Thursday, July 09, 2009

ப‌ட்ஜெட் 2009


ம‌த்திய‌ அர‌சு ப‌ட்ஜெட் போட்டு நாலு நாள் ஆகுது. இன்னும் அத‌ப‌த்தி பேசாம‌ இருந்தா எப்ப‌டி? அதான் இன்னைக்கு கொஞ்ச‌ம் ப‌ட்ஜெட் ப‌க்க‌ம் ஒதுங்க‌லாம்னு பாக்குறேன். பேப்ப‌ர்ல‌ பாத்த‌துல‌, இது ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ட்ஜெட், சாதார‌ண‌ ம‌னுஷ‌ங்க‌ளுக்கான‌ ப‌ட்ஜெட்னுலாம் ஆஹா, ஓஹோன்னு எழுதியிருந்தாங்க‌. ம், ஏதோ ஒர‌ள‌வுக்கு வேண்ணா அப்ப‌டி இருக்க‌லாம். ஆனா இது சூப்ப‌ர்னு சொல்ல‌ என‌க்கு ம‌னசு வ‌ர‌ல‌.

எல்சிடி டிவிக்க‌ளோட‌ விலை குறையும், செல்ஃபோன்களோட‌ விலை குறையும்னு சொல்றாங்க‌. அட‌ போங்க‌ய்யா, எல்சிடி டிவி விலை குறைஞ்சா என்ன‌, செல்ஃபோன் விலை குறைஞ்சா என்ன‌, எங்க‌ம்மா வெங்காய‌ம் விலை குறையுதா, த‌க்காளி விலை குறையுதா, கேஸ் விலை குறையாட்டாலும் ஏறாம‌ இருக்குதான்னுலாம்தான் பாப்பாங்க‌. ப‌த்தாததுக்கு ப‌ட்ஜெட்டுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாலேயே பெட்ரோல், டீச‌ல் விலையையும் ஏத்திட்டாங்க‌. இதுக்கு மேல‌ என்ன‌ சொல்றது.

இந்த‌ பெட்ரோல், டீச‌ல் ரெண்டுத்துக்குமே ஏதாவ‌து மாற்றுப்பொருள் ஒண்ணு க‌ண்டுபுடிக்க‌ணும். அப்ப‌தான் ஆயில் அதிக‌மா வெச்சிருக்க‌ற‌ நாடுங்க‌ ஓவ‌ர் சீன் போடுற‌தை நிறுத்துவாங்க‌. வெறும் அப்ப‌ள‌ம் பொரிக்க‌ற‌துக்கும், வ‌டை போடுற‌துக்கும் மட்டும் ஆயில் இற‌க்கும‌தி ப‌ண்ணா, அவ‌ங்க‌ நிலைமை என்னாகும்? ஏதாவ‌து எலெக்ட்ரிக் ஸ்கூட்ட‌ர், எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார்னு க‌ண்டுபுடிங்க‌ய்யா. சோலார்ல‌ இய‌ங்க‌ற‌ மாதிரி இருந்தா இன்னும் ந‌ல்லாயிருக்கும்.

இந்த‌ ப‌ட்ஜெட்னால‌ ஜ‌வுளித்துறையில‌ அம்ப‌தாயிர‌ம் வேலைவாய்ப்புக‌ள் உருவாகும்னு தயாநிதி மாற‌ன் வேற‌ சொல்லியிருக்கார். ச‌ன் டிவி டாப் 10 மூவிஸ்ல‌ 'மாசிலாம‌ணி'க்கு ந‌ம்ப‌ர் 1 குடுக்க‌ற‌மாதிரி இவ‌ர் காமெடி ப‌ண்றாரா, இல்ல‌ சீரிய‌ஸாவே சொல்றாரான்னு தெரிய‌ல. பாப்போம் என்ன‌ ப‌ண்றாருன்னு...

Wednesday, July 08, 2009

க‌தை ஒண்ணு க்ளைமேக்ஸ் ரெண்டு



இன்னைக்கு ஒரு க‌தை எழுதியிருக்கேன். இதுல‌ ரெண்டு க்ளைமேக்ஸ் இருக்கு. உங்க‌ளுக்கு எது புடிக்குதோ அதுதான் க‌தையோட‌ முடிவா நீங்க‌ நெனச்சுக்க‌லாம்.

ம‌ணி இர‌வு 11:10, அலுவ‌ல‌க‌ம் முடிந்து ச‌ந்துரு வீட்டிற்கு வ‌ந்துகொண்டிருந்தான். இர‌வு வீட்டிற்கு தாம‌த‌மாக‌ வ‌ருவ‌து, க‌ண்ட‌ நேர‌த்தில் க‌ண்ட‌தை சாப்பிடுவ‌து, பின்பு தொப்பையை வ‌ள‌ர்த்துக்கொண்டு ச‌ம்பாதிப்ப‌தையெல்லாம் டாக்ட‌ரிட‌ம் கொண்டுபோய் கொட்டுவ‌து என்று இவைதான் சாஃப்ட்வேர் ப‌ணியில் இருப்ப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலோனோரின் அடையாள‌ங்க‌ள். ச‌ந்துருவும் அந்த‌ அடையாள‌ங்க‌ளில் ஒருவ‌ன். ஓல்ட் மஹாப‌லிபுர‌ம் ரோடில் அவ‌னுடைய‌ ப‌ல்ச‌ர் சீறிப்பாய்ந்துகொண்டிருந்த‌து. தூர‌த்தில் ஒரு ஏடிஎம் தெரிய‌, ம‌றுநாள் வீட்டு வாட‌கை கொடுக்க‌வேண்டிய‌து ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.

