MAN PROPOSES, GOD DISPOSES........ON THE FESTIVAL DAY TOO!
தீபாவளி அன்று ஊருக்குச் செல்ல இதுதான் ப்ளான். காலை ஆறு மணி அளவில் பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து பீச் ஸ்டேஷன். பின்பு அங்கிருந்து திருமால்பூர் செல்லும் ரயில் மூலமாக ஊருக்கு செல்ல வேண்டும்.
காலையில் அலாரம் வைத்து மூன்று முறை ஸ்நூஸ் செய்து கஷ்டப்பட்டு எழுந்து அவசரவசரமாக பெருங்குடி ரயில் நிலையத்திற்கு ஓடினால் ஓடினால், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியது போல் ஓடினால், "இன்று ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி செயல்படும்" என்று போர்ட் வைத்திருந்தார்கள்.
அப்படியென்றால் முதல் ரயில் காலை 6:53க்கு. பீச் ஸ்டேஷனில் திருமால்பூர் ரயில் காலை 7:05க்கு. அடடா ஆரம்பமே அசத்தலா இருக்கே! சரி என்ன செய்வது? பேபி நகர் பஸ் ஸ்டாப் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து கோயம்பேடு போய்விடலாம்.
ஆர்வமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து பார்த்தால்.............பக்கத்தில் மட்டும் தமன்னா இருந்திருந்தால் "அடடா மழடா அடமழடா" என்று ஆடியிருப்பேன். வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். அந்தாள் (மனதுக்கு மிக நெருக்கமான கடவுள்) அங்கிருந்து "உன்னை அவ்ளோ சீக்கிரம் போக விட்ருவனா?" என்று கேட்பது போலிருந்தது. அரை மணி நேரம் காத்திருந்தேன். களைத்துப்போன மழை, தூறலாக இளைத்துப்போயிருந்தது. பஸ் ஸ்டாப்புக்கு 'ரன்'னினேன்.
கால் மணி நேரம் கால் கடுக்க காத்திருந்தேன். ஹுஹும் M70 எட்டிக்கூட பார்க்கவில்லை. M7 வந்தது. தி.நகர் சென்று அங்கிருந்து ஏசி பஸ்ஸில் சென்றுவிடலாம் என தோன்றியது. மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, ஏசி பஸ்ஸில் பயணம் செய்து ஊருக்கு போனால்..... வீட்டில் நுழைந்தவுடன் "சமையல்லாம் முடிஞ்சிடுச்சு, படைக்க வேண்டியதுதான். சீக்கிரம் தலைக்கு குளிச்சுட்டு வா" என்றார்கள். என்ன வாழ்க்கைடா இது!
ROCKSTAR ரஹ்மான்
விரைவில் வெளிவரப்போகும் ஹிந்தி திரைப்படமான ராக்ஸ்டார் படத்திற்கு நம் ரஹ்மான்தான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வரும் "சட்டா ஹக்" பாடலை கேட்கும்போதே உள்ளுக்குள் ஏதோ செய்கிறது. விஷுவலில் ரன்பீர் கபூரும் அசத்துகிறார். சமீப நாட்களில் இந்த பாடலைப் போல வேறேதும் மனம் கவரவில்லை. அடுத்தது வேண்டுமானால் "சம்மக் சல்லோ"வை சொல்லலாம்.
பார்த்து ரசிக்க
கேட்டு ரசிக்க
தீபாவளி படங்கள்
பதிவு எழுதுபவர்களிடையே இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, விமர்சனம் எழுதுகிறேன் என்று பெரும்பாலும் 90 சதவீதம் கதையை சொல்லிவிடுகிறார்கள். அதன் பின் தியேட்டருக்கு போனால் என்ன ஆர்வம் இருக்கும்? எனவே இப்போதெல்லாம் நான் பார்க்காத படங்களின் விமர்சனங்களை மட்டுமே வாசிக்கிறேன்.
அலுவலகத்தில் என்னதான் பாஸிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ்களாக கேட்டாலும், "7ஆம் அறிவு" பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதேபோல் ஷாருக்கிற்காக "Ra.One". இது 3Dயிலும் ரிலீஸாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். இரண்டையும் சத்யத்தில்தான் பார்க்க வேண்டும்.
வேலாயுதம்? ஜெயா டிவியில் காமெடி சீன்ஸ் போடும்போது பார்த்துக்கொள்கிறேன். :-)
பஸ்ஸை நம்புறதுக்கு பதில் சற்று மாறி மாறி டிரையினில் போயிருக்கலாமே ரகு? (நேரடி திருமால்பூர் இல்லாட்டியும் செங்கல்பட்டு வரை டிரைனில் போயிருக்கலாம்)
ReplyDeleteரா. ஒன் உங்க ஆள் நடிச்சதில்ல? பாருங்க பாருங்க
"7ஆம் அறிவு" & "Ra.one" மட்டும் சத்தியத்தில... நம்ம விஜய் படம் மட்டும் டிவியில.... அதிலும் காமெடி சீன்ஸ்ல...டூ பேட்:-)
ReplyDeleteவாங்க மோகன், ஆமாம், பொங்கலுக்கு அப்படித்தான் போகணும்னு ப்ளான் பண்ணியிருக்கேன்.
ReplyDeleteவீக்கெண்ட் டிக்கெட் கிடைக்கவே மாட்டேங்குது, சீக்கிரம் பார்க்கணும் :)
//விஜய் படம் மட்டும் டிவியில//
ப்ரியா, நான் கொஞ்சம் பயந்த சுபாவம் :-)
Rockstarல் kun faya கேளுங்க. Katiya karoonம் நல்லாருக்கு. மியூசிக்கல் தமாக்கா.
ReplyDeleteநன்றி வித்யா, Kun Faya - ரெண்டு நாள் முன்னாடிதான் டிவியில் பார்த்தேன்
ReplyDeleteநன்றி இரசிகை, ஸ்மைலி எதுக்கு? பதிவின் கடைசி வரிக்காகவா? :)
ReplyDelete