Friday, October 29, 2010

It's all about L O V E

காத‌ல். அவ‌ஸ்தைப‌ட‌ப்போகிறோம் என்று தெரிந்தே விழும் சுக‌மான‌ கிணறு. அதிலும் இந்த‌ காத‌லி என்று ஒருத்தி இருக்கிறாளே. அவ‌ளை இவ்வுல‌கின் மிகச்சிற‌ந்த‌ மேஜிஷிய‌ன் என்பேன். பெற்றோர், ந‌ண்ப‌ர்க‌ள் என‌ எல்லோரையும் ம‌ற‌க்க‌ச்செய்து, ஒரு மிக‌ச்சிறிய‌ ஓர‌ப்பார்வையிலேயே கிறுக்க‌னை கூட‌ வைர‌முத்துவாக‌ மாற்றிவிடுவாள்.
'வாடா ம‌ச்சான் இன்னைக்கு ச‌ர‌க்க‌டிக்க‌லாம்' என்று உயிர் ந‌ண்ப‌னின் அழைப்பு உசுப்பேற்றிவிடும். இல்ல‌ ம‌ச்சி இனிமே த‌ண்ணிய‌டிக்க‌மாட்டேன்னு என் ஆள்கிட்ட‌ ச‌த்திய‌ம் ப‌ண்ணியிருக்கேன்டா என்று சொன்ன‌வுட‌ன் ந‌ண்ப‌னிட‌மிருந்து ஒரு ஏள‌ன‌ச் சிரிப்பும், ப‌ல‌ கெட்டவார்த்தைக‌ளும் கூட்ட‌ணி அமைத்து போர் தொடுக்கும். அப்பா, அம்மா, ஆசிரிய‌ர், பாஸ் என்று ப‌ல‌ரிட‌ம் செய்த‌ பொய் ச‌த்திய‌ம் எண்ணில‌ட‌ங்கா. ஆனால் அவ‌ளுக்கு கொடுத்த‌ ச‌த்திய‌த்தை மீற‌க்கூடாது என்ற‌ வைராக்கிய‌ம் எப்ப‌டி ந‌ம்மை ஆட்கொள்கிற‌து? சிம்பிள்..'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே, அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து?

சில‌ நாட்க‌ள் முன் அலுவ‌ல‌க‌த்தில் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் வேக‌வேக‌மாக‌ வ‌ந்து சொன்னார். கையில் PF Transfer Form.

ர‌கு, இதுல‌ ஃபேமிலி மெம்ப‌ர்ஸ் டீடெய்ல் கேக்க‌றான். இதுல‌ அப்பா அம்மாவோட‌ டேட் ஆஃப் ப‌ர்த்லாம் க‌ண்டிப்பா ஃபில் ப‌ண்ண‌ணுமா என்ன‌?

ஆமாங்க‌, க‌ண்டிப்பா ப‌ண்ண‌ணும்

ப்ச்...அவ‌ங்க‌ டேட் ஆஃப் ப‌ர்த் ம‌ற‌ந்து போச்சு

ச‌ரி, அவ‌ங்க‌ளுக்கு கால் ப‌ண்ணி கேளுங்க‌

இல்ல‌ ஜி‌, ரெண்டு வார‌ம் முன்னாடிதான் மெடிக்க‌ல் இன்ஷுர‌ன்ஸ் ஃபார்ம் ஃபில் ப‌ண்ணும்போது கால் ப‌ண்ணி கேட்டேன். இப்ப‌ ம‌றுப‌டியும் கேட்டா திட்டுவாங்க‌

இர‌ண்டு ம‌ணி நேர‌ம் க‌ழித்து மீண்டும் என்ன‌ருகே வ‌ந்தார்.

ர‌கு, அடுத்த‌ மாச‌ம் 24ம் தேதி நான் லீவு, இப்ப‌வே சொல்லிட்டேன், அப்புற‌ம் அதே நாள்ல‌ வேற‌ யாராவ‌து லீவ் எடுத்தா நான் பொறுப்பு கிடையாது

ஓகே பாஸ், நோ இஷ்யூஸ்...ஊருக்கு போறீங்க‌ளா?

