
நேத்து பதிவுல ஒரு கதையை எழுதுனப்புறம், எழுத்தாளர் சுஜாதா விகடன்ல வந்த "கற்றதும் பெற்றதும்" பகுதியில சொன்ன ஒரு கதை ஞாபகம் வந்துச்சு. நீங்களும் படிச்சிருப்பீங்கன்னு நெனக்குறேன்.
"உலகின் கடைசி மனிதன் இருட்டறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது"
இது ஒரு ஆங்கில எழுத்தாளர்(பேர் ஞாபகம் இல்ல) எழுதுனதுன்னு சுஜாதா சொல்லியிருந்தார் (அவர் ஆங்கிலத்துலதாங்க எழுதியிருப்பார், நம்ம வசதிக்காக சுஜாதா தமிழ்ல குடுத்தார்). இந்த ஒரு வரி கதையையே கொஞ்சம் மாத்தி எழுதினார் நம்ம "கணேஷ்-வஸந்த்"வோட பிரம்மா.
"உலகின் கடைசி மனிதன் இருட்டறையில் உட்கார்ந்திருந்தான். கதவு பூட்டப்பட்டது".
இத படிச்சப்போ என் ஞாபகத்துக்கு வந்த டயலாக். ஒரு படத்துல செந்தில் கவுண்டமணியப் பாத்து கேட்டது, நான் அவர பாத்து கேக்கணும்னு போல இருந்தது.
"அய்ய்ய்ய்ய்யோ அது எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்படில்லாம் தோணுது?"