ஏழாம் அறிவு - முருகதாஸ் & சூர்யா. இந்த காம்பினேஷனுக்காகவும், ஆடியோ ரிலீஸின்போது கொடுத்த ஹைப்'பையும் எதிர்பார்த்து, ஆசை ஆசையாக படம் பார்க்கப்போனால், நொந்துபோனதுதான் மிச்சம். கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான கதைக்களன். இதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் திரைக்கதை? செம சொதப்பல். முதல் பாதியில் வரும் காட்சிகள் பெருமளவு ஈர்க்காதது திரைக்கதையின் பலவீனம். ஹீரோவும் ஹீரோயினும் காதலித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய விதியை தயவுசெய்து மாத்துங்கப்பா!
கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் காமெடி ட்ராக், குத்துப்பாட்டு, லூசு ஹீரோயின், லூசாக இருந்தாலும் அவளையே காதலிக்கும் ஹீரோ..இது போன்ற விஷயங்கள் இல்லாமல் களமிறங்கியது மட்டுமே ஆறுதலாக இருந்தது. ரஜினி, கமலுக்குப் பிறகு சூர்யாவின் திறமையை வியந்து ரசிக்கிறேன். பட், வாட் டு டூ? பெட்டர் லக் ஃபார் 'மாற்றான்' சூர்யா.
****************
இந்த வருட கடைசியில் பார்க்கவேண்டிய படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.
Ra.One, The Adventures of Tintin, Rockstar, Don 2 & Mission Impossible 4. ஷாரூக்கிற்காக ரா.ஒன்னை ரொம்பவும் எதிர்பார்த்தேன். பார்க்கிறவர்களெல்லாம் நெகட்டிவ்வாகவே சொல்லிக்கொண்டிருப்பதால் இதை மட்டும் ஊரில் பார்த்துவிட்டு, மற்ற படங்களையெல்லாம் சத்யம், சத்யம் & சத்யம்...
****************
சமீப மாதங்களில் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் அதிகமாயிருக்கிறது. பார்க்கும் விஷயங்களில் பிடிக்கின்ற எதையும் உடனே கைது செய்து, http://flickr.com/photos/raghuclicksல் ரிலீஸ் செய்துவிடுகிறேன். ஃபோட்டோஷாப்பில் எந்த வித்தைகளும் செய்வதில்லை.
இரண்டு காரணங்கள். ஒன்று சோம்பல். மற்றொன்று, என்னதான் நாம் எடுக்கும் படங்களை ஃபோட்டோஷாப்பில் விளையாடி கூடுதல் அழகாக்கினாலும், அது உண்மையல்ல என்று மனதுக்கு உறுத்தும்போது நன்றாக வந்திருக்கும் ஃபோட்டோ கூட பிடிக்காமல் போய்விடுகிறது.
****************
பெட்ரோல் விலை - இதை நினைத்து சமூக வலைத்தளங்களில் புலம்புவதை தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்னொரு முறை விலையேற்றினால், வீட்டை விட்டு போய்டுவோம் என்று மம்தா பானர்ஜி மன்மொகன்சிங்கிற்கு பயம் காட்டியிருக்கிறார். பிஜேபி, கம்யூனிஸ்ட்டுகளெல்லாம் காரசாரமாக மீடியாவின் பசிக்குதான் உணவு அளிக்கிறார்கள். வேறு ஒன்றையும் கிழிக்கவில்லை. நான் முடிவு செய்துவிட்டேன். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், சுயேட்சையாக நிற்கும் குப்பனுக்கோ, சுப்பனுக்கோ ஓட்டு போட்டாலும் போடுவேனே தவிர சத்தியமாக காங்கிரசிற்கு கிடையாது.
****************
பல நாட்களாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். பதிவு எழுதும் நிறைய பேர், பிரபல பதிவர்கள் உட்பட, தங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் கூட இடுவதில்லை. ஏன் இப்படி ஒரு அலட்சியம்? நேரமில்லை என்றெல்லாம் சொன்னால் கண்டிப்பாக நான் நம்பமாட்டேன். ஆறேழு பத்தியில் பதிவெழுதி, இருக்கின்ற திரட்டிகளிலெல்லாம் இணைக்க நேரம் கிடைக்கும்போது, ஒரு நன்றி சொல்லவா நேரம் இல்லாமல் போய்விட்டது?
//, கமலுக்குப் பிறகு சூர்யாவின் திறமையை வியந்து ரசிக்கிறேன்// நானும் !
ReplyDelete**
போட்டோ ரொம்ப அழகு. தொடருங்கள். நல்ல ஹாபி
**
படங்கள் லிஸ்ட் நீங்க ஒரு அறிவு ஜீவின்னு சொல்லுது. எப்போ கல்யாணம் (அப்புறம் நார்மல் ஆகி தானே ஆகணும் ?)
