Sunday, November 15, 2009
பேராண்மை
இது படத்த பத்தின விமர்சனம் இல்ல. படம் பாக்கும்போது எனக்கு கிடைச்ச அனுபவம்.
இந்த படத்துல செகண்ட் ஹாஃப்ல ஒரு பொண்ணு தம் அடிக்கற மாதிரி ஒரு சீன் வரும். அந்த சீன் வரும்போது தியேட்டர்ல "ஹோய்ய்ய்"னு ஒரு உற்சாக கூச்சல். இன்னைக்கு ஒரு கட்டிடம் கட்டுற இடத்துலயிருக்கற சித்தாள்லயிருந்து, டீச்சர், டாக்டர், இன்ஜினியர், வக்கீல், சாஃப்ட்வேர், பைலட்..அவ்வளவு ஏன், முதல்வர், பிரதமர், ஜனாதிபதி பதவிலாம் வகிக்கற அளவுக்கு பெண்கள் எவ்வளவோ முன்னேறிட்டாங்க.
ஆனா இப்பவும் ஒரு பொது இடத்துல, ஒரு பையன் சிரிக்கற மாதிரி, சத்தம் போட்டு ஒரு பொண்ணு சிரிச்சா, "ஒரு பொண்ணு மாதிரியா நடந்துக்குது?" அப்படின்னு ஒரு கமெண்ட் கண்டிப்பா வரும். ஏண்டா, டிரஸ்ஸ இப்படிதான் போடணும், அப்படிதான் போடணும்னு சொல்றீங்க, சரி சேஃப்டிக்குதானே சொல்றீங்கன்னு இதகூட ஒத்துக்கலாம். சிரிக்கறதுலகூட ஏண்டா ரூல்ஸ் போடுறீங்க?
"பேராண்மை"ல அந்த பொண்ணு தம் அடிச்சபோது "ஹோய்ய்ய்"னு கத்துன எல்லாருமே என்னை பொருத்தவரைக்கும் Male Chauvinistங்கதான். ஆழ்மனசுல, நாம பண்றத after all ஒரு பொண்(ணே)ணு பண்றாளேங்கற ஆச்சரியம். அதுதான் இந்த கூச்சல்ல வெளிப்பட்டுது. வருஷா வருஷம் 10thலயும், 12thலயும் பசங்களவிட பொண்ணுங்க அதிகம் பேர் பாஸ் பண்ணும்போதுலாம் விட்டுடுவானுங்க, ஆனா தம் அடிச்சா மட்டும் வாய பொளக்குறானுங்க.
பொண்ணுங்க தம், தண்ணி அடிக்கறத நான் சரின்னு சொல்லல. தம்மோ, தண்ணியோ, ரெண்டுமே உடல் நலத்த பாதிக்கற விஷயம்தான். பையன் தானே, சே! பாவம்னு செல்லம் குடுத்து பரிதாபப்பட தம்மும், தண்ணியும் என்ன நம்மள பெத்த அப்பா, அம்மாவா?
ஸோ, தம் அடிச்சாலும் தண்ணி அடிச்ச்சாலும், பையனோ, பொண்ணோ, யாராயிருந்தாலும், ரிசல்ட் ஒண்ணுதான். ஆனா இந்த Male Chauvinism (இதுதான் பேராண்மையோ?) இன்னமும் இருக்குங்கறத அந்த கூச்சல் வெளிப்படுத்தினபோது, எனக்கு கொஞ்சம் எரிச்சலாதான் இருந்தது. டேய், திருந்துங்கடா!
Labels:
பேராண்மை
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பார்வை. உங்களுடன் முழுக்க உடன்படுகிறேன்.
ReplyDeleteநன்றி விக்கி!
ReplyDeletegud :))
ReplyDeleteநன்றி கிஷோர்
ReplyDeleteNice one!!!
ReplyDeleteநன்றி ஜோஷ்
ReplyDeleteபதிவு அருமை...
ReplyDeletethala word verificationa off pannungapa... kadupaguthu....
நன்றி பேநா மூடி
ReplyDeletemannsu valikuthulaaa
ReplyDeletecorrect
ReplyDelete