Saturday, August 13, 2011

ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?

சமீபத்தில் ‘மோர்சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா பொருள்களும் வாங்கியபின் பில் போடுகையில், அந்த பெண் கேட்டார், “பை கொண்டுவந்திருக்கீங்களா?

எனக்கு சட்டென புரியவில்லை, எப்போதும் கேட்காதவர் ஏன் இப்போது கேட்கிறார்? “இல்லை என்றேன்.

“கவருக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், ரெண்டு ரூபா சார்

“ஏன்?

“கவர்ன்மெண்ட் ப்ளாஸ்டிக் கவர்லாம் பேன் பண்ணியிருக்காங்க சார், நீங்க வீட்டுலர்ந்து கவர் எடுத்துட்டு வரலாம் இல்ல எங்ககிட்ட வாங்கினீங்கன்னா கவருக்கு சார்ஜ் போட்டு கொடுத்துடுவோம்




ஏதோ கவுன்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து அப்படின்னா கவர் சார்ஜையும் பில்லில் போட்டுக்குடுங்க என்றேன். அப்படியே பில் போட்டு கொடுத்துவிட்டாலும், நுகர்வோர் நீதி மன்றத்தில் முதலில் வழக்கு ஒன்றை தொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பது போல.

சிறிதும் தயக்கமின்றி அவரும் பில்லில் கவர் சார்ஜை போட்டுத்தந்தார். வேறேதும் பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. ப்ளாஸ்டிக் கவர்களை தடை செய்வது சுற்றுப்புறச்சூழலுக்கு ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கு ஒரு மாற்று வழி ஒன்றை முறைப்படுத்தாமல் எப்படி இதை அமல்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசாங்கத்தை நொந்துகொள்வதா அல்லது வாய்க்கு வந்தபடி திட்டுவதா? ஓரிரு பொருட்கள் வாங்கும்போது சரி, வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு பையை எடுத்துக்கொண்டு போகலாம். வேறு வேறு கடைகளுக்குச் சென்று பல பொருள்கள் வாங்கும்போது, நாமென்ன கோணிப்பையையா தூக்கிக்கொண்டு போகமுடியும்?

ப்ளாஸ்டிக்கை தடை செய்தபின் அதற்கு மாற்றாக விற்பனையாளர்கள்தானே நுகர்வோருக்கு வேறு ஏதேனும் ஒன்றை ஈடுசெய்ய வேண்டும். அதை செய்யாமல் ஏன் நம் மீது திணிக்கிறார்கள்? ம்ம்...என்ன கத்தினாலும் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. சலித்துப்போகும் வரை புலம்பவேண்டியதுதான்.


17 comments:

  1. தனியாக கவருக்கு சார்ஜ் செய்ததால்தானே புலம்புகிறீர்கள். பொருளின் விலையை ஏற்றியிருந்தால் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  2. தலைவா. ஒரு ஏழு வருஷம் முன்னாடி யோசிச்சு பாருங்க. எந்த கடைக்கு போனாலும் பிளாஸ்டிக் கூடை பேக் அல்லது மஞ்சள் பை தானே எடுத்துட்டு போனீங்க. இப்பதான் நமக்கு எல்லாம் ஸ்டைல் தேவைப்படுது. நம்ம ஆளுங்க ப்ரீயா கொடுத்தா அடங்க மாட்டானுங்க. அரசு செஞ்சது சரி.

    ReplyDelete
  3. More idea is very good. I think all are follow it.

    ReplyDelete
  4. இது நல்ல திட்டமாகதான் தெரியுது. நமக்கும் கொஞ்சம் சமுக பொறுப்பு இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  5. எப்போதும் கையில் செல்போன் வைத்துக்கொண்டே அலைய பழகி விட்டோம்.ஒரு துணி பையையும் எடுத்துக் கொள்ள பழக்கப் படுத்திக் கொண்டால் தான் என்ன?

    ReplyDelete
  6. ந‌ன்றி டாக்ட‌ர்

    ந‌ன்றி முத்து கும‌ர‌ன்

    ந‌ன்றி ந‌ரேன்

    ந‌ன்றி அன்னோன்

    ந‌ன்றி சேக்காளி

    ReplyDelete
  7. பின்னூட்ட‌ங்க‌ளைப் பார்க்கும்போது, சொல்ல‌ நினைத்த‌தை ச‌ரியாக‌ சொல்ல‌வில்லையென‌ நினைக்கிறேன்.

    ஒரு க‌டையில் சென்று ப‌ல‌ பொருள்க‌ள் வாங்கும்போது அத‌னை ச‌ரியான‌ முறையில் பேக் ப‌ண்ணி கொடுக்க‌வேண்டிய‌து விற்ப‌னையாள‌ரின் க‌டமை. இன்று ச‌ட்ட‌ம் இய‌ற்றிய‌பின் ப்ளாஸ்டிக் க‌வ‌ரை ஒதுக்குவ‌து ச‌ரிதான் என்று சொல்லும் நாம், ச‌ட்ட‌ம் இய‌ற்றும் முன்பு அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டுதானே இருந்தோம்.

