யார் இந்த கண்றாவியை கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறுகிறது பஸ் டே கொண்டாட்டம் பற்றிய செய்திகள். தங்களது கல்லூரியின் வழித்தடத்தில் ரெகுலராக வரும் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் கெளரவிக்கும் விதமாக செயல்பட்டு வந்த பஸ் டே கொண்டாட்டம், கடந்த சில வருடங்களாக ஒரு அருவருப்பான விஷயமாகத்தான் மாறிக்கொண்டு வருகிறது.
கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரிக்கென்று சொந்தமாக பஸ் வாங்கி, கல்லூரி மைதானத்திலேயே கொண்டாட வேண்டியதுதானே. அதென்ன மாட்னான் இளிச்சவாயன் என்பது போல் அரசு பேருந்துகளை எடுத்துகொண்டு அண்ணா சாலையில் ஆட்டம் போடுவது? இதற்கெல்லாம் அனுமதி கொடுத்து, பேருந்தும் கொடுத்து அனுப்புகிறார்களே..அவர்களை சொல்லவேண்டும்.
சென்ற வாரம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட தீர்மானித்து கோயம்பேட்டில் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, போலீசார் அவர்களை அங்கேயே நிறுத்திவிட, இந்த so-called மாணவர்கள் கடுப்பாகிவிட்டார்கள். பின்பு அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த கும்பல்கள் ஒன்று கூடி எதிர்ப்பை காட்ட முடிவு செய்திருக்கிறது. விளைவு? கல்லூரி வளாகத்தில் இருந்துகொண்டு சாலையில் கண்டபடி கல் எறிந்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனர் ஒருவரும், பயணி ஒருவரும் இதில் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
குழந்தை மீது கற்கள் படாமல் தாயிடம் சேர்க்கும் காவலர்
இந்த சம்பவத்திற்கு பின் சில மாணவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த வழக்கு கொஞ்ச நாளுக்கு இழுத்து, கொஞ்சம் ஃபைனும், நீதிபதியின் அறிவுரை கலந்த கண்டனத்தோடும் இந்த மாணவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் இவர்கள் வெளியே வருவதற்குள் இவர்கள் பெற்றோர் எவ்வளவு வேதனைகளையும், அவமானங்களையும் தாங்க வேண்டி இருக்கும். இதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்திருந்தால், எந்த ஒரு மாணவனும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவேமாட்டான். ஹீரோயிசத்தை காட்டுவதற்கு வாழ்வில் எவ்வளவோ பாஸிட்டிவான வழிகள் இருக்கும்போது, ஒரு விலங்கு மாதிரி கூரையில் ஆடுவதெல்லாம் எதற்கு? பரிணாம வளர்ச்சியை சாலையில் செல்பவர்களுக்கு நினைவூட்டுவதற்கா?
இதற்கு சரியான நிரந்தர தீர்வு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்வதுதான். எதற்கோ கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவது, அவரை வீட்டை விட்டு அனுப்புவது, இவர் மேல் கேஸ் போடுவது, சட்டசபையில் நேருக்கு நேர் சவால் விடுவது என்று எதிலெதிலோ வீரத்தை காட்டும் இந்த அரசு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்தால் அதை கண்டிப்பாக பலரும் வரவேற்பார்கள். முடிவு தமிழக அரசி(யி)ன் கையில்!
மொத வேலையா அம்மா, இதுக்கு முடிவு கட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க. போங்க பாஸ் நீங்க வேற.
ReplyDeleteஎன் ஆஃபிஸ் கதீட்ரல் ரோடில் இருந்தபோது, 29C தடத்தில் தான் பயணிப்போம். எந்த காலேஜ்ன்னு தெரியல. ஒரு தடவ, கும்பலா பசங்க ஏறி, செஞ்ச வேல, கண்றாவியா இருந்தது. பஸ்ல எல்லாரும் சேர்ந்து திட்டவே இறங்கிட்டானுங்க.
//இதற்கு சரியான நிரந்தர தீர்வு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்வதுதான்//
ReplyDeleteவேறு வழியே இல்லை என்பது தான் உண்மை!
சமீபத்துல நர்சிங் மாணவிகள்மீது தடியடில்லாம் நடத்துனாங்களே, “அம்மா”! அவங்களுக்கு இது தெரியாது போல - யாருமே அவங்க கவனத்துக்குக் கொண்டுபோகல போல, பாவம். இல்லன்னாஒரு வழி பண்ணிருக்க மாட்டாங்க?
ReplyDeleteUnmai thaan. Sariyaa thaan ezhuthirukkeenga.
ReplyDeleteநன்றி வித்யா, நான்கு நாட்கள் முன்பு இதை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக மேடம் கவனத்துக்கு போகும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteநன்றி அமைதி அப்பா, அந்த அறிவிப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நன்றி ஹுஸைனம்மா, அம்மாவுக்கு, சின்னம்மா சொந்தங்களை கட்டம் கட்டறதுக்கும், ‘திராணி’ வசனங்களுக்கும்தான் நேரம் இருக்கு போல :(
ReplyDeleteநன்றி மோகன்
PAARPPOM ARASIN MUDIVAI...!
ReplyDeleteநன்றி இரசிகை
ReplyDelete