செக்யூரிட்டிகூட‌ இல்லாம‌ல் அந்த‌ ஏடிஎம் ஒரு மிக‌ச்சிறிய‌ பாழ‌டையாத‌ ப‌ங்க‌ளா போன்று காட்சிய‌ளித்த‌து. ப‌ண‌த்தை எடுத்துக்கொண்டு ம‌றுப‌டி த‌ன் ப‌ல்ச‌ரை சீற்ற‌ம‌டைய‌ச்செய்தான். ஒரு இருப‌து அடிதான் சென்றிருக்க‌க்கூடும். சாலை ஓர‌த்தில் இருவ‌ர் பைக்கை நிறுத்திவிட்டு, லிப்ட் கேட்டுக்கொண்டிருந்த‌னர். "நிற்க‌லாமா வேண்டாமா" ம‌ன‌ம் ச‌ற்று த‌ய‌ங்கிய‌து. இந்த‌ நேர‌த்தில் அதுவும் கையில் ப‌ண‌ம் இருக்கும்போது, வேண்டாம் என்று தோன்ற‌வே அவ‌ர்க‌ளை க‌ட‌ந்து ச‌ற்று வேக‌மாக‌ போக‌ ஆர‌ம்பித்தான்.

இந்த‌ சாலையில் இந்த‌ நேர‌த்தில் நிற்ப‌து ஒருவேளை ந‌ம்ம‌ சாஃப்ட்வேர் சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளோ என்றெண்ணி வ‌ண்டியைத் திருப்பினான். அவ‌ர்க‌ள் நின்றுகொண்டிருந்த‌ இட‌த்திற்கு வ‌ந்து ப‌ல்ச‌ரின் ப‌ல்ஸை த‌ற்காலிக‌மாக‌ நிறுத்திவைத்தான். இருட்டில் அவ‌ர்க‌ளின் முக‌ம்கூட‌ ச‌ரியாகத் தெரிய‌வில்லை.

"எனி ப்ராப்ள‌ம்?"

"யா, இட்ஸ் ப்ரோக் ட‌வுன். பேக்வீல். கேன் யூ ப்ளீஸ் ஹெல்ப் அஸ்?"

"ஷ்யூர், ஐ'ம் கோயிங் டூ அடையார். க‌ம் வித் மீ. ஐ ட்ராப் போத் ஆஃப் யூ நிய‌ர் பை அடையார் ப‌ஸ் டெர்மின‌ஸ். யூ கேன் ஃபைன்ட் எ சொல்யூஷ‌ன் ஃபார் திஸ் ஓவ‌ர் தேர்"

"நோ வீ கேன் ஹாண்டில் திஸ். வீ ஜ‌ஸ்ட் வாண்ட் யுவ‌ர் ம‌ணி, ஏடிஎம் கார்ட் அண்ட் தி பாஸ்வேர்ட் ஆஃப் யுவ‌ர் ஏடிஎம் கார்ட்"

"வ்வ்வ்வ்வாட்?"

"உன்கிட்ட‌ இருக்க‌ற‌ காசு, ஏடிஎம் கார்ட், அந்த‌ கார்டோட‌ பாஸ்வேர்ட் வேணும்"

"ஸீ, நான் உங்க‌ளுக்கு ஹெல்ப் ப‌ண்ண‌ணும்னு...."

"த‌ பார், நான் ரொம்ப‌ பொறுமைசாலி கெடையாது. சைல‌ன்டா குடுத்துட்டினா, நீ ந‌ல்ல‌ப‌டியா வீட்டுக்கு போலாம். முர‌ண்டு ப‌ண்ணா, இதோ இவ‌ன் இருக்கான் பார்...வெரி டேஞ்ச‌ர‌ஸ் ஃபெலோ, கைல‌ க‌த்தி வேற‌ வெச்சிருக்கான். ஐ'ம் நாட் ரெஸ்பான்ஸிபிள் இஃப் எனிதிங் ஹாப்ப‌ன் டூ யூ"

வேறு வ‌ழியில்லை, இருப்ப‌தை கொடுத்துவிட்டுதான் கிள‌ம்ப‌வேண்டும் என்று முடிவு செய்து ப‌ண‌த்தை எடுத்துக்கொடுத்தான். ப‌ர்ஸிலிருந்த‌ ஏடிஎம் கார்டுக‌ளையும் எடுக்க‌, உத‌வி கேட்ட‌ அந்த‌ உத்த‌ம‌புத்திர‌ன்,

"ஹே எல்லா கார்ட்ஸூம் வேணாம். ஜ‌ஸ்ட் ஐசிஐசிஐ கார்ட் ம‌ட்டும் குடு. உங்க‌ ஆஃபிஸ்ல‌ எல்லாருக்கும் அங்க‌தானே அக்க‌வுண்ட் இருக்கு. எல்லாத்தையும் உங்கிட்ட‌யிருந்து புடுங்கிட்டா பாவ‌ம் நீ என்ன‌ ப‌ண்ணுவ‌?"

