர்யா - இவங்களுக்கு அப்புறம் தன்னம்பிக்கைக்கு உதாரணமா என்னையும் சொல்லலாம். என்னடா இவன் திமிரா சொல்றானேன்னு நினைக்காதீங்க. யோசிச்சி பாருங்க, இப்ப கொஞ்ச நாள் முன்னாடிதான் ப்ளாக்வோட ஃபாலோவர்ஸ் நம்பர் டபுள் டிஜிட்ட தொட்டுது. இதுவரைக்கும் எல்லா பதிவுகளுக்கும் சேர்த்து போட்டிருக்கற கமெண்ட் எண்ணிக்கை 30, 35கூட தாண்டாது.
என்னதான் சொல்லவர்றேன்னு புரியுதா? மேலே இருக்கற படத்த பாத்து புரிஞ்சுட்டிரூப்பிங்களே. அட, இது 50வது பதிவுங்கோ! ஹே ஹே ஜுஜும் டாக் ஹே ஹே ஜுஜும் டாக்..ஒண்ணுமில்ல, 50வது பதிவுன்னு சொல்லும்போது ஒரு BGM வேணுமில்ல. இப்போ மறுபடியும் மேல இருக்கற பாராவை படிச்சிட்டு அடுத்த பாராவை படிங்க.
இதுக்கப்புறமும் நமக்கும் ஒரு வாசகர் வட்டமோ, சதுரமோ, செவ்வகமோ உருவாகும்ங்கற நினைப்புல எழுதிட்டிருக்கேனே, இப்போ சொல்லுங்க என்னையும் அந்த தன்னம்பிக்கை லிஸ்ட்ல சேத்துக்கலாமில்ல? Yesனு சொல்றவங்கள ஐ'ம் அப்ரிசியேட்(மயில்சாமி ஸ்டைலில்). Noன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி. Noக்கு எதிர்ப்பதம் என்ன? ஆங்..நீங்களும் Yes சொல்லிட்டீங்க பாத்தீங்களா...(இது தல ஸ்டைலில்) அதேய்... (சே, என்னாவொரு அறிவுடா, ISROவும், NASAவும் உன்னை மிஸ் பண்ணிட்டாங்க).
நிறைய ப்ளாகுகளை படிச்சிட்டிருந்தப்பதான் எனக்கு நாமளும் ஒண்ணு ஆரம்பிப்போமேன்னு தோணுச்சு. உண்மையாவே கேபிளார் எனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். சினிமா விமர்சனம், சினிமா வியாபாரம், கொத்து பரோட்டான்னு பொளந்துகட்றார் மனுஷன்.
ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிட்டேனே தவிர என்னத்தை எழுதறதுன்னு தெரியாம ஏதேதோ எழுதிகிட்ரு(க்கேன்)ந்தேன். நான் ஆரம்பத்துல எழுதுனதலாம் இப்ப படிச்சா எனக்கே செம மொக்கையா இருக்கு (ஆமா, இப்ப எழுதறது மட்டும் என்னவாம், என்னமோ சுஜாதாதான் ஆவியா உன் உடம்புல புகுந்துகிட்டு எழுதவெக்குற மாதிரி, எதுக்குடா ஓவர் சீன்?)
என்னடா எவ்ளோ எழுதினாலும் யாரும் கமெண்ட் போடமாட்டேங்குறாங்களேன்னு புலம்பிட்டிருந்தப்போ ஃப்ரெண்டு சொன்னார்.
"நீங்க எழுதறத தமிழ்மணத்திலும், தமிழிஷ்லயும் போடுங்க"
"அப்டின்னா?""என்ன நீங்க, ப்ளாக் எழுதுறீங்க, தமிழ்மணம்லாம் தெரிஞ்சுக்காம இருக்கறீங்களே"ன்னு பளிச்சுன்னு ஒரு பல்பு குடுத்தார்.
நாம வாங்காத பல்பா, இதுக்கெல்லாம் அசருவோமா என்ன? அவரே விளக்கம் குடுத்தார். அதுக்கப்புறம் ஒரு தடவை தமிழ்மணத்தை முகர்ந்துகிட்டிருந்தப்போ "குறும்பன்"ங்கற பேர்ல இன்னொருத்தர் இருக்கறத பாத்தேன். என்னடா இது, நமக்கு இப்படி ஒரு சோதனையான்னு ஃபீல் பண்ணப்போதான் தோணுச்சு. நான் 10th படிக்கும்போது க்ளாஸ்ல A.சதிஷ், B.சதிஷ், R.சதிஷ், S.சதிஷ்னு மொத்தம் நாலு சதிஷுங்க இருந்தாங்க. அதுபோல நாமளும் இருந்துட்டுபோவோம்னு விட்டுட்டேன்.
உண்மையான பெயர்க்காரணம் சொல்லட்டுமா? ஒரு தடவை மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில் போயிருந்தப்போ அங்க வரிசையா சாமி சிலைங்க பின்னாடி தமிழ் மாதமும், நட்சத்திரமும் வெச்சு, அந்தந்த சாமி பேர் போட்டிருந்தத பாத்தேன். அப்படி நான் பொறந்த மாதமும், நட்சத்திரமும் வெச்சு போட்டிருந்த பெயர் "பெருமழிசைக் குறும்பர்". நாம என்னத்த சாதிச்சுட்டோம், நமக்கு எதுக்கு இப்படி மரியாதை. சோ, "ர்"ர out பண்ணி "ன்"ன in பண்ணி "குறும்பர்"ருக்கு பதில் "குறும்பன்"னு ஆயிட்டேன்.
