Tuesday, December 08, 2009

டிய‌ர் ப்ளூ க்ராஸ் - இது நியாய‌மா?


இது கொஞ்ச‌ நாள் முன்னாடி என் ஃப்ரெண்டுக்கு ந‌ட‌ந்த ஒரு அனுப‌வ‌ம். இத‌ ப‌த்தி எழுத‌ணும், எழுத‌ணும், எழுத‌ணும்னு நினைச்சு இன்னைக்குதான் எழுத‌றேன். ஏன்னா எதையும் பிளான் ப‌ண்ணி ப‌ண்ண‌ணும்னு சுவாமி ச‌ங்கிம‌ங்கியார் சொல்லியிருக்க‌றார் இல்லியா, அதான். என் ஃப்ரெண்டு....ஹும்..அவ‌ர் பேர் வேணாம், Mr.100னு வெச்சுக்க‌லாம் (கொஞ்ச‌ நாள் Mr.எக்ஸ் ரெஸ்ட் எடுக்க‌ட்டுமே). அதென்ன‌ 100ன்னா கேக்குறீங்க‌? கேப்பீங்க‌ கேப்பீங்க‌, ஜேம்ஸ் பாண்ட் 007ன்னு வெச்சுக்க‌லாம். ஏன் என் ஃப்ரெண்டு 100னு வெச்சுக்க‌கூடாதா? எல்லாரும் ரைட் சைடு கொஞ்ச‌மா த‌லைய‌ திருப்பி மேல‌ பாருங்க‌. இனி ஒரு கொசுவ‌த்தி...

அன்னைக்கு புடுங்க‌ வேண்டிய‌ ஆணிங்க‌ கொஞ்ச‌ம் க‌ம்மியா இருந்த‌தால‌, ரிலாக்ஸா, த‌ம் அடிக்க‌ற‌ ஃப்ரெண்டுக்கு க‌ம்பெனி குடுக்க‌லாம்னு Mr.100 ஆஃபிஸ் கீழே இருக்க‌ற‌ டீக்க‌டைக்கு போயிருக்க‌றார். அங்க‌ ஓர‌த்துல‌ ஒரு சின்ன‌ புறா க‌ழுத்துல‌ அடிப‌ட்டு ர‌த்த‌ம் வ‌ந்து வ‌லியால‌ துடிச்சிட்டிருந்த‌து. அத‌ யாரும் பாக்க‌லியா இல்ல‌ பாத்தும் பாக்காத‌ மாதிரி இருந்துட்டாங்க‌ளான்னு தெரிய‌ல். ஆனா Mr. 100 அத‌ பாத்த‌ உட‌னே வேள‌ச்சேரி மெயின் ரோட்ல‌ இருக்க‌ற‌ ப்ளூக்ராஸுக்கு (செக்போஸ்ட்கிட்ட‌யிருக்கு, இதுதான் கிண்டில‌யிருந்து ப‌க்க‌ம், இன்னொன்னு ஆழ்வார்ப்பேட்டைல‌ இருக்கு) போன் ப‌ண்ணியிருக்க‌றார். அங்க‌ ஃபோன் அட்டெண்ட் ப‌ண்ண‌வ‌ர் சொன்னார். அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ளை அப்ப‌டியே இங்க‌ எழுத‌றேன். ரொம்ப‌வும் அசால்ட்டான‌ டோனில்...

"இப்போதைக்கு வ‌ந்து எடுத்துட்டு போக‌முடியாது. நீங்க‌ளே எடுத்துட்டு வ‌ந்துடுங்க‌"

ப்ளூக்ராஸுங்க‌ற‌து வில‌ங்கு, ப‌ற‌வைக‌ளுக்கான அமைப்புதானே? அங்க‌ வேலை செய்ய‌ற‌வ‌ரே இப்ப‌டி சொல்ற‌து ச‌ரியா? இப்போதைக்கு வ‌ர‌முடியாதுன்னா என்ன‌ அர்த்த‌ம்? அந்த‌ புறா இறந்த‌துக்க‌ப்புற‌ம் வ‌ந்து எடுத்துகிட்டு போய் முறையான‌ ச‌ட‌ங்குக‌ளோட‌ கொள்ளி வெப்பாரா, புதைப்பாரா இல்ல‌ அட‌க்க‌ம் ப‌ண்ணுவாரா? ஏன் அவ‌ருக்கு அங்க‌ ச‌ம்ப‌ள‌ம் ஒழுங்கா த‌ர்ற‌‌தில்லையா? ஒருவேளை உண்மையாவே அவ‌ர் அங்க‌ பிஸியா இருந்திருந்தா அத‌ சொல்லியிருக்க‌லாமே? ஏன் வேற‌ ஆளுங்க‌ளே இல்லியா? இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ ?க‌ள்தான் ம‌ன‌சுல‌ தோணுது.

