நமக்கு தோழி, மனைவி, நண்பன்னு எந்த இம்சையுமில்லை. இம்சையில்லாம வாழ்க்கையான்னு சந்தோஷப்படாதீங்க. எல்லா இம்சையையும் ஒண்ணாக் குடுக்க தான் ஆஃபிஸ்ல இருக்காரே டேமஜர். அவர் மத்தவங்களுக்கு குத்துறதையெல்லாம் சேர்த்து நமக்கே குத்தறார். நேர்ல அவரைக் குத்த முடியல. பதிவுலயாவது குத்துவோம்.
#சுவாரஸியமா தமிழ்மணத்துல மேஞ்சிட்டு இருக்கும் போது நாலு மணிக்கு மீட்டிங்னு அஞ்சு நிமிஷம் முன்னாடி சொல்லி வர சொல்லும் போது.
#பெர்ஃபார்மன்ஸில் டாப்பில் நாம இருந்தாலும் அப்ரைசல் டைம்ல “என்னால எதுவும் ரெகமெண்ட் பண்ண முடியாதுப்பா. எல்லாம் மேனேஜ்மெண்ட் தான் டிசைட் பண்ணனும்”ன்னு சீரியஸ் சீனிவாசனா டயலாக் அடிக்கும் போது.
#என்றாவது ஒரு நாள் டைம் ஷீட் அப்டேட் பண்ணாமல் போயிருப்போம். மறுநாள் டீம் கொலிக்ல இருந்து, கம்பெனியின் வைஸ் ப்ரெசிடன்ட் வரை சிசியில் போட்டு "இன்னும் டைம் ஷீட் அப்டேட் பண்ணவேலியா"ன்னு கேட்டு மெய்ல் வருமே.... அந்த சமயம்.
#மீட்டிங் முடிச்சிட்டு ஒண்ணுமே புரியாம தூங்கி எழுந்த மாதிரி கண்ணைக் கசக்கிகிட்டு வெளில வரும் போது “மீட்டிங்கோட மினிட்ஸ் ஒண்ணு ப்ரிப்பேர் பண்ண்டுங்களேன். நாளைக்கு எல்லாருக்கும் சர்குலர் பண்ணிடலாம்”ன்னு தனக்கு மட்டும் எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி சொல்லும் போது.
# ப்ராஜெக்ட் டெட்லைன். டே அண்ட் நைட் ஷிஃப்ட் போட்டு வேலை பார்த்திட்டிருப்போம். இங்கேயே இருந்த டேமேஜரை எங்கே காணோம்ன்னு தேடும் போது தான் ஆஃபிஸ் பாய் சொல்வான் அவர் கேண்டீன்ல அரட்டை அடிச்சிட்டு கெஸ்ட் ஹவுஸ்ல தூங்கிட்டதா... அப்போ மட்டும் அவர் கைல கிடைச்சாரு, செம குத்து தான்.
#வேலைக்கு சேர்ந்த முதல் நாள். டேமேஜர் சிரித்துக்கொண்டே சொல்லுவார், உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னாலும் எப்ப வேணும்னாலும் எங்கிட்ட வந்து பேசலாம். சில நாட்கள் கழித்து நமக்கும் சொல்லிவைத்தாற் போல் ஒரு பிரச்னை வரும். அவர்தான் சொல்லியிருக்காரேன்னு நம்ம்ம்பி அவரிடம் போவோம் "ஒரு சின்ன இஷ்யூ உங்ககிட்ட பேசணும்". மடிக்கணிணியை பார்த்தபடியே சொல்லுவார் "கொஞ்சம் பிஸியா இருக்கேன்பா அப்புறம் நானே கூப்பிடறேன்". கொஞ்சம் அவர் மடிக்கணிணி திரையை எட்டிப் பார்த்தால் மாயாஜால் ஆன்லைன் புக்கிங் அவரை வரவேற்றுக்கொண்டிருக்கும். நீங்களே சொல்லுங்க எனக்கு அப்போ ஒரு குத்து விடணும்னு தோணுமா தோணாதா...
#10, 15 நாள் ஃபேமிலியோடு வெளிநாட்டுக்கு வெக்கேஷன் போய் திரும்பியிருப்பார். நாம போய் நாலு நாள் லீவு வேணும், ஃபேமிலியோட திருப்பதி போறேன் ஒரு சின்ன வேண்டுதல்னு இவர்கிட்ட வேண்டுதல் வெச்சா கூலா திருப்பி கேட்பார்.."ஏம்பா இதெல்லாம் வீக் எண்ட்ல வெச்சுக்கலாம்ல". டேமேஜர்களா! இப்படிலாம் இருந்தா சாமியே கண்ணை குத்திடும்!
#அப்ரைசல். ஒன் டூ ஒன்னில் சொல்லுவார்.."இதப்பாருப்பா இந்த ரிஸஷன் டைம்லயும் உனக்குதான் டீம்லயே அதிகமா போட்டிருக்கேன் யார்கிட்டயும் சொல்லிக்காத". சிவாஜியின் கண்கள்ல வெளியே வரட்டுமா வேண்டாமான்னு துடிச்சுட்டிருக்குற கிளிசரின் மாதிரி நம்ம கண்லேயும் கண்ணீர் துடிச்சுக்கிட்டிருக்கும். வெளியே வந்தா கூட இருக்கற டீம் மெம்பர் சொல்லுவான் "மச்சான் இந்த அப்ரைசல்ல எனக்குதான் அதிகமா போட்டிருக்காராம், யார்கிட்டேயும் சொல்லாதன்னு சொல்லிருக்காரு. நான் உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன், உனக்குள்ளேயே மேட்டர வெச்சிக்கோ". அப்போ நம்ம டேம்ஸை கட்டிப்போட்டு, ஒரே டயலாகை எல்லார்கிட்டேயும் சொல்லுவியா சொல்லுவியான்னு கேட்டுகிட்டே ரெண்டு கைலயும் ரத்தம் வர்ற வரைக்கும் குததணும்.
