ரேடியோ மிர்ச்சியில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், "க்ரீம்ஸ் ரோட், டெய்லர்ஸ் ரோட், ஸ்டெர்லிங் ரோட், ஜோன்ஸ் ரோட் உட்பட 50 சாலைகளைத் தமிழில், தமிழறிஞர்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்யவுள்ளோம்" என்று செம்மொழி மாநாட்டுக்கு இங்கே பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டை...மன்னிக்கவும்..பட்டாம்பூச்சி விளைவை நிகழ்த்திக்காட்டினார்.
ஹோட்டலில் பூரி கொஞ்சம் உப்பலாக இல்லாவிட்டால், இந்த உப்பல் பிரச்னையை பதிவாக எழுதலாமா என்று யோசிப்பவன், சாலைகளின் பெயர் மாற்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு சும்மாவா இருப்பேன்?

ஏன் மாற்ற வேண்டும்?
ப்ளாக் & ஒயிட் காலத்தில், வெள்ளைக்கார 'தொர'யின் குதிரை வண்டியை ஓட்டியதற்காக அவரின் பெயரில் ஒரு சாலை, புகழ் பெற்ற கட்டிடத்தை கட்டியதற்காக கொத்தனாரின் பெயரில் ஒரு சாலை என்று சென்னையில் பல சாலைகள் 'தொர' காலத்து பெயர்களிலேயே அமைந்துள்ளன. காந்தி, காமராஜர், அண்ணா என்று சாதித்த பல தலைவர்களின் பெயரில் ஆங்காங்கே சாலைகள் இருந்தாலும், ஸ்டெர்லிங் ரோட், எல்டாம்ஸ் ரோட், மில்லர்ஸ் ரோட், பிளவர்ஸ் ரோட், டெய்லர்ஸ் ரோட், பட்டுள்ளாஸ் ரோட், உட்ஸ் ரோட், கிரீம்ஸ் ரோட், போக் ரோட், ஜோன்ஸ் ரோட் என பெரும்பான்மையாக இருப்பது 'பீட்டர்'ஸ் ரோட்தான்.
வள்ளுவர் சாலை, பாரதிதாசன் சாலை, கண்ணதாசன் சாலை என நம் சாலைகளுக்கு நாம் தமிழில் பெயர் வைக்காமல், இங்கிலாந்தில் எலிசபெத் ராணி குடியிருக்கும் சாலைக்கா தமிழில் பெயர் வைக்க முடியும்? நம் பிள்ளைகளுக்கு சுந்தர், ராம், பாலாஜி, சங்கர், ஹேமா, ரேணுகா, லாவண்யா, கல்பனா என்றுதான் பெயர் வைக்கிறோம். வில்லியம் ஸ்மித், க்ரெக் பெல்ட்ஸ், டேமன் ஆன்டர்சன் என்றல்ல. தயவுசெய்து இதில் மதத்தை இழுக்க வேண்டாம் ப்ளீஸ்...நாம் குடியிருக்கும் சாலைக்கு மட்டும் ஏன் பெயர் தமிழில் இருக்கக்கூடாது?
அப்படியெனில் ஸ்டாலின் அவர் பெயரை மாற்றிக்கொள்வாரா என்றெல்லாம் கேட்கவேண்டாம். அவருக்கு ஏன் அந்த பெயர் வைக்கப்பட்டது என்பதை கலைஞர் எவ்வளவோ மேடைகளில் சொல்லிவிட்டார். ஆதலால் புதிதாக அரிசியை எடுத்து போட்டு அரைக்க முயலுவோம்.
மாற்றினால்?
அரசு நினைத்தால் ஒரே இரவில், ஒவ்வொரு சாலையிலும் இருக்கும் போர்டுகளில், புதிய மஞ்சள் பெயிண்ட் அடித்து, கருப்பு வண்ணத்தில் அழகு தமிழில் பெயர் மாற்றி எழுதிவிட்டு போய்விடலாம். மெட்ராஸை சென்னையாக மாற்றியவர்களுக்கு இது ஒரு விஷயமே அல்ல. ஆனால் ஒரு சாதாரண குடிமகன் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், தொலைபேசி பில், கேஸ் ஏஜென்சி, பாஸ்போர்ட், அலுவலகம், பள்ளி என தன்னுடைய முகவரி கொடுத்திருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் போய் சாலையின் பெயரை மாற்றிக்கொண்டா இருக்கமுடியும்? இந்த பிரச்னையை சமாளிக்க அரசு பொதுமக்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்யப் போகிறது?
