Saturday, December 25, 2010

க‌விஞ‌ர் வா(வ்!)லி

புத்த‌க‌ வாசிப்பிற்கென்றே ஒவ்வொரு நாளும் குறைந்த‌து ஒன்று அல்ல‌து இர‌ண்டு ம‌ணி நேர‌ம் செல‌விடுவேன். ப‌ணியிட‌ம் மாறிய‌திலிருந்து இருந்த‌ ஒரேயொரு ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌மும், விக்கிர‌மாதித்த‌னிட‌மிருந்து த‌ப்பித்த‌ வேதாள‌மாய் மாறிவிட்ட‌து.

ஆனாலும் ஓர‌ள‌வுக்கு போராடி க‌ட‌ந்த‌ முறை புத்த‌க‌ க‌ண்காட்சியில் வாங்கிய‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளையும் வாசித்தாகிவிட்ட‌து. க‌தைக‌ள், க‌விதைக‌ளை நான் விரும்புவ‌தில்லை. இவ்விர‌ண்டிலுமே காத‌ல்தான் பெரும்ப‌ங்கு வ‌கிக்கிற‌து. ந‌ம‌க்கு த்ரில்ல‌ர்க‌ளும், கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் வெளியிடும் ப‌யோகிராஃபிஸும்தான் வெள்ளிக்கிழ‌மை ம‌ன‌நிலையைக் கொடுக்கும். ம‌ற்ற‌தெல்லாம் ஞாயிறு மாலை.

க‌ட‌ந்த‌ முறை வாங்கிய‌தில் மிக‌வும் ர‌சித்து வாசித்த‌து 'ராஜீவ் கொலை வ‌ழ‌க்கு'. ஒரு அர‌சிய‌ல் த‌லைவ‌ரின் ப‌டுகொலை ப‌ற்றிய‌ வ‌ழ‌க்கை ர‌சித்து வாசித்தேன் என‌ சொல்வ‌து ச‌ற்று அசெள‌க‌ரிய‌மாக‌வோ, அநாக‌ரிக‌மாக‌வோ தோன்ற‌லாம். ஆனால் உண்மை அதுதான். உட‌ன் இருந்து நாமும் துப்ப‌றிவ‌து போன்ற‌ உண‌ர்வுதான் தோன்றிய‌து.

இம்முறையும் வேட்டையை கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ ஸ்டாலில் இருந்துதான் ஆர‌ம்பிக்க‌வேண்டும். என்னென்ன‌ புதிதாக‌ வெளியிட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. க‌ண்டிப்பாக‌ வாங்க‌வேண்டும் என்ற‌ லிஸ்ட்டில் த‌ற்போதைக்கு முத‌லில் உள்ள‌து தின‌த்த‌ந்தி வெளியிட்டுள்ள‌ 'கால‌ச்சுவ‌டுக‌ள்'. அடுத்த‌து மேலும் சில‌ 'சுஜாதா'(க்)க‌ள்.

******************

சேது, ந‌ந்தா, பிதாம‌க‌ன், நான் க‌ட‌வுள், காத‌ல், சுப்ர‌ம‌ணிய‌புர‌ம், அங்காடி(த் வ‌ருமாங்க‌?) தெரு, மைனா, ந‌ந்த‌லாலா.....

இவையெல்லாம் நான் இதுவ‌ரை பார்க்காத‌ ப‌ட‌ங்க‌ள். இனியும் பார்க்க‌ விருப்ப‌மில்லை. என்ன‌தான் ஹிட் ஆகியிருந்தாலும், இவையெல்லாம் முடிவில் சோக‌த்தைத் த‌ருப‌வை. திரைய‌ர‌ங்கை விட்டு வெளியே வ‌ரும்போது ஒரு க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் வெளிவ‌ருவ‌து, இர‌வு தூங்க‌ முடியாம‌ல் த‌விப்ப‌து....மிகுந்த‌ வ‌லியைத் த‌ருகிறது. சினிமாதானே, இதுக்கெல்லாமா இப்ப‌டி என‌ கேட்க‌லாம். ஏனோ ப‌ட‌த்துட‌ன் மிக‌வும் ஒன்றிவிடுவ‌தை என்னால் த‌விர்க்க‌ முடிய‌வில்லை.