ஆனா அவ‌ர்தான் அப்ப‌டி சொல்லிட்டாரேன்னு விடாம‌, Mr.100ம் இன்னொரு ந‌ண்ப‌ரும்‌ ஆஃபிஸ்ல‌ இன்ஃபார்ம் ப‌ண்ணிட்டு ஆட்டோ (கிண்டி‌ ஒலிம்பியால‌ருந்து வேள‌ச்சேரி செக்போஸ்ட் போய்வ‌ர‌ ஆட்டோ டிரைவ‌ர் அப்-அண்ட்-ட‌வுண் 150 ரூபா கேட்டார்) அரேஞ்ச் ப‌ண்ணி அந்த‌ ப்ளூக்ராஸுக்கே எடுத்துட்டு போய் விட்டுட்டு வ‌ந்தாங்க‌.

கொஞ்ச‌ம் யோசிச்சு பாருங்க‌, அன்னைக்குன்னு பாத்து நிறைய‌ ஆணிங்க‌ இருந்திருந்து, "புறா அடிப‌ட்டிருக்கு, ப்ளூக்ராஸ் வ‌ரைக்கும் போக‌ணும்"னு சொல்லியிருந்தா க‌ண்டிப்பா ஆஃபிஸ்ல‌ ப‌ர்மிஷ‌ன் குடுத்துட்டிருக்க‌மாட்டாங்க‌. அவ‌ரும் போகமுடியாத‌ சூழ்நிலைல‌ மாட்டியிருப்பார். ந‌ல்ல‌வேளை அதிர்ஷ்ட‌வ‌ச‌மா அதுமாதிரி ந‌ட‌க்க‌ல‌. ப்ளூக்ராஸ்ல‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ளால‌ டைமுக்கு வ‌ர‌முடியாதுன்னா இதுமாதிரி உயிர்க‌ள‌ காப்பாத்த‌ணும்னா கால் ப‌ண்ணுங்க‌ன்னு ஏன் நிறைய‌ இட‌த்துல‌ விள‌ம்ப‌ர‌ம் ப‌ண்றாங்க‌.

சொன்னா எத்த‌னை பேரு ந‌ம்புவீங்க‌ன்னு தெரிய‌ல‌. கிண்டி ஒலிம்பியால‌ருந்து வேள‌ச்சேரி செக்போஸ்ட் அப்-அண்ட்-ட‌வுணுக்கு 150 ரூபா கேட்ட‌ ஆட்டோ டிரைவ‌ர், அந்த‌ புறாவை விட்டுட்டு வ‌ந்த‌துக்க‌ப்புற‌ம் 100 ரூபாயே போதும்னு சொல்லிட்டார். தின‌மும் due க‌ட்ட‌ வேண்டிய‌ நிலையில‌ இருக்க‌ற‌ ஒரு ஆட்டோ டிரைவ‌ருக்கு இருந்த‌ அந்த‌ ம‌ன‌சு, ம‌னிதாபிமான‌ம்...ப்ளூக்ராஸுல‌ ஃபோன் அட்டெண்ட் ப‌ண்ண‌வ‌ரோட‌ அல‌ட்சிய‌ம்...என்ன‌த்த‌ சொல்ற‌து, ஆட்டோகார‌ர்க‌ள் எல்லாரும் மோச‌மான‌வ‌ங்க‌ன்னு சொல்ல‌‌முடியாது. அதே மாதிரி ப்ளூக்ராஸ்ல‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ எல்லாரும் உயிரின் ம‌திப்பு தெரிஞ்ச‌வ‌ங்க‌ன்னும் சொல்ல‌‌முடியாது.

ப்ளீஸ் த‌ய‌வுசெஞ்சு புறாவுக்காக‌ல்லாம் ஒரு ப‌திவான்னு நென‌ச்சுடாதீங்க‌. அப்புற‌ம் அந்த‌ ப்ளூக்ராஸ் உத்த‌ம‌ருக்கும் ந‌மக்கும் ஒரு வித்தியாச‌மும் கிடையாது.

Friday, December 04, 2009

த‌மிழ் சினிமாவில் ஒரு Paranormal Activity - இரா








த‌மிழ் சினிமாவில் ஒரு Paranormal Activity - இரா

என் ந‌ண்ப‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருக்க‌ற‌துனால‌ சொல்ல‌ல‌, ஆனா இது உண்மை. Paranormal Activity எந்த‌ள‌வுக்கு ப‌ர‌ப‌ர‌ப்பு உண்டாக்குச்சோ, எந்த‌ள‌வுக்கு ர‌சிக‌ர்க‌ளை ஈர்த்துச்சோ அத‌விட‌ அதிக‌மா இந்த‌ ப‌ட‌ம் எல்லோரையும் க‌வ‌ர‌ப்போகுதுங்க‌ற‌து ம‌ட்டும் உண்மை.

ப‌ட‌த்துக்கு ஒட்டாத‌ காமெடி ட்ராக், நமீதா க்ளாம‌ர், குத்து பாட்டு இப்ப‌டி எதுவுமில்லாம‌லும் ஆடிய‌ன்ஸை உக்கார‌வைக்க‌முடியும்ங்க‌ற‌துக்கு எடுத்துக்காட்டு இந்த‌ ப‌ட‌ம்.