இல்ல‌, அன்னைக்கு என் கேர்ள் ஃப்ரெண்டோட‌ ப‌ர்த்டே. க‌ண்டிப்பா லீவு போட‌ணும்னு சொல்லிட்டா

வாழ்க்கையில் இப்ப‌டியொரு மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ர‌ காத‌லிக்கு ம‌ட்டுமே சாத்திய‌ம்.

ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌னே காத‌ல் வ‌ய‌ப்ப‌ட்டு, ட்ரூ ல‌வ், தெய்வீக‌ம், அவ‌ளைப் பார்த்த‌வுட‌னே ம‌ன‌சுல‌ ஏதோ தோணுச்சு என்ப‌தெல்லாம் வெறும் பூச்சு வார்த்தைக‌ள். ஆணுக்கு ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ம் என்னும் சிறு புள்ளியில்தான் உண‌ர்வு தொட‌ங்குகிற‌து. அவ‌ளிட‌ம் இருக்கும் ஏதோ ஒரு அழ‌கு ஈர்க்கிற‌து. பின்பு அவ‌ளிட‌ம் ப‌ழ‌க‌த் தொட‌ங்கிய‌பின்தான் அவ‌ளின் சில‌ குணாதிச‌ய‌ங்க‌ள் அந்த‌ ஈர்ப்புக்கு மேலும் வ‌லிமை சேர்க்கிற‌து. ம‌ற்ற‌ப‌டி, கெமிஸ்ட்ரி, ஜ்யாக்ரஃபி, ஜுவால‌ஜி எல்லாம் க‌லா மாஸ்ட‌ர் க‌ண்டுபிடித்த‌ வ‌ஸ்துக‌ள்தான் என்ப‌து அடியேனின் க‌ருத்து.

கிரிக்கெட்டில் சில‌ ச‌ம‌ய‌ம் பேட்ஸ்மேன் ர‌ன் அவுட் ஆகும்போது க‌மெண்ட்ரியில் 'சூஸைட‌ல் அப்ரோச்' என்பார்க‌ள். காத‌லில் இத‌ற்கு நிக‌ரான‌து 'இவ‌ என் ஃப்ரெண்டுடி, பேரு ர‌ம்யா' என்று ஒரு தோழியை காத‌லிக்கு அறிமுக‌ப்ப‌டுத்திவைப்ப‌து. அத‌ன் பின் ஒரு சென்ச‌ஸ் அதிகாரியாக‌ அவ‌தார‌மெடுத்து ஆர‌ம்பிப்பாள். உன‌க்கெப்ப‌டி அவ‌ளைத் தெரியும்? அவ‌ வீடு எங்க‌யிருக்கு? அப்பா அம்மா என்ன‌ ப‌ண்றாங்க‌? எங்க‌ ஒர்க் ப‌ண்றா? அடிக்க‌டி அவ‌ளை மீட் ப‌ண்ணுவியா? சில‌ ச‌ம‌ய‌ம் நான் கால் ப‌ண்ணும்போது உன் லைன் பிஸியா இருக்குமே, அப்போ அவ‌ளோட‌தான் பேசிட்டிருப்பியா? உன்கூட‌ பைக்ல‌ வந்திருக்காளா?.................இன்ஃபினிட்டி.

மிக‌ப்பெரிய‌ விவாத‌ம் ந‌ட‌க்கும் அவ‌ளுட‌ன். விவாத‌ம் என்ப‌தை விட‌ வார்த்தைப்போர் என்று சொல்வ‌தே ச‌ரி. நிமிட‌ங்க‌ள்? ஹுஹும்..சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளாக‌ நீடிக்கும் இந்த போரின் முடிவில், தலையை லேசாக‌ வ‌ல‌துபுற‌ம் சாய்த்து, க‌ண்க‌ளை கொஞ்ச‌ம் சுருக்கி, 'என்ன‌டா?' என்று கொஞ்ச‌லாய் கேட்கும்போது புரியும். விடாப்பிடியாய் விவாத‌ம் செய்து ஜெயிப்ப‌தைவிட‌ அவ‌ளிட‌ம் தோற்றுப்போவ‌தில் சுக‌ம் அதிக‌மென்று.

