சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. நோக்கியா, ஹுண்டாய் என பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவற்றிற்கு அடிபணியாமல் இருக்கும் ஒரு குறுநில மன்னரைப் போன்றவர் அவனுடைய தந்தை. தேர்ந்த நெசவாளி. அவருக்கு உதவியாய் அவனது அம்மா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தங்கை.
அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக தயாராகயிருந்தான். வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டிலிருந்து விலகி தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வெறி.
பெரும் முயற்சிக்குப் பின்னர், சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ரூ.6000. திருவண்ணாமலையில் இருந்து தினமும் பேருந்தில் வந்து போக முடியாது. பண விரயம் மட்டுமல்லாமல் பயணத்தால் ஏற்படும் உடற்களைப்பும் ஒரு காரணம். வேறு வழியில்லை. தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வது என முடிவு செய்தான்.
பிறந்தது முதல், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்ததில்லை அவன். பணியில் சேர்ந்த பின் வாரம் ஒரு முறைதான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை வருத்தமடையச் செய்தாலும், தன் குடும்பம் நல்ல பொருளாதார நிலைமைக்கு உயர இது அவசியம் என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
பணம்..பணம்..பணம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் வறுமை ஒழிய தன் கவனம் முழுதும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும் என்பது அவனுடைய லட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 மணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு மணிக்கு முன்னே அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம். ஆறாவது தளத்தில் உள்ளது அலுவலகம். தரைத் தளத்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் தளம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்!

அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவனுடைய டீமுக்கு தகவல் அளித்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் மறுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் பதிவு செய்தார்.
பின்னர் அவனுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது தெரியவந்தது. அவனுக்கு புகை, குடி என்று எந்த பழக்கமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் அவனுக்கென்று ரூ.1500 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன் குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 1500ல் போக்குவரத்து, அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக் கட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு..தினமும் காலை உணவைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்ணுவது.
இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வயதில் மாரடைப்பு! இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட வரி அல்ல. அவனுடைய உணவு பழக்கத்தை அவன் நண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த பின் மருத்துவர் சொன்னது.
பணம் ஒன்றையே பிராதனமாகக் கருதி பரபரவென பறந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில், நம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் காரணம்.."டைம் இல்ல". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்?
இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்!
பி.கு: நானும் இந்த மடத்தனமான காரணத்தைக் காட்டி பல நாட்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கிறேன். அவன் மரணம்...எனக்கொரு பாடம். அன்றிலிருந்து என்னுடைய காலை உணவு நேரம் 10 அல்லது 10:30க்குள்.
நல்ல பாடம்...
ReplyDeleteகாலை உணவைத் தவிர்த்தால் இவ்வளவு பயங்கரமா?
//சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. நோக்கியா, ஹுண்டாய் என பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவற்றிற்கு அடிபணியாமல் இருக்கும் ஒரு குறுநில மன்னரைப் போன்றவர் அவனுடைய தந்தை. தேர்ந்த நெசவாளி. //
//அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக தயாராகயிருந்தான். //
சொந்த ஊர் திருவண்ணாமலை என்றால் ஏன் ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான் பற்றி கவலைப் படவேண்டும்.
ஒரு தேர்ந்த நெசவாளி ஏன் அவற்றிற்கு அடிபணிய வேண்டும்?
எனக்கு புரியவில்லையே?!
பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரை மட்டுமா ஆண்டுகொண்டிருக்கின்றன?!
நட்புடன்,
பாலாஜி
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்....சென்னையை தவிர்த்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல நிறுவனங்களில் பணிபுரிவதில், பெரும்பான்மையோர் இந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள். இனி விவசாயம் செய்யப்போவதில்லை என முடிவெடுத்து 'நோக்கியா'வுக்கு சென்ற பலரை அறிந்திருக்கிறேன். 'போலி பட்டு' விற்பனைக்கு வந்த பிறகு பட்டுத் தொழில் சரிவைச் சந்தித்திருக்கிறது. பட்டு நெசவாளிகளை கேட்டால் அவர்கள் இந்த பிரச்னையைப் பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள். திருட்டு சிடியால் அவஸ்தை படும் திரைப்படத் துறையினர் நிலையில்தான் பட்டு நெசவாளிகளும் உள்ளனர்.
ReplyDeleteஇன்னமும் அவர் தந்தை நெசவுத் தொழிலை விடாமலிருக்கிறார். அதற்காகத்தான் "ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்" என்று குறிப்பிட விரும்பினேன்.
//பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரை மட்டுமா ஆண்டுகொண்டிருக்கின்றன?!//
நீங்கள் கேட்பது சரிதான் :(
நன்றி பாலாஜி
நெசவாளர்களின் வலியை எடுத்துக் காட்டிய
ReplyDeleteதங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி ரகு..
அவர்களைப் பற்றி நீங்கள் விரிவாக இன்னொரு பதிவில்
எழுத முடியுமென நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.
ரகு: நீங்கள் சாப்பிடும் நேரம் இன்னும் சற்று முன்னாள் இருக்கலாம் நண்பா
ReplyDeleteத்ரில்லர் ரேஞ்சுக்குக் கதை போகும்ன்னு நினைச்சேன். ஏமாற்றம்!
ReplyDeleteரொம்ப நல்ல கருத்து ரகு. அதை கதையின் போக்கால் அதிக அழுத்தத்துடன் சொல்லியிருக்கலாம்.
koncham nadai maatri irukkalmo?
ReplyDeletekatturi pol tondriyathu
தேவையான எசசரிக்கைதான்.. நல்லது
ReplyDelete//பெரும்பாலும் நாம் சொல்லும் காரணம்.."டைம் இல்ல". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்?//... ம்ம் உண்மைதான் ரகு. ஆனா நீங்க ஏங்க 10 மணிக்குமேல் சாப்பிடுறீங்க?இன்னும் கொஞ்சம் முன்னால் சாப்பிடலாம் இல்லையா!
ReplyDeleteயார் ரகு அது..? நம்ம ஆஃபீஸ் நபரா..? (எனக்கு தெரிஞ்ச நபரா..?) கேட்கவே கொடூரமா இருக்கு... நல்ல எச்சரிக்கை...
ReplyDelete-
DREAMER
யார் ரகு அது..? நம்ம ஆஃபீஸ் நபரா..? (எனக்கு தெரிஞ்ச நபரா..?) கேட்கவே கொடூரமா இருக்கு... நல்ல எச்சரிக்கை...
ReplyDelete-
DREAMER
நன்றி பாலாஜி, அவசியம் எழுதுகிறேன்
ReplyDeleteவாங்க மோகன், ம்ம்..நீங்க சொல்றது சரிதான்..கண்டிப்பா மாத்திக்கறேன் :)
நன்றி விக்கி, சத்தியமா இது கதை இல்லங்க
ReplyDeleteநன்றி எல்கே, மைன்ட்ல வெச்சுக்கறேன் :)
நன்றி ரியாஸ், உங்க நண்பர்கள் யாராவது இப்படியிருந்தாலும் கொஞ்சம் சொல்லிவைங்க
ReplyDeleteநன்றி ப்ரியா, ஹிஹி..பேஸிக்கலி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)
வாங்க ஹரீஷ், ம்ம்..நம்ம டீம்தான், சில மாதங்கள் முன்னாடிதான் ஜாய்ன் பண்ணியிருந்தார்..ஆனா இப்ப...:(
This comment has been removed by the author.
ReplyDelete