கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலேயே இது ஒன்றுதான் பிடித்தமானதாக இருக்கிறது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கனா காணும் காலங்கள்...இதையெல்லாம் பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.
நீயா நானாவில் கோபியின் ஆளுமை பற்றி சொல்லவேண்டியதில்லை. ஒரு சில் சமயம் படு மொக்கையான தலைப்புகள், கருத்துகள் என கொஞ்சம் குறைகள் இருந்தாலும், பெரும்பாலான சமயம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சென்ற வாரம் ‘வார்த்தை’ குறித்தான தலைப்பில் ஆண்கள் ஒரு தரப்பிலும், பெண்கள் ஒரு தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தனர்.
உங்களை காயப்படுத்திய எந்த வார்த்தை இன்னும் நினைவிலிருக்கிறது என்று கேட்டபோது ஒரு பெண் சொன்னார். அவரின் நண்பர் ஒரு முறை கேட்டாராம், “கூட ஒரு ஆம்பளை நடக்கும்போது நீ பாட்டுக்கு முன்னாடி போறீயே, குடும்ப பொம்பளை மாதிரியா நடந்துக்கறே” என்று. இதைச் சொல்லும் முன் வரை அந்த பெண் மிகுந்த சந்தோஷத்துடன் கலகலப்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். இதைச் சொல்லும்போதுதான், லேசாக அவர் குரல் உடைந்து ஏறக்குறைய அழும் நிலையில் பேசினார். அதற்கு பின் அவருக்கு கோபி பதிலளித்ததெல்லாம் வேறு கதை.
இதை பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்குள் எழுந்த கேள்வி, இன்னும் கூடவா ஒரு பெண் தனக்கு பின்தான் வரவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள்? நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏதோ பெண் விடுதலைக்குப் போராடுபவனோ, மேடைகளில் பெண்களின் புகழைப் பாடுபவனோ அல்ல.
பெண்ணை சக மனுஷியாக மட்டுமே பார்க்கிறேன். அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்தால் பாராட்டுகிறேன், ஏதேனும் தவறு செய்தால் சற்றே கடிந்துகொள்கிறேன், நெருங்கிய நட்பென்றால் சகஜமாக கிண்டலடிக்கிறேன். அவ்வளவே. ‘டி’ போட்டு பேசும் உரிமை கொடுத்தவளை ஏன் ‘டா’ போட்டு பேசுகிறாய் என்று ஒருபோதும் கேட்டதில்லை.
சில நாட்கள் முன் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். அவர்களுடைய எதிர் வீட்டில் இருக்கும் பையனுக்கு பெண் பார்க்க சென்றிருக்கின்றனர். குடும்பத்தோடு போயிருந்ததில், மூத்த உறுப்பினர் ஒருவர் சபையிலேயே கேட்டிருக்கிறார், “பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா” என்று. பதிலுக்கு அந்த பெண், ”நீங்க என்ன சமையல்காரியையா பார்க்க வந்திருக்கீங்க” என்று எதிர் கேள்வி தொடுத்திருக்கிறார். இதைச் சொல்லும்போது, பாட்டி அந்த பெண்ணை பற்றித்தான் குறைபட்டுக்கொண்டார்.
ஆனால் எனக்கு அந்த பெண் கேட்டது பிடித்திருந்தது. சமைக்கத் தெரியுமா என்று கேட்பது நியாயமெனில், பையனோட மெடிக்கல் சர்டிஃபிகேட் வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டால் அதுவும் நியாயம்தான். ஆனால் இன்றைய சமூகத்தில் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?
பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் வீட்டிலுள்ள பெரியவர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் காணமுடிகிறது. நாம் ஏதேனும் எடுத்துச் சொல்லி இந்த வயதிற்கு மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. எனவே அதுபோன்ற ஆபத்தான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருங்காலத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது என்றே எண்ணுகிறேன்...பார்ப்போம்.
//நாம் ஏதேனும் எடுத்துச் சொல்லி இந்த வயதிற்கு மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. எனவே அதுபோன்ற ஆபத்தான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருங்காலத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது என்றே எண்ணுகிறேன்...பார்ப்போம்.//
ReplyDeleteஉங்களுடைய எண்ணம் நிறைவேற வேண்டுமென்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.
வார்த்தை குறித்த அந்த நீயா நானா நிகழ்ச்சி எனக்கும் மிக பிடித்திருந்தது. அந்த பெண்ணிடம் முன்னே போனது பற்றி கேட்டது அவர் கணவர் என நினைக்கிறேன். நானும் கூட அப்படி கேட்ட அந்த நபரை எண்ணி வருந்தவே செய்தேன்.
ReplyDeleteகிராமங்களில் இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கல் என்பது உண்மை. ஆனால் எல்லோர் வீட்டிலும் அப்படி இல்லை.
ReplyDeleteபெண் பார்க்க சென்ற இடத்தில் அந்த பெண்ணுக்கு சமைக்க தெரியுமான்னு கேட்டதில் தவறில்லைன்னு நான் நினைக்கிறேன். ஏனென்றால் நம் நாட்டில் 30 முதல் 40 சதவீத பெண்கள் தான் வேலைக்கு போறாங்க. மீதிப்பெண்கள் வீட்டில் தான் இருக்காங்க. அதனால வீட்டில் இருக்கும் பெண்களின் வேலை சமையல் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்றவைகள் தான்.
சில பெண்கள் சமையல் செய்ய தெரியாமல் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நன்றி அமைதி அப்பா
ReplyDeleteநன்றி மோகன், அவருடைய நண்பர் என்று சொன்னார்
//அதனால வீட்டில் இருக்கும் பெண்களின் வேலை சமையல் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்றவைகள் தான்.
சில பெண்கள் சமையல் செய்ய தெரியாமல் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.//
நன்றி காந்தி பனங்கூர், சமைக்கத் தெரிந்த பணிப்பெண் = மருமகள் என்று சொல்கிறீர்களா?
"நாம் ஏதேனும் எடுத்துச் சொல்லி இந்த வயதிற்கு மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. எனவே அதுபோன்ற ஆபத்தான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருங்காலத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது என்றே எண்ணுகிறேன்...பார்ப்போம்."
ReplyDeleteவருங்காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது...
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
supera sonninga sir..............
ReplyDeleteyennai poruththavari aanum pennum iruvarume pakkuva padanumnuthaan thonuthu..
ReplyDeleteunarvukalai mathikka katrukondaale pothum.yellaamum sariyaakum.
neeya naana-naanum virumbi paarththa kalam undu!
vaazhthukal ragu!
நன்றி கண்ணன்
ReplyDeleteநன்றி செல்வம்
நன்றி இரசிகை, இன்னும் அந்த பக்குவம் வராததுதான் ஆச்சரியமாக உள்ளது :(