Friday, December 11, 2009

அந்த‌ ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள்!

இன்னைக்கு ஒரு க‌தை(ங்க‌ற‌ பேர்ல‌ ஏதோ ஒண்ணு) எழுதியிருக்கேன். கொஞ்ச‌ம் பெரிய‌ ம‌ன‌சோ, சின்ன‌ ம‌ன‌சோ ப‌ண்ணி ப‌டிச்சுடுங்க‌. அப்ப‌டியே ஒரு வோட்டையும் போட்டு பின்னூட்ட‌த்தையும் போட்டுடுட்டீங்க‌ன்னா உங்க‌ எதிர்கால‌த்துக்கு ந‌ல்ல‌து‌. இல்ல‌ன்னா அடிக்க‌டி இந்த‌ மாதிரி க‌தை எழுதியே டார்ச்ச‌ர் ப‌ண்ணுவேன், பீ கேர்புல்! இனி....

ப‌ஸ் வ‌ந்துது. ப்ப்பா, செம‌ கூட்ட‌ம். என்ன‌ ப‌ண்ற‌து, இப்ப‌டித்தான் தின‌மும் போக‌வேண்டிய‌தாயிருக்கு. 15 நிமிஷ‌த்துல‌ இற‌ங்கிடுவேன்னாலும் இந்த‌ இடிஅமீன்க‌ள்கிட்ட‌யிருந்து ந‌ம்ம‌ள‌ காப்பாத்திக்க‌ற‌தே பெரும்பாடாயிருக்கு. அதுவும் சில‌பேர் பாக்க‌ற‌து இருக்கே‌, பார்வையாலேயே...ச்சே சொல்ற‌துக்கே கூசுது.

சைட் அடிச்சாலும் டீச‌ன்டா சைட் அடிங்க‌டா. எங்க‌ அழ‌கை ர‌சிக்க‌ற‌த‌ நாங்க‌ வேணாம்னா சொல்றோம். அதுல‌ ஒரு க‌ண்ணிய‌ம் வேணாம்? ராஸ்க‌ல்ஸ்‍னு (ம‌ன‌சுக்குள்ளே) திட்டிகிட்டே கூட்ட‌த்துல‌ அடிச்சு புடிச்சு ஏறி ஓர‌ள‌வு(க்காவ‌து) சேஃப்டியா போய் நின்னுகிட்டேன்.

"டைட‌ல் பார்க் ஒண்ணு குடுங்க‌"

நான் 100 ரூபா எடுத்து குடுக்க‌, அதுவ‌ரைக்கும் சாதார‌ண‌மா இருந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் முக‌ம், ச‌ர‌வ‌ண‌ப‌வ‌ன்ல‌ வெறும் ரெண்டு தோசை சாப்ட்டு பில்லை பாத்து ஷாக் ஆன‌வ‌ர் மாதிரி சிடுசிடுன்னு ஆயிடுச்சு. ஆனாலும் வெளிப்ப‌டையா காட்டிக்காம‌, "4 ரூபா சில்ற‌ இல்லியா"ன்னு முன‌கிகிட்டே டிக்கெட்ட‌ குடுத்துட்டார் (மீதி காசோட‌தான்).

அடுத்த‌ ஸ்டாப் வ‌ந்த‌வுட‌னே ரெண்டு லேடீஸ் இற‌ங்க‌, நான் உக்கார‌துக்கு இட‌ம் கிடைச்சுது. அப்பாடா! என்ன‌தான் சீக்கிர‌மே இற‌ங்க‌போறேன்னாலும் கொஞ்ச‌ தூர‌மாவ‌து உக்காந்துகிட்டுபோனாதான் ம‌னசுக்கு கொஞ்ச‌ம் திருப்தி. க‌லைஞ்சிருந்த‌ த‌லைமுடியை (சைட்ல‌ நாலு முடி க‌லைய‌ற‌மாதிரி வார்ற‌துதான் என‌க்கு புடிச்ச‌ ஸ்டைல்) கொஞ்ச‌ம் ச‌ரிப‌ண்ண‌போதுதான் அவ‌னை பார்த்தேன்! அவ‌னும் என்னை பார்த்தான்.

