Thursday, May 13, 2010

விட்டத்தில் விண்மீன்கள்

சென்னையின் கோடையை சொல்லித் தெரிய வேண்டாம். சென்னையிலிருக்கும் ஒரே சீசன் வெயில். எப்போதாவது மழை வந்து நம் ரோடுகளின் லட்சணத்தைக் காட்டினாலும் ஆதவனும் அடுத்த நாளே ஆஜராகிவிடுவார். ஆஃபிஸ் ஷிஃப்ட் முடிந்து நான் வீட்டிற்குள் தஞ்சமடைந்தேன். அடுத்த‌ ஷிஃப்ட்டுக்கு ச‌ந்திர‌ன் வ‌ந்த‌பின்பும், ஆத‌வ‌னின் அற்புத‌மான‌ பகல் ப‌ணியால் அறையினுள் அன‌ல் த‌கித்துக்கொண்டிருந்த‌து. இன்று மொட்டை மாடியில்தான் உற‌க்க‌ம் என‌ முடிவு செய்து, க‌ட்டிலுட‌ன் கிள‌ம்பினேன். மொட்டை மாடியில் உற‌ங்கியிருக்கிறீர்க‌ளா? ஜில்லென்று வீசும் காற்றும், யாரும‌ற்ற‌ த‌னிமையும்....க‌விதை எழுத‌த் தூண்டும் க‌ண‌ம் அது!

க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டு விண்ணைப் பார்க்கையில், "ம்மா, எத்த‌னை ஸ்டார்ஸ் இருக்குன்னு நான் எண்ணிச் சொல்றேன்மா.....ஓன், டூ, த்ரீ......" என்ற‌ சிறுவ‌ய‌து அச‌ட்டுத்த‌ன‌ம்தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ந்த‌து. சில‌ நிமிட‌ங்க‌ளில் உற‌ங்க‌ ஆர‌ம்பிக்க‌, ஜில் காற்று எந்த‌ வித‌ ராக்கெட்டும் இல்லாம‌ல், என்னை நீல் ஆர்ம்ஸ்ட்ராங்காக‌ மாற்றி ச‌ந்திர‌னில் கால் ப‌திக்க‌ச் செய்த‌து.




இதோ இப்போது என‌க்கு மிக‌ அருகே ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள். ஒவ்வொரு ந‌ட்ச‌த்திர‌த்திலும் என‌க்கு மிக‌ பிடித்த‌வ‌ர்க‌ளின் முக‌ம் தெரிவ‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு. காலையில் இருந்த‌ புழுக்க‌ம், விய‌ர்வை, வெயில் எதுவுமில்லை. இது குளிருமில்லை. தென்ற‌ல்? வ‌ச‌ந்த‌ம்? ஊஹூம் இத‌ற்கு என்ன‌ பெய‌ர் என்றே தெரிய‌வில்லை. எதுவாகவோ இருக்கட்டும். நான் இதற்கு “விரும்பிய ஸ்பரிசம்” எனப் பெயரிட்டுக் கொள்கிறேன்.

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளிடையே மித‌ந்து கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் ம‌ட்டும் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருப்ப‌து போல் தோன்ற‌, அருகே சென்று பார்த்தேன். அதில் அவ‌ள் முக‌ம்!

மிக‌ அருகே சென்று க‌ண்மூடி நின்றேன். இட‌து க‌ன்ன‌த்தில் திடீரென்று ஈர‌ம். க‌ண் திற‌க்காம‌லேயே என்னால் உண‌ர‌ முடிந்த‌து, க‌ண்டிப்பாக‌ இது அவ‌ள் இத‌ழ் ப‌தித்த‌ ஈர‌ம‌ல்ல‌ என்று. பின் வேறென்ன‌ இது என்று யோசிக்கும் முன்ன‌ரே இப்போது வ‌ல‌து க‌ன்ன‌த்திலும் அதே ஈர‌ம்....ரொமான்டிக்கான‌ நேர‌ம், ரொமான்டிக்கான‌ சூழ்நிலை...வான‌ம், ந‌ட்ச‌த்திர‌ம், மேக‌ம் என்று ரொமான்டிக்கான‌ இட‌ம் கூட‌...ஏன்? ஏன்? ஏன் அந்த‌ ஈர‌ம் இப்போது அதிக‌மாகிக்கொண்டிருக்கிற‌து?