இந்த‌ ப‌ட‌த்த‌ பார்த்த‌ த‌யாரிப்பாள‌ர் க‌லைப்புலி தாணு சொன்ன‌து, "த‌மிழ் சினிமாவோட‌ ஜீனிய‌ஸ்னு சொல்ற‌ எல்லாருக்கும் இந்த‌ ப‌ட‌த்த‌ போட்டுகாட்டுங்க‌".

இந்த‌ ப‌ட‌த்த‌ ப‌த்தி தெரிஞ்சுக்க‌ விரும்ப‌ற‌வ‌ங்க‌ இந்த‌ மின்ன‌ஞ்சலுக்கு உங்க‌ கேள்விக‌ளை/க‌ருத்துக‌ளை/ச‌ந்தேக‌ங்க‌ளை அனுப்ப‌லாம் - moveemaker@gmail.com

இதுக்கு மேல‌ நான் எதுவும் சொல்ல‌ விரும்ப‌ல‌. இனிமே இந்த‌ ப‌ட‌ம் பேச‌ட்டும். வெகு விரைவில்...வெள்ளித்திரையில்!

Wednesday, December 02, 2009

அஜித், விக்ர‌ம், சூர்யா வ‌ரிசையில்...

டிஸ்கி: மேலே பட‌த்துல‌ இருக்க‌ற‌ பாட்டில்ல‌ என்ன‌ இருக்குன்னுலாம் என்னை கேக்காதீங்க‌. என‌க்கு தெரியாது. ஹும்...may be இள‌நீரா இருக்க‌லாம்.

அஜித், விக்ர‌ம், சூர்யா - இவ‌ங்க‌ளுக்கு அப்புற‌ம் த‌ன்ன‌ம்பிக்கைக்கு உதார‌ண‌மா என்னையும் சொல்ல‌லாம். என்ன‌டா இவ‌ன் திமிரா சொல்றானேன்னு நினைக்காதீங்க‌. யோசிச்சி பாருங்க‌, இப்ப‌ கொஞ்ச‌ நாள் முன்னாடிதான் ப்ளாக்வோட‌ ஃபாலோவ‌ர்ஸ் ந‌ம்ப‌ர் ட‌புள் டிஜிட்ட‌ தொட்டுது. இதுவ‌ரைக்கும் எல்லா ப‌திவுக‌ளுக்கும் சேர்த்து போட்டிருக்க‌ற‌ க‌மெண்ட் எண்ணிக்கை 30, 35கூட‌ தாண்டாது.

என்ன‌தான் சொல்ல‌வ‌ர்றேன்னு புரியுதா? மேலே இருக்க‌ற‌ ப‌ட‌த்த‌ பாத்து புரிஞ்சுட்டிரூப்பிங்க‌ளே. அட‌, இது 50வ‌து ப‌திவுங்கோ! ஹே ஹே ஜுஜும் டாக் ஹே ஹே ஜுஜும் டாக்..ஒண்ணுமில்ல‌, 50வ‌து ப‌திவுன்னு சொல்லும்போது ஒரு BGM வேணுமில்ல‌. இப்போ ம‌றுப‌டியும் மேல‌ இருக்க‌ற‌ பாராவை ப‌டிச்சிட்டு அடுத்த‌ பாராவை ப‌டிங்க‌‌.

இதுக்க‌ப்புற‌மும் ந‌ம‌க்கும் ஒரு வாச‌க‌ர் வ‌ட்ட‌மோ, ச‌துர‌மோ, செவ்வ‌க‌மோ உருவாகும்ங்க‌ற‌ நினைப்புல‌ எழுதிட்டிருக்கேனே, இப்போ சொல்லுங்க‌ என்னையும் அந்த‌ த‌ன்ன‌ம்பிக்கை லிஸ்ட்ல‌ சேத்துக்க‌லாமில்ல‌? Yesனு சொல்ற‌வ‌ங்க‌ள ஐ'ம் அப்ரிசியேட்(ம‌யில்சாமி ஸ்டைலில்). Noன்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு ஒரு கேள்வி. Noக்கு எதிர்ப்ப‌த‌ம் என்ன‌? ஆங்..நீங்க‌ளும் Yes சொல்லிட்டீங்க‌ பாத்தீங்க‌ளா...(இது த‌ல‌ ஸ்டைலில்) அதேய்... (சே, என்னாவொரு அறிவுடா, ISROவும், NASAவும் உன்னை மிஸ் ப‌ண்ணிட்டாங்க‌).

நிறைய‌ ப்ளாகுக‌ளை ப‌டிச்சிட்டிருந்த‌ப்ப‌தான் என‌க்கு நாம‌ளும் ஒண்ணு ஆர‌ம்பிப்போமேன்னு தோணுச்சு. உண்மையாவே கேபிளார் என‌க்கு ஒரு மிக‌ப்பெரிய‌ இன்ஸ்பிரேஷ‌ன். சினிமா விம‌ர்ச‌ன‌ம், சினிமா வியாபார‌ம், கொத்து ப‌ரோட்டான்னு பொள‌ந்துக‌ட்றார் ம‌னுஷ‌ன்.

