Sunday, May 09, 2010

+2....நெக்ஸ்ட்?


+2 தேர்வு முடிவை எதிர்நோக்கியிருக்கும் அனைத்து மாண‌வ‌, மாண‌வியருக்கும் வாழ்த்துக‌ள்.

ந‌ண்ப‌ர்க‌ளுக்கு.........உங்க‌ள் பிள்ளைக‌ளோ, உங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளோ ந‌ன்றாக‌ ம‌திப்பெண் பெற்றால், த‌ய‌வுசெய்து அவ‌ர்க‌ளை எல‌க்ட்ரானிக்ஸ் & க‌ம்யூனிகேஷ‌ன், க‌ம்ப்யூட்ட‌ர் ச‌யின்ஸ், எல‌க்ட்ரிக‌ல் & எல‌க்ட்ரானிக்ஸிலேயே போய் விழ‌ச் சொல்லாதீர்க‌ள். உல‌க‌ம் ப‌யோ & நேனோ டெக்னால‌ஜியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிற‌து!




இன்று ஐடியில் இருப்ப‌வ‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு முன்னேறும் வாய்ப்பு, எதிர்கால‌த்தில் ப‌யோ & நேனோ டெக்னால‌ஜி ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கே.

இங்கே ப‌யோ டெக்னால‌ஜி ம‌ற்றும் நேனோ டெக்னால‌ஜி ப‌ற்றி எளிதாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

ப‌டித்துப் பாருங்க‌ள். பிடித்திருந்தால் ப‌ரிந்துரை செய்யுங்க‌ள், பிள்ளைக‌ளுக்கும் இவ‌ற்றை ப‌டிப்ப‌தில் விருப்ப‌ம் இருந்தால்.‌ அவ‌ர்களுக்கு விருப்ப‌ம் இல்லையெனில் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ வேண்டாம். அவ‌ர்க‌ளுக்கு எது விருப்ப‌மோ அதை ப‌டிக்கட்டும்.

காம‌ர்ஸ் துறையின‌ருக்கு............பி.காம் சேர்ந்து ப‌டித்துவிட்டு, உட‌னே வேலை என்ற‌ க‌ன‌வை ம‌ட்டும் காணாதீர்க‌ள். இன்று இருக்கும் ப‌ல‌ BPO க‌ம்பெனிக‌ள் பி.காம் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ஆர‌ம்ப‌த்திலேயே 8000 முத‌ல் 12000 வ‌ரை ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து எடுத்துக்கொள்கின்ற‌ன‌ர். இது இருப‌த்தொரு வ‌ய‌தில் பெரிய‌ விஷ‌ய‌மாக‌ இருக்க‌லாம். ஆனால் இது நிலையான‌ வ‌ள‌ர்ச்சியை ஆண்டுதோறும் த‌ருமா என்றால், ச‌ந்தேக‌மே. ஒரு சில‌ருக்கு வேண்டுமானால் அவ‌ர்க‌ளுடைய‌ ப்ராஜ‌க்ட்டை பொறுத்து ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சி இருக்க‌லாம். ஆனால் ப‌ல‌ருக்கு அப்ப‌டி இல்லை. என‌வே பி.காம் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள், அவ‌சிய‌ம் எம்.காமோ, எம்பிஏவோ ப‌டியுங்க‌ள். அதும‌ட்டும‌ல்லாம‌ல், பி.காமிலும் குறைந்த‌து 70% எடுத்து தேர்ச்சி பெற‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். இது ப‌ல‌ நேர்முக‌த் தேர்வுக‌ளில் உங்க‌ளுக்கு போட்டியை குறைக்கும்....ஆல் த‌ பெஸ்ட்!

இன்னும் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் எழுத‌ எண்ணியிருந்தேன். நேற்று பைக்கில் சென்ற‌போது ஏற்ப‌ட்ட‌ சிறு விப‌த்தால் வ‌ல‌து கையில் ர‌த்த‌ம் க‌ட்டிக்கொள்ள‌, உப்பிய‌ ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன் பூரி போல‌ ம‌ணிக்க‌ட்டு தோற்ற‌ம‌ளிக்கிற‌து. அத‌னால் இட‌து கையாலேயே கிட்ட‌தட்ட‌ ஓன்ற‌ரை ம‌ணி நேர‌மாக‌ த‌ட்ட‌ச்சிக்கொண்டிருக்கிறேன். இதுக்கு மேல‌..........முடிய‌ல‌!


