____________________________________________________________________________
அதே பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருப்பேன். மற்ற இருக்கைகளில் அமர்ந்திருக்கும் எவரும் தூங்காமல் இருப்பர். ஆனால் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆசாமி மட்டும் தூங்கி வழிந்து, அடிக்கடி என் தோளில் வந்து இடித்துக்கொண்டிருப்பார். நான் இன்னும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்வேனே தவிர எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில்...
"இதுவே பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தா..." என்றெல்லாம் பின்னூட்டம் வேண்டாம் பாஸ். பதிலைத் தெரிந்துகொண்டே கேள்வியைக் கேட்டால் நானென்ன சொல்ல?...;))
____________________________________________________________________________
ஒரு முறை தி.நகருக்கு அவசரமாக செல்ல வேண்டிய சூழ்நிலை. பஸ் ஸ்டாப்பில் வெகு நேரமாய் நின்று கொண்டிருந்தேன். தி.நகருக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும், கூட்ட மிகுதியால் பைசா கோபுரம் போல் ஒரு பக்கமாய் சாய்ந்து கொண்டே வர, சரி ஆட்டோவில் போய்விடலாம் என்று முடிவு செய்தேன். சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்று வர, நான் கேட்பதற்கு முன் அருகில் நின்றுகொண்டிருந்தவர் "டி.நகர் போகணும்.....எவ்ளோ" என்று கேட்டார். அந்த ஆட்டோ டிரைவர் மறந்து, யூனிஃபார்மோடு மனசாட்சியையும் கழற்றி வைத்துவிட்டார் போல. சர்வ சாதாரணமாக "ஒன் ஃபிஃப்டி குடுங்க" என்றார். அந்த நபர் ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி நின்று கொண்டார். அவருடன் பேசி ஒரே ஆட்டோவை பிடித்து தி.நகருக்கு சென்று ஆட்டோ சார்ஜை ஷேர் செய்திருக்கலாம். ஆனால் நான் செய்யவில்லை. ஏனெனில்...
____________________________________________________________________________

அடையார் ஆனந்த பவன் ரெஸ்டாரண்ட்டுக்கு சென்று ஆசையாக ஒரு ஆனியன் ரவாவை அள்ளி அள்ளி உள்ளே தள்ளிக்கொண்டிருப்பேன். 80% முடித்தபின்பு மீதம் இருக்கும் தோசைக்கு தொட்டுக்கொள்ள சாம்பாரும் இருக்காது, சட்னியும் இருக்காது. சர்வரிடம் கூப்பிட்டு கேட்டால், 'இம்மாத்துண்டு தோசைக்கு ஒரு கப்பு சாம்பார் கேக்குதா' என்று அழகு சென்னைத் தமிழில், பார்வையாலேயே நம் இராசி, நட்சத்திரம் கேட்காமல் அர்ச்சனை செய்வார். செய்தால் என்ன? என் பசிக்கு சாப்பிடுகிறேன். எனக்கு தேவை இரண்டு கப் சாம்பார், சட்னி என்றால் அவர் தரவேண்டும். ஆனால் கேட்கமாட்டேன். வெறும் தோசையையே அள்ளி மடித்து, சமோசா ஷேப்புக்கு கொண்டு வந்த பின், பூலோகத்தை வாயினுள் காட்டிய கண்ணன் போல் வாயைத் திறந்து, வெற்றிலை போடுவது போல் உள்ளே தள்ளிவிடுவேன். ஏனெனில்...
____________________________________________________________________________
ஒரு அழகான பெண்ணை பார்த்து சைட் அடிக்கும்போது இருக்கும் தைரியம், அதே பெண்ணிடம் முதல் முறை பேசும்போது இருப்பதில்லை. முதல் முறை மட்டும். அது போல், பெற்றோரோ, உறவினரோ அருகில் இருக்கும்போது, ஒரு பேஏஏஏரழகி கடந்து போனாலும், போக்கிரி விஜய் ரேஞ்சிற்கு முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் இருப்பதுண்டு. ஏனெனில்...
____________________________________________________________________________
இன்று மெரீனாவில் காந்தி சிலை அருகே பதிவர் சந்திப்பு. அவசியம் வரவும் என்று அனைத்து பிரபல பதிவர்களும் பதிவிட்டிருப்பர். அப்பதிவுகளை படிப்பதோடு சரி. சந்திப்பில் கலந்துகொள்வதில்லை. ஆனால் 'பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன' என்று மறுநாள் அவர்கள் எழுதியிருப்பதை தவறாமல் படித்து, புகைப்படம் பார்த்து யார் யாரெல்லாம் சந்திப்பிற்கு சென்றிருந்தார்கள் என்பதையும், யார் யாரெல்லாம் சந்திப்பு முடிந்தவுடன் "ஸ்பெஷல் டீ" குடிப்பதற்கு சென்றார்கள் என்பதையும் அறிந்துகொள்வேன். எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியும், இன்னும் ஒரு முறை கூட பதிவர் சந்திப்பிற்குச் சென்றதில்லை. ஏனெனில்...
ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...
பேஸிக்கலி ஐ'ம் ஷை டைப் யூ நோ ;))
:)
ReplyDeleteவிட்டத்தில் கூடு கட்ட வரும் சிட்டுக்குருவிகள் தடுமாறித்தவிக்கும்
தனக்கான பௌத்தமௌனம் படர்ந்த இடம் கிடைக்கும் வரை
மொழியை எய்தும் வரை இருக்கும் அலைவைக் கடந்து விட்டால் படைப்பு
தன் வழியறியும் நீரோட்டம்தான்
முயல்க !
வாழ்த்துகள்
வெளியில் மிதந்து வரும் வளி,
ReplyDeleteசாளரம் சாத்தியிருப்பின் உள்வர தவிக்கும்.நுழைக்கான பெருவழி
பெறும் வரை...
தனக்கான களி வரும் வரை, படைப்பைக் களையும் வழி தெளிந்து இருத்தினால்,இறுதி வரை கொண்டாட்டம்தான்.
ஹிஹி..வேறொன்னுமில்லை. நேசமித்ரன் எஃபெக்ட்.
:)
:))
ReplyDeleteஐம் ஆல்சோ சேம் லைக் யூ
ReplyDeleteரகு நான் உங்களுக்கு நேர் எதிர்.. எதுவா இருந்தாலும் கேட்டு பாத்துருவேன்.. கிடைக்குதோ இல்லையோ அது அடுத்த விஷயம் . நம்ம மனசில் நினைப்பதை வாய் வழியே சொன்னால் தான் அடுத்தவருக்கு தெரியும்; அப்படி சொன்னா தான் முக்கால் வாசி நேரம் நம்ம நினைச்சது கிடைக்கும்.
ReplyDeleteமத்த படி இந்த பதிவு எழுதிய விதம் சுவாரஸ்யம்
மிக ரசித்தேன்.நல்லாருக்கு ரகு.
ReplyDeleteயதார்த்தம்
ReplyDeletemokkainaalum nalla iruku
ReplyDeleteநல்லாயிருக்கு.இயல்பாயிருக்கு.
ReplyDeleteஏனெனில்....எழுதின விதமும் ரசனையும் கூட
நல்லாயிருக்குக்கு ரகு.
ரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteநீங்க மட்டுமா ரகு... பொதுவா நிறைய பேரு இப்படிதான்! ஏனெனில்.... பேஸிக்கலி ஷைதான்:)
ReplyDeleteஇன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ReplyDelete//பேஸிக்கலி ஐ'ம் ஷை டைப்//
ReplyDeleteநீங்க மட்டுமா??? நானுந்தேன்!.
மொக்கை superuuu :)
ReplyDeleteநன்றி நேசமித்ரன், ஏதோ நல்லது சொல்றீங்க...ஓரளவுக்கு புரியுது
ReplyDeleteநன்றி ராஜு, நீங்களுமாஆஆஆஆஆ?!
நன்றி வித்யா
ReplyDeleteநன்றி ராஜேஷ், ஹிஹி..யூ டூ?
நன்றி மோகன், சில இடங்களில் போல்டாகத்தான் இருக்கிறேன், சில இடங்களில்தான் இப்படி...ஏனெனில்...:)
ReplyDeleteநன்றி விக்கி
நன்றி கண்ணன்
ReplyDeleteநன்றி எல்கே
நன்றி ஹேமா
ReplyDeleteநன்றி சாருஸ்ரீராஜ்
நன்றி ப்ரியா, நீங்களும் அந்த நிறைய பேர்ல ஒருத்தர் போலருக்கு..ஹி..ஹி..:)
ReplyDeleteநன்றி சின்ஹாசிட்டி
நன்றி அரசு, சேம்ப்ளட்? வெரி நைஸ் :)
ReplyDeleteநன்றி தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை, பெருசாயிருந்தாலும் உங்க பெயர் அருமை
கிட்டத்தட்ட எல்லாமே நானும் அனுபவிச்சவைதான்... சில சமயம் பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கறவர் தூங்கி விழறப்போ கோபம் கூட வருமே தவிர ஒரு நாளும் சொன்னதில்லை.. :)
ReplyDelete:)
ReplyDeleteentry sir entry ( belated)
நன்றி ஜெய், நீங்களும் அதே ரத்தம்தானா?...;))
ReplyDeleteநன்றி ஷர்புதீன், வந்தீங்களே :)
mithran sir comment......yevvalavu azhaga solliyirukkaanga.naanlaam yennaththa sollanga.:)
ReplyDelete