மெட்ராஸ் என்பதை சென்னை என்று மாற்றினாலும், இன்னமும் சென்னை தவிர்த்து பல ஊர்களில் மெட்ராஸ்தான். 'பையன் மெட்ராஸ்ல வேலைல இருக்கான்பா', 'பொண்ணு மெட்ராஸ்ல பெரியவ வீட்ல தங்கி படிக்கறா', 'மச்சி இங்க ஏன்டா ட்ரஸ் எடுக்கற, மெட்ராஸ்லயே எடுக்க வேண்டியதுதானே' என்று சென்னையை விட மெட்ராஸ்கள்தான் புழங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த பெயர் மாற்ற விஷயத்தில் சென்னைக்கு முதன்முறை வருபவர்கள் மட்டுமன்றி மற்ற எல்லோரையும் விட அதிகமாக அவதிப்படப்போவது தபால் துறையும், கொரியர் நிறுவனங்களும். இவர்கள்தான் மற்ற எல்லோரையும் விட அதிகமாக, பெயர் மாற்றிய சாலைகளை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள். இவர்களே விழி பிதுங்கினால், பாதிக்கப்படப்போவது நாம்தான். 'புள்ளி ராஜா'வையும், 'தில்லு துர'வையும் வெகுவாக விளம்பரப்படுத்தி, மக்களிடையே பிரபலமடையச் செய்தது போல், பெயர் மாற்றம் செய்த சாலைகளின் புதிய பெயர்கள், பழைய பெயர்கள் ஆகியவற்றை ஆங்காங்கே பேனர்கள் வைத்து விளம்பரப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
நீ இருக்கற தெரு பெயரை மாத்திட்டாங்களா, அதனாலதான் இப்படி குதிக்கறியான்னு கேக்காதீங்க. நான் குடியிருக்கும் தெரு ஒரு பழைய தமிழ் நடிகையின் பெயரில் இருப்பதால் அதை கண்டிப்பாக மாற்ற மாட்டார்கள்.
மேயர் சார், தமிழில் பெயர் மாற்றம்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்தாலே சாலையெல்லாம் மினி நீச்சல் குளமாக மாறிவிடுகிறதே. அதுவும் மே மாதத்தில் பெய்த லேசான மழைக்கே. அப்போது போர்டுகளில் சாலையை நீக்கிவிட்டு, காமராஜர் நீச்சல் குளம், பாரதிதாசன் நீச்சல் குளம் என்றா பெயர் மாற்றம் செய்வீர்கள்? கொஞ்சம் பார்த்து செய்ங்க சார்!
ஹா.. ஹா... சீரியஸான விஷயத்தையும் ஜாலியா எழுதறீங்க..
ReplyDeleteஆமா.. அதென்ன லேபிள்... செம்மொழி பாறைகள்(ராக்ஸ்)?
இல்லை இந்த மாற்றம் வரவேற்க தக்கது,
ReplyDeleteபெரும்பாலான மக்கள் (குறிப்பாக இப்போது மாணவர்களாய் உள்ள தலைமுறை) சென்னை என்றே அழைக்கின்றனர் (சென்னையிலும் சரி, வெளி ஊர்களிலும் சரி, வெளி நாடுகளிலும் சரி)..
இந்த பெயர் மாற்றம் நல்ல வகையான பாதிப்பை சிறிது காலத்தில் ஏற்படுத்தும்.
அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் விரும்பும் போதும் பலர் தடுக்கக, எதிர்மறையான கருத்துக்களை சொல்லி உள்ளார்கள். அனால் இன்று தமிழ்நாடு என்ற பெயர் எப்படி நிலை பெற்று உள்ளதோ அதே போல இந்த தமிழ் பெயர்களில் ஆன சாலை பெயர்களும் நிலை பெரும்.