என‌க்கு தேவை, இருக்கும் பிர‌ச்னைக‌ளை ம‌ற‌க்க‌டிக்க‌ச்செய்யும் இர‌ண்டு ம‌ணி நேர‌ பொழுதுபோக்கு. அவ்வ‌ள‌வே. என‌வே 'த‌மிழ் ப‌ட‌ம்', 'க‌ளவாணி' போன்ற‌ ஃபீல் குட் ப‌ட‌ங்க‌ள்தான் என்னுடைய‌ பெஸ்ட் சாய்ஸ்.

******************



ஆன‌ந்த‌ விக‌ட‌ன். புத்த‌க‌ வ‌ண்ண‌ம் இன்னும் க‌றுப்பு, வெள்ளை, சிக‌ப்பில் மாற‌வில்லை. அதிமுக‌வின் அதிகார‌ப்பூர்வ‌ ஏடு என‌ அறிவிக்க‌வில்லை. அவ்வ‌ள‌வுதான். திருமாவேல‌ன் அவ‌ர்க‌ள் எழுதும் அர‌சிய‌ல் க‌ட்டுரை இப்போதெல்லாம் ஒரு ச‌லிப்பையே த‌ருகிற‌து. த‌ற்போதைக்கு விக‌ட‌னில் ர‌சித்து வாசிப்ப‌து க‌விஞ‌ர் வாலி எழுதும் 'நினைவு நாடாக்க‌ள்'தான். நேர்மையான‌ எழுத்துக்க‌ள். ப‌ல‌ ர‌ச‌னையான‌ அனுப‌வ‌ங்க‌ளை ஒரு புன்சிரிப்புட‌ன் வாசிக்க‌வைக்கிறார்.

பாட்டு எழுத‌ற‌வ‌ர்தானே வாலி என‌ அல‌ட்சிய‌மாக‌ எண்ணியிருந்தேன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு. ஒரு மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது (என்ன‌ நிக‌ழ்ச்சி என்று ஞாப‌க‌மில்லை) ச‌ட்டென்று சொன்னார்.

க‌ல்ல‌றைக்குப்
போகும்வ‌ரை
தேவை
சில்ல‌றை

ஏனோ என்னை இவ்வ‌ரிக‌ள் மிக‌வும் ஈர்த்த‌ன‌. அத‌ன்பின் என‌க்கு வாலி..ஸோ ல‌வ்லி என‌ மாறிப்போனார்.

'ப‌ண‌ம் ப‌டைத்த‌வ‌'னில் வ‌ரும் இந்த‌ பாட‌லை முத‌லில் கேட்ட‌போது 'ச்சே! க‌ண்ண‌தாச‌ன் க‌ண்ண‌தாச‌ன்தாம்பா' என்று சிலாகித்திருக்கிறேன். பின்பு பாட‌ல்: க‌விஞ‌ர் வாலி என‌ பார்க்கையில் புருவ‌ங்க‌ள், இருந்த‌ இட‌த்திலிருந்து இர‌ண்டு மில்லிமீட்ட‌ர் உய‌ர்ந்துதான் போயின‌. த‌சாவ‌தார‌த்தில் அவ‌ரே சொன்ன‌து போல் 'ராஜ‌னுக்கு ராஜ‌ன் இந்த‌ ர‌ங்க‌ராஜ‌ன்தான்'!


கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

******************

சென்னையில் ஆதிதிராவிட‌ மாண‌வ‌ர் விடுதியில் போதுமான‌ அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இல்லையென‌ அம்மாண‌வ‌ர்க‌ள் சைதாப்பேட்டையில் சாலை ம‌றிய‌ல் செய்துள்ள‌ன‌ர். அலுவ‌ல‌க‌ம் செல்ப‌வ‌ர்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னை செல்ப‌வ‌ர்க‌ள் என‌ எத்த‌னை பேருக்கு இது இடையூறாக‌ இருக்கும் என‌ அறியாத‌வ‌ர்க‌ளா அவ‌ர்க‌ள்? போராடுவ‌து என‌ முடிவு செய்த‌பின் முத‌ல்வ‌ர் இல்ல‌ம் முன்போ, ச‌ட்ட‌ச‌பை முன்போ, குறைந்த‌ப‌ட்ச‌ம் ஆதிதிராவிட‌ ந‌ல‌த்துறை அமைச்ச‌ரின் அலுவ‌ல‌க‌ம் முன்போ சென்று போராட‌ வேண்டிய‌துதானே.

ச‌ட்ட‌க் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் வ‌ன்முறை, விடுதி மாண‌வ‌ர்க‌ள் சாலை ம‌றிய‌ல்.........இந்தியாவின் வ‌ருங்கால‌த் தூண்க‌ள்...ஹும்ம் :(

******************

இப்போதெல்லாம் அலுவ‌ல‌க‌த்தில்தான் பெரும்பாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வீட்டு உரிமையாள‌ரிட‌ம் பேசி வாட‌கையை குறைக்க‌ச் சொல்ல‌ வேண்டும். க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளில் ந‌ட்புக‌ள், ஜிமெய்ல், சாட், ப‌ஸ், த‌மிழ்ம‌ண‌ம் என‌ எல்லாமே குறைந்துவிட்ட‌து. ஒருவ‌கையில் ந‌ல்ல‌துதான். ப்ளாகோமேனியாவிலிருந்து பெரும‌ள‌வில் விடுப‌ட்டிருக்கிறேன். ஆனாலும் ப‌திவெழுதி ம‌ற்ற‌வ‌ர்க‌ளை டார்ச்ச‌ர் செய்ய‌வேண்டும் என்ற‌ சைக்கோத்த‌ன‌ம் ம‌ட்டும் குறைய‌வில்லை.

க‌டும் எச்ச‌ரிக்கை: இனி தொட‌ர்ந்து எழுத‌ முடிவு செய்திருக்கிறேன்.


I WILL WRITE


WILL WRITE


WRITE...........




14 comments:

  1. \\க‌டும் எச்ச‌ரிக்கை: இனி தொட‌ர்ந்து எழுத‌ முடிவு செய்திருக்கிறேன்.\\

    Thats it!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. அயல்நாட்டுக்காக தேய்ந்து ஓயும் பக்கா ஐடி மேன் ஆகிட்டீங்க ரகு. எழுத்துகள்ல தெரியுது.

    ReplyDelete
  4. வாங்க தல! :)

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுக்கு பின் வருகை. தொடர்ந்து எழுதுவேங்கிறீங்க. நல்லது .. அவ்வபோதாவது எழுதலாம். முயலுங்கள்

    ReplyDelete
  6. ரொம்ப நாளாச்சு கழிச்சு உங்க எழுத்துக்களை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    நானும் 'காலச்சுவடு' வாங்கத்தான் வெயிட்டிங்.

    உங்க பதிவை காட்டிலும் வாஞ்சிநாதன் ஃபினிஷிங் ரொம்ப சூப்பர்

    //இனி தொட‌ர்ந்து எழுத‌ முடிவு செய்திருக்கிறேன்.\\

    தயவு செய்து எழுதுங்கள்

    -
    DREAMER

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //ஒரு அர‌சிய‌ல் த‌லைவ‌ரின் ப‌டுகொலை ப‌ற்றிய‌ வ‌ழ‌க்கை ர‌சித்து வாசித்தேன் என‌ சொல்வ‌து ச‌ற்று அசெள‌க‌ரிய‌மாக‌வோ, அநாக‌ரிக‌மாக‌வோ தோன்ற‌லாம். //

    ஏன் அசௌகரியமாக உணர்ந்தீர்கள்? ராசீவின் படுகொலையை நான் ரசித்தேன். ஏனேனில், ஈழத்தின் படுகொலைகளுக்கான பழிவாங்கலாக அது என் மனக்கண்ணில் விரிந்தது.


