Thursday, June 23, 2011

சீரியல்.......கில்லர்தான் இப்பொழுதும்

ஆசை ஆசையாக ஒரு எல்சிடி டிவி வாங்கி ஆறு மாதம் ஆகிறது. முன்பே சொன்னதுபோல் சத்தியமாக சச்சினுக்காகத்தான் வாங்கினோம். எனவே உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியே.


உலகக் கோப்பைக்கு பின்புதான் மற்ற சேனல்களை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தேன். ஒரு வார காலத்தில் ஐபிஎல் ஆரம்பித்தாலும், மனம் பெரிதளவில் அதில் லயிக்கவில்லை. எல்லா சேனல்களிலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பெரிய தலைவலி. ஆடுவதும், பாடுவதும், அதற்கு நாட்டாமைகள் மூவர் தீர்ப்பு சொல்வதும் ஒருவித எரிச்சலையே தருகிறது. ஒரு சில வாரங்கள் மட்டுமே ’நீயா நானா’ கோபி ஈர்க்கிறார். மற்ற சமயங்களில் மரண மொக்கை. சிவகார்த்திகேயனின் ‘அது இது எது’வுக்கும் இது பொருந்தும்.

ஹிந்தி நியூஸ் சேனல்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும் எப்படி ஒன்றுக்கும் உதவாத செய்திகளையெல்லாம் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் ராஜ்தீப் சர்தேசாய்...ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் பரவாயில்லை, சன் நியூஸையும், ஜெயாவையும் பார்ப்பது மிகுந்த ஆனந்தத்தையே தருகிறது. ஒருவரை ஒருவர் எவ்வளவு அழகாக மானத்தை வாங்குகிறார்கள். கீப் இட் அப் கைஸ்!

ஆங்கில படங்கள் பக்கம் போனால், இப்போதைக்கு ஸ்டார் மூவிஸ், ஹெச்பீஓ, சோனி பிக்ஸ், ஸீ ஸ்டுடியோ, யூடிவி வேர்ல்ட் மூவிஸ் ஆகிய சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறேன். மூவிஸ் நவ் எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. இவற்றில் தினமும் படம் பார்க்க முடியவில்லை என்றாலும், ஞாயிறுகளிலாவது ஏதேனும் ஒரு படம் முழுதாய் பார்க்கமுடிகிறது. வாரயிறுதிகளில் மட்டும் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல நல்ல படங்களை ஒளிபரப்புகிறார்கள். 

திரைப்படங்கள் ஒளிபரப்புவதில் நிஜமாகவே அசத்துபவர்கள் ஹிந்தி சேனல்கள்தான். வெளியான சில நாட்களிலேயே, எவ்வளவு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சேனலில் ஹிந்தி படங்கள் ரிலீஸாகிவிடுகின்றன. கஜினி, டபங், பேண்ட் பாஜா பாராத், கோல்மால் 3 என ஹிட்டான படங்களையும் சீக்கிரம் சின்னத்திரையில் பார்ப்பது ஆச்சரியத்தையே தருகின்றன. நம்மாட்கள்தான் விசேஷ நாட்களில் மட்டும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வெளியிடுகின்றனர். 

சில வருடங்கள் முன்பு எந்த நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தாலும், விளம்பரங்கள் வந்துவிட்டால் சேனலை மாற்றிவிடுவேன். விளம்பரங்களைப் பார்ப்பதற்கா ரிமோட் வைத்திருக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் விளம்பரங்கள்தான் தொலைக்காட்சி அனுபவத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. நிறைய பேர் க்ரியேட்டிவிட்டியில் பின்னி எடுக்கிறார்கள்.