அவ‌ன் ஸ்டாண்டிங்ல‌ வ‌ந்துட்டிருந்தான். ஹும்ம்ம், கொஞ்சூண்டு (ந‌ல்லாயிருந்தாலும் கொஞ்சூண்டுன்னுதான் சொல்லுவோம்) ஹேண்ட்ச‌மாத்தான் இருந்தான். ந‌ல்ல‌ ஹைட், ஜிம் பாடி, ஷார்ட்டான ஹேர் க‌ட், ந‌ல்லா ப‌ளீச்னு ஷேவ் ப‌ண்ண‌ முக‌ம், டார்க் ப்ர‌வுன் ஷ‌ர்ட், லைட் கல‌ர் பேண்ட். பாக்க‌ற‌துக்கு Software Guy மாதிரிதான் இருந்தான். என்ன‌, ஆள் கொஞ்ச‌ம் லேசா மாநிற‌ம். க‌ல‌ர் க‌ம்மின்னாலும் க‌ளையான‌ முக‌ம்தான். சில‌ பொண்ணுங்க‌ளுக்கு வெனிலா ஐஸ்க்ரீம் க‌ல‌ர்ல‌ இருக்க‌ற‌ ப‌ச‌ங்க‌‌ள‌ புடிக்கும், சில‌ பொண்ணுங்க‌ளுக்கு சாக்லேட் க‌ல‌ர்ல‌ இருக்க‌ற‌ ப‌ச‌ங்க‌ள‌ புடிக்கும். சே, ரொம்ப‌ வழிய‌ற‌னோ? ப‌ர‌வால்ல‌, சுவாமி வ‌டிவேலான‌ந்தாதான் சொல்லியிருக்காரே, "இது வாலிப‌ வ‌ய‌சு".

அவ‌னும் என்னை அடிக்க‌டி பாத்துகிட்டேயிருந்தான். ஏன்னா நானும் அழ‌காயிருக்கேன் (இப்போ கொஞ்சூண்டுன்னு சொல்ல‌மாட்டேன்) இல்லியா. ரைட் சைடுல‌ பாக்க‌ற‌து, கையில‌ இருக்க‌ற‌ மொபைல‌ பாக்க‌ற‌து, அப்புற‌மா லெஃப்ட் சைடுல‌ திரும்பி என்னை பாக்க‌ற‌து, நான் பாத்த‌வுட‌னே பார்வை என் பின்னாடி எங்கேயோ போற‌துன்னு இந்த‌ ப்ராச‌ஸ் தொட‌ர்ந்துகிட்டேயிருந்த‌து.

இது எல்லாமே ஒரு 15, 20 செக‌ண்ட்ஸ்ல‌ ந‌ட‌ந்த‌துதான். அதுக்க‌ப்புற‌ம் நான் திரும்பி ஜ‌ன்ன‌ல் வெளியே வேடிக்கை பாத்துட்டு வ‌ந்தேன். அப்ப‌ப்போ ஓர‌க்க‌ண்ணால‌ அவ‌ன் என்னை பாக்குறானான்னு அவ‌னுக்கே தெரியாம‌ பாத்துகிட்டுதான் இருந்தேன். ஹி..ஹி..அவ‌ன் இன்னும் அந்த‌ ப்ராஸ‌ஸை மெதுவா தொட‌ர்ந்துகிட்டேதான் இருந்தான்.

இன்னும் அஞ்சு நிமிஷ‌த்துல‌ நான் இறங்க‌ணும். என்ன‌ ப‌ண்ற‌து, அவ‌ன் குடுத்துவெச்ச‌து அவ்ளோதான். ச‌ரி க‌டைசியா நாம‌ளும் ஒரு லுக் விட்டுக்குவோம்னு அவ‌னை பாத்தேன். ஓ மை காட்!!! அவ‌ன் கையில‌ சைல‌ன்ச‌ர் பொருத்திய துப்பாக்கி! கூட்ட‌த்துல‌ யாருமே இத‌ க‌வ‌னிக்க‌ல‌. அத‌ பாத்த‌தும் ச‌ந்திர‌முகி ஜோதிகா ரேஞ்சுக்கு என‌க்கு க‌ண்ணு பெரிசாயிடுச்சே த‌விர‌ ப‌ய‌த்துல‌ வாயில‌ வார்த்தையே வ‌ர‌ல‌. அட‌ ம‌க்க‌ளே, உங்க‌ள்ல‌ யார் யார‌ சுட‌ப்போறான்னு தெரிய‌லையே!