திருடுற‌ நாய் பாவ‌ புண்ணிய‌ம் வேற‌ பாக்குது என்று ம‌னதிற்குள் திட்டிக்கொண்டே ச‌ந்துரு கார்டை கொடுத்தான்.

"பாஸ்வேர்ட்?"

இதுபோன்ற‌ த‌ருண‌த்தில் மாட்டிக்கொண்டால் ஏடிஎம் பாஸ்வேர்டை ரிவ‌ர்ஸாக‌ சொல்ல‌வும் என்று எப்போதோ வ‌ந்திருந்த‌ இமெயில் ஞாப‌க‌த்திற்கு வ‌ர‌, "0853" என்றான்.

"குட் நீ கெள‌ம்ப‌லாம்....ஒன் செக‌ண்ட், கிவ் மீ யுவ‌ர் மொபைல்"

மொபைலையும் அவ‌னிட‌ம் கொடுத்துவிட்டு, ப‌ல்ச‌ரை கிள‌ப்பினான்.

க்ளைமாக்ஸ் 1:

வீட்டிற்கு வ‌ந்த‌ ச‌ந்துரு முத‌ல் வேளையாக‌ பேங்க் க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு த‌ன‌து லேண்ட்லைன் ஃபோன் மூல‌மாக‌ பேசி விவ‌ர‌த்தை சொல்லி அக்க‌வுண்ட்டை ப்ளாக் ப‌ண்ணுமாறு கேட்டுக்கொண்டான். போலிஸுக்கும் கால் செய்து தான் பாஸ்வேர்டை ரிவ‌ர்ஸாக‌ சொல்லிய‌தை தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். இக்க‌ட்டான‌ த‌ருண‌த்திலும் தான் சாம‌ர்த்திய‌மாக‌ ந‌ட‌ந்துகொண்ட‌தை எண்ணி, நாளை "ந‌ம‌க்கு நாமே" என்கிற‌ திட்ட‌ம் போல் ந‌ம‌க்கு நாமே ஒரு ட்ரீட் கொடுக்க‌வேண்டும் என்று முடிவுசெய்தான். (ச‌ரி போதும், அவ‌ன் தூங்க வேணாமா? க்ளைமாக்ஸ் 1ஐ இதோட‌ முடிச்சிக்க‌லாம்).

க்ளைமாக்ஸ் 2:

வீட்டிற்கு வ‌ந்த‌ ச‌ந்துரு முத‌ல் வேளையாக‌ பேங்க் க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு த‌ன‌து லேண்ட்லைன் ஃபோன் மூல‌மாக‌ பேசி விவ‌ர‌த்தை சொல்லி அக்க‌வுண்ட்டை ப்ளாக் ப‌ண்ணுமாறு கேட்டுக்கொண்டான். போலிஸுக்கும் கால் செய்து தான் பாஸ்வேர்டை ரிவ‌ர்ஸாக‌ சொல்லிய‌தை தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். டேபிளின் மேலிருந்த‌ வாட்ட‌ர் பாட்டிலை எடுக்க‌ப்போகும்போது, திடீரென்று ம‌னிஷா கொய்ராலா சிரிக்கும் ச‌த்த‌ம் கேட்ட‌து. அட‌ அதாங்க‌, டெலிபோன் ம‌ணி அடித்த‌து.

"ஹ‌லோ ச‌ந்துரு ஹிய‌ர்"

"ஓ உன் பேரு ச‌ந்துருவா". ம‌றுப‌டி அந்த‌ திருட்டு ராஸ்க‌ல்

அவ‌ன் தொட‌ர்ந்தான், "நீ என்ன‌ பெரிய‌ புத்திசாலின்னு நென‌ப்பா? பாஸ்வேர்ட் கேட்டா ரிவ‌ர்ஸ்ல‌ சொல்லிட்டு போற‌, ப்ளடி இடிய‌ட்"

ச‌ந்துருவுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து, "ஹே ஸ்டாப் இட், இந்த‌ ந‌ம்ப‌ர் உன‌க்கு எப்ப‌டி கெடைச்சுது? யூ ராஸ்க‌ல், நான் ஆல்ரெடி போலிஸ்கிட்ட‌ க‌ம்ப்ளைண்ட் குடுத்தாச்சு. அவ‌ங்க‌ உன் ந‌ம்ப‌ர‌ இந்நேர‌ம் ட்ரேஸ் ப‌ண்ணியிருப்பாங்க‌. பீ ரெடி டூ ஸ்டே பிஹைன்ட் த‌ பார்ஸ் மேன்"