டெய்ரி மிலக் - ‘எங்கிட்ட எப்ப கடைசியா ஐ லவ் யூ சொன்ன’ என்று கேட்கும் மனைவியிடம், கணவன் முதலில் கொஞ்சம் தயங்கி டெய்ரி மில்க் கொடுத்துவிட்டு ‘இதோ இப்போ’ என சொல்லும் விளம்பரம். இந்த விளம்பரத்தில், அலட்டிக்கொள்ளாத கணவனும், கடைசியில் அசத்தலான ரியாக்‌ஷன் காட்டும் மனைவியும், மனதை அள்ளுகின்றனர். இசையும் ரசிக்கும்படி இருந்தது.

இப்போது யோசிக்கையில் எதற்கான விளம்பரம் என்று நினைவுக்கு வரவில்லை. ஒரு முகமூடித் திருடன் வங்கியை கொள்ளையடித்துக்கொண்டு போனபின், வயதான பெண்மணியொருவர் ‘செக்யூரிட்டீஈஈஈஈ’ என கத்த, முகமூடி திருடனே வந்து சலாம் போட்டு நிற்பார். திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல் இவ்விளம்பரம் அமைந்திருந்தது அருமை.

முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ரன்பீர் கபூரின் ரியாக்‌ஷன்ஸ் அசத்தலாய் இருக்கிறது டோகோமோ விளம்பரத்தில். ரன்பீரை தவிர பெரியளவு பொருட்செலவு செய்யாமல் எடுத்திருக்கின்றனர். அவர்களுடைய பாஸ் சொல்லியிருப்பார் போல, ‘கீப் இட் சிம்பிள் ஸில்லி’ என்று. 

அறிமுகமான புதிதில் இருந்த சுவாரஸ்யம் இப்போது அவ்வளவாய் ஜுஜூ விளம்பரங்களில் இருப்பதில்லை, மூன்று பேருடன் டேபிள் டென்னிஸ் ஆடும் விளம்பரம் தவிர்த்து. இவ்விளம்பரத்தைப் பார்த்தபோது, கை தொடாமல் முறைத்து பார்த்தே ஒரு ரயிலை பின்னோக்கி ஓடச்செய்யும் பாலகிருஷ்ணா நினைவுக்கு வந்தார். ஜுஜு விளம்பரங்களுக்கு இசையும் மிகப்பெரிய பலம்.





சீரியல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. பள்ளி நாட்களில்தான் சித்தி, அலைகள், மர்மதேசம் என ஒரு சில சீரியல்களைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். இப்போது மறுஒளிபரப்பு செய்தால்கூட மர்மதேசம் கதைகளை ஆர்வமாக உட்கார்ந்து பார்ப்பேன்.

யதேச்சையாய் ஒரு நாள் மதியம் அலுவலகம் கிளம்புவதற்கு முன் சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது, ஏதோவொரு சீரியலில் ‘அலைகள்’ துர்காவைக் காண நேர்ந்தது. அழகு! சில வருடங்களுக்கு முன் பார்த்த ‘அலைகள்’ துர்காவாகவே இன்னமும் இருக்கிறார். என் நினைவு சரியெனில், அப்போதே எஸ்பி சரண் நடித்த ஒரு சீரியலில் வில்லியாகவும் நடித்திருக்கிறார். இந்த பச்சிளங்குழந்தையைப் போய் அழுமூஞ்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எப்படித்தான் இயக்குனருக்கு மனது வருகிறதோ!

சரி துர்காவுக்காக பார்க்கலாம் என முடிவு செய்து அந்த சீரியலைப் பார்த்தால்......ஒரு நாள் துர்கா குடும்பத்தைப் பற்றி காட்சி வந்தால் அடுத்த நான்கு நாட்கள் வேறு சில குடும்பங்களை நோக்கி காட்சி நகர்கிறது.

  • ‘அவளை நான் பழி வாங்காம விடமாட்டேன்’ என கண்ணை உருட்டுகிறார் ஒரு பெண்மணி.

    •  ‘சொத்தை பிரிச்சே ஆகணும்’ என்கிறார் குடும்பத்தின் மூத்த மகன்.

