இந்த மாதிரி ஆட்களையெல்லாம் சமாளிப்பதற்காகவே ஹாலிவுட் படங்களை பார்க்கத் தொடங்கினேன். இப்போதெல்லாம் வாரம் குறைந்தது ஒரு படமாவது பார்க்கிறேன். அதிகபட்சம் மூன்று. எல்லா புகழும் டோரன்ட்டில் டவுண்லோடித் தரும் நண்பருக்கே :)
காமெடி, ஹாரர் படங்களை விட த்ரில்லர்தான் என்னுடைய தேநீர் கோப்பை. அதுவும் ஆக்ஷன்/க்ரைம் த்ரில்லர் என்றால் திருப்பதிதான். அப்படி சென்ற வார இறுதியில் பார்த்த படங்கள் The Delta Force, The Delta Force 2 : The Colombian Connection & Assault on Precinct 13.
The Delta Force & The Delta Force 2 : The Colombian Connection
இவ்விரண்டு படங்களும் எண்பதுகளில் வந்தவை. ஆனால் இன்று பார்த்தாலும் ரசிக்க முடிகிறது. காரணம் விறுவிறுப்பான திரைக்கதை, பிரமிப்பூட்டும் இயக்கம். ஒரு தீவிரவாத கும்பல் அமெரிக்க பயணிகள் விமானத்தைக் கடத்திவிடுகின்றனர். "எங்க ஜனங்க பாவம் அவங்கள விட்டுடுங்க, உங்க கும்பலைச் சேர்ந்தவங்க யாரை வேணும்னாலும் ரிலீஸ் பண்றோம்" என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டிருக்காமல், அதிரடியாக இறங்கி அவர்களை மீட்கிறார்கள் ஹீரோ & கோ.
ஹீரோ Chuck Norris. அசர வைக்கும் லுக் இல்லாவிட்டாலும் ஆக்ஷனில் அசத்துகிறார். அதுவும் இறுதிக்காட்சியில் பைக்கில் இருந்து விமானத்தில் தாவுவது எல்லாம் வாவ்! ரகம்.
இரண்டாம் பாகமும் நன்றாகத்தானிருந்தது. தன் நண்பன் மற்றும் நண்பனின் மனைவி ஆகியோரின் மரணத்துக்கு காரணமான ஒரு போதை மருந்து தாதாவை எப்படி ஹீரோ ஒழித்துக்கட்டுகிறார் என்பதுதான் கதை. முதல் பாகம் அளவுக்கு இதில் வலுவான திரைக்கதை இல்லாவிட்டாலும், ஆக்ஷன் காட்சிகளின் மூலம் அந்த குறையை மறக்கச் செய்துவிடுகின்றனர்.
Assault on Precinct 13
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால்..பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் படத்தின் அருமையான Plot. ஒரு காவல் நிலையம். அங்குள்ள போலீஸாரை (ஹீரோ மற்றும் நண்பர்கள்) வேறு சில போலீஸார் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஹீரோ ஒரு முடிவெடுக்கிறார். அது என்னவென்று சொல்லி த்ரில்லை குறைக்க விரும்பவில்லை. படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஹீரோ Ethan Hawke. பார்ப்பதற்கு Tom Cruiseன் தம்பி போலிருக்கிறார். பயத்தை, தவிப்பை, சோகத்தை, இயலாமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கு அவ்வளவாக தீனி இருக்காது. இதிலும் அப்படித்தான். ஆனால் கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் பல காட்சிகளில் அனைவருமே வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். இன்னும் நிறைய எழுதவேண்டும் போலிருக்கிறது. வேண்டாம். காட்சிகளை விவரிக்க ஆரம்பித்துவிடுவேன். சுருக்கமாகச் சொன்னால் இந்த வாரம் பார்த்த மூன்று படங்களிலேயே இதுதான் டாப்!
நீங்க எழுதி இருக்கிற ஒரு படத்தை கூட
ReplyDeleteநான் பார்த்ததில்லை..... ட்ரை பண்றேன்...
ஏற்கனவே பார்த்த படங்கள் தான் ...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ....
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ரகு...