ப்ளாக்னு ஒண்ணு ஆர‌ம்பிச்சிட்டேனே த‌விர‌ என்ன‌த்தை எழுத‌ற‌துன்னு தெரியாம‌ ஏதேதோ எழுதிகிட்ரு(க்கேன்)ந்தேன். நான் ஆர‌ம்ப‌த்துல‌ எழுதுன‌த‌லாம் இப்ப‌ ப‌டிச்சா என‌க்கே செம‌ மொக்கையா இருக்கு (ஆமா, இப்ப‌ எழுத‌ற‌து ம‌ட்டும் என்ன‌வாம், என்ன‌மோ சுஜாதாதான் ஆவியா உன் உட‌ம்புல‌ புகுந்துகிட்டு எழுத‌வெக்குற‌ மாதிரி, எதுக்குடா ஓவ‌ர் சீன்?)

என்ன‌டா எவ்ளோ எழுதினாலும் யாரும் க‌மெண்ட் போட‌மாட்டேங்குறாங்க‌ளேன்னு புல‌ம்பிட்டிருந்த‌ப்போ ஃப்ரெண்டு சொன்னார்.

"நீங்க‌ எழுத‌ற‌த‌ த‌மிழ்ம‌ண‌த்திலும், த‌மிழிஷ்லயும் போடுங்க‌"

"அப்டின்னா?"

"என்ன‌ நீங்க‌, ப்ளாக் எழுதுறீங்க‌, த‌மிழ்ம‌ண‌ம்லாம் தெரிஞ்சுக்காம‌ இருக்க‌றீங்க‌ளே"ன்னு ப‌ளிச்சுன்னு ஒரு ப‌ல்பு குடுத்தார்.

நாம‌ வாங்காத‌ ப‌ல்பா, இதுக்கெல்லாம் அச‌ருவோமா என்ன‌? அவ‌ரே விள‌க்க‌ம் குடுத்தார். அதுக்க‌ப்புற‌ம் ஒரு த‌ட‌வை த‌மிழ்ம‌ண‌த்தை முக‌ர்ந்துகிட்டிருந்த‌ப்போ "குறும்ப‌ன்"ங்க‌ற‌ பேர்ல‌ இன்னொருத்த‌ர் இருக்க‌ற‌த‌ பாத்தேன். என்ன‌டா இது, ந‌ம‌க்கு இப்ப‌டி ஒரு சோத‌னையான்னு ஃபீல் ப‌ண்ண‌ப்போதான் தோணுச்சு. நான் 10th ப‌டிக்கும்போது க்ளாஸ்ல‌ A.ச‌திஷ், B.ச‌திஷ், R.சதிஷ், S.ச‌திஷ்னு மொத்த‌ம் நாலு ச‌திஷுங்க‌ இருந்தாங்க‌. அதுபோல‌ நாம‌ளும் இருந்துட்டுபோவோம்னு விட்டுட்டேன்.

உண்மையான‌ பெய‌ர்க்கார‌ண‌ம் சொல்ல‌ட்டுமா? ஒரு த‌ட‌வை மைலாப்பூர் க‌பாலீசுவ‌ர‌ர் கோயில் போயிருந்த‌ப்போ அங்க‌ வ‌ரிசையா சாமி சிலைங்க‌ பின்னாடி த‌மிழ் மாத‌‌மும், ந‌ட்ச‌த்திர‌மும் வெச்சு, அந்தந்த‌ சாமி பேர் போட்டிருந்த‌த‌ பாத்தேன். அப்ப‌டி நான் பொற‌ந்த‌ மாத‌மும், ந‌ட்ச‌த்திர‌மும் வெச்சு போட்டிருந்த‌ பெய‌ர் "பெரும‌ழிசைக் குறும்ப‌ர்". நாம‌ என்ன‌த்த‌ சாதிச்சுட்டோம், ந‌ம‌க்கு எதுக்கு இப்ப‌டி ம‌ரியாதை. சோ, "ர்"ர‌ out ப‌ண்ணி "ன்"ன‌ in ப‌ண்ணி "குறும்ப‌ர்"ருக்கு ப‌தில் "குறும்ப‌ன்"னு ஆயிட்டேன்.

ஓகே ஒகே, 50க்கே ரொம்ப‌ ஆடாத‌, நிறைய‌ பேர் 100, 200னுலாம் தாண்டி போயிட்டிருக்காங்க‌ன்னு நீங்க‌ நினைக்க‌ற‌து புரியுது. இப்போ வேண்ணா, 100 அடிக்க‌ற‌து ச‌ச்சினுக்கு சாதார‌ண‌மா இருக்க‌லாம், ஆனா அவ‌ரோட‌ முத‌ல் 50 அவ‌ருக்கு ரொம்ப‌ ஸ்பெஷ‌லாத்தானே இருக்கும் (பார்றா, இதான் சாக்குனு ச‌ச்சினோட‌ க‌ம்பேர் ப‌ண்றான், டேய் இதெல்லாம்...). ச‌ரி இதோட‌ என்னோட‌ சுய‌புராண‌த்த‌ ஸ்டாப் ப‌ண்ணிக்குறேன் (அப்பாடா!).

