இன்னைக்கு ஆஃபிஸ் Pantryல நானும் என் ஃப்ரெண்டும் உக்காந்துட்ருக்கும்போது எங்க பக்கத்து டீம்ல இருக்கற ஒரு லேடி முகத்த உம்முன்னு வெச்சுட்டு வந்தாங்க. தாய்க்குலம் தலைகுனிந்தால் தமிழ்நாடு தாங்குமா???
"என்ன, உர்ர்ர்ர்னு வர்றீங்க?"
"அவனுக்கு (வேற யாரு, அவங்க டீம் டேமேஜர்தான்...) கொஞ்சமாவது அறிவு இருக்கா? என் week offஅ Saturday, Sundayல போடுறான்னா, Thursday, Fridayல போட்டு வச்சிருக்கறான். அவருக்கு (Note this point your, our and everyone's honour, என்னதான் வீட்ல மொத்துனாலும், வெளியே சொல்லும்போது கணவனை...சேச்சே...கணவரை "அவர்ர்ர்ர்", "இவர்ர்ர்ர்"னுதான் சொல்றாங்க) weekendலதான் off. இப்படி இருந்தா ஃபேமிலியோட கொஞ்சமாவது டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா? Married பர்சனாச்சே, ஃபேமிலி இருக்குமேன்னு அவனுக்கே (மறுபடியும் டேமேஜர்தான்!) தெரியவேணாம்?"
(அப்போ பேச்சுலர் எல்லாம் டெஸ்ட் ட்யூப் பேபியா? எங்க அப்பா, அம்மாவும் எங்களுக்கு ஃபேமிலிதானே?)
"சரி விடுங்க, அந்த ரெண்டு நாளாவது அவரு (அவங்களோட கணவர்ர்ர்ர்) சந்தோஷமா, நிம்மதியா இருக்கட்டும்"
"என்னங்க, எல்லாரும்(!!!) இதையே சொல்றீங்களே!"
எல்லாருமா???? என்ன பண்றது, சக மனிதனுக்காக பரிதாபப்படறோம்....ம்ம்ம்... ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு கஷ்டம்!
oru joke undu
ReplyDeletekalyanam agathavuku oru kashtam
kalyanam anavanuku ayiram kashtam