    //சென்னையில் ஆதிதிராவிட‌ மாண‌வ‌ர் விடுதியில் போதுமான‌ அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இல்லையென‌ அம்மாண‌வ‌ர்க‌ள் சைதாப்பேட்டையில் சாலை ம‌றிய‌ல் செய்துள்ள‌ன‌ர். அலுவ‌ல‌க‌ம் செல்ப‌வ‌ர்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னை செல்ப‌வ‌ர்க‌ள் என‌ எத்த‌னை பேருக்கு இது இடையூறாக‌ இருக்கும் என‌ அறியாத‌வ‌ர்க‌ளா அவ‌ர்க‌ள்? போராடுவ‌து என‌ முடிவு செய்த‌பின் முத‌ல்வ‌ர் இல்ல‌ம் முன்போ, ச‌ட்ட‌ச‌பை முன்போ, குறைந்த‌ப‌ட்ச‌ம் ஆதிதிராவிட‌ ந‌ல‌த்துறை அமைச்ச‌ரின் அலுவ‌ல‌க‌ம் முன்போ சென்று போராட‌ வேண்டிய‌துதானே.

    ச‌ட்ட‌க் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் வ‌ன்முறை, விடுதி மாண‌வ‌ர்க‌ள் சாலை ம‌றிய‌ல்.........இந்தியாவின் வ‌ருங்கால‌த் தூண்க‌ள்...ஹும்ம் :(//

    அது எப்படிங்க இது மாதிரி பேச முடியுது? ஒருவேளை அவர்கள் நீங்க பரிந்துரைத்த இடங்களில் போராடி அடி வாங்கி ரெண்டு மூனு பேரு செத்திருந்தா என்ன ஆகியிருக்கும்?

    ஒன்னும் ஆகியிருக்காது. எவனோ ரெண்டு மூனு பேரு எதுக்கோ போராடி செத்துப் போயிட்டாங்கன்னு உங்கள மாதிரி ஆளுங்க பீல் குட் படம் பார்க்க போயிருப்பாங்க.. எப்படின்னா, ஈழப் பிரச்சினைக்கு ஈழத்தில் போராடியவர்களுக்கு ஈழத்தில் ஆப்படித்த ராஜிவுக்கு இங்கே குண்டு வைத்து கொன்றார்கள். அதுவே உங்களுக்கு அசௌகரியமான விசயமா இருக்குற மாதிரி.

    ஏன்னா உங்களுக்குத்தான் இருக்குற பிரச்சினை பத்தான்னு அத மறக்குறதுக்கு பீல் குட் படம் தேவைப்படுதே? இது தெரிஞ்சாநாலத்தான் அந்த மாணவர்கள் வைக்க வேண்டிய இடத்தில் அசௌகரியத்த வைச்சாங்க. வருங்காலத் தூண்கள் சரியாத்தான் இருக்காங்க. நிகழ்காலம்தான் சீக்குப் பிடித்து, புத்தியில் துருவேறிக் கிடக்கிறது.

    //என‌க்கு தேவை, இருக்கும் பிர‌ச்னைக‌ளை ம‌ற‌க்க‌டிக்க‌ச்செய்யும் இர‌ண்டு ம‌ணி நேர‌ பொழுதுபோக்கு. அ//

    ஏன் இப்படி வாயக் கொடுத்து மாட்டிக் கொள்கிறீர்கள்? பேசாம வா(வ்)லி, சுஜாதா என்ற அளவில் நிறுத்திக் கொள்ளுங்களேன்?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ந‌ன்றி ராஜு, ப‌ய‌ம் வேண்டாம் :)

    ந‌ன்றி ச‌முத்ரா

    பெருமையா சொல்ல‌ல‌, வேற‌ வ‌ழியில்ல‌ விக்கி..ந‌ன்றி

    ந‌ன்றி பாலாஜி :)