:)))
ReplyDeleteஎல்டாம்ஸ் சாலைக்கு கமலஹாசன் சாலைன்னு பேர் வச்சி, எல்லீஸ் சாலைக்கு ரஜினிகாந்த் சாலைன்னு பேர் வைக்க போராட்டம் நடக்காமலிருந்தால் சரிதான்!
ReplyDelete//நம் பிள்ளைகளுக்கு சுந்தர், ராம், பாலாஜி, சங்கர், ஹேமா, ரேணுகா, லாவண்யா, கல்பனா என்றுதான் பெயர் வைக்கிறோம். // முதலில் இப்பெயர்களை மாற்றி தமிழில் பெயரிடுவீர், ஐயா.
ReplyDelete\\அப்போது போர்டுகளில் சாலையை நீக்கிவிட்டு, காமராஜர் நீச்சல் குளம், பாரதிதாசன் நீச்சல் குளம் என்றா பெயர் மாற்றம் செய்வீர்கள்? கொஞ்சம் பார்த்து செய்ங்க சார்\\
ReplyDeletelol..
வேலைக்கு சேர்ந்த புதிதில் கதீட்ரல் ரோடும், ராதாகிருஷ்ணன் சாலையும் வேறு வேறு என நினைத்துக்கொண்டிருந்தேன்:(
ஹாஹாஹா... சூப்பர் நடை ரகு. ஆனா சீரியஸ் விஷயத்தையும் சிரியஸ் விஷயமாவே எழுதணுமா..
ReplyDeleteஉங்க ஆலோசனை ரொம்ப சரி ரகு. பெயர்கள் மாற்ற மட்டும் படாமல் அம்மாற்றம் அனைவரையும் எளிதாய் சேரும் வண்ணம் அமைந்தால் தான் பயனுறும்.
நல்லா எழுதி இருக்கீங்கள்
ReplyDeleteNice... flow and the way you express
ReplyDeleteBy the way Madras and Chennai...
the new genre calls Chennai as Chennai
is'nt it ?
:)
//ஆதலால் புதிதாக அரிசியை எடுத்து போட்டு அரைக்க முயலுவோம்.//
ReplyDeleteஊற வச்ச அரிசிதான் நல்லா அரையும்:)
//நான் குடியிருக்கும் தெரு ஒரு பழைய தமிழ் நடிகையின் பெயரில் இருப்பதால் அதை கண்டிப்பாக மாற்ற மாட்டார்கள்.//
ReplyDeleteபானுமதி!பத்மினி,கண்ணாம்பா?
நீங்களெல்லாம் நேற்றுப் பிறந்த செம்மொழியில பெயர்மாற்றம் காண்பவர்கள்.
ReplyDeleteஇதே கோவையில் காப்பிக்கு குளம்பி போன்று குளம்பி வைத்த பெயர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன.
இருந்தாலும் மவுண்ட் ரோடு அண்ணாசாலை போன்று நின்றவையும் உண்டு.
எனவே செம்மொழி இன்னும் சில வருடங்களுக்குள்ளேயே அடிச்சுட்டுப் போய் விடும்.மொழி அழியாது.
என்ன பெயர் மாற்றினாலும் தமிழில் சொல்லிப் பழகிய பெயரே இருக்கலாம்.
ReplyDeleteஉ-ம்: ஹாமில்டன் ப்ரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி
சகாதேவன்
நல்ல மாற்றம்தான்.
ReplyDeleteதெரு பேரு மட்டும் இல்லே.. கடை பேரு எல்லாம் மாத்தி இவங்க லொள்ளு தாங்கலை. ஒரு வருஷம் கழிச்சி போன வாரம் சென்னைக்கு போனபோது பார்த்தேன். "தானி உதிரியகம்"-மாம். யாருக்கு புரியும்? அதுக்காக இப்போ படிச்சிட்டு வேலைல இருக்கறவங்க எல்லாம் திரும்பி எல்.கே.ஜி.-ல இருந்தது படிச்சிட்டா வர முடியும்?