அடுத்த‌ ஸ்டாப்கிட்ட‌ ப‌ஸ் ஸ்லோவாகும்போதே அவ‌ன் இற‌ங்கிட்டான். அதே நேர‌ம், அவ‌ன் ப‌க்க‌த்துல‌ ப‌ஸ்ல‌ நின்னுகிட்டிருந்த‌வ‌ர் திடீர்னு கீழே விழுந்தார். அவ‌ர் ச‌ட்டை பின்னாடி ர‌த்த‌ம்! என‌க்கு விய‌ர்த்து கொட்டி என்னோட‌ மேக்க‌ப்லாம் க‌லைஞ்சுகிட்டிருந்த‌து. ஜ‌ன்ன‌ல் வெளியே எட்டி பாத்தேன். அவ‌ன் இன்னொருத்த‌ன் பைக்ல‌ ஏறி உட்கார‌, அந்த‌ பைக் சீறி கிள‌ம்ப‌, அவ‌ன் திரும்பி பாத்தான். யெஸ் என்னைதான், என்னையேதான்! சிரிச்சுகிட்டே Bye சொன்னான். கையாலேயே 1 4 3ன்னு அவ‌ன் காமிக்க‌, என‌க்கு அப்ப‌டியே தூக்கிவாரிபோட்டுது!

நான் ட‌க்குன்னு திரும்பி த‌லைய‌ குனிஞ்சுகிட்டே ம‌னசுக்குள்ளே திட்ட‌ ஆர‌ம்பிச்சேன், "போடா வெள‌க்கெண்ண‌, ஒரு கொலைகார‌னை ல‌வ் ப‌ண்ணுற‌துக்கு நான் என்ன‌ சினிமால‌ வர்ற‌ ஹீரோயினா? ஐ'ம் எ சாஃப்ட்வேர் என்ஜினிய‌ர் ஃப்ர‌ம் ச‌வுத் த‌மில்நாடு, ந‌ல்லா ச‌ம்பாதிச்சிfying இன் சென்னை அண்ட் வொர்க்கிங் இன் எ வெள்ளைக்கார‌ன் க‌ம்பெனி"

இந்த‌ நேர‌த்துல‌ ப‌ஸ்ஸுல‌ எல்லாரும் ப‌ய‌த்துல கீழே இற‌ங்கிட்(டோம்)டாங்க‌. அதுக்குமேல‌ அங்க‌ நிக்க‌ ப‌ய‌ந்துகிட்டு நான் ந‌ட‌ந்தே ஆஃபிஸுக்கு வ‌ந்துட்டேன். ஆஃபிஸ் உள்ள‌ போற‌துக்கு முன்னாடி ரிச‌ப்ஷ‌ன்ல‌ இருக்க‌ற‌ அந்த‌ க‌ண்ணாடி க‌த‌வு வ‌ழியா பாத்தேன். ஓ மை காட்! அய்யோ! போச்சு, போச்சு...நான் இன்னிக்கு அவ்ளோதான். க‌ட‌வுளே, நீதான் என்னை எப்ப‌டியாவ‌து காப்பாத்த‌ணும்! என்ன‌ ப‌ண்ண‌ப்போறேன்னு தெரிய‌லையே! அட‌, நீங்க‌ ப‌த‌றாதீங்க‌, அங்க‌ ஒண்ணும் அந்த‌ கொலைகார‌ன் இல்ல‌. அந்த‌ க‌ண்ணாடில‌ பாத்த‌ப்புற‌ம்தான் தெரிஞ்சுகிட்டேன், என் மேக்க‌ப்லாம் சுத்த‌மா போச்சு...

நீதி: தாதா க‌தைல‌ வ‌ர்ற‌ ஹீரோவோட‌ ஃப்ரெண்ட்ஸுங்க‌தான் தோள் வ‌ரைக்கும் முடி வெச்சுகிட்டு நாலு ஃபுல் மீல்ஸ் சாப்ட்டு உட‌ம்ப‌ வ‌ள‌ர்த்து வெச்சுருப்பாங்க‌. ஆனா ஹீரோ ஹேர்லாம் ஷார்ட்டா வெட்டிகிட்டு, ஜிம்முக்கு போய் உட‌ம்ப ஏத்தி ஸ்மார்ட்டாதான் இருப்பாரு.
உதா: வ‌சூல்ராஜா-க‌ம‌ல், ஆறு-சூர்யா, ஜெமினி-விக்ர‌ம் இன்னும் எஜ்ஜ‌ட்ரா எஜ்ஜ‌ட்ரா....


18 comments:

  1. நீதியெல்லாம் சொல்றீங்க. பெரிய ஆளாகிட்டீங்க ரகு.
    நல்ல நகைச்சுவை நடை.