#ரெண்டு நாள் மழை பெய்தாலே வீட்டு பக்கத்தில் ஒரு மினி நீச்சல் குளம் உருவாகிடும். சரி லீவு போடவேணாம்னு கஷ்டப்பட்டு நீந்தி ஆஃபிஸுக்கு வந்தா, பெருசா கண்டுபுடிச்சுட்ட மாதிரி ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு முகத்தை வெச்சுகிட்டு கேட்பார், "ஏம்பா செப்பல்ல வந்திருக்க....". காதை கடிக்கக்கூடாது ஆனா மைக் டைசனா ஒரு நிமிஷம் மாறணும்னு தோணும் பாருங்க..ஸ்ஸ்ஸ்!
#சத்யம்..சனிக்கிழமை..காதலிகூட சந்தோஷமா ஒரு நூன் ஷோ, சாயங்காலமா மெரினா, முடிச்சதும் கேண்டில் லைட் டின்னர்ன்னு ப்ளான் பண்ணி கனவோடு அந்த வார இறுதிக்குக் காத்திட்டிருப்போம். என்ன டிரஸ், எவ்வளோ மேக்கப் ன்னு அவளும் முடிவு செஞ்சிருப்பா. வெள்ளிக்கிழமை சாயங்காலம் டீம் மீட்டிங் போட்டு "Guys, we are working tomorrow" ன்னுவார். அதுக்கு ச(னி)ரின்னு சொல்லுவோம். ஆனா காதலி நம்ம மூஞ்சிலேயே நாளைக்குத் துப்புவாளேன்னு பயம் வரும். "நாளைக்கு நான் ஆஃபிஸுக்கு வந்தா எவ்ளோ பிரச்னை தெரியுமாய்யா என் வாழ்க்கைல" ன்னு கதறிக் கதறி அழுதுட்டே குத்தணும் போலருக்கும்!
#பதிவுலகமே எழுதுதே நாம எழுதினா என்ன ஆகிடப் போகுதுன்னு இந்தப் பதிவ ஜாலியா எழுதிருக்கேனே. இதை அவர் பார்த்துட்டுக் கத்துக் கத்துன்னு கத்துவாரு பாருங்க. அப்போ நம்ம கை வலிக்குற வரைக்கும் அவர் மூஞ்சில குத்தத் தோணும்.
இந்தப்பதிவு என் டேமேஜர் கண்ல படாம இருந்தா இதை ஆரம்பிச்சு வெச்சவருக்கு மொட்டையடிச்சு, அடுத்து எழுதினவருக்குக் காது குத்தி, அப்புறமும் தொடர்ந்தவங்க நாக்குல வேல் குத்தி தேர் இழுக்க வைக்கிறேன்னு ப்ளாக்காத்த அம்மன்கிட்ட வேண்டிக்குறேன்.
ஹிஹிஹி... பாவம் ரகு நீங்க.
ReplyDeleteஹலோ, உங்களை மறுபடியும் அவர் கும்மாதிருக்க, எங்களுக்கு வேண்டுதலா... இதெல்லாம் டூ மச்!
பரிசல், எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். உங்களுக்கு இங்கே ஒருத்தர் ஸ்கெட்ச் போட்டிருக்கார்.
செம குத்துதான்:)
ReplyDelete//இதை ஆரம்பிச்சு வெச்சவருக்கு மொட்டையடிச்சு, அடுத்து எழுதினவருக்குக் காது குத்தி, அப்புறமும் தொடர்ந்தவங்க நாக்குல வேல் குத்தி தேர் இழுக்க வைக்கிறேன்னு ப்ளாக்காத்த அம்மன்கிட்ட வேண்டிக்குறேன்.//... இது தொடர் பதிவா ரகு? நாக்குல வேல் எல்லாம் குத்தி.... இருந்தாலும் பாவம்தான் இதை ஆரம்பிச்சு வச்சவங்க.
அடிச்சு தூள் கெளப்புங்க ரகு, அதிலும் கடைசி குத்து பலே பலே.. அருமை..
ReplyDeleteஆமா அதென்ன
//"நமக்கு தோழி, மனைவி, நண்பன்னு எந்த இம்சையுமில்லை"//
மொத ரெண்டு ஓகே, மூணாவது இம்சையா நாங்க இருக்கிறோம்'டி ஞாபகம் இருக்கட்டும்..
ம்ம்ம்ம் கலக்கல் குத்து..
ReplyDeleteகுத்துங்க சார்... குத்துங்க... , எந்த பதிவ தொறந்தலும் ஒரே குத்துமயமா இருக்கு.
ReplyDeleteநல்ல சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க. ஃபோலோயர் ஆயிட்டேன்:)
(பேசாம 1 வாரம் கழிச்சிதான் இந்த பிளாக் பக்கமே வரனும்..)
really great to see this post...especially the incriment/ appraisal comedy.
ReplyDeletelol!!!
ReplyDeleteநல்லா குத்திருக்கீங்க பாஸ் :)
ReplyDeleteஹாஹாஹா
ReplyDeleteஇந்த ஆட்டட்த்துல டேமேஜடதான் பல பேரு குத்துறீங்க.. பாவம்
அனைவருக்கும் நன்றி :)
ReplyDeleteகொஞ்சூண்டு வேலைப்பளு, தனித்தனியாக நன்றி கூற முடியாத சூழ்நிலை..மன்னித்துவிடுங்கள் நண்பர்களே
:))
ReplyDelete