Sunday, November 22, 2009

என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மா


ப‌ருத்திவீர‌ன் நிச்ச‌ய‌மா உல‌க‌த்த‌ர‌மான‌ பட‌ம்தான். சும்மா சொல்ல‌க்கூடாது கார்த்தியும் புது ஹீரோன்னே தெரியாம‌ ந‌ல்லா ந‌டிச்சிருந்தார். ஆனா அதுக்காக‌ எந்த‌ மேடை ஏறினாலும், 'என்ன‌ மாமா சவுக்கிய‌மா?'ன்னே பேச‌ ஆர‌ம்பிக்க‌ற‌து, கொஞ்ச‌ம் ஓவ‌ரா இருக்குது.

ர‌‌ஹ்மான் சொல்ற‌ 'எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே'ங்க‌ற‌ ரேஞ்சுக்கு 'என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மா'ன்னு ந‌ல‌ம் விசாரிச்சுட்டிருக்க‌றாரு. அடுத்த‌ த‌ட‌வை அவ‌ர் மேடையில‌ பேச‌ வ‌ரும்போது, ஜ‌ன‌ங்க‌ளே 'மாப்ள‌, நான் ச‌வுக்கிய‌மாதான் க்குறேன்'னு கத்த‌போறாங்க‌.

ஹும்..அவ‌ரும் என்ன‌ ப‌ண்ணுவாரு பாவ‌ம், செல்வ‌ராக‌வ‌னை சொல்ல‌ணும். ப‌ட‌த்தை எடுத்தோமா, ரிலீஸ் ப‌ண்ணோமான்னு இல்லாம, ஏதோ ஆயுள் த‌ண்ட‌னை வாங்கின‌ கைதி மாதிரி உள்ளேயே வெச்சுட்டிருக்காரு. த‌யாரிப்பாள‌ர் பாவ‌ம்யா! கொஞ்ச‌ம் க‌ருணை காட்ட‌கூடாதா?

'பையா' நீயாவ‌து வ‌ந்து இந்த‌ ப‌ருத்திவீர‌னை காப்பாத்து. என்ன‌ பையா கேக்குதா...அட‌ச்சே, இதுகூட‌ என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மாங்க‌ற‌ மாதிரியே வ‌ருது.

4 comments:

  1. சமீபத்தில் பார்த்த வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸில் கார்த்தி பேசியபோது நானும், இது என்ன அவரின் ஸ்லோகனா என்று நினைத்துக்கொண்டேன்.
    //அடுத்த‌ த‌ட‌வை அவ‌ர் மேடையில‌ பேச‌ வ‌ரும்போது, ஜ‌ன‌ங்க‌ளே 'மாப்ள‌, நான் ச‌வுக்கிய‌மாதான் க்குறேன்'னு கத்த‌போறாங்க‌.//
    உண்மைதான்.

    ReplyDelete
  2. பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி ப்ரியா

    //நானும், இது என்ன அவரின் ஸ்லோகனா என்று நினைத்துக்கொண்டேன்.//

    ஒண்ணு ரெண்டு த‌ட‌வை பேசும்போது ந‌ல்லாயிருந்த‌து. ஆனா ஒவ்வொரு மேடையிலும் அவ‌ர் இதையே பேசும்போது ச‌லிப்புதான் வ‌ருது.

    ReplyDelete
  3. //ப‌ட‌த்தை எடுத்தோமா, ரிலீஸ் ப‌ண்ணோமான்னு இல்லாம//

    ஏன் தான் நல்ல டைரக்டர்ஸ் எல்லாம் இப்படி படம் ரிலீஸ் பண்ணாம லேட் பண்றாங்களோ.. நல்ல பதிவு..

    இந்த மாதிரி கட்டுரை கடைசியில் கவுண்டர் கமென்ட் பண்ற மாதிரி போட்டா நல்லா இருக்குமே (நானும் அவர் வெறியன் தான்) :))

    ReplyDelete
  4. ந‌ன்றி பிர‌ச‌ன்ன குமார்

    என்ன‌தான் ந‌ல்லா எடுப்பார்னாலும் செல்வ‌ராக‌வ‌ன் இந்த‌ள‌வு தாம‌த‌ம் ப‌ண்ற‌து க‌ண்டிப்பா த‌ப்புதான்

    இப்போ ஓகேவா பிர‌ச‌ன்னா!

    ReplyDelete