Monday, March 07, 2011

சாப்பாட்டு இராவணன்

ஊரிலிருக்கும் வரை, வீட்டில் அம்மா செய்யும் டிஃபன் பட்டியலில் இடம்பெறுவது பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி & உப்புமா. இவைதான் ரொட்டேஷனில் வலம் வந்து கொண்டிருக்கும். சைட் டிஷ்ஷில் மட்டும் நிறைய வெரைட்டி இருக்கும்படி பார்த்துக்கொள்வார் அம்மா.

இது தவிர வெளியே வேறொன்றும் ரசித்து சாப்பிட்டதில்லை. மூட் பொறுத்து பேக்கரியில் பப்ஸும், தள்ளுவண்டியில் சுண்டலும் துவம்சம் செய்யப்படும். தள்ளுவண்டியில் இருக்கும் சுண்ட ல், பேல்பூரி எல்லாம் சாப்பிட்டிருக்கிறீர்களா? பள்ளியிலிருந்து கல்லூரி நாட்கள் வரை, நான் மிகவும் ரசித்து சாப்பிட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அப்போதிருந்த தரமும், சுவையும் மிகவும் குறைந்திருக்கிறது.

உணவின் மீது அப்போதெல்லாம் அதிக ஆர்வம் இல்லாததால் அம்மா தப்பித்தார்கள். உப்பு சரியாக இருக்கிறதா என்று கூட கணிக்கத் தெரியாது. செய்வதை குறை சொல்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். இவையெல்லாம் ஊரிலிருக்கும்வரைதான்.


சென்னை. பெருமளவில் என் உணவுப்பழக்கத்தில் மாற்றம் வந்தது சென்னை வந்தபின்புதான். வந்த புதிதில் எப்போது ஹோட்டல் சென்றாலும் அதே வீட்டு புத்திதான் முன் வந்து நின்றது. எப்போதும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்திதான்.

பணியில் சேர்ந்த பின்பு, ’என்ன இது, சின்ன தோசையில ஏதோ வெங்காயம் தக்காளி அரிஞ்சு போட்ட மாதிரியிருக்கு’ என்று கிண்டல் செய்ததில் முறைத்து சொன்னாள் தோழியொருத்தி. இது பீட்ஸாடா! அதன்பின் அவ்வப்போது பீட்ஸா குடிசைக்குச் சென்று, விதம்விதமான பீட்ஸாக்களை உள்ளே தள்ளுவதில் மட்டும்தான் கவனம் இருந்தது.

இப்படியே இருந்தால் எப்படி? அடுத்த கட்டத்திற்கு போகவேண்டாமா என்று யோசித்ததினால் வந்த மாற்றம். அதுமட்டுமின்றி பேச்சிலராயிருப்பதில் கிடைக்கும் சுதந்திரம்.

அன்னையைப் பொறுத்தவரை
நான் வெஜிட்டேரியன்
சென்னையைப் பொறுத்தவரை
நான்வெஜிட்டேரியன்

அறிமுகமாயினர் அண்ணா நகர் அஞ்சப்பரும், வடபழனி பொன்னுசாமியும். பெரும்பாலும் எக் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் சைட் டிஷ். இதுவரை எத்தனை கோழிகளின் பாவத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்று தெரியவில்லை.

வீட்டில் அனைவரும் வெஜ். சென்னை வந்தபின்புதான் நான் நான் வெஜ். எதற்காவது கோபப்பட்டு பேசினால், ’நான் வெஜ் சாப்பிடற இல்ல, மிருக குணம், அதான் இவ்ளோ கோவம் வருது’ என்று ஒரு யார்க்கர் வீசுவார்கள் வீட்டில். ’அப்போ எவன் நல்லவன்னு சொல்லுங்க, அவனை கொன்னு சாப்பிடறேன், நல்ல குணம் வரும்’ என்று வந்த யார்க்கரை சிக்ஸராக்குவதில் அலாதி சுகம் எனக்கு.

நான் வெஜ் சாப்பிட ஆரம்பித்த சில நாட்களில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. பேண்ட் சைஸ். மிகுந்த யோசனைக்குப் பிறகு முடிவெடுத்தேன். பிழைத்தன சில கோழிகள்.