காத‌ல் ப‌ற்றிய‌ விவாத‌த்தில் நண்ப‌ன் உதிர்த்த‌ முத்துக்க‌ள் 'ல‌வ்ல‌ No Pain, No Gain கிடையாதுடா, No Gain Only Pain'

நான் சொன்னேன், 'ல‌வ்ல‌ Pain itself is a gainடா' என்று. ச‌ரிதானே?

காத‌ல் ஒரு த‌வ‌ம‌ல்ல‌, வ‌ர‌மோ சாப‌மோ பெறுவ‌த‌ற்கு. எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு சுக‌மான‌ உண‌ர்வு. குடி, போதை என்று தேடிப்போகிற‌வ‌ர்க‌ளுக்கு காத‌ல் இன்னுமோர் கார‌ண‌ம். 'அவ‌ளால‌தான் குடிகார‌னானேன்', 'என் கேரிய‌ரே ஸ்பாய்ல் ஆயிடுச்சு' என்று எவ‌னாவ‌து சொன்னால் 'Bull$*#@' என்றுதான் திட்ட‌த்தோன்றும்.

போதும்..இன்னும் எழுதினால் விக்ர‌ம‌ன் ஆகிவிடுவேனோ? 'நாய‌க‌'னைப் போல் அட‌ம்பிடிக்க‌ மாட்டேன். அவ‌ர்க‌ள் நிறுத்துகிறார்க‌ளோ இல்லையோ நான் நிறுத்திக்கொள்கிறேன். எளிமையாக‌ ஒரு வ‌ரியில் சொல்வ‌தானால்.... Life is all about love, isn't it?

18 comments:

 1. வாழ்த்துகள்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
  :-)

  ReplyDelete
 2. அடெங்கொப்பா ர‌கு நீங்க‌ சொல்ற‌தையெல்லாம் பார்த்த‌ ஐ திங்க்...?!!!

  //'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே, அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து? //

  என‌க்கு பிடித்த‌ பாயிண்ட்ஸ் க்ரேட்..

  ReplyDelete
 3. தல உங்க பார்வைல காதல் விளக்கம் சூப்பர் :)
  Anything in Love is good..

  ReplyDelete
 4. காதல் உணர்வு இருந்தாலே எல்லாம்(வாழ்க்கை) ரம்மியமா இருக்கும் ரகு, உங்களின் இந்த பதிவை போல!
  நீங்க எழுதியதை போல தெய்வீகம்,etc., என்பதை விட அது ஒரு யதார்த்தமான உணர்வாகத்தான் நானும் நினைக்கிறேன்.

  Anyway Love & Love only... super! Coz Life is all about love!!!

  ReplyDelete
 5. அல்லோ.. இதை உங்களோட "அவங்க" படிச்சாச்சா? பிளாக் படிக்கும் பழக்கம் இல்லாட்டி பிரின்ட் அவுட் எடுத்தாவது காட்டிடுங்க .. இதனால்தான் ரொம்ப நாளா பதிவு வரலையா ரைட்டு

  ReplyDelete
 6. //காத‌ல். அவ‌ஸ்தைப‌ட‌ப்போகிறோம் என்று தெரிந்தே விழும் சுக‌மான‌ கிணறு//
  நல்ல டெஃபனிஷன்! நீச்சல் தெரியாமல் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்!

  //ல‌வ்ல‌ Pain itself is a gainடா//
  செம்ம...

  ரகு, கூடிய சீக்கிரம் உங்ககிட்டருந்து ஒரு லவ் ஸ்டோரியை எதிர்ப்பாக்குறேன்... (கற்பனையாத்தான்)

  //இவ‌ என் ஃப்ரெண்டுடி, பேரு ர‌ம்யா//
  ரகு..? யாரந்த ரம்யா..? ஒரு Intro கிடைக்குமா..?(ஹி! ஹி!)