ஓகே ஒகே, 50க்கே ரொம்ப ஆடாத, நிறைய பேர் 100, 200னுலாம் தாண்டி போயிட்டிருக்காங்கன்னு நீங்க நினைக்கறது புரியுது. இப்போ வேண்ணா, 100 அடிக்கறது சச்சினுக்கு சாதாரணமா இருக்கலாம், ஆனா அவரோட முதல் 50 அவருக்கு ரொம்ப ஸ்பெஷலாத்தானே இருக்கும் (பார்றா, இதான் சாக்குனு சச்சினோட கம்பேர் பண்றான், டேய் இதெல்லாம்...). சரி இதோட என்னோட சுயபுராணத்த ஸ்டாப் பண்ணிக்குறேன் (அப்பாடா!).
இப்போ அப்டியே சமத்து புள்ளையா பின்னூட்டத்த போட்டுட்டு, தமிழிஷ்ல ஒரு வோட்டையும் போட்டுடுவீங்களாம், ஓகேவா? குழந்தைய (இது 200 மச்!) என்கரேஜ் பண்ணனுமில்ல. ஹேய் ஹேய் யாருப்பா அது, அதுக்குள்ள இந்த விண்டோவ க்ளோஸ் பண்றது!
நல்வாழ்த்துக்கள். பெயர்காரணம் அருமை.
ReplyDeleteஇந்த பதிவின் தலைப்பு நச்....
வாழ்த்துக்கள் குறும்பரே.. மேலும் பல சைபர்கள் சேர மனமார வாழ்த்தும்
ReplyDeleteகேபிள் சங்கர்
மைண்ட் வாய்ஸை எல்லாம் ப்ராக்கெட்டுக்குள் போடாதிங்க்.. அதையும் ஒரு வரியா எழுத ஆரம்பிச்சீங்கன்னா.. இன்னும் சுவையா இருக்கும்
may be இளநீரா இருக்கலாம். //
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லவருங்க.
ஹாஹாஹா... பேருக்கேத்த பதிவு. வாழ்த்துக்கள் குறும்பன். நான் இன்னும் ஐம்பதையே தொடல.
//இந்த பதிவின் தலைப்பு நச்....//
ReplyDeleteஅப்புடியா சொல்றீங்க...நன்றி தினேஷ்
//மைண்ட் வாய்ஸை எல்லாம் ப்ராக்கெட்டுக்குள் போடாதிங்க்.. அதையும் ஒரு வரியா எழுத ஆரம்பிச்சீங்கன்னா.. இன்னும் சுவையா இருக்கும்//
நல்ல ஆலோசனை, கண்டிப்பா செயல்படுத்தறேன், நன்றி கேபிளாரே
//நான் இன்னும் ஐம்பதையே தொடல//
நன்றி விக்கி, உங்களோட அடுத்த பதிவு ஐம்பதாவதுதானே, என்னோட அட்வான்ஸ் (இத தமிழ்ல எப்படி சொல்றது?) வாழ்த்துக்கள்
உங்க ஃபாலோவர்ஸ் டிஜிட்டை அதிகப்படுத்த ....இதோ நானும் வந்திட்டேன்!
ReplyDelete//may be இளநீரா இருக்கலாம்//இவ்வளவு நல்லவரா........ நீங்க;-)
//டாக் ஹே ஹே ஜுஜும் டாக்//நிஜமாவே படிக்கும் போது சத்தம் கேட்டது!
//NASAவும் உன்னை மிஸ் பண்ணிட்டாங்க//உண்மைதான்!
//இப்போ வேண்ணா, 100 அடிக்கறது சச்சினுக்கு சாதாரணமா இருக்கலாம், ஆனா அவரோட முதல் 50 அவருக்கு ரொம்ப ஸ்பெஷலாத்தானே இருக்கும்//நமக்கு நாம் தான் ஸ்பெஷல்...according to Psychological fact.
தமிழ்மணம்..can u give me the details about this?
he he he:)vaazhthukkal sir:)adhu ilaneer ila ilasunga virumbi adikara neer:P epdiyo thalaipu supero super:)
ReplyDelete//நமக்கு நாம் தான் ஸ்பெஷல்...according to Psychological fact//
ReplyDeleteநன்றி ப்ரியா, கரெக்டா சொன்னீங்க
//ilaneer ila ilasunga virumbi adikara neer//
அப்புடியா? நானும் இளசுதான், இதுவரைக்கும் அடிச்சதில்லியே:(
வருகைக்கு நன்றி காயத்ரி
அஜித், விக்ரம், சூர்யா - இவங்களுக்கு அப்புறம் தன்னம்பிக்கைக்கு உதாரணமா என்னையும் சொல்லலாம்
ReplyDeletesame pinchnga
enai thavira en blog open pani thinamum ela postahyum padikrathu vera yarum illa
நோ ஃபீலிங்ஸ் ஏஞ்சல், தொடர்ந்து எழுதுங்க, நானும் படிக்கறேன்
ReplyDelete