நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடும் படலம் ஆரம்பித்த சமயம். தொடக்கத்தில் முழு வீச்சுடன் களத்தில் இறங்கினேன். ஆப்டிட்யூட் டெஸ்ட்டில் எனக்கு இயல்பாகவே ஆர்வம் இருந்ததால், எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிக்கையில் வெளியான அத்தனை வங்கி தேர்வுகளுக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்குக் கூட அப்படி படித்ததில்லை. தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்வு என்பதால் ஒவ்வொரு முறையும் முட்டி மோதினேன். ஹுஹூம்.. என்னதான் முட்டி மோதினாலும், 'ஆனந்த விகடன்' தாத்தா போல என் தலையும் வீங்கி போனதே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை. நிஜத்திலும் ஒரு ஐந்து நிமிட பாடலில் பணக்காரனாகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கிய தருணங்கள் அது.
கிட்டதட்ட எழெட்டு தேர்வுகள் எழுதி முடிக்கையில் பல மாதங்களை விழுங்கியிருந்தது வாழ்க்கை. அதற்கு பின் வேறு வேலை தேட ஆரம்பித்து, சில நேர்முகத் தேர்வுகளுக்குப் பின் ஸ்பென்சர் ப்ளாஸாவிலிருந்த ஒரு அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆனால் இந்த வேலை கிடைக்கும் முன் வாழ்ந்தேனே ஒன்றரை வருட வாழ்க்கை. கொடுமை!
வேலைக்கு போகாம தண்டமா இருக்கியே என்று அப்பாவோ அம்மாவோ ஒருபோதும் கேட்டதில்லை. எப்போதும் மனதிற்குள் இருக்கும் கஷ்டத்தை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டேன் என்றாலும், என்னை பார்க்கும்போதே அவர்களுக்கு புரிந்திருக்கக்கூடும். கடந்த ஆட்சியில் திமுகவுக்கு பாமக போலல்லாமல் மிகுந்த ஆதரவாக இருந்தார்கள்.
ஆனால் இந்த சொந்தக்காரர்கள் என்னும் பெயரில் சில டார்ச்சர்கள் இருக்கிறார்களே, அவர்களின் இம்சைதான் பெரியளவில் இருந்தது. ஏதாவது உதவி செய்வோம் என்றெண்ணி அம்மாவிடம் கேட்டு, காபிதூள் வாங்க கடைக்குச் சென்றால், அங்கு யாரேனும் ஒருவர் வந்து தொலைப்பார்.
"என்னப்பா படிக்கற?"
"எம்.எஸ்.சி முடிச்சிருக்கேன். ஜாப் ட்ரை பண்ணிட்டிருக்கேன்"
பாஸிட்டிவ்வாக இருக்கவேண்டும் என்று பல தன்னம்பிக்கை கட்டுரைகளில் படித்திருந்ததால், 'ஜாப் ட்ரை பண்ணிட்டிருக்கேன்' என்றுதான் சொல்வேன். சும்மா இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் உடனே அவர் கேட்பார்.
"ஓ, சும்மாதான் இருக்கியா?"
மிகைப்படுத்தி சொல்லவில்லை, அக்கணத்தில் நிஜமாகவே செருப்பால் அடித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதை வீட்டில் சொல்லவும் முடியாது. சொன்னால் அவர்களும் வருத்தப்படுவார்கள். அவரிடமும் ஏன் இப்படி கேக்கறீங்க என்று நேரடியாக கேட்குமளவுக்கு மனதில் தெம்பில்லை. நொறுங்கிப்போயிருந்த காலகட்டம் அது.
காயம் பட்ட இடத்திலேயே திருப்பி திருப்பி அடித்தவர்களிடமிருந்து இன்னும் விலகியே இருக்கிறேன். எங்கேயாவது பார்த்து 'எப்படிப்பா இருக்க, எங்க வேலை செய்யற' என்று கேட்டால் கூட, 'நல்லாயிருக்கேன்' என்று ஆரம்பித்து அலுவலகம் பற்றி சொல்வதோடு சரி. மனதார யாரிடமும் சிரித்து பேசுவதில்லை.
இன்னமும் சிலர் ஆட்டிட்யூட் மாறவில்லை. அலுவலகம் பெயர் சொல்லி சாஃப்ட்வேர் டெஸ்டிங்ல இருக்கேன் என்று சொன்னால் 'இந்த பேர்ல ஒரு பஸ் கூட ரோட்ல பார்த்ததில்லையே' என்று கேட்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ...இவைதான் இந்தியாவிலுள்ள மென்பொருள் நிறுவனங்கள்.
சிலரிடமிருந்து விலகி இருத்தலே நலம்.
உண்மை தான். இவர்கஈடமிருந்து விலகியிருக்கனும் அல்லது இவர்களின் பேச்சை ஒரு பொருட்டக மதிக்கக்கூடாது.
ReplyDeleteஅட விடுங்க ரகு. கல்யாணம் ஆன உடனே அவர்களே தனி மரியாதை தருவாங்க :))
ReplyDelete//சொந்தக்காரர்கள் என்னும் பெயரில் சில டார்ச்சர்கள் இருக்கிறார்களே, அவர்களின் இம்சைதான் பெரியளவில்//... இருக்கத்தான் செய்கிறார்கள்..; வருத்தபடாதிங்க ரகு.
ReplyDeleteநன்றி காந்தி பனங்கூர், அதேதான் பாஸ்!
ReplyDeleteநன்றி மோகன், அனுபவம்? :)
நன்றி ப்ரியா, அந்த சமயத்தில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யுது :(
//சிலரிடமிருந்து விலகி இருத்தலே நலம்//
ReplyDeletem...
vilakki vaikkaamal..
vilahi iruppathey nalam.
நன்றி இரசிகை, விலக்கி வைக்கவில்லை. ஆனால் விலகி இருக்கிறேன்.
ReplyDelete