"ர‌கு..டேய்...எழுந்திருடா, தூற‌ல் போடுற‌து கூட‌ தெரியாம‌ எம‌ன் வாக‌ன‌ம் மாதிரி தூங்கிட்டிருக்க‌, எழுந்து உள்ளே வ‌ந்து ப‌டு" த‌ம்பியின் குர‌ல் கேட்டு, க‌ட்டிலைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓட‌த் துவ‌ங்கினேன். உள்ளே போவ‌த‌ற்கு முன் ஒருமுறை நிமிர்ந்து வான‌த்தைப் பார்த்தேன். தொலைவில் ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் இன்னும் மின்னிக்கொண்டிருந்த‌து....


15 comments:

  1. am the first................
    am the first................
    am the first................

    ReplyDelete
  2. ஜில்லென்று வீசும் காற்றும், யாரும‌ற்ற‌ த‌னிமையும்....க‌விதை எழுத‌த் தூண்டும் க‌ண‌ம் அது! //
    அப்புறம் ஏன் கவிதை எழுதாம இப்படிப் பதிவெழுதிருக்கீங்க...

    சிறுவ‌ய‌து அச‌ட்டுத்த‌ன‌ம் //
    ஓ, அப்போ இப்போ பெரிய வயது அசட்டுத்தனமா?

    ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் ம‌ட்டும் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருப்ப‌து போல் தோன்ற‌, அருகே சென்று பார்த்தேன். அதில் அவ‌ள் முக‌ம்! //
    தமன்னா?!?!

    க‌ண் திற‌க்காம‌லேயே என்னால் உண‌ர‌ முடிந்த‌து, க‌ண்டிப்பாக‌ இது அவ‌ள் இத‌ழ் ப‌தித்த‌ ஈர‌ம‌ல்ல‌ என்று. //
    அந்தளவுக்குத் தெளிவா இருக்கீங்களேன்னு சந்தோஷம்.

    ரொம்ப ரொமாண்ட்டிக் தான். அதான் தம்பி அப்படிப் பேசிருக்காரு. :)

    தொலைவில் ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் இன்னும் மின்னிக்கொண்டிருந்த‌து....//
    மழை வரும் போது நட்சத்திரம் இருக்குமா? ஒரு வேளை உங்க கண்ணுக்கு மட்டும் ‘அவள்’ நட்சத்திரம் தெரிஞ்சிருக்கலாம்.

    இன்னும் கைவலி சரியாகலையா? பதிவு சின்னதா இருக்கு...

    அடிபட்டது கைல மட்டும் தானே ரகு. தலைல இல்லியே...

    நல்லா ரசிக்குறீங்கய்யா.

    ReplyDelete
  3. நல்லாத்தான்யா காணுறீங்க கனவு..!

    என் கனவுலல்லாம் வேற வேற ஆளுகதான் வருவாங்கண்ணே.

    ReplyDelete
  4. ர‌கு..டேய்...எழுந்திருடா, தூற‌ல் போடுற‌து கூட‌ தெரியாம‌ எம‌ன் வாக‌ன‌ம் மாதிரி தூங்கிட்டிருக்க‌---

    எருமை மாடுனு சொல்றத பயபுள்ள எப்படி
    எம‌ன் வாக‌ன‌ம் மாதிரி "சொல்றாங்க பாருப்பா...nangala rumba innocent..

    ஜில்லென்று வீசும் காற்றும், யாரும‌ற்ற‌ த‌னிமையும்....க‌விதை எழுத‌த் தூண்டும் க‌ண‌ம் அது!
    ரைட்டு ....

    “விரும்பிய ஸ்பரிசம்” எனப் பெயரிட்டுக் கொள்கிறேன்.--தமன்னா..."என்று பெயரிட்டுக் கொள்கிறேன்

    உள்ளே போவ‌த‌ற்கு முன் ஒருமுறை நிமிர்ந்து வான‌த்தைப் பார்த்தேன். தொலைவில் ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் இன்னும் மின்னிக்கொண்டிருந்த‌து....
    --பின்ஷிங் சூப்பர்

    சூர்யா

    ReplyDelete
  5. ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க!!

