ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த பெயருக்குத்தான் எத்தனை வசீகரம். 'சின்ன சின்ன ஆசை'யை எல்லோரும் ரசிக்க ஆரம்பித்திருந்த நேரம். நானோ தடதடக்கும் இசையில் அமைந்திருந்த 'ருக்குமணி ருக்குமணி'க்காகவும், ஆரம்பிக்கும்போதே மனதை மயக்கிய 'காதல் ரோஜாவே'வுக்காகவும், மனதில் ரஹ்மானுக்காக ஒரு நிலையான சிம்மாசனத்தை போட்டு வைத்தேன். ஆரம்பத்தில் சில பத்திரிக்கைகள் ரகுமான் என்றே எழுத, முதல் ரெண்டெழுத்தை நினைத்து கிடைத்த அற்ப சந்தோஷமும் சிம்மாசனத்திற்கான அதிமுக்கிய காரணம் :)

ரஹ்மானை ரசிப்பதால் ராஜாவை வெறுப்பதில்லை நான். தமிழ் சினிமாவில் இசை என்று ஆரம்பித்தால், கே.வி.மஹாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையாராஜா, ரஹ்மான் என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒவ்வொருவரும் இசை(யுலகை) ஆண்டவர்கள். ராஜாவும் சரி, ரஹ்மானும் சரி தான் வருவதற்கு முன்பிருந்த இசையை, தமிழர்களின் இசை ரசனையை வேறு தளத்திற்கு கொண்டு சென்றனர். ஹாரிஸ், யுவன், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், மணிசர்மா ஆகியோரின் இசையையும் ரசிக்கிறேன். ஆனால் ரஹ்மான் போட்டு கொடுத்த பாதையில்தான் இன்றிருக்கும் பல ஹிட் இசையமைப்பாளர்கள் பயணிக்கின்றனர் என்பது மறு(றை)க்க முடியாத உண்மை.
ரஹ்மானின் இசையை 'ரோஜா' முதல் இன்றைய 'இராவணன்' வரை கவனித்து ரசித்து வந்திருக்கிறேன். உண்மையாக சொல்கிறேன். ஸ்லம்டாக் மில்லியனர் கேட்டபோது, 'அடப்பாவிங்களா இதுக்கேவா ஆஸ்கர்?' என்றுதான் தோன்றியது. மனதை ஈர்க்கும் இசையோ, மயக்கும் இசையோ ஸ்லம்டாக் மில்லியனரில் இல்லை என்பது என் எண்ணம். 'ஜெய்ஹோ'வை விட ரஹ்மான் இசைத்த சிறந்த பாடல்கள் ஏராளம்.
இது ரஹ்மானின் வாழ்க்கை பற்றிய பதிவல்ல. நான் மிகவும் ரசித்த ரஹ்மானின் பல பாடல்களை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. எனக்குள் இருக்கும் சோம்பேறி அரக்கனை சம்ஹாரம் செய்து, இதை ஒரு தொடராக எழுத விருப்பம். ஆனால் செயல்படுத்துவதில் எந்தளவு முனைப்பாக இருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை. பார்க்கலாம்.....
தாஜ்மஹால்.....கண்ணை மூடி இப்படத்தைப் பற்றி நினைத்து பார்த்தால் சட்டென்று மனதில் தோன்றுவது, பாரதிராஜா, மனோஜ், ரியாசென் மற்றும் 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு' பாடல். ஹீரோ பில்டப் பாடலான 'திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா' பாடலும், 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு' பாடலும் பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு எல்லோரையும் கவர்ந்தது.
ஆனால் கேட்ட முதல் முறையிலேயே நான் சொக்கிப் போன பாடல் 'குளிருது குளிருது'. அருவியில் வழிந்தோடும் நீரைப்போல் காதலையும், காமத்தையும் வரிகளில் வழிந்தோடவிட்டிருப்பார் கவிஞர் வைரமுத்து. வார்த்தைகளை ஆதிக்கம் செய்யாத இசை. 'பூகம்ப வேளையிலும்' என்று ஹைபிட்சில் எகிறும்போது உன்னி பின்னியிருப்பார்.
படம்: தாஜ்மஹால்
பிண்ணணி பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா
பல்லவி:
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

சரணம் 1:
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

சரணம் 2:
நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா
மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட அடைமழை காக்க எண்ணம் இல்லையா
சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது
அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவிக்கொள்ளும்
தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை

ரஹ்மான் தன்னிடம் உள்ள எல்லா இன்ஸ்ட்ருமென்ட்டுகளை யூஸ் பண்ணி இசை அமைத்தது தாஜ்மஹால் படத்தில்தான்... அதிலும் குளிருது குளிருது பாடல் அருமை... நல்ல பகிர்வு ரகு...
ReplyDeleteநல்ல பகிர்வு'ணா......கண்டிப்பாக தொடருங்கள்.....
ReplyDeleteஒரே மாதிரி ரசனைக்கொண்ட நண்பன் கிடைத்ததில் எனக்கு மிக்க சந்தோஷம்.
ReplyDeleteபெரும்பாலும் இசைதான் நம்மை புதுப்பிக்கின்றது என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் ரகு!
வாழ்க்கையில எனக்கு மிக அதிக சந்தோஷம் தரக்கூடிய விஷயம் ரஹ்மானின் இசைதான்.. முதல்ல ஓட்டு போட்டுட்டுதான் படிக்கவே ஆரம்பிச்சேன்..
ReplyDelete// 'ஜெய்ஹோ'வை விட ரஹ்மான் இசைத்த சிறந்த பாடல்கள் ஏராளம். //
இது சரிதான்...
// ஸ்லம்டாக் மில்லியனர் கேட்டபோது, 'அடப்பாவிங்களா இதுக்கேவா ஆஸ்கர்?' என்றுதான் தோன்றியது. மனதை ஈர்க்கும் இசையோ, மயக்கும் இசையோ ஸ்லம்டாக் மில்லியனரில் இல்லை என்பது என் எண்ணம். //
ஆனா இதை ஒத்துக்க முடியாது.. பின்னணி இசைக்கு ஆஸ்கர் என்ன... உசுரயே குடுக்கலாம்.. ஜெய் ஹோ வழக்கமா போடற ஃபாஸ்ட் பீட் அவ்ளோதான்... அதை விடுங்க.. "Mausam & Escape", "Millionaire", "O..Saya.."-வின் ட்ரெயின் பீட், "Lathika's Theme" எல்லாம் கொஞ்ச நாள் கேட்டிகிட்டே இருங்க... (நல்லா பழக்கமாகற வரைக்கும்) அதுக்கப்பறம் படத்துல சீனோட அதே இசையைக்கேளுங்க...
என்னைப்பொறுத்தவரை, இசை காதுக்கு இனிமையா இருக்கறதை விட, காட்சிக்குப் பொருத்தமா இருக்கறதுதான் முக்கியம்னு சொல்லுவேன்... ஸ்லம்டாக் மில்லியனர் அதுக்கு ஒரு உதாரணம்... இதுக்குமேல பேசுனா அடிச்சு விரட்டிவீங்க... மீ த எஸ்கேப்.. :)
அட... இது பார்ட் ஒன்னா? சூப்பர்... அடுத்த பார்ட் எழுதுங்க... நல்ல ஓட்டு என்ன, கள்ள ஓட்டே போடறேன்... ;)
ReplyDeleteதயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
ReplyDeleteமணி.ஷங்கர்.
நல்ல தொடர் ரகு. அழகா ஆரம்பிச்சு தொடர்ந்து பயணித்திருக்கின்றன வார்த்தைகள். தொடரட்டும்.
ReplyDeleteநீங்க சொன்ன தகவல் எனக்கு புதுசு..நன்றி இர்ஷாத்
ReplyDeleteநன்றி கணேஷ்
நன்றி ப்ரியா, அட! உங்களுக்கும் இந்த பாட்டு புடிக்குமா? :)
வாங்க ஜெய், உங்களுக்கு என்ன தோணுதோ அத பேசலாம். எதிர்மறை கருத்துகளை வரவேற்கிறேன். மே பீ என்னோட ரசனையில் கூட தவறு இருக்கலாம். நண்பர்கள் நீங்கள்லாம் சொல்லாம வேற யார் சொல்றது?...:)
டிடெக்டிவ், இதுல திருடற அளவுக்கு என்ன எழுதிட்டேன்? நீங்க குடுத்துருக்கற லிங்க் மூலமா ஏதோ ஃபர்னிச்சர் ப்ளாக்தான் ஓப்பனாகுது. இதுவும் ஒரு விளம்பர யுக்தியா? போங்க பாஸ், போய் யாராவது பிரபல பதிவர்களோட பதிவுல இந்த மாதிரி கமெண்ட் போட்டு விளம்பரப்படுத்திக்கோங்க. இங்கேயெல்லாம் போட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க...
taj mahal'il "karisal tharisal" superb. tht last beat chance'a illa sir...
ReplyDeleteதொடருங்கள்..
ReplyDeleteநல்லா சொன்னிக்க
ReplyDeleteநன்றி விக்கி
ReplyDeleteநன்றி நஜீப்
நன்றி வித்யா
நன்றி அமைச்சரே