வேளச்சேரியில் வசிப்பதில் இருக்கும் பெரிய செளகரியம், மாடி ரயிலும், இங்கு குவிந்து கிடக்கும் உணவகங்களும். அஞ்சப்பர், நளாஸ், காரைக்குடி, திண்டுக்கல் தலப்பாகட்டி, கலிங்கா கெபாப் கோர்ட், ஹாட் சிப்ஸ், திருவல்லிக்கேணி ரத்னா கேஃப், அடுப்பங்கரை, வேங்க்ஸ் கிச்சன், டோமினோஸ் பீட்ஸா, மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி, மேரிப்ரவுன், பேஸ்கின் ராபின்ஸ், ஸ்நோ பார்க் என சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீப நாட்களில் சென்றதில், திண்டுக்கல் தலப்பாகட்டி (கவனிக்க: தலப்பாகட்டு அல்ல..தலப்பாகட்டி) ரொம்பவே பிடித்திருக்கிறது. சில உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிடமுடியாதபடி வயிறு கும்மென்றிருக்கும், ஏன்டா சாப்பிட்டோம் என்றெண்ணும் அளவிற்கு. ஆனால் இங்கு அந்த பிரச்னை துளிகூட இல்லை. தரமான அரிசி பயன்படுத்துகிறார்கள். அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆம்பியன்ஸில் குறையொன்றுமில்லை. நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சென்று அரட்டையடித்துக்கொண்டு சாப்பிட சரியான இடம்.

இன்னொன்று. வேங்க்ஸ் கிச்சன். இங்கு ஒருவருக்கு ஆர்டர் செய்தாலே இரண்டூ பேர் உண்ணும் அளவிற்கு இருக்கிறது குவாண்டிட்டி. அவர்களுடைய ஃப்ரைட் ஐஸ்க்ரீமிற்காகவே இன்னொரு முறை போகவேண்டும்.....ம்ம்ம்ம்!

க்ரிக்கெட் பார்ப்பதற்கு அடுத்து, இது போன்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்ப்பதில்தான் இப்போதெல்லாம் எனக்கு ஆர்வம் பொங்குகிறது. அடுத்தது மெக்ஸிகன் உணவு வகைகளை முயற்சி செய்து பார்க்க ஆசை. தற்போது சென்னையில் நல்லதொரு மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்னதான் பலவிதமாய் சாப்பிட்டாலும், உடல் நலமில்லாதபோது, இது கிடைக்காதா என மிகவும் ஏங்குவது ஒன்றே ஒன்றுதான். ஊரிலிருக்கும்போது அம்மா செய்து தரும் ரசம் சாதம்.


16 comments:

  1. நல்ல பயனுள்ள செய்திகள் நிறைந்த பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வேளச்சேரியில் நீங்க சொன்ன சில உணவங்கள் தான் போயிருக்கேன். நிறைய போகணும். மைண்ட்ல வச்சிக்கிறேன்

    இன்ட்லியில் 19 பேர் ஒட்டு போட்டுருக்காங்க. ஆனா கமெண்ட் குறைவா இருக்கு Why ?

    ReplyDelete
  3. வேளச்சேரி ஹாட் சிப்ஸ் ரொம்ப சுமார் தான் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் (Only once we went there)

    ReplyDelete
  4. வேளச்சேரி விஜயநகராண்ட, நாய்டு ஹால் எதிர்ல இருந்த தள்ளு வண்டி பாணி பூரி கடையில சாப்ட்டு இருக்கீங்களா? இப்போ அங்க அந்த கடை இல்லை...எங்க போனாங்கன்னு தெரியல?!