    ReplyDelete
  6. ஹிஹிஹிஹி..

    எம்பெருமான் முருகன் மயிலேறி... ஹிஹிஹிஹிஹி

    ReplyDelete
  7. சென்னையில மழைங்கிற்தே "Happy Ending"தான் ரகு.. :-)

    ReplyDelete
  8. ஆஹா கனவா?

    ReplyDelete
  9. //அதில் அவ‌ள் முக‌ம்//....சொல்லவே இல்ல‌!

    ரசனையான கவிதை எழுத தூண்டிய இரவை கவிதை எழுதாம ஏமாத்திட்டீகளே ரகு!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ந‌ன்றி சூர்யா, யூ த‌ ஃப‌ர்ஸ்ட்டுதான், அத‌ மூணு த‌ட‌வை வேற‌ சொல்ல‌ணுமா ;)))

    ந‌ன்றி விக்கி, நான் எழுதின‌தை க‌விதைன்னு சொன்னா, அந்த‌ பாவ‌ம் சும்மா விடாதுன்னுதான் அதை ப‌ப்ளிஷ் ப‌ண்ணல‌

    //அதில் அவ‌ள் முக‌ம்! // தமன்னா?!?!//

    க‌ண்டிப்பா சொல்ல‌ணுமா?..;)

    //மழை வரும் போது நட்சத்திரம் இருக்குமா?//

    வேள‌ச்சேரியில‌ ம‌ழை கொட்டோ கொட்டுனு கொட்டிட்டிருக்கும்போது, சைதாப்பேட்டையில‌ வெயில் பின்னி எடுக்கும்....அது மாதிரி இது 'தொலைவில் ஒரு ந‌ட்ச‌த்திர‌ம்'....அட‌ அதெல்லாம் இருக்க‌ட்டுங்க‌...எதுக்கு க‌ன‌வுல‌ கூட‌ லாஜிக் கேக்க‌றீங்க‌? விஷால், ப‌ர‌த் ப‌ட‌ங்க‌ள் டிவிடி வாங்கி அனுப்பிடுவேன்...பீ கேர்புல்!

    வாங்க‌ ராஜு, யாருண்ணே அவ‌ங்க‌ள்லாம்?...;)

    மீள்வ‌ருகைக்கு ந‌ன்றி சூர்யா, என்னைவிட‌ த‌ம‌ன்னா பெய‌ரை அதிக‌ம் சொல்ற‌து நீங்க‌தான்...அய‌ன் பாதிப்பா? ;))

    ReplyDelete
  12. ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா :)

    ந‌ன்றி கார்க்கி, ம‌யிலேறி....

    ந‌ன்றி ஜெய், ஆனா நேர‌ம் கால‌ம் தெரியாம‌ வ‌ந்திடுச்சு :(

    ந‌ன்றி நேச‌மித்ர‌ன் :)

    ReplyDelete
  13. ஹி..ஹி...க‌ன‌வேதான் சிவ‌ச‌ங்க‌ர், வ‌ருகைக்கு ந‌ன்றி

    ந‌ன்றி இர‌சிகை :)

    ந‌ன்றி ப்ரியா, ஹி..ஹி..நீங்க‌ கேக்க‌வேயில்ல‌?!....எழுதின‌ நாலு வ‌ரியை க‌விதைன்னு சொல்லிக்க‌லாமான்னு இன்னும் ச‌ந்தேக‌மாவே இருக்குங்க‌ :))

    ReplyDelete
  14. உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
    http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

    ReplyDelete
  15. ரகுஉஉஉஊஊஊஊ...
    'விரும்பிய ஸ்பரிசம்', 'வானம்', 'மழை'... இப்படின்னு நீங்க எழுதினதும், பட்சி எங்கேயோ சிக்கிக்கிச்சோன்னு ஒரு டவுட்... ஹிஹி...

    நல்லவேளை வெறும் கனவாப் போனதால, ரகு is back..!

    ஆனாலும், கனவு சூப்பர் - ரசனையா இருக்கு..!

    -
    DREAMER

    ReplyDelete