Wednesday, December 26, 2012

லாலா லால லா ல லா லாலலா


ப்பா அம்மாவுடன் நேற்று தி.நகர் போயிருந்தேன். இரண்டு மணி நேர பயண தூரத்தில் சென்னை இருந்தாலும், பொங்கல் பர்ச்சேஸிற்காக அப்பாவும் அம்மாவும் சென்னை வருவது இதுவே முதல் முறை. விடுமுறை தினம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 9:30க்கே தி.நகர் போய்விட்டோம். செவிக்கு உணவில்லாத காலை பொழுதில், சரவண பவன் இட்லியும் காபியும் வயிற்றுக்கு ஈயப்பட, ஜீரணத்திற்கும் சேர்த்து பில் போட்டிருந்தார்கள்.
10 மணிக்கு போத்தீஸில் களமிறங்கினோம். தி.நகரின் ராசியா என்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் கடையில் பத்து பதினைந்து நிமிடங்களில் புடவை எடுத்துவிடும் அம்மா, நான்கு புடவைகள் எடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. "எவ்வளவு நேரம் எடுத்துக்கறா பாருப்பா" என்று பொறுமையிழந்து அப்பா என்னிடம் வந்து புலம்ப, "பரவால்லப்பா, வருஷத்துல ஒரு நாள்தானே" என்று சமாதானப்படுத்தினேன்.

அடுத்த ஒரு மணி நேரம் அப்பாவுக்கு, தம்பிக்கு, எனக்கு என ட்ரஸ் எடுத்துவிட்டு, போத்தீஸில் இருந்து வெளியேறுகையில் அம்மா சொன்னார், "இனிமே பொங்கல் பர்ச்சேஸுக்கு இங்கேயே வந்து எடுக்கலாம்". அப்பா திரும்பி என்னை பார்த்தார். நான் மட்டும் என்ன செய்ய? எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்டது.

*******

ஞ்சுக்கு வேளச்சேரி வந்தடைந்தோம். அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வெளியுலக எக்ஸ்போஷர் ரொம்ப கம்மி. கூட்டுக்குள்ளேயே வாழ பழகிக்கொண்டவர்கள். அவர்களுக்கு புதியதாக இருக்கட்டும் என்றெண்ணி, Flamingo ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துப்போயிருந்தேன். Vegetarian Buffet. டீசண்ட்டான இடம். அமைதியான சூழல். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. இரண்டு பேரும் கொஞ்சம் excitedஆகவே இருந்தார்கள்.

எப்போதும் இதுபோல் தோன்றியதில்லை. வெளியே புதிய இடத்திற்கு தன் குழந்தைகளை கூட்டி வந்திருக்கும் தந்தையின் உணர்வில் இருந்தேன் நான். அவர்களோடு ஒரு சில விஷயங்களில், இன்றும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கிறது. Argue பண்ணியிருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன். எனினும், affection குறையவில்லை.

*******

ப்படியெல்லாம் feel பண்ணியதன் விளைவு......தற்போது, மொபைல் ரிங்டோனாக, எஸ்.ஏ.ராஜ்குமாரின் "லாலா லால லா ல லா லாலலா "வை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

6 comments:

 1. Flamingo பில் பார்த்து அவர்கள் சற்று டென்ஷன் ஆகலையா?

  அடுத்த வருஷம் அப்பா மற்றும் நீங்கள் மட்டுமல்லாது மருமகளுடன் சேர்ந்து போத்தீஸ்க்கு அம்மா செல்ல வாழ்த்துகள் !

  ReplyDelete
 2. நன்றி மோகன், Flamingoல Buffet எவ்ளோன்னு சாப்பிடும்போதே சொல்லிட்டேன் :)

  ReplyDelete
 3. //வெளியே புதிய இடத்திற்கு தன் குழந்தைகளை கூட்டி வந்திருக்கும் தந்தையின் உணர்வில் இருந்தேன் நான்.//... ரகு இப்போதுதான் முதல் முறையா ஃபீல் பண்ணி இருக்கீங்க இல்ல... உண்மைதான் ஒரு காலக்கட்டத்தில் பெற்றவர்கள் நமக்கு குழந்தைகளாகத்தான் மாறிவிடுகிறார்கள்!

  ReplyDelete
 4. //இப்போதுதான் முதல் முறையா ஃபீல் பண்ணி இருக்கீங்க இல்ல//

  ஆமா ப்ரியா, அவர்களை இது போல புது இடத்திற்கு கூட்டிப்போனது இதுவே முதல் முறை. அதுவும் எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தது.

  ReplyDelete
 5. @Priya said...
  //உண்மைதான் ஒரு காலக்கட்டத்தில் பெற்றவர்கள் நமக்கு குழந்தைகளாகத்தான் மாறிவிடுகிறார்கள்!//

  பிரியா அவர்கள் பேச்சுக்காக சொன்னார்களா இல்லை அனுபவத்தில் சொன்னார்களா என தெரியவில்லை. ஆனால் உண்மை அது தான். என் தந்தை இருந்தவரை வயதான பிறகு அப்படி தான் அவரும் சிறு குழந்தை போல் எங்களிடம் பேசுவார். நாங்களும் அவரை அப்படியே பார்த்துக்கொண்டோம். சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் GRD கிராண்ட் டேஸ் திறந்த சமயம். அப்பாவை (அம்மாவும் வந்தார்களா என சரியாக நினைவில்லை) மதிய buffet அழைத்துக்கொண்டு போனேன். சாப்பிட்டு வந்த பின் ஏன் வீண் செலவு. நீ ரொம்ப செலவு செய்கிறாய் என கூறிக்கொண்டே இருந்தார். உணர்வு பூர்வமான பதிவு. அடிக்கடி எழுதுங்களேன்.

  ReplyDelete
 6. //சாப்பிட்டு வந்த பின் ஏன் வீண் செலவு. நீ ரொம்ப செலவு செய்கிறாய் என கூறிக்கொண்டே இருந்தார்.//

  அதுதான் அப்பா :)

  நன்றி ஆதிமனிதன். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

  ReplyDelete