Tuesday, March 06, 2012

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்

காந்தியை கொன்றது யார்? கோட்ஸே. அவ்வளவுதான் தெரியும் நம் தலைமுறைக்கு. யார் இந்த கோட்ஸே? காந்தியை கொல்லவேண்டும் என்று ப்ரிட்டிஷ் அரசு கூட நினைக்கவில்லை. உலகமே போற்றிய காந்தியை கொல்லவேண்டும் என்று ஏன் கோட்ஸேக்கு தோன்றியது? அப்படியென்ன அவருக்கு காந்தி மேல் கோபம்? தனியாளாகத்தான் இந்த கொலையை அவர் செய்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் பதில் சொல்கிறது. 

சும்மா போகிற போக்கில் நடந்த சம்பவங்களை பற்றி எழுதாமல், நிறைய விஷயங்களை விரிவாக அதே சமயம் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் என்.சொக்கன். சமயத்தில் அதுவே கொஞ்சம் போரடிப்பது போல தோன்றினாலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கும்போது ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது. 



காந்தி கொலைக்கு முக்கிய காரணமாக இன்றும் பலர் சொல்வது "55 கோடி". இதை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்னர், புதிய நாட்டின் கட்டமைப்புக்கு என்று 75 கோடி தருவதாக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதில் முதல் தவணையாக 20 கோடி பாகிஸ்தானுக்கு தரப்பட்டிருக்கிறது.

அப்போது காஷ்மீரை ஹரி சிங் என்ற அரசர் ஆண்டு வந்திருக்கிறார்.  காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம். ஆனால் ஆள்பவரோ ஹிந்து அரசர். எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. பின் வழியாக வந்து தாக்குவதை கார்கிலுக்கு முன்பு அப்போதே பாகிஸ்தான் ஆரம்பித்திருக்கிறது. 

அலறியடித்துக்கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டிருக்கிறார் காஷ்மீர் அரசர். கிடைத்த வாய்ப்பை இந்தியாவும் விடவில்லை. 

இதற்கிடையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களோ, எங்களுக்கும் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்களுக்கு வரவேண்டிய மீதி பணத்தை அனுப்புங்கள் என்று இந்திய அரசிடம் கேட்டிருக்கிறார்கள். இவர்கள் இப்போதே இப்படியிருக்கிறார்கள், இன்னும் 55 கோடி கொடுத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ என்றெண்ணிய இந்திய அரசு அதை அப்படியே நிறுத்திவைத்தது.

இந்த விஷயத்தை காந்தியிடம் கொண்டுபோகும்போது அப்போதைய கவர்னர் மவுண்ட்பேட்டன் "சுதந்திரம் கிடைத்த பின் இந்தியாவின் முதல் நேர்மையற்ற செயல்" என்று குறிப்பிட, இந்த வார்த்தைகள் காந்திக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.

ஏறக்குறைய இதே சமயத்தில், ஹிந்து முஸ்லிம் கலவரம் டெல்லியில் பற்றி எரிய ஆரம்பித்திருந்த நேரம். இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி காந்தி ஜனவரி 13, 1948 காலை 11:55க்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். பதறி போன இந்திய அரசு, தனது கேபினட் கூட்டத்தை காந்தி உண்ணாவிரதமிருந்த பிர்லா இல்லத்திலேயே கூட்டியிருக்கிறார்கள். காந்தி நேரடியாக கேட்கவில்லை. இருந்தாலும் அவரை திருப்திபடுத்தி உண்ணாவிரதத்தை கைவிட கேபினட் கூட்டம் செய்த முதல் முடிவு, பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுத்துவிடலாம்.


நாதுராம் கோட்ஸே

இதுதான் தீவிர ஹிந்துத்வாவான கோட்ஸேவை மிகுந்த கோபமடையச் செய்திருக்கிறது. காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். ஹிந்துக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. அவர் செத்தொழிந்தால்தான் இந்தியாவுக்கு நிம்மதி. அப்போதுதான் இந்தியா தன் வளர்ச்சியை பற்றி யோசிக்க முடியும். இனி பொறுத்துபோக முடியாது. ஜனவரி 20, 1948. நாள் குறித்தாயிற்று.

