Sunday, October 10, 2010

மே அமிதாப் ப‌ச்ச‌ன் போல் ர‌ஹா ஹுன்

ப‌னைம‌ர‌ம் மாதிரி உய‌ர‌மா இருப்பார். ஹிந்தி ந‌டிக‌ர். அமிதாப் என்றால் இவ்வ‌ள‌வுதான் தெரியும் ப‌ள்ளி நாட்க‌ளில். அந்த‌ வ‌ய‌தில் ப‌டிப்பு க‌ச‌ந்த‌தே த‌விர‌, பொது அறிவு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஆர்வ‌ம் அதிக‌ரிக்க‌த்தொட‌ங்கிய‌து. இந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் 'கோன் ப‌னேகா க்ரோர்ப‌தி' நிக‌ழ்ச்சி ஆர‌ம்பித்த‌து.

KBC வெற்றிக்கு கேள்விக‌ள், ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌ம் ம‌ட்டும‌ல்லாது அமிதாப்பின் ஈகோ இல்லாத‌ அணுகுமுறையும் ஒரு கார‌ண‌ம். போட்டியாள‌ர்க‌ளுக்கு தான் ஒரு ஸ்டார் எதிரில் அம‌ர்ந்திருக்கிறோம் என்ற‌ பிர‌மிப்பில் இருந்து வெளிகொண‌ர்வ‌தில் சாம‌ர்த்திய‌சாலி. பொது அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌லாம் என்று பார்க்க‌ ஆர‌ம்பித்த‌ நிக‌ழ்ச்சி, சில‌ நாட்க‌ளில் அமிதாப்பின் ஸ்டைலுக்கா‌க‌வே பார்க்க‌லாம் என்றாகிப் போன‌தில் விய‌ப்பேதுமில்லை.





மீசை கூட‌ முளைத்திராத‌ வ‌ய‌து. பாண்ட்ஸ் ப‌வுட‌ரை கையில் கொட்டி, க‌ண்ணாடி முன் ப‌த்து நிமிட‌ம் பொறுமையாக‌ பார்த்து பார்த்து, அமிதாப்பின் வெண் பிரெஞ்சு தாடியைப் போன்றே வ‌ரைந்து கொண்டு, அம்மாவின் முன் சென்று "மே ர‌கு போல் ரஹா ஹுன்..கோன் ப‌னேகா க‌ரோர்ப‌தி ஸே" என்று அமிதாப்பின் குர‌லில் மிமிக்ரிய‌து இன்னும் நினைவில் உள்ள‌து. வ‌ய‌தானாலும் வெகு சில‌ரால் ம‌ட்டுமே ப‌ல‌ரையும் வ‌சீக‌ரிக்க‌ முடியும். இத‌ற்கு மிக‌ச்சிற‌ந்த‌ உதார‌ண‌ம் அமிதாப் ம‌ற்றும் ந‌ம்ம‌ எந்ந்ந்ந்ந்ந்...திரா!

'சிவாஜி' ப‌ட‌ம் ரிலீஸை நெருங்கிக்கொண்டிருந்த‌ நேர‌ம். அப்போது அயோத்தி, காம‌ன்வெல்த் கேம்ஸ் எல்லாம் தீனி போட‌வில்லை என்ப‌தால், ஹிந்தி நியூ(ஸ‌ன்)ஸ் சேன‌ல்‌க‌ள், யார் உண்மையான‌ சூப்ப‌ர் ஸ்டார்? அமிதாப்பா ர‌ஜினியா? என்று சும்மா கிட‌ந்த‌ சங்கை...ஆம் அதேதான். இத‌ற்கு ர‌ஜினியே ப‌தில‌ளித்திருந்தார். அந்த‌ க்ளிப்பிங் ஞாப‌க‌மிருக்கிற‌து. 5 ஸ்டார் ஹோட்ட‌ல் என்று நினைக்கிறேன். அங்கிருந்து ர‌ஜினி வெளியே வ‌ரும்போது செய்தியாள‌ர் இதே கேள்வியை கேட்க‌, அத‌ற்கு த‌லைவ‌ர், "No no, I may be a king..may be. But Amitji is an emperor" என்றார்.