    ந‌ன்றி மோக‌ன், க‌ண்டிப்பாக‌ முய‌ற்சிக்கிறேன்

    ந‌ன்றி ஹ‌ரீஷ், மிஸ்ட‌ர்.சோம்ப‌ல்...இவ‌ர்கிட்ட‌தான் தோத்துபோறேன்

    ReplyDelete
  12. வெளிப்ப‌டையான‌ க‌ருத்துக‌ளுக்கு ந‌ன்றி வினோத்

    'ஆயிர‌ம் பேர் அவ‌ஸ்தைப‌ட‌றோம்...அண்ணா சாலையில் ம‌றிய‌ல் ந‌ட‌த்தி எதிர்ப்பை காண்பிப்போம்..அத‌னால் ல‌ட்ச‌ம் பேருக்கு க‌ஷ்ட‌ம் என்றால் எங்க‌ளுக்கு க‌வ‌லையில்லை' என்கிற‌ ம‌னோபாவ‌த்தை நான் க‌ண்டிப்பாக‌ எதிர்க்கிறேன் வினோத்

    //ஏன்னா உங்களுக்குத்தான் இருக்குற பிரச்சினை பத்தான்னு அத மறக்குறதுக்கு பீல் குட் படம் தேவைப்படுதே?//

    ஆம். ம‌றுப‌டியும் சொல்கிறேன். எனக்கிருக்கும் பிர‌ச்னைக‌ளை ம‌ற‌ப்ப‌த‌ற்கு என‌க்கு ஃபீல் குட் ப‌ட‌ங்க‌ள்தான் தேவை. அதில் உங்க‌ளுக்கென்ன‌ பிர‌ச்னை?

    //ஏன் இப்படி வாயக் கொடுத்து மாட்டிக் கொள்கிறீர்கள்? பேசாம வா(வ்)லி, சுஜாதா என்ற அளவில் நிறுத்திக் கொள்ளுங்களேன்?//

    இதுவ‌ரை நீங்க‌ள் சொன்ன‌ எதிர்க‌ருத்துக‌ளுக்கு ம‌திப்ப‌ளிக்கிறேன் வினோத். ஆனால் இப்ப‌டித்தான் எழுத‌வேண்டும் என்று என்னை க‌ட்டுப்ப‌டுத்துவ‌த‌ற்கு உங்க‌ளுக்கு உரிமையில்லை......ஸாரி, உங்க‌ளுக்குப் பிடிக்க‌வில்லையென்றால் இந்த‌ வ‌லைப்பூ ப‌க்க‌ம் வ‌ர‌வேண்டாம். நான் யாரையும் என‌க்கு ஓட்டு போடு, பின்னூட்ட‌ம் போடு என்றெல்லாம் கேட்ப‌தில்லை. என‌க்கு ம‌ன‌தில் தோன்றிய‌தை எழுதுகிறேன்.

    என் எழுத்துக‌ளை விம‌ர்ச‌ன‌ம் செய்யுங்க‌ள். ஏற்றுக்கொள்கிறேன். இப்ப‌டித்தான் எழுத‌வேண்டும் என்று உங்க‌ள் க‌ருத்தை திணிக்காதீர்க‌ள். என் ந‌ட்புக‌ளுக்கு ம‌ட்டுமே நான் ப‌ணிந்துபோகிற‌வ‌ன்..எல்லோருக்கும் அல்ல‌..

    ReplyDelete
  13. \\போராடுவ‌து என‌ முடிவு செய்த‌பின் முத‌ல்வ‌ர் இல்ல‌ம் முன்போ, ச‌ட்ட‌ச‌பை முன்போ, குறைந்த‌ப‌ட்ச‌ம் ஆதிதிராவிட‌ ந‌ல‌த்துறை அமைச்ச‌ரின் அலுவ‌ல‌க‌ம் முன்போ சென்று போராட‌ வேண்டிய‌துதானே.\\
    முத‌ல்வ‌ர் இல்ல‌ம் முன் 10 பேர் சேர்ந்து செல்ல விடுவாங்களா? அதுவே சைதாப்பேட்டைல் சாலை ம‌றிய‌ல் செய்தால் எல்லா டிவி, பத்திரிக்கைள் இத பத்தி தானே பேசும்.

    ReplyDelete