இடம்: ஜில்ஜில் ஸ்வீட் ஸ்டால், சென்னை(யில ஏதோ ஒரு ஏரியா...எங்களுக்கு வேறு கிளை, வேர், இலை, பூ, காய், பழம், திண்ணை, சொம்பு, பஞ்சாயத்து என்று எதுவும் கிடையாது)
"ஹலோ ஜில்ஜில் ஸ்வீட் ஸ்டால்???"
எமன் வாகனம் ரேஞ்சுக்கு இருக்கற ஒருத்தர், ஓனரா இருக்கறதால 'கல்லா'ல உக்காந்துகிட்டு ஃபோன் அட்டெண்ட் பண்றார்.
"ஆமா, நீங்க யாரு?"
"சொல்லுங்க"
"உங்ககிட்ட ஸ்வீட்ஸ்லாம் ஃப்ரெஷ்ஷா இருக்கா?"
"(ஓனர் தன் மனதுக்குள்) ஏண்டா நான் என்ன பழமா விக்கறேன், பிரெஸ்ஸா இருக்கா, அழுகிபோச்சான்னு கேக்கறதுக்கு"
"ஆங்....பிரெஸ்ஸாவே இருக்குதுங்க"
"தட்ஸ் குட், ஒரு 1200 பேருக்கு வர்ற மாதிரி, ஒவ்வொருத்தருக்கும் அரைகிலோ ஸ்வீட், ஏதாவது ஒரு அல்வா டைப்ல குடுக்கணும்"
"அதுக்கென்ன சார், புதுசா 'பேக்கு' (Bekku) அல்வான்னு ஒண்ணு வந்திருக்கு, அதை குடுத்து உடுங்க, வெலையும் சீப்தான் சார்"
"அதென்ன 'பேக்கு' அல்வா? Name புதுசா இருக்கே.."
"இந்த அல்வா செய்யுறது 'பேக்கு' செடியோட இலையிலருந்து சார். நம்ம தோட்டத்துல இந்த 'பேக்கு' செடிய நட்டுவெச்சிட்டு, தண்ணி கொஞ்சூண்டு ஊத்துனாபோதும், உரம் வருஷத்துக்கு ஒரு முறை கொஞ்சூண்டு போட்டா போதும். ஆனாலும் கொஞ்சம்கூட சூடு சொரணையே இல்லாம நல்லா வளர்ந்து, நம்ம வியாபாரத்துக்கு ஒதவியா இருக்கும். நாம டெவலப்பு ஆயிடுவோம், ஆனா இந்த செடிங்க அப்புடியேதான் இருக்கும். அதனாலதான் இதுக்கு பேரு 'பேக்கு' செடி"
"ஒகே, அல்வா'ஸ் பர்த் இன்ஃபர்மேஷன் ஈஸ் நைஸ், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, ஒவ்வொரு அரைகிலோவா, 1200 பேருக்கு குடுக்கற மாதிரி 'பேக்கு' அல்வாவை பேக் பண்ணிடுங்க"
"அதுக்கென்ன சார், பண்ணிடலாம், ஆனா ஒரு சந்தேகம், தீபாவளிகூட முடிஞ்சிடுச்சு, பொங்கலுக்கு இன்னும் நாள் இருக்குது, இப்போ என்ன திடீர்னு எல்லாருக்கும் அல்வா குடுக்குறீங்க, கம்பெனில ஏதாவது ஸ்பெஸலா சார்?"
"யெஸ், எங்க ஆஃபிஸ்ல அப்ரைஸல் ஸ்டார்ட் பண்ணப்போறோம்"
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........(இந்த பதிவோட தலைப்பை மறுபடி பாருங்க)
'பேக்கு' அல்வாவை பேக் பண்ணிடுங்க"
ReplyDeleteitha vasinga oru time