  -
  DREAMER

  ReplyDelete
 7. //'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே, அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து? //


  ம்ம்ம்.....பதிவு தொடர் பதிவா?????
  :))

  ReplyDelete
 8. ந‌ன்றி ராஜு

  ந‌ன்றி இர்ஷாத்

  ந‌ன்றி வெறும்ப‌ய‌

  ந‌ன்றி பாலாஜி

  ந‌ன்றி அன்ப‌ர‌ச‌ன்

  ReplyDelete
 9. ந‌ன்றி ப்ரியா, தெய்வீக‌ம் அது இதுவென்று இல்லாவிட்டாலும், காத‌லை மிக‌ச் சுல‌ப‌மாக‌ வ‌லி கொடுக்கும் உண‌ர்வென்றே க‌ருதுகிறேன்

  ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா

  ந‌ன்றி மோக‌ன், ப்ளாக் லிங்க் அனுப்ப‌றேன்

  ந‌ன்றி ஹ‌ரீஷ், இதுவ‌ரை காத‌ல் க‌தை எழுத‌ முய‌ற்சித்த‌தில்லை. கொஞ்ச‌ நாள் போக‌ட்டும். ஒரு ல‌வ் த்ரில்ல‌ர் எழுத‌ முய‌ற்சி ப‌ண்றேன். ஆனா உங்க‌ அள‌வுக்கு எதிர்பார்க்காதீங்க‌

  ந‌ன்றி அன்னு, தொட‌ர் ப‌திவெல்லாம் இல்ல‌ங்க‌..ஏதோ எழுத‌ணும்னு தோணுச்சு, எழுதினேன்

  ReplyDelete
 10. ப்யூட்டிஃபுல் போஸ்ட். உங்களுக்குள்ளேயும் ஒரு காதல் கோட்டை இருக்கோ..
  பை த வே, ஒவ்வொண்ணும் அனுபவிச்சவங்களுக்கே புரியற கிறுக்குக் கணங்கள். நைஸ்.

  ReplyDelete
 11. //ஆணுக்கு ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ம் என்னும் சிறு புள்ளியில்தான் உண‌ர்வு தொட‌ங்குகிற‌து. அவ‌ளிட‌ம் இருக்கும் ஏதோ ஒரு அழ‌கு ஈர்க்கிற‌து. பின்பு அவ‌ளிட‌ம் ப‌ழ‌க‌த் தொட‌ங்கிய‌பின்தான் அவ‌ளின் சில‌ குணாதிச‌ய‌ங்க‌ள் அந்த‌ ஈர்ப்புக்கு மேலும் வ‌லிமை சேர்க்கிற‌து.//
  இதுதான் பாஸ் Core matter... ரொம்ப சரளமா சொல்லிருக்கீங்க.

  //காத‌ல் ஒரு த‌வ‌ம‌ல்ல‌, வ‌ர‌மோ சாப‌மோ பெறுவ‌த‌ற்கு. எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு சுக‌மான‌ உண‌ர்வு//

  இதைப் புரிந்து கொண்டவர்களின் காதல் மிக அழகாக ரசனையா இருக்கும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 12. //ஆணுக்கு ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ம் என்னும் சிறு புள்ளியில்தான் உண‌ர்வு தொட‌ங்குகிற‌து. அவ‌ளிட‌ம் இருக்கும் ஏதோ ஒரு அழ‌கு ஈர்க்கிற‌து. பின்பு அவ‌ளிட‌ம் ப‌ழ‌க‌த் தொட‌ங்கிய‌பின்தான் அவ‌ளின் சில‌ குணாதிச‌ய‌ங்க‌ள் அந்த‌ ஈர்ப்புக்கு மேலும் வ‌லிமை சேர்க்கிற‌து. ம‌ற்ற‌ப‌டி, கெமிஸ்ட்ரி, ஜ்யாக்ரஃபி, ஜுவால‌ஜி எல்லாம் க‌லா மாஸ்ட‌ர் க‌ண்டுபிடித்த‌ வ‌ஸ்துக‌ள்தான் என்ப‌து அடியேனின் க‌ருத்து. //

  :)

  ReplyDelete
 13. http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html..

  ReplyDelete
 14. ந‌ன்றி விக்கி

  ந‌ன்றி சிவா

  ந‌ன்றி த‌னி காட்டு ராஜா

  ந‌ன்றி இர்ஷாத்

  ReplyDelete