21 comments:

  1. நண்பா, விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
    நல்ல தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வலிக்கும் கரங்களால் நல்ல விஷயம் சொன்னீங்க பாருங்க
    அதுக்கு ஒரு பெரிய நன்றி......

    ReplyDelete
  3. விரைவில் குணமடைய வேண்டுகிறேன் நண்பரே.. பயோடெக்னாலஜி படித்தவர்களுக்கு, பி.டெக் முடித்தவுடன் வேலை கிடைக்குமா என தெரியவில்லை.. கை சரியானவுடன், வேலைவாய்ப்பு பற்றியும் கூறவும்..

    ReplyDelete
  4. ரைட்டு!

    சின்ன காயந்தானே..!
    Get Well Soon.
    :-)

    ReplyDelete
  5. BE (சிவில் , மெக்கனிக்கல் , எலக்ட்ரோனிக்ஸ் , கம்ப்யூட்டர் ) என அடிப்படை படிப்பை படித்து முடித்துவிட்டு
    முதுநிலை படிப்பில் சிறப்பு பாட பிரிவுகளை படிப்பதே நன்று .

    நிறுவனங்கள் இதைதான் விரும்புகின்றன .

    உடல் நலம் பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ஹேய், கைல என்னாச்சுப்பா... டேக் கேர். ரோட்டுல போகும் போது ரோட்டைப் பார்த்து ஓட்டாம ஃபிகரைப் பார்த்து ஓட்டினா இப்படித் தான்.

    கை சரியாகி இந்தப் பதிவை நேர்த்தியாய் எழுதுவீர்களென எதிர்பார்க்கிறேன்.

    Get Well Soon Dear Friend.

    ReplyDelete
  7. மனிதர்கள் முக்கிய விஷயத்தை விட Post script-ஐ தான் அதிகம் கவனிப்பார்கள் என்பார்கள். உங்கள் Post script- தான் படித்து முடித்ததும் நினைவில் நிற்கிறது. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சரியான நேரத்துல , உருப்படியான தகவல்
    கைய பாத்துகங்க

    ReplyDelete
  9. நல்ல தகவல்.

    அது இருக்கட்டும், பூரிய.. சே, கைய நல்லா பாத்துக்கங்க.!

    ReplyDelete
  10. vandiku onnum agalaiey....

    erunthalum epo paaru tamanavey

    ninaichundu erunthal....kai ennathuku agarithu..

    sari gavanama erunga..

    kastpatu eluthakoodthu..kai valikum.

    takecare deva.
    dont worry surya is here.

    get well soon.

    usefull info.

    v.v.s.sangam
    complan
    surya

    ReplyDelete
  11. கையில் வலியுடன், நல்ல தகவல்களை கொடுத்திருக்கிற உங்களை என்ன சொல்லி பாராட்டுவது... கிரேட்!

    கையில் ர‌த்த‌ம் க‌ட்டிக்கொண்டதைக்கூட சரவணபவன் பூரியை உவமை படுத்தி எழுதி இருக்கிங்களே.. நீங்க நீங்கதான்!

    Take care Raghu!

    ReplyDelete
  12. 'விழிமின் எழுமின்'-னு விவேகானந்தர் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு 'விழுமின் எழுமின்'னு
    ஏதோ பண்ணியிருக்கீங்க போல!

    முன்ன ஒரு இடுகையில நீங்க Bloggingக்கு addict ஆயிட்டேனோன்னு பயப்படுறதா எழுதியிருந்தீங்க... இன்னிக்கி எனக்கே உங்கமேல அந்த டவுட்டு வருது... கையில அடிப்பட்டு கிடக்கிறப்போ, ஜாலியா லீவு போட்டுட்டு புக்கு-களை படிச்சிக்கிட்டு சாப்பிட்டு தூங்கி ரெஸ்டு எடுப்பீங்களா! அதைவிட்டுட்டு, +2 டிப்ஸ்-ன்னு தகவல் பகிர்வு தேவைதானா..!

    தேவைதான்... அதுக்காக கையை சரவணபவன் பூரிமாதிரி (இதுல BrandName வேற) வச்சிக்கிட்டு, தேவையா இது! விரைவில் குணமடைந்து வந்து, படிச்ச புத்தகங்கள் பற்றி பக்கம் பக்கமா எவ்வளவு வேண்ணாலும் எழுதுங்க... இப்போதைக்கு ரெஸ்டு எடுங்க...

    பி.கு : கடுமையாக கூறியதாக தோன்றினால் மன்னிக்கவும்... எனக்கு பூரி புடிக்கும், அதுக்காக அது உங்க கையில அந்த ஷேப்பில வீங்கி இருந்தா பிடிக்காது... அதனால்தான்..!