அவ‌ன், "அட‌ அறிவுகெட்ட‌வ‌னே, உன‌க்கு சாஃப்ட்வேர் த‌விர‌ வேற‌ எதுவுல‌யும் மூளை வேல‌ செய்யாதா? சொல்றேன் கேட்டுக்கோ, இப்போ நான் கால் ப‌ண்ற‌து உன்னோட‌ மொபைல்ல‌ இருந்து, நீதான் "ஹோம்"னு சேவ் ப‌ண்ணி வெச்சிருக்கியே. நானும் ஒரு ஐடி ப்ரொஃப‌ஷ‌ன‌ல்தான். உன்னோட‌ ஆபிஸ்ல‌ என்னோட‌ ஃப்ரெண்டு ஒருத்த‌ன் ஒர்க் ப‌ண்றான். சோ அவ‌னுக்கு எந்த‌ பேங்க்ல‌ அக்க‌வுண்ட்ங்க‌ற‌து என‌க்கு தெரியும். நீதான் நாய் க‌ழுத்துல‌ தொங்க‌விட்ட‌ செயின் மாதிரி ஆபிஸ்விட்டு வெளியே வ‌ந்தும் உன் க‌ழுத்துல‌ ஐடி கார்ட‌ தொங்க‌விட்டுட்ருந்தியே. அத‌வெச்சுதான் நீ எந்த‌ ஆபிஸ்னு க‌ண்டுபுடிச்சேன். அப்புற‌ம், இந்த‌ மாதிரி சிச்சுவேஷ‌ன்ல‌ மாட்டிகிட்டா ஏடிஎம் கார்ட் பாஸ்வேர்ட‌ ரிவ‌ர்ஸ்ல‌ சொல்லுங்க‌ன்னு உன‌க்கு ஒரு இமெயில் வ‌ந்திருந்தா, அது எனக்கு வ‌ந்திருக்காதா?"

"ம்...நீ கொஞ்ச‌ம் ப்ரில்லிய‌ண்டான‌ திருட‌ன்தான். அதுச‌ரி நான் ரிவ‌ர்ஸ்ல‌தான் பாஸ்வேர்ட‌ சொன்னேன்னு எப்ப‌டி க‌ண்டுபுடிச்ச‌?"

"ஸீ அது ஒரு ஜென்ர‌ல் சைக்கால‌ஜி. பொதுவா யாரும் ஜீரோல‌ ஸ்டார்ட் ப‌ண்ற‌ மாதிரி பாஸ்வேர்ட் வெக்க‌மாட்டாங்க‌. நீ "0853"ன்னு சொல்லிட்டுபோன‌துக்க‌ப்புற‌ம்தான் என‌க்கு அந்த‌ இமெயில் ஸ்ட்ரைக் ஆச்சு. எனிவே, தேங்க்ஸ் மேன்."

"நீ ஒரு ஐடி ப்ரொஃப‌ஷ‌ன‌ல்னு சொன்ன‌. அப்புற‌ம் ஏன் இந்த‌ மாதிரி ஸ்டுப்பிட் ஆக்ட்ல‌ இற‌ங்க‌ற‌?"

"அது ஒரு 'ஜென்டில்மேன்' ப்ளான். நான் ஒரு இஞ்சினிய‌ரிங் காலேஜ் க‌ட்டிட்ருக்கேன். அதுக்கு டொனேஷ‌ன் குடுங்க‌டான்னா எவ‌ன் த‌ர்றான்? எல்லாரும் அவுட் ஆஃப் த‌ சிட்டில‌ ஒரு ப்ளாட் வாங்கிப்போட‌ற‌துல‌தான‌ இன்ட்ர‌ஸ்ட் காட்றீங்க‌. அத‌னால‌தான் இப்ப‌டி ப‌ண்றேன். அட் த‌ ஸேம் டைம், ஐ டிட்ன்ட் ட்ராப் எவ்ரிதிங் ஃப்ர‌ம் யுவ‌ர் அக்க‌வுண்ட். 25000 எடுத்துகிட்டேன், பேல‌ன்ஸ் 35000 இருக்கு. இப்ப‌டித்தான் நான் இதுவ‌ரைக்கும் ம‌த்த‌வ‌ங்க‌கிட்ட‌யிருந்தும் காசு எடுத்திருக்கேன். ஐ ஜ‌ஸ்ட் வாண்ட் எ பார்ட் ஆஃப் யுவ‌ர் ம‌ணி, நாட் எவ்ரிதிங்."

"க்ரேட், நீ நேர்ல‌ வ‌ந்து கேட்ருந்தின்னா நானே குடுத்திருப்பேன்"

"எவ்ளோ?"

"ம்...ஒரு...ஒரு...5000"

"இவ்ளோ சொல்லியும்.................உங்கிட்ட‌ அடிச்ச‌துல‌ தப்பே இல்ல‌"

Tuesday, July 07, 2009

ரோத‌னை

ச‌ன்டே சாய‌ந்த‌ர‌ம் செம‌ போர். ஏதாவ‌து ப‌ட‌ம் பாக்க‌லாம்னு வெளியே கெள‌ம்பிபோனா, தியேட்ட‌ர்ல‌ ந‌ம‌க்கு முன்னாடி எவ்வ‌ளோ பேர்! ச‌ரி ஏதாவ‌து கொஞ்ச‌ம் காலியா இருக்க‌ற‌ ப‌ட‌த்துக்கு போலாம்னு "தோர‌ணை" போனேன். சொன்னா ந‌ம்ப‌மாட்டீங்க‌. 10 ரூபாதான் டிக்கெட். ஏற்க‌ன‌வே ஒரு ப‌திவுல‌ இந்த‌ ப‌ட‌த்த‌ ப‌த்தி எழுதியிருந்தேன். அப்ப‌டியிருந்தும் போயிருக்கேன்னா பாருங்க‌, நான் எவ்ளோ பெரிய‌ ரிஸ்க் எடுத்திருக்கேன்னு.