ReplyDeleteபடிக்க ரொம்ப சுவாரஸியமா இருந்தது ரகு... நல்லா எழுதி இருக்கிங்க!
ReplyDeleteதமிழ் பெயர் மாற்றங்கள் நல்ல முடிவு, இதை விட நிறைய மாற்றங்கள் சிங்கர சென்னையில் செய்ய வேண்டியுள்ளது அதை கவனிக்கட்டும் மேயர் அய்யா (தமிழ் செம்மொழி மாநாடு எதற்கு நடந்தது என்று பலருக்கு தெரியும்)
ReplyDeleteஅருமையா சொல்லியிருக்கீங்க ரகு...
ReplyDeleteதமிழ் பத்தி எழுதிட்டு, 'ராக்ஸ்'னு எழுதினா நல்லாருக்காது இல்லியா, அதுதான் 'பாறைகள்'..ஹி..ஹி..நன்றி ஜெய்
ReplyDeleteநன்றி ராம்ஜி_யாஹூ, மாற்றக்கூடாதுன்னு சொல்லல, மாற்றும்போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை அரசு தவிர்க்கணும்னுதான் சொல்றேன்
நன்றி சிதம்பரம் செளந்தரபாண்டியன்
நன்றி ராஜு, அப்படி ஏதாவது மாற்றினால் எங்க தெருவுக்கு கவுண்டமணி தெருன்னு மாற்ற சொல்லி போராட்டம் நடத்துவேன் :))
நன்றி வந்தவாசி ஜகதீச பாகவதர், மன்னிச்சிடுங்க ஐயா..அப்போ இவங்கள்லாம் தமிழரே கிடையாதா :((
ராதாகிருஷ்ணன் சாலைன்னா மைலாப்பூர் இருக்கறதுதான்னு நினைச்சுகிட்டிருந்தேன். இப்போ நீங்க சொல்லிதான் கதீட்ரல் ரோடும், ராதாகிருஷ்ணன் சாலையும் ஒரே சாலைன்னு தெரியுது..நன்றி வித்யா
ReplyDeleteநன்றி விக்கி, சீரியஸா எழுதியிருக்கேனா? ஜெய் நோட் திஸ் பாய்ண்ட் :))
நன்றி சாருஸ்ரீராஜ் :)
நன்றி நேசமித்ரன், agree with you in part..but still a lot of people used to mention it as 'Madras' rather than 'Chennai'. Isn't it? :)
நன்றி ராஜ நடராஜன், தெருவோட பெயர் இரண்டெழுத்து நடிகையோட பெயர்ங்க, நீங்க கொஞ்சம் பின்னாடி போயிட்டீங்க..ரெண்டு பெரிய சூப்பர் ஸ்டார்ஸ் சம்பந்தப்பட்ட நடிகை ;)
நன்றி சகாதேவன், மாத்தணும்ங்கறீங்களா கூடாதுங்கறீங்களா?
நன்றி இராமசாமி கண்ணண்
ReplyDeleteஏன் பிஜி கோவிச்சுக்கறீங்க..நம்ம மொழியில இருக்கறது நல்லாத்தானேயிருக்கு
நன்றி ப்ரியா, அப்படியா?!..:))
நன்றி உமாபதி, அதுவும் சாலையில தண்ணி தேங்குது பாருங்க..ஸ்ஸ்ஸ்...முடியலங்க
நன்றி அஹமது இர்ஷாத்
// அப்படியெனில் ஸ்டாலின் அவர் பெயரை மாற்றிக்கொள்வாரா என்றெல்லாம் கேட்கவேண்டாம். //
ReplyDeleteஸ்டாலின் பேர எல்லாம் மாத்த வேண்டாம்
கலைஞர் ஓட பேரன்கள் கம்பெனி பேர மாதிங்க போதும்
Sun Pictures
Cloud nine productions
Red Giant Movies (இது துணை முதல்வரோட பையன் கம்பெனி )
Rock Communications
Sumangali Cable Vision
...
இன்னும் பல
இது எல்லாம் எப்ப மாத்த போறாங்க
இது எல்லாம் ஊராருக்கு மட்டும் உபதேசம் தான் ..