    ReplyDelete
  2. ஆண்கள் அவ்வளவு இளக்காரமா !!!அவர் உங்களை சுட்டு இருக்கணும் !!

    ReplyDelete
  3. //அய்யோ! போச்சு, போச்சு...நான் இன்னிக்கு அவ்ளோதான். க‌ட‌வுளே, நீதான் என்னை எப்ப‌டியாவ‌து காப்பாத்த‌ணும்! என்ன‌ ப‌ண்ண‌ப்போறேன்னு தெரிய‌லையே! அட‌, நீங்க‌ ப‌த‌றாதீங்க‌, அங்க‌ ஒண்ணும் அந்த‌ கொலைகார‌ன் இல்ல‌. அந்த‌ க‌ண்ணாடில‌ பாத்த‌ப்புற‌ம்தான் தெரிஞ்சுகிட்டேன், என் மேக்க‌ப்லாம் சுத்த‌மா போச்சு... //

    வெரி க்யூட்.....ரொம்ப சிரிக்க வச்சிட்டீங்க....

    ReplyDelete
  4. அவ‌னை பார்த்தேன்! அவ‌னும் என்னை பார்த்தான்.


    analum nokinal avanum nokinan

    thodarnthu kathai eluthanga mukiama jokeah eluthunga

    ReplyDelete
  5. night oru nalla kanavu mathiri erukkunu last la solluvinganu ninaithen Appuram lastla ninga payanththu unga face kannadiy pahta pothu vadivelu sollara mathiri antha monkey bomma enna rate nu nabagam vanthahu

    ReplyDelete
  6. ந‌ன்றி ஆழிம‌ழை:)


    //நீதியெல்லாம் சொல்றீங்க. பெரிய ஆளாகிட்டீங்க//

    ந‌ன்றி விக்கி

    காமெடி ப‌ண்றீங்க‌ளே! க‌வுண்ட‌ம‌ணி சொல்வாரே, அதுதான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது "நாம என்ன‌ கோர்ட்டா, ஜ‌ட்ஜா..."

    ReplyDelete
  7. //ஆண்கள் அவ்வளவு இளக்காரமா //

    டிய‌ர் அனானி, இதுல‌ ஆண்க‌ள‌ ப‌த்தி இள‌க்கார‌மாவே நான் எழுத‌லையே, உண்மைய‌ சொல்லுங்க‌, வேற‌ ஏதோ ஒரு ப‌திவுல‌ போட‌வேண்டிய‌ பின்னூட்ட‌த்த‌தானே இங்க‌ போட்டுட்டீங்க‌!

    ReplyDelete
  8. //வெரி க்யூட்.....ரொம்ப சிரிக்க வச்சிட்டீங்க....
    //
    ந‌ன்றி ப்ரியா, ஹி..ஹி..இதுக்கு எப்ப‌டி ரியாக்ட் ப‌ண்ண்ணும்னே தெரிய‌ல‌

    ReplyDelete
  9. //thodarnthu kathai eluthanga //

    ந‌ன்றி ஏஞ்ச‌ல், நீங்க‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்ங்ங்ங்ங்ங்க‌:)

    //kannadiy pahta pothu vadivelu sollara mathiri antha monkey bomma enna rate nu //

    ந‌ன்றி GOLD_SANTHU, உங்க‌ பின்னூட்ட‌த்த‌ பாத்த‌ப்புற‌ம்தான் எனக்கும் அந்த‌ காமெடி ஞாப‌க‌ம் வ‌ந்துது:)

    ReplyDelete
  10. When Your Next Story i am waiting ,......

    ReplyDelete
  11. ந‌ன்றி பூங்குன்ற‌ன்

    ந‌ன்றி GOLD_SANTHU, நெச‌மாத்தான் கேக்குறீங்க‌ளா...ஸ்ஸ்ஸ்..இப்ப‌டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

    ReplyDelete
  12. கதை நல்லா இருக்கு !!!

    ReplyDelete
  13. ந‌ன்றி ம‌ஹா

    ReplyDelete
  14. மக்கா கலக்கிட்டே

    அன்புடன்

    சூர்யா

    ReplyDelete
  15. ந‌ன்றி சூர்யா, ஏதோ ம‌க்கா, ந‌ம்மளால‌ முடிஞ்ச‌து!

    ந‌ன்றி வித்யா, நீங்க‌ கேக்குற‌ மாதிரியும் இருக்கு, மிர‌ட்ட‌ற‌ மாதிரியும் இருக்கு!

    ReplyDelete