ReplyDeleteஎன் பேரையெல்லாம் போட்டு எழுதின இடத்துல வந்து, இதுல ஒரு படம் கூட பார்க்கலைன்னு சொல்லிக்க வெட்கமாதான் இருக்குது... :) ஆனா, அதுதான் உண்மை... இந்த வகை ஆக்ஷன் படங்கள் எல்லாம் பழைய அர்ஜூன், விஜய்காந்த் படங்கள் மாதிரி... காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிப்பாங்க... முதல்ல சூப்பரா இருக்கும்... ஆனா, இதுமாதிரி 10 படம் பார்த்தா சலிச்சுடும்... கிட்டத்தட்ட எல்லாருமே(என்னையும் சேர்த்துதான்) இந்த மாதிரி படங்கள் எல்லாம் ஒரு காலத்துல பார்த்து சலிச்சு போய், கடைசியா குப்ரிக் கிட்டயும், நோலன்கிட்டயும்தான் வந்தாகணும்... :)
ராணி காமிக்ஸ் படிச்சு, ராஜேஷ்குமார் படிச்சு, கடைசியா சுஜாதாவைப் படிக்க வர்ற மாதிரி...
அந்த chuck norris நினைச்சா படத்துல என்ன வித்தை வேணுமனாலும் பண்ணுவாரு... அவரை கலாய்ச்சு, ஒரு வெப்சைட்டே வச்சுருக்காங்க பாருங்க.. http://www.chucknorrisfacts.com/
கேள்விப்படாத புதுப் படங்களை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. கடைசியா எழுதிருக்கற படம் அவசியம் பார்க்கறேன்.
ReplyDeleteபடத்தோட கதை எழுதிடக் கூடாதுன்னு கவனமா எழுதினதுல பதிவுல படப் பெயர்களைத் தவிர எதுவுமே எழுதலையோன்னு தோணுது ரகு. வர வர ரொம்ப வேலை செய்றிங்க போல. உங்க எழுத்துல தெரியுது.
நல்ல விளக்கங்கள் ரகு..
ReplyDeleteநல்லா இருக்குங்க...
ReplyDeleteரகு,
ReplyDeleteஎன்னதான் நான் உங்களுக்கு ஹாலிவுட் படங்களை ரெக்கமெண்ட் பண்ணாலும், நீங்க எழுதியருக்கும் இந்த படங்களை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதை வருதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை பொருத்தவரை ஹாலிவுட் படம்னா, ஹாரர் & த்ரில்லர் படங்கள்தான். நெஞ்சுக்குள்ள கையவிட்டு, அந்த ஆளோட இதயத்தை வெளியே எடுத்து, அந்த ஆள் கண்ணுலியே காட்டி சிரிக்கிற மாதிரி ஒரு படம்னா, ம்ம்ம்... நிமிர்ந்து உக்காந்து பாப்பேன்... ஹி... ஹி...
-
DREAMER
நன்றி ஜெட்லி, பார்த்துட்டு சொல்லுங்க
ReplyDeleteநன்றி வெறும்பய
நன்றி திலீப்
நன்றி ஜெய், அதென்னவோ இன்னும் ஆக்ஷன்/க்ரைம் த்ரில்லர் இன்னும் எனக்கு அலுக்கல. ஆனா உங்க பதிவை படிச்சதுக்கப்புறம்தான் மெமண்டோ பார்த்தேன். எனக்கு அதுவும் புடிச்சிருக்கு, இதுவும் புடிச்சிருக்கு. சக் நோரிஸ் வெப்சைட் பார்த்தேன். ஒரு ஆக்ஷன் ஹீரோவை செம காமெடி பீஸாக்கியிருக்காங்க :)))
நன்றி விக்னேஷ்வரி, உண்மைதான் கொஞ்சம் வேலைப்பளு. அவசரவசரமா எழுதிட்டேன்
ReplyDeleteநன்றி ரியாஸ்
நன்றி அன்பரசன்
நன்றி ஹரீஷ், Assault on Precinct 13 பாருங்க..நல்லாயிருந்தது. யப்பா சாமீ! ஹாரர் படங்கள் புடிக்கும்னு சொன்னா போதாதா? இப்படி விளக்கமா சொல்லி டெரர் ஆக்குறீங்களே..நாங்கள்லாம் பச்ச மண்ணு :)))
ஒரே நேரத்தில் மூணு பட விமர்சனமா? கலக்குறீங்க ரகு
ReplyDeleteமறுபடி உங்கள் ப்ளாக் தொடர்கிறேன்; இம்முறை ரீடரில் தங்கள் பதிவுகள் தெரிகிறது; இது தொடர்ந்தால் மகிழ்ச்சி; உடன் உங்கள் பதிவு வந்த விபரம் தெரிய வரும் :))
ReplyDelete