கொலை திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் ஏழு பேர் (இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் விரிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்).

1. நாராயண் ஆப்தே 
2. நாதுராம் கோட்ஸே 
3. விஷ்ணு கார்கரே
4. மதன்லால் பாஹ்வா 
5. கோபால் கோட்ஸே (நாதுராம் கோட்ஸேவின் தம்பி)
6. திகம்பர் பாட்ஜே
7. ஷங்கர் கிஸ்தைய்யா

ஜனவரி 20, 1948 அன்று ஆப்தேவும், கோட்ஸேவும் பிர்லா இல்லத்துக்கு மற்றவர்களோடு சென்றார்களே தவிர, காந்தியை கொலை செய்ய நேரடியாக முயற்சிக்கவில்லை. திட்டம் போட்டது மட்டுமே அவர்கள் வேலை. 

பிரார்த்தனை மைதானத்திற்கு சற்று தொலைவில் மதன்லால் ஒரு வெடிகுண்டை வெடிக்கவைப்பார். கூட்டம் சிதறி ஓடும். காவலர்கள் கவனம் சிதறும். இந்த சமயத்தில் திகம்பர் பாட்ஜே காந்தியை அருகிலிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து சுடவேண்டும். சரியாக போட்ட ப்ளானில் கடைசியில் சொதப்பியது திகம்பர் பாட்ஜே. குண்டு வெடித்தபின் அவர் காந்தியை சுடவில்லை. ஆப்தே - கோட்ஸே குழுவினருக்கு இது பேரிடி! போதாதற்கு மதன்லால் போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

இந்த தோல்வியை ஆப்தே மற்றும் கோட்ஸேவால் தாங்கமுடியவில்லை. இனி மற்றவர்களை நம்பி பிரயஜோனமில்லை. நேரடியாக களத்தில் இறங்க வேண்டியதுதான். முடிவெடுத்தார் கோட்ஸே. விளைவு - ஜனவரி 30, 1948.

I do say that my shots were fired at the person whose policy and action had brought rack and ruin and destruction to millions of Hindus. There was no legal machinery by which such an offender could be brought to book and for this reason I fired those fatal shots. I bear no ill will towards anyone individually, but I do say that I had no respect for the present government owing to their policy, which was unfairly favourable towards the Muslims. But at the same time I could clearly see that the policy was entirely due to the presence of Gandhi.
— Nathuram Godse, Answer to the Charge Sheet (Excerpt from Para. 135)




இதில் கொடுமை என்னவென்றால், ஜனவரி 20லிருந்து 30 வரை போலீசின் நடவடிக்கை  படு மெத்தனமாக இருந்திருக்கிறது. மதன்லாலை தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால் கொலை நடந்த இரண்டு வாரங்களுக்குள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து ஏழு பேரையும் கைது செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேவுக்கும், ஆப்தேவுக்கும் மரண தண்டனை. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை. அப்ரூவராக மாறிய திகம்பர் பாட்ஜேவுக்கு விடுதலை!

சொக்கன் அவர்கள் எழுத்தில் அறிஞர் அண்ணா, திருபாய் அம்பானி, பில் கேட்ஸ் ஆகியோரின் வாழ்கை வரலாற்றை வாசித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை இதுவரை அவர் எழுதியதிலேயே இந்த புத்தகம்தான், த பெஸ்ட்!


பெயர்: மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர்: என். சொக்கன்
விலை: ரூ.135/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html


9 comments:

  1. திகம்பர் பாட்ஜே சுடாததற்க்கு காரணம்.. அவர் குள்ளமாக இருந்ததும், எந்த ஜன்னலில் இருந்து சுட பிளான் பண்ணினார்களோ அந்த ஜன்னல் உயரத்தில் இருந்தது என்பதும் கொடுமையான நகைச்சுவை.. Freedom At Midnight புத்தகத்தில் விவவரமாக எழுதியிருப்பார்கள்.