டைட்டில் போட்டு முடிக்க‌ற‌துக்குள்ளேயே, என்ன‌டா இது அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு வ‌ந்துட்டோமோன்னு தோணுச்சு. ஓவ‌ர் பில்ட‌ப். ச‌ரி போக‌ப்போக‌ ச‌ரியாயிடும்னு பாத்தா, காமெடி ப‌ண்றேன்னு சொல்லி விஷால் ப‌ண்ற‌து இருக்கே! அய்யோ நான் என்ன‌த்த‌ சொல்ற‌து. இடைவேளையில‌ வ‌ர்ற‌ அந்த‌ ஒரு ட்விஸ்ட் த‌விர‌ ப‌ட‌த்துல‌ ஒண்ணுமே இல்ல‌.

ச‌த்திய‌மா சொல்றேன். இதுவ‌ரைக்கும் தியேட்ட‌ருக்கு போய் ஒரு பட‌த்த‌ ஃபுல்லா பாக்காம‌ நான் எழுந்துவ‌ந்த‌தில்ல‌. குருவி ப‌ட‌ம்கூட‌ ஃபுல்லா பாத்தேன். ஆனா இந்த‌ ப‌ட‌ம்....இன்ட‌ர்வெல்லுக்கு அப்புற‌ம் ஒரு 10 நிமிஷ‌ம் பாத்தேன். என்னால‌ உக்கார‌முடிய‌ல‌. இன்னாங்க‌டா இது, ஆனா வூன்னா, ச‌ண்டை போடுற‌துக்கு பின்னி மில்லுக்கு ஓடிப்போயிடுறீங்க‌. ச‌ண்டைக்காட்சிக‌ள் எடுக்குமிட‌ம்னு அங்க‌ போர்டா போட்டுவெச்சிருக்கு? ப‌த்தாத‌துக்கு ஆளாளுக்கு "தோர‌ணையா பேசிட்டு போற‌", "என் தோர‌ணைய காட்றேன்டா"ன்னு பட‌த்தோட‌ பேர‌ அடிக்க‌டி சொல்லி ந‌ம்ம‌ உயிர‌ வாங்குறாங்க‌.

ஏன் இதையெல்லாம் எழுத‌றேன்னா, இன்னும் கொஞ்ச‌ நாள்ல‌ இந்த‌ பட‌த்த‌ "இந்திய‌ தொலைக்காட்சிக‌ளில் முத‌ன்முறையாக‌, திரைக்கு வ‌ந்து சில‌ மாத‌ங்க‌ளே ஆன, புத்த‌ம் புதிய‌ அதிர‌டித் திரைப்ப‌ட‌ம்"னு சொல்லி டிவில‌ போடுவாங்க‌. த‌ய‌வுசெய்து பாருங்க‌. அப்ப‌தான் இன்ட‌ர்வெல்லுக்கு அப்புற‌ம் நான் ஏன் எழுந்துவ‌ந்தேன்ங்க‌ற‌து புரியும்.

Sunday, June 28, 2009

ச்ச்ச்ச்சீ(ப்) ஜ‌ர்ன‌லிஸ‌ம்


இந்த‌ ப‌திவுல‌ நான் சில‌ அநாக‌ரிக‌மான‌ வார்த்தைக‌ள‌ யூஸ் ப‌ண்ணிருக்கேன்னு உங்க‌ளுக்கு தோணுச்சுன்னா, ஐ'ம் ரிய‌லி ஸாரி. என் ம‌ன‌சுல‌ தோணுன‌த‌ அப்ப‌டியே எழுத‌றேன்.

போன வார‌ம் விக‌ட‌ன்ல‌ விஜ‌ய் அர‌சிய‌லுக்கு வ‌ர்றது, க‌ட்சி ஆர‌ம்பிக்கப்போற‌துன்னு ப‌ய‌ங்க‌ர பில்ட‌ப்போட‌ ஒரு ஆர்ட்டிகிள் போட்டிருந்தாங்க‌. அதுக்கு போட்டியா இந்த‌ வார‌ம் குமுத‌த்துல‌ "ர‌சிக‌ர்க‌ளுக்கு அஜித் அன்புக்க‌ட்ட‌ளை"ன்னு ஒரு ஆர்ட்டிகிள் போட்டிருக்காங்க‌.

விஜ‌ய்யும் அவ‌ர் அப்பாவும் எடுக்க‌ற‌ ஸ்டெப்ல‌யிருந்தே அவ‌ங்க‌ ஏதோ ப்ளான்ல‌ இருக்காங்க‌ன்னு புரியுது. ஆனா இதுவ‌ரைக்கும் அர‌சிய‌ல் ப‌த்தி எதுவுமே பேசாம‌ இருக்க‌ற‌ அஜித்தை ஏன் வ‌ம்புக்கு இழுக்க‌றாங்க‌ன்னே தெரிய‌ல. ஒரு மாஸ் ஹீரோவா இருந்தும் இந்த நொடி வ‌ரைக்கும் அர‌சிய‌ல் ஆசை இல்லாம‌ இருக்க‌ற‌து சினிமாவுல‌ ரெண்டே பேர்தான். ஒண்ணு க‌ம‌ல், இன்னொன்ணு அஜித்.