இப்போ அப்டியே ச‌ம‌த்து புள்ளையா பின்னூட்ட‌த்த‌ போட்டுட்டு, த‌மிழிஷ்ல‌ ஒரு வோட்டையும் போட்டுடுவீங்க‌ளாம், ஓகேவா? குழ‌ந்தைய‌ (இது 200 ம‌ச்!) என்க‌ரேஜ் ப‌ண்ண‌னுமில்ல‌. ஹேய் ஹேய் யாருப்பா அது, அதுக்குள்ள‌ இந்த‌ விண்டோவ‌ க்ளோஸ் ப‌ண்ற‌து!

Sunday, November 29, 2009

காலேஜ் க‌ட் அடித்து பார்த்த‌ ஒரே, முத‌ல் ம‌ற்றும் க‌டைசி திரைப்ப‌ட‌ம்


அனேக‌மா எல்லாருக்குமே காலேஜ் க‌ட் அடிச்சிட்டு ப‌ட‌ம் பாத்த‌ அனுப‌வ‌ம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் காலேஜ் ப‌டிக்கும்போது க‌ட் அடிச்சி பாத்த‌து ஒரே ஒரு ப‌ட‌ம்தான். அதுக்காக‌ என்னை ரொம்ப ப‌டிப்ஸ்னுலாம் க‌ற்ப‌னை ப‌ண்ணி அவ‌மான‌ப்ப‌டுத்திடாதீங்க‌. நான் ஒரு ஆவ‌ரேஜ் ஸ்டுட‌ண்ட்தான். ப்ப்பா, இத‌ சொல்லும்போதுதான் என்னா ஒரு பெருமை!

மேட்ட‌ருக்கு வ‌ர்றேன். காலேஜ் ப‌டிச்சிட்டிருந்த‌ப்போதான் "உயிரே" ப‌ட‌ம் ரிலீஸ் ஆச்சு. ப‌ட‌ம் ரிலீஸ் ஆக‌ற‌துக்கு முன்னாடியே ஆடியோ கேச‌ட் (அப்போலாம் CDன்னா என்ன‌ன்னு கேட்டா, ABக்கு அப்புற‌ம் வ‌ருமே, அதானேன்னு சொல்ற‌ ரேஞ்சுல‌ இருந்தேன்) வாங்கி வீட்டுல‌ போட்டு ப‌க்க‌த்துல‌ நாலு வீட்டுக்கு கேக்குற‌ மாதிரி ச‌வுண்டு வெச்சு, அராஜ‌க‌ம் பண்ணிகிட்டிருந்தேன்.

ம‌ணிர‌த்ன‌ம், ர‌ஹ்மான், ஷாருக்கான் - மூணு பேருமே என்னோட‌ ஃபேவ‌ரைட்ஸ். விட‌ முடியுமா இந்த‌ ப‌ட‌த்த‌. ப‌ஸ் ஸ்டாப்ல‌ காலேஜ் ப‌ஸ் வேற‌ நிக்குது. இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ ப‌ஸ் ஃபுல்லான‌வுடனே எடுத்துடுவாங்க‌. வ‌ர்ற‌ வ‌ழியில‌ "உயிரே" போஸ்ட‌ர்லாம் பாத்த‌து வேற‌ ம‌ன‌சு அடிச்சுக்குது. 'உயிர் காப்பான் தோழ‌ன்'னு சொல்லுவாங்க‌ இல்லியா, அதுபோல‌ 'உயிரே' பாப்போம் வாடான்னான் ஒரு தோழ‌ன்.

அவ்ளோதான், ஓகே இன்னைக்கு பாத்துடுவோம்னு முடிவு ப‌ண்ணேன். எடுத்துட்டு போன‌ நோட், டிப‌ன் பாக்ஸ் ரெண்டுத்தையும் காலேஜ் போற‌ இன்னொரு ஃப்ரெண்டுகிட்ட‌ குடுத்துட்டேன். அப்புற‌ம்தான் உறைச்சுது. காலேஜ் ப‌டிக்கும்போதும் எங்க‌ளுக்கு யூனிஃபார்ம் உண்டு. இப்ப‌டியே தியேட்ட‌ருக்கு போனா ந‌ம்ம‌ள‌ க‌ட் அடிச்சிட்டு வ‌ந்துருக்கானுங்க‌ன்னு க‌ண்டுபுடிச்சிட‌மாட்டாங்க‌? ஆமா, க‌ண்டுபுடிக்க‌ட்டுமே, என்ன‌ ந‌ம்ம‌ள‌ கைது ப‌ண்ணி விசார‌ணை க‌மிஷ‌னா வெக்க‌போறாங்க‌.