    இருந்தாலும் பயனுள்ள தகவல் & பரிந்துரைகள்..!

    -
    DREAMER

    ReplyDelete
  13. என்னாச்சு பாஸு... சூதானமா போயிட்டு வர வேண்டியதுதானே...
    விக்கி சொல்றது உண்மையா இருக்குமோன்னு ஒரு டவுட்டு...

    கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க... பூரி மெலிந்து சப்பாத்தி ஆயிடும்.

    ReplyDelete
  14. upayokamaana pathivu....

    get well soon...!!

    ReplyDelete
  15. one should study based on his/her interest.

    ReplyDelete
  16. வாங்க‌ சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, ந‌ன்றி ந‌ண்பா

    ந‌ன்றி க‌ணேஷ்

    ந‌ன்றி ஜெட்லி, வ‌லிக்காத‌ க‌ர‌த்தால்தான் சொன்னேன்...ஹி..ஹி..;)

    ந‌ன்றி ஜெய், க‌ண்டிப்பா...

    ந‌ன்றி ராஜு, சின்ன‌ காய‌ம்தான்ணே...இப்போ கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்ல‌

    ந‌ன்றி ர‌மேஷ்

    ReplyDelete
  17. ந‌ன்றி பாஸ்க‌ர‌ன்

    ந‌ன்றி விக்கி, பிக‌ரைப் பார்த்து ஓட்டினா விப‌த்து ஏற்ப‌டும்னு சொல்லாதீங்க‌. அப்ப‌டி பார்த்தா நாள் பூரா நிறைய‌ பேர் விப‌த்துல‌தான் வாழ்வாங்க‌ ;)

    ப‌ட‌ம் பார்க்க‌லாம்னு தியேட்ட‌ருக்கு போனேன். தியேட்ட‌ர் என்ட்ர‌ன்ஸ் அருகே திரும்பும்போது திடீர்னு எதிர்ல‌ அந்த‌ புண்ணிய‌வான் வ‌ந்தார்.‌

    ந‌ன்றி மோக‌ன்

    ந‌ன்றி அமைச்ச‌ரே :)

    ந‌ன்றி ஆதிமூல‌கிருஷ்ண‌ன், பூரி இப்போ கொஞ்ச‌ம் சைஸ் குறைஞ்சிருக்கு ;)

    ந‌ன்றி சூர்யா, ஏம்பா நான் என்ன‌ த‌ம‌ன்னாவை ல‌வ்வா ப‌ண்றேன்?...;)))

    ReplyDelete
  18. ந‌ன்றி ப்ரியா, என்ன‌ங்க‌ ப‌ண்ற‌து உவ‌மைக்கு கூட‌ சாப்பாட்டுல‌தான் புத்தி போகுது :)

    ந‌ன்றி ஹ‌ரீஷ், க‌டுமையான‌ வார்த்தைக‌ளா இருந்தாலும் த‌ப்பில்ல‌, ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இல்லாத‌ உரிமை யாருக்கு இருக்கு? வீக்க‌மும், வ‌லியும் ம‌ட்டும்தான் அதிக‌மாயிருந்த‌து. திங்க‌ள் கிழ‌மை +2 ரிச‌ல்ட் வெளிவ‌ர‌ வாய்ப்பிருக்குன்னு நியூஸ்ல பார்த்த‌தால‌, உப‌யோக‌மா இருக்குமேன்னு இந்த‌ பதிவை எழுதினேன். ஆனா ஒரு ஸ்டேஜுக்கு அப்புற‌ம் நிஜ‌மாவே முடியல‌. அதான் பாதியிலேயே நிறுத்திட்டேன்.

    ந‌ன்றி சிவா, எதிர்ல‌ வ‌ந்த‌‌வ‌ர் சூதான‌மா வ‌ர‌லையே பாஸு....விக்கி சொல்ற‌துலாம் க‌ண்டுக்காதீங்க‌, அவிய்ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான் ;))

    ந‌ன்றி இர‌சிகை

    ந‌ன்றி அனானி, நீங்க‌ சொல்ற‌து ச‌ரிதான்

    ReplyDelete
  19. ரொம்ப தேங்க்ஸ் சார்.. கை முடியலைன்னாலும் , சரியான நேரத்துல மாணவர்களுக்கு உங்களால முடிஞ்சா வரைக்கும் சொல்லிட்டீங்க.. அது போதும்...

    ReplyDelete