    நான் சொல்ல‌வ‌ருவ‌து, ஏதொவொரு துணிப்பையோ, ம‌ஞ்ச‌ள் பையோ, அதை கொடுக்க‌வேண்டிய‌து விற்ப‌னையாள‌ர்தான். இல்லை, வீட்டில் இருந்துதான் எடுத்துக்கொண்டு போக‌ வேண்டும் என்று சொல்ப‌வ‌ர்க‌ள், ஒரு முறை இர‌ண்டு மூன்று க‌டைக‌ளுக்குச் சென்று பாருங்க‌ள். There are definitely some practical difficulties...

    ReplyDelete
  8. ஆமா, நல்ல கோணிப் பையாத் தூக்கிட்டுப் போங்க கடைக்குப் போகும் போது. கல்யாணம் பண்ணினதுக்கப்பறம் போறதுக்கு ப்ராக்டிஸ். ;)

    ReplyDelete
  9. அங்க‌ இன்னும் இந்த‌ ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வர‌லியா விக்கி. சீக்கிர‌ம் வ‌ர‌ணும்னு எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டிக்கொள்கிறேன் ;)

    ReplyDelete
  10. கடைக்குச் செல்லும் முன்னரே நீங்கள் என்ன வாங்கச் செல்கிறீர்கள் என்று முடிவு செய்துகொண்டுதானே செல்கிறீர்கள்? அதற்குத் தகுந்தவாறு பைகளையும் எடுத்துச் செல்லலாமே? பைகள் வீட்டில் இல்லையென்றால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். எவ்வளவோ செலவு செய்து வீட்டுக்கு எதையெதையோ வாங்கி போடுகிறோம், கடைகளுக்குச் செல்வதர்க்கேன்று பைகளை வாங்கிப் போடுவது மட்டும் ஏன் நடக்கவே இயலாதது போல ஒரு தோற்றத்தை எர்ப்படுத்துகிறீர்கள்? எதுவுமே எளிதாக வராதுதான், கஷ்டப் பட்டுத்தான் கற்றுக் கொள்வோமே? இன்றைக்கு உங்கள் சவுகரியத்தைப் பார்த்தால், பிளாஸ்டிக்கால் உங்கள் பேரப் பிள்ளைகள் உண்ண உணவே இல்லாமல் போகுமே, அது பரவாயில்லையா? அப்படியே பைகள் வேண்டுமென்றால் மண்ணில் மக்கும் பைகள் உள்ளனவே, அதைப் பயன் படுத்துபடி சம்பந்தப் பட்டவர்களைச் சொல்லலாம். பிளாஸ்டிக் ஒழிய வேண்டும், அதற்க்கு படித்தவர்கள் முழுமையாகக் கடை பிடித்து மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும், அதை விடுத்து அதற்க்கு மாறாக செயல்படுவது ஏற்கத் தக்கதல்ல.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ந‌ன்றி ஜெய‌தேவ் தாஸ், ப்ளாஸ்டிக் க‌வ‌ருக்கு மாற்று வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேனே த‌விர‌ ப்ளாஸ்டிக் க‌வ‌ர்தான் வேண்டுமென்று சொல்ல‌வில்லை.

    ப‌ல‌ பொருள்க‌ளை ஒரே க‌டையில் வாங்கும்போது அதை ச‌ரியாக‌ பேக் ப‌ண்ணி கொடுப்ப‌து விற்ப‌னையாள‌ருடைய‌ க‌ட‌மை. ப்ளாஸ்டிக் க‌வ‌ருக்கு ப‌திலாக‌ அவ‌ர்தான் நுக‌ர்வோருக்கு வ‌ழ‌ங்க‌வேண்டும் என்கிறேன். இன்று ப்ளாஸ்டிக் க‌வ‌ர் த‌டையை வ‌ர‌வேற்கும் நாம், த‌டை வ‌ருவ‌த‌ற்கு முன் அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தாம‌லா இருந்தோம்?

    மீண்டும் சொல்கிறேன். ப்ளாஸ்டிக் க‌வ‌ர் த‌டையை நான் ஆத‌ரிக்கிறேன். ஆனால் அத‌ற்கு மாற்று வ‌ழி ஒன்றை விற்ப‌னையாள‌ர்க‌ள்தான் செய்ய‌ வேண்டும், பொது ம‌க்க‌ள் அல்ல‌.

    ReplyDelete
  13. ந‌ன்றி இர‌சிகை

    ReplyDelete
  14. naan irukkira oorla..
    tissue pola konjam thick-aa thunip pai kodukkiraanga.
    ippothaan kavanikiren naan..
    udane ragu ninivu vanthuchu..
    maatru vazhi irukkathaane seiyuthu!!

    ippovum vaazhthukal ragu sir..

    ReplyDelete
  15. ந‌ன்றி இர‌சிகை, 'ர‌கு' போதும். 'Sir' வார்த்தைக்கு நான் த‌குதியான‌வ‌ன் அல்ல‌

    ReplyDelete
  16. command adipadaiyum orutharai oruthar kurai solvathai vitutu elarumm avanga pangai olunga seithale pothum ippa nilavura pirachanaiya mulusa mudivuku kondu vanthidalaam

    ReplyDelete