சில‌ மாத‌ங்க‌ள் முன்பு 'ஜ‌ப் வி மெட்' ப‌ட‌ டிவிடி வாங்கிய‌போது, அதில் 'பூத்நாத்'தும் இருந்த‌து. போடா குழ‌ந்தைங்க‌ ப‌ட‌ம் என்று முத‌லில் தோன்றினாலும், ச‌ரி பார்ப்போம் என்று ஆர‌ம்பித்து, குழ‌ந்தையாக‌வே மாறிப்போனேன். ப‌ட‌ம் க‌டைசி அரை ம‌ணி நேர‌ம்தான் ரொம்ப‌ சுமாராக‌ இருக்கும். அந்த‌ சிறுவ‌னை ஆர‌ம்ப‌த்தில் ப‌ய‌முறுத்தி, பின்பு அவ‌ன் மேல் பாச‌ம் கொண்டு ஒரு தோழ‌னாக‌ மாறுவ‌தில் அமிதாப் அமிதாப்தான்! உங்க‌ள் இன்டெல‌க்ச்சுவ‌லை கொஞ்ச‌ம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு குழ‌ந்தையாக‌ இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தால் க‌ண்டிப்பாக‌ பிடிக்கும்.

இதோ மீண்டும் கோன் ப‌னேகா க்ரோர்ப‌தி ஆர‌ம்பிக்க‌ போகிற‌து. வெற்றியாள‌ருக்கு அதிக‌ப‌ட்ச‌ம் 5 கோடி என்கிறார்க‌ள். சேன‌ல் ஸ்டார் இல்லை, சோனி என்கிறார்க‌ள். இருக்க‌ட்டுமே, 'ஸ்டார்'ரில் வ‌ந்தால்‌தான் அமிதாப் ஸ்டார் என்றில்லை. 'சோனி'யில் வ‌ந்தாலும் அமிதாப் ஸ்டார்தான்.

ச்சே எதுக்கு இந்த‌ மொக்கை? ச‌ரி விடுங்க‌ள், சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லிவிடுகிறேன். சொன்னாலும் அமிதாப்புக்கு தெரியப்போவ‌தில்லை. என்ன‌வென்று கொஞ்ச‌ம் யோசியுங்க‌ள். அமிதாப்பை ப‌ற்றி ஏதாவ‌து கிசுகிசு? ரேகா? இந்த‌ மாதிரியெல்லாம் யோசிக்காதிங்க‌..பிச்சு புடுவேன் பிச்சு :)) நான் சொல்லவ‌ந்தது....


ஹாப்பி ப‌ர்த்டே அமித்ஜி!


என‌க்கு இன்னொரு ஹிந்தி நடிக‌ரையும் பிடிக்கும். அவ‌ரைப் ப‌ற்றி அடுத்த‌ மாத‌ம் பார்ப்போம். அவ‌ர் யாரென்று தெரிந்து கொள்ள‌ ஒரு க்ளூ...கிகிகி...கிர‌ண்!

6 comments:

  1. அமிதாப் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! குரோர்பதி மறுபடியும் அவருடன் ஆரம்பிக்க போறங்களாமே! டிவியில் காண்பித்தார்கள்!

    ReplyDelete
  2. உங்களோடு இணைந்து நானும் இந்திய சூப்பர் ஸ்டார் அமித்ஜிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. அமிதாப்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    //என‌க்கு இன்னொரு ஹிந்தி நடிக‌ரையும் பிடிக்கும். அவ‌ரைப் ப‌ற்றி அடுத்த‌ மாத‌ம் பார்ப்போம். அவ‌ர் யாரென்று தெரிந்து கொள்ள‌ ஒரு க்ளூ...கிகிகி...கிர‌ண்!//.... எனக்கு தெரியுமே:)ம்ம் அவரைப்பற்றியும் எழுதுங்க!

    ReplyDelete
  4. அமிதாப் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    Konjam Sounda Sonna Thaar oothiee alichuraporaanga..

    ReplyDelete
  5. ந‌ன்றி எஸ்.கே

    ந‌ன்றி ஸ்ரீ....

    ந‌ன்றி ப்ரியா, புத்திசாலிங்க‌ நீங்க‌ :)

    ந‌ன்றி இர்ஷாத், வாழ்த்துக்கு கூட‌வா தார் ஊத்துவாங்க‌...ஹிஹி :))

    ReplyDelete
  6. //கிகிகி...கிர‌ண்!//

    அட!! நம்ம பாஸிகருக்கு பொறந்தநாளா?..

    ReplyDelete