    ReplyDelete
  2. புத்தக சுருக்கத்தை essence-ஆக தந்து விட்டீர்கள் ! நைஸ் !

    ReplyDelete
  3. காந்தியை கொன்றது யார்? கோட்ஸே. அவ்வளவுதான் தெரியும் நம் தலைமுறைக்கு.
    -இப்படி ஆரம்பிச்சிருக்கற உங்களுக்கு ஒரு தகவல். நமக்கடுத்த தலைமுறைங்க காந்தி யாருன்னு கேப்பாங்க போல...
    பார்க்க:

    http://www.nirusdreams.blogspot.com/2012/03/blog-post_04.html

    இந்தப் புத்தகம் நான் படித்து ரசிச்சிருக்கேன். அவசியம் சொல்லப்பட வேண்டிய Book ஐ சொல்லிருககிங்க. Thanks.

    ReplyDelete
  4. என் தம்பியிடம் இருக்கிறது இந்த புத்தகம். இன்னும் வாசிக்கவில்லை. இதே வழக்கு சம்பந்தமான ஆங்கிலப் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன் (ரொம்ப நாளா:)) விரைவில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி பந்து, இந்த புத்தகத்தில், திகம்பர் பாட்ஜே காந்தியை சுடும் மனநிலையில் இருந்து கடைசியில் பின்வாங்கிவிட்டார் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    நன்றி மோகன், புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் சந்திப்போம் :)

    நன்றி நிரஞ்சனா, உங்கள் பதிவை வாசித்தேன். காந்தியை சுட்டது யார் என்று கூட தெரியாமல் இருப்பது ரொம்பவே வருத்தமான விஷயம் :(

    நன்றி வித்யா, இந்த புத்தகமும் அவசியம் வாசிச்சு பாருங்க. ஆரம்பம் முதல் முடிவு வரை செம ஃப்ளோ!

    ReplyDelete
  6. காந்தி கொலைக்கு காரணம் அதுமட்டுமல்ல...பிரிவினையால் முஸ்லீம்களின் வெறித்தனமான செயல்களால் பாதிக்க்ப்பட்டு, குடும்பத்தை,சொத்து சுகங்களை இழந்து ஒரே நாளில் அநாதையாகிப்போன ஆயிரக்கணக்காண ஹிந்துக்களில் கோட்சேவும் ஒருவர்...இவர் தனது நிலையை காந்தியிடம் சொல்ல சென்றபோது அவர் கோட்சேவிடம் உனது இந்த வேதனை மறைய வேண்டுமென்றால் நீ இதைப்போன்று பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லீம் பெண்ணை தத்து எடுத்து அதை கடைசிவரை முஸ்லீமாகவே வளர்த்து வரவேண்டும் என்று தத்துவ உபதேசம் செய்த்து அவரை இன்னும் கோபப்படுத்தியது..

    ReplyDelete
  7. //முஸ்லீம்களின் வெறித்தனமான செயல்களால் பாதிக்க்ப்பட்டு, குடும்பத்தை,சொத்து சுகங்களை இழந்து ஒரே நாளில் அநாதையாகிப்போன ஆயிரக்கணக்காண ஹிந்துக்களில் கோட்சேவும் ஒருவர்//

    நன்றி சிரிப்புசிங்காரம், இது சரியா என தெரியவில்லை. ஏனென்றால், கோபால் கோட்ஸே (நாதுராம் கோட்ஸேவின் தம்பி) திருமணமாகி குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் இந்த திட்டத்தில் இணைந்திருக்கிறார். கோட்ஸேவின் அப்பாவும் அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்தான். பை தி வே, உங்க பேர் நல்லாயிருக்கு பாஸ் :-)

    ReplyDelete
  8. நன்றி இரசிகை

    ReplyDelete