Sunday, November 15, 2009

ச‌ச்சின் 20 நாட் அவுட்!


அந்த‌ கால‌ ச‌ச்சினும், இந்த‌ கால‌ பிராட்மேனும்
ஸ்டைல்ல‌யும் க‌ல‌க்குவோம்ல‌!

ந‌வ‌ம்ப‌ர் 15, 2009 - ச‌ச்சின் க‌ள‌த்துல‌ இற‌ங்கி இன்னையோட‌ 20 வ‌ருஷ‌ம் ஆகுது. ஒரே வேலைய‌ திரும்ப‌ திரும்ப‌ செஞ்சா (எவ்வ‌ள‌வுதான் ப‌ண‌ம் வ‌ந்தாலும்) யாருக்காயிருந்தாலும் க‌ண்டிப்பா அலுத்துதான் போகும். ஆனா இன்னைக்கும், க‌ண்டிப்பா டீமை ஜெயிக்க‌வெக்க‌ணும்ங்க‌ற‌ வெறியோட‌ ஆட‌ முடியுதுன்னா, அது ஸ‌ம்திங் கிரேட்....

ச‌மீப‌த்துல‌ யுவ‌ராஜ் சிங் ஒரு பேட்டியில‌ சொல்லியிருந்தார், "ச‌ச்சினை நாங்க‌ தாத்தான்னே கூப்பிட‌ ஆர‌ம்பிச்சிட்டோம், ஆனா இப்ப‌வும் தின‌மும் அவ‌ர் த‌ன்னோட‌ பேட்டிங்கை இம்ப்ரூவ் ப‌ண்ண‌னும்னுதான் நினைக்கிறார்". இதுவே ச‌ச்சினோட‌ ஆர்வ‌ம் இன்னும் குறைய‌ல‌ங்கற‌துக்கு சாட்சி.

ச‌ச்சின் ஆடின‌துல‌ இதுவ‌ரைக்கும் என‌க்கு புடிச்ச‌ கேம்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ரெண்டு ஷார்ஜா கேம்ஸ், 2003 வேர்ல்ட் க‌ப்ல‌ பாகிஸ்தானுக்கு எதிரா ஆடின‌து, 99 வேர்ல்ட் க‌ப்ல‌ அவ‌ரோட‌ அப்பா இற‌ந்த‌ப்போ இறுதி ச‌ட‌ங்குக‌ளை முடிச்சிட்டு ம‌றுப‌டியும் இங்கிலாந்து போய் கென்யாவுக்கு எதிரா அடிச்ச‌ செஞ்சுரி (கென்யாதானேன்னு சொன்னாலும் அந்த‌ ம‌ன‌நிலைல‌ ஆடின‌து ரொம்ப‌ பெரிய‌ விஷ‌ய‌ம்)...இன்னும் சொல்லிகிட்டே போக‌லாம். ஒரு ப‌திவு க‌ண்டிப்பா ப‌த்தாது.

ஷேன் வார்னேகிட்ட போய் கேட்டா அவ‌ரே சொல்லுவாரு, "ச‌ச்சின் - பேர கேட்டாலே ச்சும்மா உச்சா வ‌ருதுல்ல..."

ச‌ச்சின் நிறைய‌ ரெகார்ட் ப‌ண்ணியிருக்க‌லாம், ஆனா அவ‌ர் மேட்ச் வின்ன‌ர் கிடையாதுன்னு புல‌ம்புற‌வ‌ங்க‌ள‌, நான் ஒண்ணு கேக்குறேன். ச‌ச்சின் பெஸ்ட் ஃபினிஷ‌ர் கிடையாது, ஒத்துக்க‌றேன், ஆனா டீமோட‌ டார்கெட்ல‌ 40-50% ச‌ச்சின் அடிச்சிட‌றார். ஒவ்வொரு மேட்ச்ல‌யும் டோட்ட‌ல் டார்கெட்ல‌ 90% அடிக்க‌ற‌துக்கு அவ‌ர் என்ன‌ மெஷினா?