அய்ய‌ய்யோ ஆன‌ந்த‌ விகட‌ன்ல‌ த‌ள‌ப‌திய‌ ப‌த்தி போட்டுட்டாங்க‌ளே. சரி நாம‌ த‌ல‌யை ப‌த்தி போட்ருவோம்னு ந‌மீதாத்துல‌...ஸாரி குமுதத்துல‌ முடிவு ப‌ண்ணிட்டாங்க‌ போல‌!

போட்டி போட‌ணும்னா புத்திசாலித்த‌ன‌மா போட்டி போடுங்க‌ய்யா! ர‌சிக‌ர்க‌ளையும், வாச‌க‌ர்க‌ளையும் ம‌டைய‌னுங்க‌ மாதிரி ட்ரீட் ப‌ண்றீங்க‌ளே, இதுதான் ஜ‌ர்ன‌லிஸ‌மா? அஜித‌ வ‌ந்து சொன்னாரா, நான் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ப்போறேன்னு. ஜூராஸிக் பார்க்ல‌ டைனோச‌ர் வ‌ந்தா, ப‌ன‌க‌ல் பார்க்ல‌யும் வ‌ரும்னு அர்த்த‌மா? அண்ணா, க‌லைஞ‌ர், எம்ஜிஆர், ஜெய‌ல‌லிதான்னு சினிமாவுல‌ ஜெயிச்ச‌வ‌ங்க‌ சிஎம் ஆயிட்டா, அடுத்து வ‌ர்ற‌ ஹீரோஸும் சிஎம் ஆயிடுவாங்க‌ளா?

என்னை கேட்டா, ஹீரோக்க‌ளுக்கு த‌லைக்க‌ன‌த்தை ஏத்த‌ற‌தே இந்த‌ மாதிரி ஆர்ட்டிகிள்ஸ்தான். அஜித் ர‌சிக‌ர்க‌ளாயிருந்தாலும், விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளாயிருந்தாலும் நான் சொல்லுற‌து ஒண்ணே ஓண்ணுதான். உங்க‌ த‌லைவ‌ர் ப‌ட‌த்தை முத‌ல் நாளே, முத‌ல் ஷோவே போய் பாருங்க‌. கைத‌ட்டி ர‌சிங்க‌. விசில் அடிங்க‌. உங்க‌ ரூமுல‌ த‌லைவ‌ர் ஃபோட்டோவ‌ ஒட்டிவைங்க‌. ஆனா அவ‌ர் சிஎம் ஆக‌ணும்னுலாம் க‌ன‌வு காணாதீங்க‌. அர‌சிய‌ல்ல‌ ஈடுப‌டுற‌து அவ‌ங்க‌ளோட‌ விருப்ப‌ம். நீங்க‌ ஃபோர்ஸ் ப‌ண்ணி அவ‌ங்க‌ வ‌ர்ற‌துனால‌ உங்க‌ளுக்கு என்ன‌ லாப‌ம். சிம்பிள், என்னைக்காவ‌து உங்க‌ த‌லைவ‌ர் வெச்சிருக்க‌ற‌ கார் மாதிரி நாமும் வாங்க‌ணும்னு ஆச‌ப்ப‌ட்டிருக்கீங்க‌ளா. ஸோ, உங்க‌ குடும்ப‌த்தையும் கொஞ்ச‌ம் க‌வ‌னிங்க‌.

இன்னொன்னு, ந‌டிக‌ர்க‌ள் அர‌சிய‌லுக்கு வ‌ர‌க்கூடாதுன்னு நான் சொல்ல‌ல‌. ப‌ட், அவ‌ங்க‌ளுக்கு நேச்சுர‌லாவே அந்த‌ இன்ட்ர‌ஸ்ட் இருக்க‌ணும். இன்னொருத்த‌ர் ஃபோர்ஸ் ப‌ண்ணி அவ‌ங்க‌ வ‌ர‌க்கூடாது. அததான் நான் சொல்ல வ‌ரேன். என‌க்கு பில்லாவும் புடிச்சிருந்த‌து, போக்கிரியும்(90%) புடிச்சிருந்த‌து. ஏக‌ன் சுத்த‌மா புடிக்க‌ல‌, குருவி ச‌கிக்க‌ல‌ (வில்லு நான் பாக்க‌ல‌).


மை டிய‌ர் குமுத‌மே! இந்த‌ மாதிரி டுபாக்கூர் ஆர்ட்டிகிள் போட்டு மூணு ப‌க்க‌த்த‌ வேஸ்ட் ப‌ண்ணின‌துக்கு பேசாம‌ ந‌மீதா ஃபோட்டோவையே மூணு ப‌க்க‌த்துல‌யும் போட்டிருக்க‌லாம்!


Sunday, June 21, 2009

ஹாப்பி ப‌ர்த்டேங்ணோவ்!


ண்ணா, ஹாப்பி ப‌ர்த்டேங்ணா, ம்..க‌ட்சி ஆர‌ம்பிக்க‌போறீங்க‌ளாம், ப‌த்திரிக்கைக‌ள்ல‌ ப‌டிச்சேன். ந‌ம‌க்கு ஏன்ணா இதெல்லாம். உங்க‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து செய்ய‌ணும்னு நென‌ச்சா, கில்லி, போக்கிரி மாதிரி ஹிட் ப‌ட‌ங்க‌ள குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்ணுங்க‌. அதவிட்டுட்டு க‌ட்சி, அர‌சிய‌ல்னு காமெடி ப‌ண்ணிகிட்டு...