தியேட்ட‌ருக்கு காலேஜ் யூனிஃபார்ம்லேயே போயாச்சு. அங்க‌ போனா ஊர்ல‌ இருக்க‌ற‌ எல்லா காலேஜ்ல‌யிருந்தும் ப‌ச‌ங்க‌ வ‌ந்துருக்காங்க‌. கூட்ட‌த்துல‌ எப்ப‌டியோ என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச‌வ‌ர் ஒருத்த‌ர் நின்னுட்டிருந்தார். அவ‌ர் கைல‌ காசு குடுத்து டிக்கெட் வாங்கிகிட்டு தியேட்ட‌ர் உள்ள‌ போறோம். ம‌னசுக்குள்ளே செம த்ரில்லிங்! ஃப‌ர்ஸ்ட் டைம் காலேஜ் க‌ட் அடிச்சிட்டு வ‌ந்துருக்கோம்ல‌. நாங்க‌ போகும்போதுதான் "தையா தையா" பாட்டு ஆர‌ம்பிச்சுது. கிட்ட‌த‌ட்ட‌ 30, 40 செக‌ண்ட் பாட்டே கேக்க‌ல‌. ப‌ச‌ங்க‌ விசில் ச‌த்த‌ம்தான். வாவ்! ப‌ச‌ங்க‌ சும்மா என்ன‌மா என்ஜாய் பண்ணுறாங்க‌!

அதுக்க‌ப்புற‌ம்தான், என்ன‌டா இது ம‌றுப‌டியும் தீவிர‌வாத‌மான்னு ஆயிடுச்சு. ஆனாலும் ப‌ட‌ம் ஒர‌ள‌வுக்கு ஓகேங்க‌ற‌ மாதிரிதான் இருந்த‌து. ஆனா நிறைய பேருக்கு புடிக்க‌ல‌. ப்ட‌ம் முடிஞ்ச‌தும் அவ‌ன‌வ‌ன் க‌மெண்ட்டா அடிச்சு த‌ள்றானுங்க‌.

ப‌ட‌ம் முடிச்சு வெளியே வ‌ந்தா அடுத்த‌ ஷோவுக்கு டிக்கெட் வாங்குற‌துக்கு என்னோட‌ மாமா ஒருத்த‌ர் லைன்ல‌ நிக்குறார். அவ‌ரும் என்னை பாத்துட்டார். அதான் எங்க‌ யூனிஃபார்மே காட்டி குடுக்குதே. 'ச‌ரி போ போ'ன்னு அவ‌ரும் த‌லைய‌ ஆட்ட‌, 'அப்பாடா க்ரேட் எஸ்கேப்'னு கொஞ்ச‌ம் ம‌ன‌சு ச‌மாதான‌ம் ஆச்சு. வெளியே வ‌ந்தா என் ஏஜ் குரூப்லேயே இருக்க‌ற‌ என்னோட‌ ரிலேட்டிவ் பைய‌ன் அடுத்த‌ ஷோவுக்கு போற‌துக்காக‌ என்ட்ரி குடுக்க‌றார். அவ‌ர் ப‌டிப்ஸ் வேற‌, அத‌னால‌ எங்க‌ ரிலேட்டிவ்ஸ்கிட்ட சாருக்கு ந‌ல்ல‌ பேர்.

என‌க்கு அவ‌ர‌ (இப்போ க‌ல்யாண‌ம் ஆகி செட்டில் ஆயிட்டார், அத‌னால‌ 'அவ‌ன்' வேணாம், 'அவ‌ர்'னே வெச்சுக்குவோம்) பாத்த‌துமே சாக்க்காயிட்டேன். "நீயா நீயா நீயா" ம‌ன‌சுக்குள்ளே echo எஃபெக்ட். அவ‌ர் கூலா கேக்குறார், "ப‌ட‌ம் ந‌ல்லாருக்கா?". "ஆங், ப‌ர‌வால்ல‌"ன்னேன்.

ப‌ட‌ம் விட்ட‌தும் நேரா வீட்டுக்கு வ‌ந்துட்டேன். என்னை தியேட்ட‌ர்ல‌ பாத்த‌வ‌ங்க‌ வீட்ல‌ போட்டுகுடுத்துட்டா என்ன‌ ப‌ண்ற‌து? ச‌ரி நாம‌ளே ஒத்துக்குவோம்னு அம்மாகிட்ட‌ சொல்லிட்டேன். "என்ன‌ப்பா நீ இந்த‌ மாதிரிலாமா ப‌ண்ற‌து?"ன்னு நான் ஏதோ இந்திய‌ ராணுவ‌ ர‌க‌சிய‌த்த‌ பாகிஸ்தானுக்கு சொல்லிட்ட‌ மாதிரி ரியாக்ச‌ன் குடுத்தாங்க‌. ச‌ரி மேட்ட‌ர் எப்ப‌டியும் அப்பாகிட்ட‌ போகும்னு கூலா விட்டுட்டேன். ம‌றுநாள் அப்பா அம்மாகிட்ட‌ சொல்லியிருக்க்கார், "அவ‌ன் வாரா வார‌ம் ஞாயித்துக்கிழ‌மை ஒரு ப‌ட‌ம் போக‌ட்டும், வேணாம்னு சொல்ல‌ல‌, ஆனா இந்த‌ மாதிரி காலேஜுக்கு லீவு போட்டுட்டு போக‌வேணாம்னு சொல்லு". ம்ம்ம், என்ன‌ ப‌ண்ற‌து, செண்டிமெண்ட‌ல் அட்டாக். நானும் ச‌ரின்னு விட்டுட்டேன். இதுதான் நான் காலேஜ் க‌ட் அடிச்சு பாத்த‌ ஒரே, முதல் ம‌ற்றும் க‌டைசி அனுப‌வ‌ம்!


