Saturday, October 24, 2009
மீ த எஸ்கேப்பு
இன்னைக்கு ஆஃபிஸ்ல பக்கத்து டீம்ல இருக்கறவர், ஏதோ ஒரு மொக்க பாட்டு பாடிகிட்டிருந்தார். ஏழு, எட்டு அடி தள்ளி உக்காந்துட்டிருந்த என்னாலேயே அவர் இம்சைய தாங்கமுடியல. சே, அவர் பக்கத்துல உக்காந்துட்ருக்கறவங்க பாவம்னு பரிதாபப்பட்டு களத்துல இறங்குனேன்
(இந்த இடத்துல விஜய் படத்துல வர்ற மாதிரி ஹே...ஹேன்னு பேக்கிரவுண்ட் மியூஜிக்.....ஓகே..ஓகே..ஓகே..இதெல்லாம் ஓவர்னு திட்டாதிங்க, மியூஜிக்க கட் பண்ணிடுறேன். சே, ஒரு வளரும் கலைஞனை என்கரேஜ் பண்ணுவோம்னு நெனப்பீங்களா, அத விட்டுட்டு...)
அவர்கிட்ட போய் அவர் தோள்ல கை வெச்சேன். நிமிர்ந்து பாத்தார்.
"வாழ்க்கைன்னா எல்லாருக்கும் ஏதாவது கஷ்டம் இருக்கத்தாங்க செய்யும், அதுக்காக? எங்களையெல்லாம் பாருங்க, நாங்க என்ன அழுதுட்டா இருக்கோம்?"
2 செகண்ட் என்னையே பாத்துகிட்டிருந்தார். ஏதோ கெட்ட வார்த்தை யோசிச்சுட்டிருந்தாரு போல, அதுக்கப்புறம் நான் ஏன் அங்க நிக்கறேன்?
மீ த எஸ்கேப்பு!
அப்பாடா இப்போதான் ஆத்ம திருப்தி, எப்படியோ இந்த "மீ த எஸ்கேப்பு"வ நானும் யூஸ் பண்ணிட்டேன். "மைக்கேல் மதன காம ராஜன்"ல கமல் சொல்வாரே "நல்லாக்குதுபா இந்த 'கேட்ச் மை பாய்ண்ட்', நானும் சமயம் வரும்போது யூஸ் பண்ணிக்கறேன்"னு, அதுமாதிரி நமக்கு எப்போ சான்ஸ் கெடைக்கும்னு பாத்துகிட்டிருந்தேன். இதோ யூஸ் பண்ணியாச்சு:)
நிறைய பேரோட பதிவுகள படிக்கும்போது அதுல எனக்கு ரொம்ப புடிச்ச சொற்றொடர் இந்த "மீ த எஸ்கேப்பு". இதுல என்னடா இருக்குன்னு நீங்க கேக்கலாம். ஆனா என்னன்னு தெரியல, எனக்கென்னவோ........சிம்பிளா "தளபதி" ஷோபனா ஸ்டைல்ல சொல்லணும்னா "புடிச்சிருக்கு"
Labels:
மீ த எஸ்கேப்பு
Subscribe to:
Post Comments (Atom)
neenga antha dialogue solanumna onum pana venam en kavithai blog open pani 1st line vasinga adutha nimisham neenga close paniduvinga apo unga mulaila irunthu antha dialogue varum
ReplyDelete