    ReplyDelete
  5. FYI

    http://vidhyascribbles.blogspot.com/2009/01/blog-post_31.html

    http://vidhyascribbles.blogspot.com/2010/10/go-mexico-texas-fiesta.html

    ReplyDelete
  6. நன்றி ரத்னவேல், கிண்டல் பண்றீங்களா? ;)

    நன்றி மோகன், இந்த ஓட்டு-கமெண்ட்...தெரியல மோகன், வாசிக்கும் நண்பர்கள் சிலர் பின்னூட்டமிடுவதில்லை. மேலும் பதிவுலகில் நான் எந்த நட்பு வட்டத்திலும் இல்லை, குழுவிலும் இல்லை. பதிவுலகில் எனது நட்புகள் (உங்களையும் சேர்த்து) கை விரல் எண்ணிக்கை கூட இருக்காது

    ReplyDelete
  7. நன்றி டக்கால்டி, ஏனோ இப்போதெல்லாம் எங்குமே பேல் பூரி, பாணி பூரியெல்லாம் சாப்பிட விரும்புவதேயில்லை. கல்லூரி நாட்களில் கிடைத்த சுவை இப்போது இல்லை என்பது என் எண்ணம்

    நன்றி வித்யா, உங்களுடைய பதிவுகளைப் பார்க்கும்போது டெக்ஸாஸ் ஃபியஸ்டா பெட்டர் சாய்ஸ் எனத் தோன்றுகிறது. மெக்ஸிகன் ‘சப்’பென்று இருக்குமோ?! முயற்சி செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
  8. கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்லையா.. எப்போ தான் சமையல் கத்துக்கப் போறீங்க..

    ReplyDelete
  9. வாங்க விக்கி, கல்யாணமா? இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துக்கறேனே..

    இப்பல்லாம் பக்காவா Maggi ப்ரிப்பேர் பண்றேன் தெரியுமா? ;))

    ReplyDelete
  10. ragu anna,

    saappaattukku naduvil post poda siramam aayidutho? bayangara gap vidareenga?? he he he... appo neenga bangalore famous broasted chicken saappitathillaiyaa?, oru thdavai poyi saappittu vaanga. konna paavam thinnaa pochu, he he... :)))

    ReplyDelete
  11. //பேச்சிலராயிருப்பதில் கிடைக்கும் சுதந்திரம்//... ரொம்ப நாள் நீடிக்காது ரகு:-)

    //என்னதான் பலவிதமாய் சாப்பிட்டாலும், உடல் நலமில்லாதபோது, இது கிடைக்காதா என மிகவும் ஏங்குவது ஒன்றே ஒன்றுதான். ஊரிலிருக்கும்போது அம்மா செய்து தரும் ரசம் சாதம்.//.... ஆமா ர‌கு.. உண்மைதான்!

    ReplyDelete
  12. வாய்ல ஜொள்ளு ஊத்திக்கிட்டே படிக்கிற மாதிரி இப்படி ஒரு பதிவை போட்டு பசியை கிளப்பி விட்டுட்டீங்க..! லன்ச் டைம்ல தெரியாம படிக்க ஆரம்பிச்சிட்டேன். But, உங்க ஃபினிஷிங் எனக்கு பிடிச்சிருக்கு..!

    ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை..! சீக்கிரம் எழுதுங்கோ..!

    -
    DREAMER

    ReplyDelete
  13. ந‌ன்றி அன்னு, கொன்ன‌ பாவ‌ம் தின்னா போச்சு...அட‌, இது புதுசாயிருக்கே!

    ந‌ன்றி ப்ரியா, இன்னும் நாள் இருக்குங்க‌ ;)

    ந‌ன்றி ஹ‌ரீஷ், எழுத‌க்கூடாதுன்னுலாம் இல்லை, வேலைப்ப‌ளு அதான்...ப்ள‌ஸ் என்னோட‌ சுறுசுறுப்பு ப‌த்திதான் உங்க‌ளுக்கே தெரியுமே :))

    ReplyDelete
  14. வீட்டிலே எலி வெளியிலே புலி
    என்பதுமாதிரி
    நானும் வீட்டிலேவெஜ் தான்
    இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    விஷயங்களும் எழுத்து நடையும் இயல்பாக இருப்பது
    மிகவும் பிடித்திருக்கிறது
    குறிப்பாக கோஷ்டிகளில் இல்லாதது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நன்றி ரமணி சார்

    ReplyDelete
  16. //

    கொன்ன‌ பாவ‌ம் தின்னா போச்சு...அட‌, இது புதுசாயிருக்கே!

    //

    theivam thantha veedu..song kettathillaiyaa?

    kannathaasan varikal...:)

    ok.

    rasam saatham finishing superb
    :)

    ReplyDelete