ந‌ம்ம‌ ப‌ய‌புள்ளைக‌ள‌ ப‌த்தி உங்க‌ளுக்கு தெரியாதுன்ணா, உங்க‌ள‌ பாக்குற‌துக்கு கூட்ட‌மா வ‌ருவாங்க‌. ஆனா சூரிய‌னோ, இலையோதான் ஓட்டு போடும்போது அவ‌ங்க‌ க‌ண்ணுக்கு தெரியும். நீங்க‌ளோ ப‌ய‌ங்க‌ர‌ ரிச‌ர்வ்ட் டைப். அர‌சிய‌ல்ல‌ அடுத்த‌வ‌ன‌ நாக‌ரிக‌மா காறிதுப்புனாதான் வேலைக்காகும். சோ, யோசிச்சு முடிவுப‌ண்ணுங்க‌.


மொத‌ல்ல‌ இந்த‌ மாதிரில்லாம் உங்க‌ளுக்கு யோச‌னை சொல்ற‌வ‌ங்க‌ள‌ அட‌க்கிவைங்க‌. ஏன்னா இப்போ உங்க‌ள‌ ம‌றைமுக‌மா க‌வுக்க‌றதே அவ‌ங்க‌தான். தெலுங்கு ப‌ட‌ங்க‌ள் டிவிடி வாங்கி குடுக்க‌ற‌தோட‌ அவ‌ங்க‌ வேலை முடிஞ்சுபோச்சுன்னு சொல்லிவைங்க‌. போயி, ம‌கேஷ்பாபு ந‌டிச்ச‌ ப‌ட‌த்தோட‌ ரைட்ஸ் வாங்க‌ற‌ வேலைய பாருங்ணா!



Saturday, June 20, 2009

ம‌ன்னிக்க‌ வேண்டுகிறேன்



இதுக்கு முன்னாடி ஒரு ப‌திவுல‌, சிம்புவ‌ ப‌த்தி விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணிண‌துக்கு நான் குருவா ம‌திக்க‌ற‌ என் ந‌ண்ப‌ர், "அது த‌ப்பு! என்ன‌தான் உங்க‌ளுக்கு புடிக்காட்டாலும் இப்ப‌டி ப‌ப்ளிக்கா சிம்ப‌ன்ஸிங்க‌ற வார்த்தையெல்லாம் யூஸ் ப‌ண்ணியிருக்கக்கூடாது"ன்னார். ம்...அவ‌ர் சொல்ற‌தும் ச‌ரிதான். பட்...சிம்புவ‌ என‌க்கும் சின்ன‌ வ‌ய‌சுல‌ ரொம்ப‌வே புடிச்சிருந்த‌து.

ஒரு சின்ன பைய‌ன் சூப்ப‌ர் ஸ்டார் மாதிரி ஸ்டைல் ப‌ண்ற‌து நல்லாயிருந்த‌து. ஆனா அதையே 22 வ‌யசுல‌யும் ப‌ண்ணா...ஐயையோ! ம‌றுப‌டியும் விம‌ர்சன‌ம் ப‌ண்ண‌ ஆர‌ம்பிக்கறேன்.

ஓகே, அந்த‌ உல‌க‌ உத்த‌ம‌ர்கிட்டே (ந‌க்க‌ல் போகுதா பாருங்க‌..ஹி..ஹி)என‌க்கு புடிச்ச‌து ப‌த்தி எழுதி விமோச‌ன‌ம் தேடிக்க‌றேன். ம்ம்ம்ம்...பாட்டு விஷ‌ய‌த்துல‌ சிம்பு குட். ந‌ல்ல மியுசிக் சென்ஸ் ப்ள‌ஸ் ந‌ல்ல‌ வாய்ஸ்!

ச‌மீப‌த்துல‌ நான் ர‌சிச்சு கேட்ட‌ சிம்பு பாடிய‌ பாட்டு, "குளிர் 100" ப‌ட‌த்துல‌ வ‌ரும் "ம‌ன‌செல்லாம் உன்னிட‌ம் கொடுத்தேன் என் உயிர் தோழா" பாட்டு. ஐ திங்க், சிம்பு இதுவ‌ரைக்கும் பாடின‌துலேயே இதுதான் பெஸ்ட்!

அந்த‌ பாட்ட‌ கேக்க‌ணும்னு விரும்ப‌ற‌வ‌ங‌க‌ளுக்கு http://thenkinnam.blogspot.com/2009/06/100.html

Sunday, June 14, 2009

எம்.ஜி.ஆர் & எம்.ஆர்.ராதா


நேத்து ஏதாவ‌து சிடி வாங்க‌லாம்னு போயிருந்த‌ப்போ திடீர்னு ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ள் ஏதாவ‌து வாங்க‌லாம்னு தோணுச்சு. கொஞ்ச‌ம் அல‌சி(சோப் போடாம‌) ஆராய்ஞ்ச‌துல‌, நான் வாங்கின‌ ப‌ட‌ங்க‌ள்...