Sunday, November 22, 2009

என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மா


ப‌ருத்திவீர‌ன் நிச்ச‌ய‌மா உல‌க‌த்த‌ர‌மான‌ பட‌ம்தான். சும்மா சொல்ல‌க்கூடாது கார்த்தியும் புது ஹீரோன்னே தெரியாம‌ ந‌ல்லா ந‌டிச்சிருந்தார். ஆனா அதுக்காக‌ எந்த‌ மேடை ஏறினாலும், 'என்ன‌ மாமா சவுக்கிய‌மா?'ன்னே பேச‌ ஆர‌ம்பிக்க‌ற‌து, கொஞ்ச‌ம் ஓவ‌ரா இருக்குது.

ர‌‌ஹ்மான் சொல்ற‌ 'எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே'ங்க‌ற‌ ரேஞ்சுக்கு 'என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மா'ன்னு ந‌ல‌ம் விசாரிச்சுட்டிருக்க‌றாரு. அடுத்த‌ த‌ட‌வை அவ‌ர் மேடையில‌ பேச‌ வ‌ரும்போது, ஜ‌ன‌ங்க‌ளே 'மாப்ள‌, நான் ச‌வுக்கிய‌மாதான் க்குறேன்'னு கத்த‌போறாங்க‌.

ஹும்..அவ‌ரும் என்ன‌ ப‌ண்ணுவாரு பாவ‌ம், செல்வ‌ராக‌வ‌னை சொல்ல‌ணும். ப‌ட‌த்தை எடுத்தோமா, ரிலீஸ் ப‌ண்ணோமான்னு இல்லாம, ஏதோ ஆயுள் த‌ண்ட‌னை வாங்கின‌ கைதி மாதிரி உள்ளேயே வெச்சுட்டிருக்காரு. த‌யாரிப்பாள‌ர் பாவ‌ம்யா! கொஞ்ச‌ம் க‌ருணை காட்ட‌கூடாதா?

'பையா' நீயாவ‌து வ‌ந்து இந்த‌ ப‌ருத்திவீர‌னை காப்பாத்து. என்ன‌ பையா கேக்குதா...அட‌ச்சே, இதுகூட‌ என்ன‌ மாமா ச‌வுக்கிய‌மாங்க‌ற‌ மாதிரியே வ‌ருது.

கேபிள் ச‌ங்க‌ர்



ப‌திவை ப‌டிச்சுதான் தெரிஞ்சுகிட்டேன், கேபிள் ச‌ங்க‌ர் ஸாரோட‌ த‌ந்தை கால‌மாயிட்டார்னு. என‌க்கு என்ன‌ ஆறுத‌ல் சொல்ற‌துன்னே தெரிய‌ல‌ ஸார். இந்த‌ வ‌ருத்த‌த்துல‌ருந்து நீங்க‌ மீண்டு வ‌ர‌ க‌ட‌வுளை வேண்டிக்க‌றேன். நீங்க‌ எழுதின‌ காக்கை ஒண்ணு போதும், உங்க‌ அப்பா மேல‌ நீங்க‌ வெச்சிருக்க‌ற‌ அன்புக்கு அதுவே சாட்சி.
நீங்க‌ வாழ்க்கைல‌ வெற்றி பெற‌ உங்க‌ அப்பா க‌ண்டிப்பா ஆசிர்வாத‌ம் ப‌ண்ணுவார். இந்த‌ ப‌திவை உங்க‌ அப்பாவுக்கு நான் ச‌ம‌ர்ப்பிக்க‌றேன் கேபிள் ஸார்.