அவ‌ர் அடிச்ச‌ எத்த‌னையோ செஞ்சுரிஸ் ம‌த்த‌ விள‌ம்ப‌ர‌ ந‌டிக‌ர்க‌ளால‌...ர்ர்ர்...ஸாரி...ம‌த்த‌ ப்ளேய‌ர்ஸால‌ வேஸ்ட்டா போயிருக்குங்க‌ற‌துதான் உண்மை. ச‌ச்சினை ப‌த்தி பேசினா பேசிகிட்டே போலாம். இவ்வ‌ள‌வு சாத‌னைக‌ளுக்கு அப்புற‌மும், த‌லைக‌ன‌ம் இல்லாம‌ இருக்குறாரே, அதுக்கே ஒரு ராய‌ல் சல்யூட்.

ஏன் கிரிக்கெட்ட‌ர்க‌ளுக்குலாம் முத‌ல்வ‌ர் ஆசையே வ‌ர‌மாட்டேங்குது? த‌ல‌, உன‌க்குதான் சென்னை சேப்பாக்க‌ம் ஸ்டேடிய‌ம் ரொம்ப‌ ராசியாச்சே, த‌மிழ்நாட்டுல‌ வ‌ந்து நில்லு, 2011அ ஒரு கை பாத்துடுவோம்!


பேராண்மை



இது ப‌ட‌த்த‌ ப‌த்தின‌ விம‌ர்ச‌ன‌ம் இல்ல‌. ப‌ட‌ம் பாக்கும்போது என‌க்கு கிடைச்ச‌ அனுப‌வ‌ம்.

இந்த‌ ப‌ட‌த்துல‌ செக‌ண்ட் ஹாஃப்ல‌ ஒரு பொண்ணு த‌ம் அடிக்க‌ற‌ மாதிரி ஒரு சீன் வ‌ரும். அந்த‌ சீன் வ‌ரும்போது தியேட்ட‌ர்ல‌ "ஹோய்ய்ய்"னு ஒரு உற்சாக‌ கூச்ச‌ல். இன்னைக்கு ஒரு க‌ட்டிட‌ம் க‌ட்டுற‌ இட‌த்துல‌யிருக்கற‌ சித்தாள்ல‌யிருந்து, டீச்ச‌ர், டாக்ட‌ர், இன்ஜினிய‌ர், வ‌க்கீல், சாஃப்ட்வேர், பைல‌ட்..அவ்வ‌ள‌வு ஏன், முத‌ல்வ‌ர், பிர‌த‌ம‌ர், ஜ‌னாதிப‌தி ப‌த‌விலாம் வ‌கிக்க‌ற‌ அள‌வுக்கு பெண்க‌ள் எவ்வ‌ள‌வோ முன்னேறிட்டாங்க‌.

ஆனா இப்ப‌வும் ஒரு பொது இட‌த்துல‌, ஒரு பைய‌ன் சிரிக்க‌ற‌ மாதிரி, ச‌த்த‌ம் போட்டு ஒரு பொண்ணு சிரிச்சா, "ஒரு பொண்ணு மாதிரியா ந‌ட‌ந்துக்குது?" அப்ப‌டின்னு ஒரு க‌மெண்ட் க‌ண்டிப்பா வ‌ரும். ஏண்டா, டிர‌ஸ்ஸ‌‌ இப்ப‌டிதான் போட‌ணும், அப்ப‌டிதான் போட‌ணும்னு சொல்றீங்க‌, ச‌ரி சேஃப்டிக்குதானே சொல்றீங்க‌ன்னு இத‌கூட‌ ஒத்துக்க‌லாம். சிரிக்க‌ற‌துல‌கூட‌ ஏண்டா ரூல்ஸ் போடுறீங்க‌?

"பேராண்மை"ல‌ அந்த‌ பொண்ணு த‌ம் அடிச்ச‌போது "ஹோய்ய்ய்"னு க‌த்துன‌ எல்லாருமே என்னை பொருத்த‌வ‌ரைக்கும் Male Chauvinistங்க‌தான். ஆழ்ம‌னசுல‌, நாம‌ ப‌ண்ற‌த after all ஒரு பொண்(ணே)ணு ப‌ண்றாளேங்க‌ற‌ ஆச்ச‌ரிய‌ம். அதுதான் இந்த‌ கூச்ச‌ல்ல‌ வெளிப்ப‌ட்டுது. வ‌ருஷா வ‌ருஷ‌ம் 10thலயும், 12thல‌யும் ப‌ச‌ங்க‌ளவிட‌ பொண்ணுங்க‌ அதிக‌ம் பேர் பாஸ் ப‌ண்ணும்போதுலாம் விட்டுடுவானுங்க‌, ஆனா த‌ம் அடிச்சா ம‌ட்டும் வாய‌ பொள‌க்குறானுங்க‌.

