Sunday, November 22, 2009
மனிதனும் மர்மங்களும்
நேத்துதான் இந்த புக்கை படிச்சு முடிச்சேன். கிழக்கு பதிப்பகம் எப்பவும் என்னோட ஃபேவரைட். அதுவும் 'ஹாய்' மதன் எழுதியிருக்கார்னா, கண்டிப்பா படிக்கணும்னு வாங்குனேன். புக்கோட டைட்டில், மேல் அட்டை இதெல்லாமும் என்னை வாங்க தூண்டியதுக்கு ஒரு காரணம். இந்த மாதிரி விஷயங்கள்ல மதன் எப்பவும் வெளுத்து வாங்குவார். அவர் பேசும்போதுதான் வெத்தலைய போட்டுட்டு பேசற மாதிரி கொஞ்சம் குதப்பிகிட்டே பேசுவாரே தவிர (யாராயிருந்தாலும் பாரபட்சமின்றி கால் வாரப்படும்), ஹீ ஈஸ் ரியலி எ ஜீனியஸ்.
நீங்க கொஞ்சம் பயந்த சுபாவம்னா தயவு செய்து இந்த புக்கை படிக்காதீங்க. இப்படி சொன்னாதான் படிப்பீங்க, கரெக்டா? நம்மாளுங்களுக்கு இத செய்யாதன்னா அததான் செய்வாங்க. எச்சில் துப்பாதீர்னு சுவத்துல எழுதிவெச்சிருப்பாங்க. ஆனா அது மேலதான் ஏகப்பட்ட பாக்கு கறை இருக்கும்!
ஆஃபிஸ் விட்டு நைட் வீட்டுக்கு வந்து சாப்ட்டு முடிச்சப்புறம், இந்த புக்கை படிக்க ஆரம்பிக்கும்போது மணி 11:05 PM. யாருமேயில்லாம ராத்திரி தனியா இந்த புக்கை படிச்சு பாருங்க. அது ஒரு தனி த்ரில்! ஒவ்வொரு நாளும் 4 இல்லன்னா 5 பக்கங்கள்தான் படிப்பேன். படிச்சு முடிச்சுட்டு ரூம் கதவு கரெக்டா லாக் ஆகியிருக்கான்னு ஒரு டபுள் செக் வேற பண்ணவேண்டியதாயிருந்தது. நெத்தியில விபூதி வெச்சுகிட்டு படுக்கல, அது ஒண்ணுதான் குறை.
ஆவி, மனிதர்களுக்கு இருந்த (இருக்கிற?) அமானுஷ்ய சக்தி, டெலிபதி, UFO - Unidentified Flying Objects (தமிழ்ல பறக்கும் தட்டுகள்னு சொல்லுவோமே அதேதான்) - இப்படி எல்லாத்தையுமே ஆதாரத்தோட எழுதியிருக்குறார். இதுல குறிப்பா ஒரு லைன் நல்லாயிருந்தது, "ஒருவரைக் கொல்வது ஆவியல்ல, அவரின் பயமே அவரைக் கொன்றுவிடுகிறது".
இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்ச ஆவி ஆனந்த விகடனும், ஜகன்மோகினி நமீதாவும்தான். ரெண்டு நாள் முன்னாடி, என் ஃப்ரெண்டுகிட்ட (ஹரீஷ்) பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு வீட்ல இருக்கும்போது நினைச்சுகிட்டு இருந்தேன். அதே நாள் ஆஃபிஸ்ல வந்து அவுட்லுக் திறந்தா அவர்கிட்டயிருந்து மெயில் வந்திருக்கு! அன்னைக்கு நைட்டு அவர் callம் பண்ணார். இதுதான் டெலிபதியோ?
புக் ஃபுல்லா ஆவி பத்தியே எழுதினா எங்க போரடிச்சுடுமோன்னு முதல்ல ஒரு 50, 60 பக்கம் வரைக்கும்தான் எழுதியிருக்கார். அதுக்கப்புறம் அடுத்தடுத்து டாபிக் மாறிகிட்டே இருந்தாலும் அந்த த்ரில் மட்டும் குறையாம ஒரு ஃப்ளோல போய்கிட்டேயிருந்தது. படிச்சு பாருங்க, எனக்கு புடிச்சிருந்தது, எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல!
Subscribe to:
Post Comments (Atom)
நானும் இது மாதிரி அமானுஸ்யமான விஷயமானால் நிறைய படிப்பதுண்டு.. மதன் புத்தகம் கொஞ்சமாவது விஷயத்தோடுதான் இருக்கும். நீங்கள் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் “ஆவி உலகம்” பத்திரிக்கை வாசித்ததுண்டா.!! ஒரு காலத்தில் எங்கள் கல்லூரி விடுதியில் அந்த பத்திரிக்கை ரொம்ப பிரபலம்.. இப்போதும் வருகிறது என்று நினைக்கிறேன்..!!
ReplyDeleteநன்றி முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், நான் இதுவரைக்கும் 'ஆவி உலகம்' பத்திரிக்கைய படிச்சதில்ல, நீங்க அந்த பத்திரிக்கைல படிச்சத ஒரு பதிவா போடலாமே!
ReplyDelete'மனிதனும் மர்மங்களும்' என்னோட புத்தக அலமாரியையும் அழகுப்படுத்திக்கிட்டிருக்கு. இந்த புக்கை படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட ஃபீலிங் என்ன தெரியுமா..? சே! என்னடா இவ்வளவு நாளா இந்த புத்தகத்தை படிக்காம விட்டுவச்சிட்டோமேன்னு தோணிச்சு.
ReplyDeleteபுத்தகத்தை நானும் கிட்டத்தட்ட நீங்க படிச்ச (மிட்நைட் ரீடிங்) டைம்லதான் படிச்சேன்.
படிச்சிட்டு சில யதார்த்த சம்பவங்களையும் டெலிபதியா இருக்குமோ, ESPயா இருக்குமோன்னு ஒப்பிட்டு பாத்துட்டு இருந்தேன். அந்தளவுக்கு இந்த புக் Hauntingஆ இருந்தது உண்மைதான். ஒரு நல்ல புத்தகத்தை படிச்சதோட நிறுத்தாம அதை மத்தவங்களுக்கு பரிந்துரைக்கிறது ரொம்ப நல்ல பழக்கம்.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
//ஒரு நல்ல புத்தகத்தை படிச்சதோட நிறுத்தாம அதை மத்தவங்களுக்கு பரிந்துரைக்கிறது ரொம்ப நல்ல பழக்கம்//
ReplyDeleteநன்றி ஹரீஷ், எல்லாம் உங்ககிட்டயிருந்து கத்துகிட்டதுதான்!
Dear Muthukumar sir!
ReplyDeleteRecenta erode la nadantha book exhibition la intha book paarthen. udane vaanganumnu thonuchu. vaangiten. but oru 2months aaga padikkaamale vechu irunthen. ore naal la fulla padichu mudichutten. athe naalil ennoda derest friendum aavikal patthi muthan muthala enkitta pesa aarambichaar. Madhan sonna ammanushya sakthikalil oru sila avaridam irukku. antha books padichathula irunthu ore bayam nu solrathai vida sema thrilling nu sollalaam. innoru friend oru rendu chapter mattum padichuttu, marubadium venaam nu sollittaan. because madhan sonnathai pola niraya visayangal enakkum and en friends kum and enga viilaage la yum innum nadanthukitte thaan irukku. neengal ennoda comments padikka nernthaal, if u dont mind contact me. (iam sorry enaku tamil type panna theriyathu.)
V.M.Prakash,
9865659226, 9500046908
prakashvmred@gmail.com