Friday, January 13, 2012

2012 சென்னை புத்தக கண்காட்சி

2012 சென்னை புத்தக கண்காட்சி. கடந்த வாரம் ஞாயிறு அன்று சென்றிருந்தேன்.  என்னதான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தாலும் நமக்கு ஞாயிறுதான் செட் ஆகிறது. மதியம் 3:30 மணிக்கு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில் அலுவலக நண்பரும் சேர்ந்துகொள்ள, அவரிடம் ரெண்டு மூணு மணி நேரம் சுத்தணும் பரவாயில்லியா என்றேன். அவரும் சரி என்று சொல்லிவிட, முதல் வாயிலில் இருந்து ஆரம்பித்தோம். 

அங்கு இங்கு என சுற்றினாலும், கிழக்கு எங்கே என எதிர்பார்ப்பதில் நான் இன்னும் தாமரையாகவே இருக்கிறேன். உண்மையாக சொன்னால், கிழக்கு இந்த முறை சற்று ஏமாற்றம்தான் அளித்தது. சென்ற வருடம் இருந்த அளவு, இந்த வருடம் பல புத்தகங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரெண்டு ஸ்டாலாக போட்டிருந்தாலும், பெரும்பாலும் அதே புத்தகங்கள்தான் குவிந்திருந்தது. 




சுஜாதா. இன்னமும் தலைவர் புத்தகங்கள்தான் நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. கிழக்கில் பார்த்த வரை, புத்தகம் வாங்கும் அனைவரும் குறைந்தபட்சம் தலைவர் எழுதிய ஒரு புத்தகத்தையேனும் வாங்குகிறார்கள். இருபது முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளெல்லாம் இன்று வாசிப்பவர்களுக்கும் பிடிக்கிறதென்றால், என்ன மாதிரியான மனுஷன் இவர்?! ரஜினி, ரஹ்மான், சச்சின்...இவர்களை எல்லாம் பிடித்திருந்தாலும் சந்திக்கவேண்டும் என்று இதுவரை ஆசைப்பட்டதில்லை. ஆனால் தலைவரை ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். ப்ச்...ஒரு லோடு மண் :(

கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தது கவிஞர் வாலியின் 'நினைவு நாடாக்கள்'தான். மற்றதெல்லாம் கண்காட்சிக்கு போன பின் அலைந்து திரிந்து வாங்கியதுதான். நான் பெரும்பாலும் தீவிர இலக்கியங்களையோ, மனம் நெகிழவைக்கும் கதைகளையோ வாசிக்க விரும்புவதில்லை. த்ரில்லர் கதைகள் மற்றும் கிழக்கு வெளியிடும் முக்கிய நபர்கள், நிறுவனங்கள், நிகழ்வுகள் குறித்த புத்தகங்கள்தான் இன்னும் ஃபேவரைட்டாக இருக்கிறது.

புத்தகங்கள் வாங்கி முடித்த பின் கிளம்பும்போது நாங்கள் கண்ட காட்சி. புத்தக அரங்கிற்கு வெகு அருகில் ஒரு கார் நின்றிருந்தது. அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி, டிரைவரிடம் வண்டியை எடுக்க சொல்லிகொண்டிருக்கும்போது, ஒருவர் கொஞ்சம் கால் ஊன்றியபடி கார் அருகே நடந்து வந்தார். இயக்குனர் மணிவண்ணன்! முன்பு படத்தில் பார்த்தது போலில்லை. உடல் நலம் குன்றி கொஞ்சம் இளைத்திருந்தார். அவரை பார்ப்பதற்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. மனதில் ஒரு நிமிடம், அவ்வை சண்முகி காட்சிகள் ஞாபகத்திற்கு வந்தன. கவுண்டருக்கு பிறகு, விவேக், வடிவேல் ஆகியோர் முன்னணிக்கு வரும்முன் இவர்தானே சில காலம் ஒரு கலக்கு கலக்கிகொண்டிருந்தார்!


இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள்

1. நினைவு நாடாக்கள் - கவிஞர் வாலி - ரூ.140/-
2. சச்சின் - ஒரு சுனாமியின் சரித்திரம் - கே.ஆர். ரமேஷ் - ரூ.140/-
3. யுத்தம் - நக்கீரன் கோபால் - ரூ.300/-
4. வாழ்க வளமுடன் - வி.ராம்ஜி - ரூ.75/-
5. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - என்.சொக்கன் - ரூ.85/-
6. ஃபேஸ்புக் வெற்றி கதை - என்.சொக்கன் - ரூ.115/-
7. வாரன் பஃபட் - பணக் கடவுள் - செல்லமுத்து குப்புசாமி - ரூ.110/-
8. கிளியோபாட்ரா - முகில் - ரூ.95/-
9. வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன் - ரூ.125/-

தலைவர் ஸ்பெஷல்

1. 14 நாட்கள் - ரூ.60/-
2. சிவந்த கைகள் - ரூ.60/-
3. இருள் வரும் நேரம் - ரூ.90/-
4. தங்க முடிச்சு - ரூ.60/-
5. ஆ! - ரூ.120/-

இன்னமும் மனதுக்கு ஏதோ ஒரு திருப்தி கிடைக்காமல் இருக்கிறது. மறுபடியும் காணும் பொங்கல் அன்று செல்லலாம் என்றிருக்கிறேன். தலைவரின் மேலும் சில புத்தகங்கள், இஸ்ரேல் உளவு அமைப்பு குறித்த ஒரு புத்தகம், யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் மற்றும் சில காமிக்ஸ்கள் எல்லாம் லிஸ்டில் இருக்கின்றன. பார்ப்போம்!

6 comments:

  1. அலோ தலைவர் புக் எல்லாம் படிச்சிட்டு exchange-பண்ணிக்கலாமா? நீங்க சொன்ன தலைவர் புக் எதுவும் என்னிடம் இல்லை. சீரியஸா தான் கேக்குறேன் !

    விசா பதிப்பகத்தில் (ஸ்டால் எண் - 112 ) தலைவர் புக்ஸ் கம்மி விலையில் கிடைக்குது. பாருங்கள்

    நானும் இப்போ எல்லாம் சீரியஸ் புக் படிக்கிறதில்லை ரகு.

    ReplyDelete
  2. ஆஹா வெல்கம் டு தி கிளப்:))

    சுஜாதா புக்ஸ் வாங்காம புத்தக கண்காட்சி நிறைவுபெறுவதில்ல. நான் விருப்பமில்லா திருப்பங்கள், வஸந்த் வஸந்த் ரெண்டும் வாங்கினேன். நம்ம ஃப்ரெண்டு அள்ளியிருக்காங்க. அவங்க முடிச்சவுடனே, நம்மகிட்ட வந்திடும்.

    யார் என்ன வேணா சொல்லட்டும். சுஜாதா சுஜாதா தான்.

    பி.கு : நான் அவரை நேரில் படித்து அவர் கையால புத்தகம் பரிசு வாங்கியிருக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது:) வயிறு எரியுதா?

    ReplyDelete
  3. நல்ல புத்தகங்களை வாசிக்கும்போது ஏற்படும் நிறைவு வேறு எதில் கிடைக்கும்...!!! நல்ல பழக்கம்.... தொடர்ந்து வாசியுங்கள் ரகு!

    ReplyDelete
  4. வாங்க மோகன், நான் ரெடி. நேரில் சந்திக்க முடியா விட்டாலும் தபாலிலோ கொரியரிலோ அனுப்பி வைக்கிறேன். அலுவலக முகவரியை மெய்ல் பண்ணுங்க. லெட்ஸ் ஸ்டார்ட் ம்யுசிக் :)

    நன்றி வித்யா, வஸந்த் வஸந்த் படிச்சிருக்கேன். சூப்பரா இருக்கும்.

    //பி.கு : நான் அவரை நேரில் படித்து அவர் கையால புத்தகம் பரிசு வாங்கியிருக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது:) வயிறு எரியுதா?//

    லைட்ட்ட்டா :)

    நன்றி ப்ரியா, Absolutely correct. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியை மட்டும் தவற விடுவதே இல்லை :)

    ReplyDelete
  5. >>இருபது முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளெல்லாம் இன்று வாசிப்பவர்களுக்கும் பிடிக்கிறதென்றால், என்ன மாதிரியான மனுஷன் இவர்?!

    உண்மைதான் ரகு. நீங்கள் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விமர்சனம் எதிர்பார்க்கலாமா ?

    சிவந்த கைகளின் தொடர்ச்சி கலைந்த பொய்கள் புத்தகமும் நீங்கள் வாங்க வேண்டி இருக்கும்...

    ReplyDelete
  6. ஆஹா முன்னாடியே தெரியாம போச்சே, கலைந்த பொய்களை தேடுகிறேன். தகவலுக்கு நன்றி பால்ஹனுமான்

    ReplyDelete