1. ர‌த்த‌க்க‌ண்ணீர்
2. நாடோடி ம‌ன்ன‌ன்

ர‌த்த‌க்க‌ண்ணீர்: எப்ப‌டி இந்த‌ ப‌ட‌த்த‌ இவ்வ‌ள‌வு நாளா பாக்காம‌ இருந்தேன். சே! என்ன‌ ஒரு க்ளாஸ் ஆக்டிங். இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ எம்.ஆர்.ராதாவுக்கு அவார்ட் கெடைச்சுதான்னு தெரிய‌ல‌. ஆனா ர‌சிக‌ர்க‌ளோட‌ ம‌ன‌சுல‌ இட‌ம்பிடிக்க‌ற‌த‌விட‌ பெரிய‌ அவார்ட் இருக்கா என்ன‌? குஷ்ட‌ம் வ‌ந்த‌ப்ப‌றமும் ம‌னுஷ‌ன் ப‌ண்ற‌ ந‌க்க‌ல் இருக்கே! சும்மா சொல்ல‌க்கூடாது, இட்ஸ் அப்ஸொல்யூட்லி சூப்ப‌ர்ப்! இந்த‌ ப‌ட‌த்த‌ப‌த்தி நான் சொல்ற‌த‌விட‌ ஒரு த‌ட‌வ‌ நீங்க‌ளே பாருங்க‌. த‌மிழ்ல‌ க‌ண்டிப்பா பாக்க‌வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ இந்த‌ ப‌ட‌த்துக்கு நிச்ச‌ய‌மா ஒரு இட‌ம் இருக்கு. ஒரு சின்ன‌ இன்ஃப்ர்மேஷ‌ன், இந்த‌ ப‌ட‌த்துக்கு இசை, சித‌ம்ப‌ர‌ம் ஜெய‌ராம‌ன். பிண்ணணி இசை யாரு தெரியுமா? விஸ்வ‌நாத‌ன் ராம‌மூர்த்தி.
நாடோடி ம‌ன்ன‌ன்: இது ஒரு ப‌க்கா எம்ஜிஆர் இமேஜுக்கான‌ க‌தை. எம்ஜிஆர் வ‌ராத‌ சீன்க‌ள் ரொம்ப‌ க‌ம்மி. "இந்த‌ கூட்ட‌த்துக்கு இவன்தான் த‌லைவ‌ன்", "இந்த‌ நாட்டை காப்பாத்த‌ இனிமே உங்க‌ள‌ விட்டா யாரு இருக்கா"ன்னு எல்லாமே எம்ஜிஆர் ஃபார்முலாதான். ம‌ன்ன‌ன் மாதிரியே நாடோடி இருக்க‌றாருன்னு காவ‌லாளிக‌ளுக்கும், ம‌க்க‌ளுக்கும் தெரியுது. ஆனா ம‌ன்ன‌ராட்சிய‌ எதிர்க்க‌ற‌தா சொல்ற‌ பானும‌திக்கு தெரிய‌ல‌. இப்ப‌டி சில‌ ப‌ல‌ லாஜிக் இடிச்சாலும், வேக‌மான‌ திரைக்க‌தை அதையெல்லாம் ம‌ற‌க்க‌டிக்குது. அது எப்ப‌டிதான் ச‌ந்திர‌பாபு வாயில‌ இருந்து குருவி வ‌ர்ற‌ காட்சிய‌ எடுத்தாங்க‌ளோ தெரிய‌ல! ஆல்மோஸ்ட் 75% ப்ளாக்&ஒயிட்ல‌ வ‌ர்ற‌ ப‌ட‌ம் க‌டைசில‌ ச‌ரோஜாதேவி வ‌ர்ற‌ப்போ க‌ல‌ர்ல‌ மாறிடுது. க்ளைமாக்ஸ் ச‌ண்டைகாட்சி இந்த‌ ப‌ட‌ம் வ‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்துல‌ ரொம்ப‌வே பர‌ப‌ர‌ப்பா பேச‌ப்ப‌ட்டிருக்கும்னு நென‌க்குறேன். இந்த‌ ப‌ட‌த்துக்கு இசை எஸ்.என்.சுப்பையா. ஆங்..இன்னொரு விஷ‌ய‌ம் ர‌வீந்த‌ர்ங்க‌ற‌வ‌ரோட‌ சேர்ந்து இந்த‌ ப‌ட‌த்துக்கு வ‌ச‌ன‌ம் எழுதுன‌வ‌ர் க‌விய‌ர‌சு க‌ண்ண‌தாச‌ன். ஆனா இந்த‌ ப‌ட‌த்துல‌ அவ‌ர் ஒரு பாட்டுகூட‌ எழுத‌ல‌.


இந்த‌ ப‌ட‌த்துல‌ என‌க்கு புடிச்ச‌ ப‌ன்ச் ட‌ய‌லாக்: "என்னை ந‌ம்பாம‌ல் கெட்ட‌வ‌ர் நிறைய‌பேர் உண்டு, ந‌ம்பி கெட்ட‌வ‌ர் இதுவ‌ரை இல்லை"

ஒரு கோஇன்சிட‌ன்ஸ் பாத்திங்களா நான் பாத்த‌ ப‌ட‌ங்க‌ளோட‌ ஹீரோக்க‌ள் எம்ஜிஆர் & எம்.ஆர்.ராதா. இதுல‌ என்ன‌ கோஇன்சிட‌ன்ஸ்னு கேக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு த‌லைல‌ ஒரு குட்டு!

ச‌ரி ஓகே ம‌றுப‌டியும் அடுத்த‌ வார‌ம் எழுத‌றேன். ஸியூ டாட்டா பபை!