      • ‘எங்கப்பா மேலயா கை வெச்ச, உன்னை கொல்லாம விட மாட்டேண்டா’ என காவல் நிலையம் முன்பே வில்லனை மிரட்டுகிறார் ஒருவர்.

        •  ’எங்க அண்ணனை ஏமாத்துன இல்ல, அதான் நான் உன்னை ஏமாத்தி எங்கண்ணனுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்’ என்கிறார் தம்பி. 

          • வீட்டு வெளியே ஒருவர் வந்து, ‘டேய் வெளியே வாடா எங்க ஒளிஞ்சிருக்க’ என்று சத்தம் போட, உள்ளேயிருந்து அமைதியாய் ஒரு பெண் வந்து கூலாக சொல்கிறார், ‘எங்கண்ணண் வீட்ல இல்ல, என் புருஷன் மேல கம்ப்ளைண்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார்’. 


          ப்பா சாமி......முடியல!


          7 comments:

          1. //சில வருடங்களுக்கு முன் பார்த்த ‘அலைகள்’ துர்காவாகவே இன்னமும் இருக்கிறார்//

            இல்லீங்க நல்லா வெயிட் போட்டுட்டார். ஜெயா டிவியில் ஒரு கணவன மனைவி போட்டியில் வருகிறார். அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்.. தெரியுமா ரகு :))

            கொஞ்ச நாளே ஆனால் கூட சீரியல் எல்லாம் பார்த்து பிரமிக்க வைக்கிறீங்க ..

            நீங்கள் விவரித்த விளம்பரங்கள் நைஸ்.

            //டோகோமோ விளம்பரத்தில். ரன்பீரை தவிர பெரியளவு பொருட்செலவு செய்யாமல் எடுத்திருக்கின்றனர். அவர்களுடைய பாஸ் சொல்லியிருப்பார் போல, ‘கீப் இட் சிம்பிள் ஸில்லி’ என்று. //

            நீங்கள் சொன்ன பிறகு தான் "அட ஆமாம்ல" என யோசிக்கிறேன்

            ReplyDelete
          2. விளம்பரங்களின் அலசல் நன்றாக இருக்கிறது!ரசிக்க வைக்கும் விளம்பரங்களில் டெய்ரி மிலக் விளம்பரமும் ஒன்று!அழகான காட்சி அது!

            என்ன ரகு சீரியல் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாச்சா:-)
            //ப்பா சாமி......முடியல!//... பெரும்பாலும் இதுதான் நிலைமை:)

            ReplyDelete
          3. நன்றி மோகன்

            //இல்லீங்க நல்லா வெயிட் போட்டுட்டார்//

            அப்படியா? எனக்கு அவ்வளவா வித்தியாசம் தெரியவில்லை

            //அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்.. தெரியுமா ரகு//

            பரவால்ல மோகன் :(


            நன்றி ப்ரியா, சும்மா இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே பார்த்தேன். அதுக்கே முடியல!

            ReplyDelete
          4. //
            ரசிக்க வைக்கும் விளம்பரங்களில் டெய்ரி மிலக் விளம்பரமும் ஒன்று!அழகான காட்சி அது!
            //

            m....:)

            ReplyDelete
          5. நன்றி இரசிகை

            ReplyDelete
          6. நான் ரசித்த பல விஷயங்களை நீங்களும் தொகுத்திருக்கிறீர்கள். எல்லாமே அருமை.. துர்கா வில்லியாக நடித்த சீரியல் ”ஊஞ்சல்”.. ஹி.ஹி.. படிக்கும் போதே அந்த சீரியல் என்னோட ஃபேவரைட்.. அதோட டைட்டில் சாங் கிடைக்குமா என்று நெட்டில் பல நாட்களாக வேறு தேடிக்கொண்டிருக்கிறேன்..

            ReplyDelete
          7. க‌விதை காத‌ல‌ன்...சூப்ப‌ர் பாஸ்! 'க‌ஜினி'க்கு எக்ஸாக்ட் ஆப்போஸிட் நீங்க‌ள் :-)

            ReplyDelete