**
காங்கிரஸ்.. ம்ம் என்னத்த சொல்றது !
**
அப்புறம் நான் பிரபல பதிவர் அல்ல. அதனால் பின்னூட்டம் இடும் எல்லோருக்கும் இன்னும் நன்றி பின்னூட்டம் சொல்லி கொண்டு தான் இருக்கிறேன் !
படம் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteபோட்டோ தொடர்ந்து புடிங்க...
நன்றி மோகன், நீங்க இப்பவே பிரபலம்தான். நம் எழுத்தை மதித்து கருத்து சொல்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான் நன்றி. அதை கூட செய்ய மறுப்பவர்கள் மீதுதான் எனது வருத்தம். உங்களை நான் அறிவேன். கண்டிப்பாக நீங்கள் அவர்களில் ஒருவரல்ல :)
ReplyDelete//படங்கள் லிஸ்ட் நீங்க ஒரு அறிவு ஜீவின்னு சொல்லுது.//
அப்படிலாம் இல்ல மோகன் :) தமிழில் பெரும்பாலும் காதலை விட்டு வெளியே வரமாட்டார்கள். படங்களென்றாலும், கதைகளென்றாலும் த்ரில்லர், அட்வென்ச்சர் ஆகியவைதான் என்னோட ஃபேவரைட். அதனால்தான் Don 2, Mission Impossible 4 படங்கள் எல்லாம் லிஸ்ட்டில் இருக்கிறது.
நன்றி அப்பு
//ஹீரோவும் ஹீரோயினும் காதலித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய விதியை//... ஆமா ரகு, சில படங்களில் எனக்கும் இதுப்போல தோன்றும்! ஏன்தான் இந்த கட்டாய விதியோ..
ReplyDelete//புகைப்படம் எடுக்கும் ஆர்வம் அதிகமாயிருக்கிறது//....சூப்பர் ரகு... மிகவும் அழகான ரசனையானது இந்த கலைதான். தொடர்ந்து அழகழகா படங்கள் எடுங்க.. இந்த படம்கூட ரொம்பவும் அழகா இருக்கு, எனக்கு பிடிச்சிருக்கு!
டின் டின் நான் பார்த்துட்டேன். சூப்பரா இருக்கு.
ReplyDeleteஎன் லிஸ்ட்ல ராக்ஸ்டார், மயக்கம் என்ன ரெண்டும் இருக்கு. பார்ப்போம்.
நன்றி ப்ரியா, ஃபோட்டோஸ் எடுக்கறேன், ஆனா நீங்க சொல்ற மாதிரி அழகழகா வருமான்னுதான் தெரியல
ReplyDeleteநன்றி வித்யா, டின்டின் இந்த வாரம்தான் போகப்போறேன். ராக்ஸ்டார் கொஞ்சம் சுமார்னுதான் சொல்றாங்க. இருந்தாலும் போகணும். ஒரே காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்
>>பதிவு எழுதும் நிறைய பேர், பிரபல பதிவர்கள் உட்பட, தங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் கூட இடுவதில்லை. ஏன் இப்படி ஒரு அலட்சியம்? நேரமில்லை என்றெல்லாம் சொன்னால் கண்டிப்பாக நான் நம்பமாட்டேன்.
ReplyDeleteVery well said.
நன்றி பால்ஹனுமான்
ReplyDeleteyellamum nantru..
ReplyDeleteபல நாட்களாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். பதிவு எழுதும் நிறைய பேர், பிரபல பதிவர்கள் உட்பட, தங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் கூட இடுவதில்லை. ஏன் இப்படி ஒரு அலட்சியம்? நேரமில்லை என்றெல்லாம் சொன்னால் கண்டிப்பாக நான் நம்பமாட்டேன். ஆறேழு பத்தியில் பதிவெழுதி, இருக்கின்ற திரட்டிகளிலெல்லாம் இணைக்க நேரம் கிடைக்கும்போது, ஒரு நன்றி சொல்லவா நேரம் இல்லாமல் போய்விட்டது?
ithuthaan sarkkunu kuththuchu...
:)
naanum remba naal,
reply seiyaamalthaan irunthen.
but,rajaram sir(karuvelanizhal)
sollithaan seiya aarambichen.
thappun therinjum naan seitha vishayam athu.
ippo sariyaayuttu...
:)
நன்றி இரசிகை, தவறென்று தெரிந்தபின் நீங்கள் மாற்றிக்கொண்டதில் மகிழ்ச்சி :)
ReplyDeleteபோட்டோ ரொம்ப அழகு.நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com