ம‌னித‌னும் ம‌ர்ம‌ங்க‌ளும்


நேத்துதான் இந்த‌ புக்கை ப‌டிச்சு முடிச்சேன். கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் எப்ப‌வும் என்னோட‌ ஃபேவ‌ரைட். அதுவும் 'ஹாய்' ம‌த‌ன் எழுதியிருக்கார்னா, க‌ண்டிப்பா ப‌டிக்க‌ணும்னு வாங்குனேன். புக்கோட‌ டைட்டில், மேல் அட்டை இதெல்லாமும் என்னை வாங்க‌ தூண்டிய‌துக்கு ஒரு கார‌ண‌ம். இந்த‌ மாதிரி விஷ‌ய‌ங்க‌ள்ல‌ ம‌த‌ன் எப்ப‌வும் வெளுத்து வாங்குவார். அவ‌ர் பேசும்போதுதான் வெத்த‌லைய‌ போட்டுட்டு பேச‌ற‌ மாதிரி கொஞ்ச‌ம் குத‌ப்பிகிட்டே பேசுவாரே த‌விர‌ (யாராயிருந்தாலும் பார‌ப‌ட்ச‌மின்றி கால் வார‌ப்ப‌டும்), ஹீ ஈஸ் ரிய‌லி எ ஜீனிய‌ஸ்.

நீங்க‌ கொஞ்ச‌ம் ப‌ய‌ந்த‌ சுபாவ‌ம்னா த‌ய‌வு செய்து இந்த‌ புக்கை ப‌டிக்காதீங்க‌. இப்ப‌டி சொன்னாதான் ப‌டிப்பீங்க‌, க‌ரெக்டா? ந‌ம்மாளுங்க‌ளுக்கு இத‌ செய்யாத‌ன்னா அத‌தான் செய்வாங்க‌. எச்சில் துப்பாதீர்னு சுவ‌த்துல‌ எழுதிவெச்சிருப்பாங்க‌. ஆனா அது மேல‌தான் ஏக‌ப்ப‌ட்ட‌ பாக்கு க‌றை இருக்கும்!

ஆஃபிஸ் விட்டு நைட் வீட்டுக்கு வ‌ந்து சாப்ட்டு முடிச்ச‌ப்புற‌ம், இந்த‌ புக்கை ப‌டிக்க‌ ஆர‌ம்பிக்கும்போது ம‌ணி 11:05 PM. யாருமேயில்லாம‌ ராத்திரி த‌னியா இந்த‌ புக்கை ப‌டிச்சு பாருங்க‌. அது ஒரு த‌னி த்ரில்! ஒவ்வொரு நாளும் 4 இல்ல‌ன்னா 5 ப‌க்க‌ங்க‌ள்தான் ப‌டிப்பேன். ப‌டிச்சு முடிச்சுட்டு ரூம் க‌த‌வு க‌ரெக்டா லாக் ஆகியிருக்கான்னு ஒரு ட‌புள் செக் வேற‌ ப‌ண்ண‌வேண்டிய‌தாயிருந்த‌து. நெத்தியில‌ விபூதி வெச்சுகிட்டு ப‌டுக்க‌ல‌, அது ஒண்ணுதான் குறை.

ஆவி, ம‌னித‌ர்க‌ளுக்கு இருந்த‌ (இருக்கிற‌?) அமானுஷ்ய ச‌க்தி, டெலிப‌தி, UFO - Unidentified Flying Objects (த‌மிழ்ல‌ ப‌ற‌க்கும் த‌ட்டுக‌ள்னு சொல்லுவோமே அதேதான்) - இப்ப‌டி எல்லாத்தையுமே ஆதார‌த்தோட எழுதியிருக்குறார். இதுல‌ குறிப்பா ஒரு லைன் ந‌ல்லாயிருந்த‌து, "ஒருவ‌ரைக் கொல்வ‌து ஆவிய‌ல்ல‌, அவ‌ரின் ப‌ய‌மே அவ‌ரைக் கொன்றுவிடுகிற‌து".

இதுவ‌ரைக்கும் என‌க்கு தெரிஞ்ச‌ ஆவி ஆன‌ந்த‌ விக‌ட‌னும், ஜ‌க‌ன்மோகினி ந‌மீதாவும்தான். ரெண்டு நாள் முன்னாடி, என் ஃப்ரெண்டுகிட்ட‌ (ஹ‌ரீஷ்) பேசி ரொம்ப‌ நாள் ஆச்சேன்னு வீட்ல‌ இருக்கும்போது நினைச்சுகிட்டு இருந்தேன். அதே நாள் ஆஃபிஸ்ல‌ வ‌ந்து அவுட்லுக் திற‌ந்தா அவ‌ர்கிட்ட‌யிருந்து மெயில் வ‌ந்திருக்கு! அன்னைக்கு நைட்டு அவ‌ர் callம் ப‌ண்ணார். இதுதான் டெலிப‌தியோ?

புக் ஃபுல்லா ஆவி ப‌த்தியே எழுதினா எங்க‌ போர‌டிச்சுடுமோன்னு முத‌ல்ல‌ ஒரு 50, 60 ப‌க்க‌ம் வ‌ரைக்கும்தான் எழுதியிருக்கார். அதுக்க‌ப்புற‌ம் அடுத்த‌டுத்து டாபிக் மாறிகிட்டே இருந்தாலும் அந்த‌ த்ரில் ம‌ட்டும் குறையாம‌ ஒரு ஃப்ளோல போய்கிட்டேயிருந்த‌து. ப‌டிச்சு பாருங்க‌, என‌க்கு புடிச்சிருந்த‌து, எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரிய‌ல‌!