பொண்ணுங்க‌ த‌ம், த‌ண்ணி அடிக்க‌ற‌த‌ நான் ச‌ரின்னு சொல்ல‌ல‌. த‌ம்மோ, த‌ண்ணியோ, ரெண்டுமே உட‌ல் ந‌ல‌த்த‌ பாதிக்க‌ற‌ விஷ‌ய‌ம்தான். பைய‌ன் தானே, சே! பாவ‌ம்னு செல்ல‌ம் குடுத்து ப‌ரிதாப‌ப்ப‌ட‌ த‌ம்மும், த‌ண்ணியும் என்ன‌ ந‌ம்ம‌ள‌ பெத்த‌ அப்பா, அம்மாவா?

ஸோ, த‌ம் அடிச்சாலும் த‌ண்ணி அடிச்ச்சாலும், பைய‌னோ, பொண்ணோ, யாராயிருந்தாலும், ரிச‌ல்ட் ஒண்ணுதான். ஆனா இந்த‌ Male Chauvinism (இதுதான் பேராண்மையோ?) இன்ன‌மும் இருக்குங்க‌ற‌த‌ அந்த‌ கூச்ச‌ல் வெளிப்ப‌டுத்தின‌போது, என‌க்கு கொஞ்ச‌ம் எரிச்ச‌லாதான் இருந்த‌து. டேய், திருந்துங்க‌டா!

Monday, November 09, 2009

ர‌ஸ்யாவில் விச‌ய‌காந்த்!


извините - ர‌ஸ்ய‌ மொலில என‌க்கு புடிக்காத‌ ஒரே வார்த்தை!

Sunday, November 08, 2009

த‌ம‌ன்னாவின் ஹாப்பி டேஸ்

இன்னைக்குதான் பேப்ப‌ர்ல‌ பாத்தேன், அசின், த்ரிஷாக்கு அப்புற‌ம், பாலிவுட் சான்ஸ் ந‌ம்ம‌(?!) த‌ம‌ன்னாவுக்கு அடிச்சிருக்கு. ஷாருக்கோட‌ அடுத்த‌ ப‌ட‌த்தோட‌ ஹீரோயின் அனேக‌மா த‌ம‌ன்னாவா இருக்க‌லாம். Farah Khan directionனு நினைக்கிறேன். Let's see...இப்ப‌டியே ஒவ்வொருத்த‌ரா ஹிந்திக்கு போயிட்டா, நாம‌ த‌மிழ்ல‌ என்ன‌ ப‌ண்ற‌து?

ச‌ரி ச‌ரி, அதுக்காக‌ நாம‌ சோக‌மா உக்காந்துட்டிருக்க‌ணுமா என்ன‌? Welcome (Back) அனுஷ்கா!

Saturday, November 07, 2009

ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன்





ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌னுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள்!

"நாய‌க‌ன்" ப‌ட‌த்தை த‌விர‌ ரொம்ப‌ வ‌ருஷ‌மா என‌க்கு க‌மல் ப‌ட‌ம்னாலே ரொம்ப‌ அல‌ர்ஜி. கார‌ண‌ம், அவ‌ரோட‌ ப‌ர்ச‌ன‌ல் லைஃப். ஆனா "அன்பே சிவ‌ம்" ப‌ட‌த்த‌ பாத்த‌ப்புற‌ம் க‌ம‌ல் மேல‌ என‌க்கு ஒரு பிர‌மிப்பே ஏற்ப‌ட்டுச்சு. அதுக்கப்புற‌ம்தான் உறைச்சுது, நாம‌ 100 ரூபா செல‌வு ப‌ண்ணி ப‌ட‌ம் பாத்துட்டு, அவ‌ர் வீட்டுக்குள்ளே எப்படி இருக்கார்னு எட்டிப்பாக்குறோமே அது எவ்ளோ கீழ்த்த‌ர‌மான‌ விஷ‌ய‌ம்.

