நான் பெரும்பாலும் படத்தின் இயக்குனரை பொறுத்துதான் படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன். சும்மா சீனுக்காக சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை தலைவர் (ஸ்க்ரீனில் மட்டும்) என்றால் அது சூப்பர் ஸ்டார்தான்.
என் தம்பி அஜித் ரசிகன். பட ரிலீஸன்று கொடி கட்டி கட் அவுட் வைக்கும் அளவுக்கு போகவில்லையே தவிர ஜனா, ஆஞ்சனேயா, ஆழ்வார் முதற்கொண்டு அஜித் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வல்லமை கொண்டவன்.
வீட்டிலுள்ள கணிணியில் மங்காத்தா பாடல்களை டவுண்லோட் செய்துவைத்திருந்தான். 'டே செல்லப்பா என்னமோ சினிமா எடுக்கப்போறேன் சினிமா எடுக்கப்போறேன்னு சுத்தறியே, அந்த கதையதான் சொல்லேன்' என்று ஒரு அலட்சிய தொனியில் பாலையா கேட்பாரே, அதே தொனியில்தான் பாடல்களை கேட்க ஆரம்பித்தேன்.
சரி எந்த பில்டப்பும் வேண்டாம். மொத்தம் நான்கு பாடல்கள் ப்ளஸ் ஒரு தீம் ம்யூசிக். மீண்டும் மீண்டும் மொத்தம் மூன்று முறை கேட்டேன். கடைசியில் மிகவும் பிடித்துப் போனது, சத்தியமாக தீம் ம்யூசிக்தான்.
எனக்கு எப்போதும் ஒரு படத்தின் தீம் ம்யூசிக்தான் ஃபேவரைட். அதை கேட்கும்போதே படத்தின் மூட் நமக்கு செட்டாகவேண்டும். அப்படி ஆகிவிட்டால், கண்டிப்பாக அந்த ம்யூசிக் ஹிட்தான். இன்றளவிலும், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருப்பது 'மிஷன் இம்பாஸிபிள்' தீம் ம்யூசிக்தான்.
யுவனின் 7ஜி ரெய்ன்போ காலனி தீம் ம்யூசிக் கேட்டிருப்பீர்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் சோகம், கொஞ்சம் உற்சாகம், கொஞ்சம் நெகிழ்வு என்று அள்ளி கொடுத்திருப்பார். எனக்கென்னவோ 7ஜிக்கு பிறகு மங்காத்தா தீம் ம்யூசிக்தான் பெஸ்ட் என்று தோன்றுகிறது.
முதன்முறை கேட்கும்போதே மனம் ஒரு த்ரில்லர் மூடுக்கு போய்விடுகிறது. இன்று மட்டும் கிட்டதட்ட பதினைன்து முறைக்கு மேல் கேட்டிருப்பேன். துளியும் சலிக்கவில்லை.
தீம் ம்யூசிக்கிற்கு அடுத்தது, பாடல்கள் கேட்கையில், முதன் முறை கேட்டவுடன் பிடித்தது, 'மச்சி, ஓப்பன் த பாட்டில்'தான். யுவன்-வெங்கட்பிரபுவின் அடுத்த 'சரோஜா சாமான் நிகாலோ'. படம் ரிலீஸானவுடன், இந்த பாடலை இசை சேனல்களில் தமக்கு பிடித்தமானவர்களுக்கு டெடிகேட் செய்ய நம் மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பர்.
ப்ரேம்ஜியின் குரலில் 'மச்சி ஓப்பன் த பாட்டில்' என்று ஆரம்பிக்கும் உற்சாகம், பாடல் முடியும்வரை துளியும் குறையாதிருக்கிறது. வெகு நாட்களுக்குப்பின் மனோ குரலை கேட்பது இனிமை. 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே' என்ற வரிகளை சேர்த்திருப்பது தயாரிப்பாளருக்குத் தெரியுமா? ஆனாலும் வெங்கட்பிரபுவுக்கு குசும்பு ஜாஸ்திதான் :)
'விளையாடு மங்காத்தா'வை முதலில் ரசித்த அளவு இப்போது ரசிக்கமுடியவில்லை. அந்த இடத்தை தீம் ம்யூசிக் பறித்துவிட்டது. 'இது எங்க பல்லேலக்கா'வும், 'வாடா பின்லேடா'வும் இன்னும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. கொஞ்சம் தனுஷ் டைப் பாடல்களாக இருக்கின்றன. இன்னும் சில முறை கேட்கவேண்டும்.
அது!!
ReplyDeleteபாடல் பட்டையை கிளப்பும் போல
ReplyDeleteபடம் Ocean-ன் தழுவல் என்கிறார்கள். டிரைலர் நல்லாருக்கு பாப்போம்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
o......appadiya...:)
ReplyDeletevaazhthukal ragu!
நன்றி ராஜு
ReplyDeleteநன்றி சரோ
நன்றி ஷீ நிசி, பட்டைய கிளப்புது நிஜமாவே!
ReplyDeleteநன்றி தமிழினி
நன்றி மோகன், எனக்கும் அப்படித்தான் தோணுது. அஜித் அப்படியே ஜார்ஜ் க்ளூனி லுக்
ReplyDeleteநன்றி ப்ரியா
நன்றி இரசிகை, எனக்கு எதுக்குங்க வாழ்த்துகள்?!
vazhthukal yethukkunna vaazhthurathukkaahathaan..
ReplyDelete(krishna touch theriyuthaa)
:)
இரசிகை, என்னமோ சொல்றீங்க, பிரியுது ஆனா பிரியல ;)
ReplyDelete