ச‌மீப‌ நாட்க‌ள்ல‌ நான் ரொம்ப‌ ரசி க்கிற‌/ச்சுட்டிருக்கிற‌ க‌ம‌ல் பாட‌ல்க‌ள்

1. ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் - இள‌மை இதோ இதோ

கொஞ்ச‌ம் த‌ற்பெருமை அடிச்சுக்க‌ற‌ மாதிரி இருந்தாலும் அதுக்கு த‌குதியான‌வ‌ர்தானே. இளைய‌ராஜா, SPB & க‌ம‌ல் மூணு பேரும் பொள‌ந்து க‌ட்ன‌துனாலே இந்த‌ பாட்டு என‌க்கு ரொம்ப‌ புடிக்கும்

2. ச‌த்யா - வ‌ளையோசை க‌ல‌க‌ல‌க‌ல‌வென‌

இந்த‌ கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிங்க‌றாங்க‌ளே, அது இந்த‌ பாட்டுல‌ க‌மலுக்கும், அம‌லாவுக்கும் சூப்ப‌ரா செட்டாயிருக்கும். என‌க்கென்ன‌வோ இந்த‌ பாட்ட‌ பாத்த‌ப்புற‌ம் வேறெந்த ஹீரோ ஹீரோயினுக்கும் (சூர்யா ஜோதிகா நிஜ‌த்துலேயே ஜோடி இல்லியா, அத‌னால‌ அவ‌ங்க‌ exception) கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக‌ல‌ன்னுதான் தோணுது.

இந்த‌ பாட்டு புடிச்ச‌துக்கான‌ இன்னொரு கார‌ண‌ம் இளைய‌ராஜா, SPB & ல‌தா ம‌ங்கேஷ்க‌ர்

பின்குறிப்பு 1: Kamal - SriDevi பாட்டுலாம் நான் நிறைய‌ பாத்த‌தில்ல‌, அப்போ நான் குட்டி பாப்பா ஹி...ஹி..

பின்குறிப்பு 2: 'கெமிஸ்ட்ரி'ங்க‌ற‌ வார்த்தைய‌ நான் யூஸ் ப‌ண்ணின‌துக்காக‌ மூணு பேர்கிட்ட‌ ம‌ன்னிப்பு கேட்டுக்க‌றேன், ஸாரி க‌லா மாஸ்ட‌ர், குஷ்பு & ந‌மீதா

3. என‌க்குள் ஒருவ‌ன் - மேக‌ம் கொட்ட‌ட்டும்

ம‌றுப‌டியும் இளைய‌ராஜா, SPB & க‌ம‌ல் காம்பினேஷ‌ன். இந்த‌ பாட்ட‌ ப‌த்தி நான் சொல்ல‌வே வேணாம் ஃப்ரீயா இருக்கும்போது நெட்ல‌ பாருங்க‌/கேளுங்க‌


சென்னையில் ஒரு ம‌ழைக்கால‌ம்




முன் எச்ச‌ரிக்கை: இது க‌விதை இல்ல‌, க‌விதை மாதிரி

அமுத‌த்தையே க‌ண்டிராத‌ ம‌னித‌ர்க‌ள்
சக‌ ம‌னித‌ர்க‌ளுக்காக‌ சொன்ன‌து
"அள‌வுக்கு மீறினால் அமுத‌மும் ந‌ஞ்சு"
அமுத‌த்தையே உண்டிருக்கும் அந்த‌
வ‌ருண‌ ப‌க‌வானுக்கு யார் சொல்வ‌து?

என் ம‌ன‌சாட்சி: அது என்ன‌டா த‌லைப்பு, "சென்னையில் ஒரு ம‌ழைக்கால‌ம்", கெள‌த‌ம்கிட்ட‌யிருந்து சுட்டுட்டா நீ கெள‌த‌ம் ஆயிடுவியா? கொய்யாலே, ந‌வ‌ம்ப‌ர் டிச‌ம்ப‌ர்லே த‌மிழ்நாட்டுக்கே ம‌ழைக்கால‌ம்தான்டா!

பின் எச்ச‌ரிக்கை: இத‌ ப‌டிச்சுட்டு க‌மெண்ட்ஸ் எதுவும் போடாம போனீங்க‌ன்னா இத‌ விட‌ மொக்கையா இன்னும் நிறைய‌ எழுதி, உங்க‌ள‌ ப‌டிக்க‌ச் சொல்லி டார்ச்ச‌ர் ப‌ண்ணுவேன், பீ கேர்புல்!

Monday, November 02, 2009

ஹாப்பி ப‌ர்த்டே ஷாருக்!




க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ என‌க்கு பிடித்த‌ ஒரே ஹிந்தி ந‌டிக‌ர்!

Happy Birthday ShahRukh!