Sunday, September 19, 2010

ஒன்று பூஜ்ய‌ம் பூஜ்ய‌ம்

3 இடிய‌ட்ஸ் ச‌மீப‌த்தில்தான் பார்த்தேன். அதுவும் ரீமேக், ஷ‌ங்க‌ர், விஜ‌ய் என்றெல்லாம் ப‌த்திரிக்கைக‌ளில் வாசித்த‌ பின்புதான் பார்க்கும் ஆர்வ‌ம் அதிக‌மான‌து. பார்த்து முடித்தேன். இவ்வ‌ள‌வு நாளா பார்க்காம‌ விட்டுட்டோமே என்றுதான் தோன்றிய‌து.



ஆமிர்கான். த‌லைவா என்று க‌த்திக்கொண்டு, என் த‌லைவ‌ன் எப்ப‌டி ப‌ண்ணியிருக்கான் தெரியுமா என்றெல்லாம் த‌லைவ‌ன் புக‌ழ் பாடிக்கொண்டு இருக்கும் நிலையை க‌ட‌ந்துவிட்டேன் என‌த் தோன்றுகிற‌து. சிறு வ‌ய‌து முத‌லே என்ன‌தான் ஷாரூக்கான் ப‌ட‌ங்க‌ளை ர‌சித்து பார்த்தாலும், ஆமிரையும் ர‌சிக்கிறேன். மாத‌வ‌ன், ஷ‌ர்மான் ஜோஷி, க‌ரீனா க‌பூர், போம‌ன் இரானி என்று அனைவ‌ரிட‌மும் அறையும், உதையும் வாங்குகிறார். பார்ப்ப‌த‌ற்கு மிக‌ ய‌தார்த்த‌மாக‌ இருந்த‌து. வேறு யாராவ‌து ந‌டித்திருந்தால் (ஷாரூக் உட்ப‌ட‌), அறை வாங்கும் காட்சிக‌ளை த‌விர்த்திருக்க‌க்கூடும். கொஞ்ச‌ம் கூட‌ ஈகோ இல்லாம‌ல் ந‌டித்த‌தினால் ஆமிரை இன்ன‌மும் பிடிக்கிற‌து.

உங்க‌ளுக்கு எந்த‌ துறை விருப்ப‌மோ அதில் ஈடுப‌டுங்க‌ள். க‌ட்டாய‌த்திற்காக‌ பிடிக்காத‌ துறையைத் தேர்ந்தெடுத்து ப‌டிக்க‌ வேண்டாம் என்று போதிக்கிறார்க‌ள். போத‌னைக‌ள் ந‌ம‌க்கு எப்போதும் 'ப்ச்' ர‌க‌ம்தான். ஆனால் இந்த‌ ப்ட‌ம் பார்க்கும்போது ச‌லிப்பு ஏற்ப‌ட‌வில்லை. ப‌ட‌த்தின் ஒரே குறை என‌ என‌க்குத் தோன்றிய‌து, பிர‌ச‌வ‌ம் பார்க்கும் காட்சி. அப்சொல்யூட் சினிமாத்த‌ன‌ம். கேப்ட‌ன் மொபைல் லைட்டில் ச‌ர்ஜ‌ரி செய்தால் கிண்ட‌ல் செய்கிறோம். ஆமிர் என்றால் 'ஆ'வென்று வாயைப் பிள‌க்க‌ வேண்டுமா என்ன‌?

த‌ற்போதிருக்கும் சூழ்நிலையில் விஜ‌ய்க்கு இது ச‌ரியான‌ வாய்ப்பு. அவ‌ர் எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்திக் கொ'ல்ல‌'ப் போகிறார் என்ப‌து தெரிய‌வில்லை. ஈகோவை விட்டுவிட்டு, ஷ‌ங்க‌ர் சொல்பேச்சை கேட்டால், விஜ‌ய்க்கு இது க‌ண்டிப்பாக‌ ப்ளாக்ப‌ஸ்ட‌ர்தான்.

****************************************

ஹும்...99 டெஸ்ட்டோடு ஓய்வு(?) பெற்ற‌ அஸாருதீன் போல‌ ஆகிவிடுவோமோ என்று ப‌ய‌ந்துகொண்டேயிருந்தேன். ஏதேதோ ஒப்பேத்தி எழுதி இதோ நூறாவ‌து ப‌திவு வ‌ரை வ‌ந்தாகிவிட்ட‌து.

அழ‌கான‌ வ‌ர்ண‌னைக‌ள். வ‌சீக‌ர‌மான‌ மொழி ந‌டை. இவ‌ற்றோடெல்லாம் கைகோர்த்து ந‌டை ப‌யில‌ இன்னும் ஆர‌ம்பிக்க‌வில்லை. இன்னும் த‌வ‌ழும் ப‌ருவ‌த்தில்தான் இருக்கிறேன். என்றாலும் எழுதும் ஆர்வ‌ம் ம‌ட்டும் இன்னும் குறைய‌வில்லை.

அதும‌ட்டும‌ல்லாது 'அட‌ச்சே! இவ‌னே எழுத‌றான், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது?' என்று புதிய‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக‌ இருப்ப‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி. வீட்டிலுள்ள‌ அறையிலேயே உட்கார்ந்து யோசித்த‌தில் இதுவ‌ரை எழுதிய‌திலேயே கொஞ்ச‌ம் பெருமூச்சுட‌ன் 'ஹும்..ஓகே' அப்ப‌டி என‌த் தோன்றுவ‌து இந்த‌ க‌தைதான்.



வெகு நாட்க‌ளாக‌ பிடித்திருந்த‌ ப்ளாகோமேனியா கொஞ்ச‌ம் குறைந்திருப்ப‌து போன்ற‌ உண‌ர்வு. கார‌ண‌ம் புதிய‌ வேலை. ஆணிக‌ள் அதேதான். இட‌ம்தான் புதுசு. ஜிமெய்ல், ப்ளாக் அக்ஸ‌ஸ் இருந்தாலும் ச‌ற்று த‌ய‌க்க‌மாக‌ இருக்கிற‌து. அதான் கொஞ்ச‌ நாள் போக‌ட்டும் என்று பொறுத்திருக்கிறேன்.

ஏன் ரொம்ப‌ நாளா எழுத‌வேயில்ல‌ என்று மொபைலிலும், மெய்லிலும் நிறைய‌ பேர் மாற்றி மாற்றி கேட்காவிட்டாலும், இர‌ண்டு மூன்று ந‌ண்ப‌ர்க‌ளாவ‌து கேட்ட‌தில் ம‌கிழ்ச்சியே. முன்பு போல் தொட‌ர்ச்சியாக‌ பின்னூட்ட‌மிடாத‌த‌ற்கு ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌ வேண்டும். விரைவில் க‌ள‌த்தில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கிறேன் ;)


புதிய‌ வேலை கிடைத்த‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்ள‌ ஊரிலிருக்கும் ந‌ண்ப‌னுக்கு மொபைலினேன்.

'ம‌ச்சி, எங்க‌ வெளியே இருக்கியாடா? நாய்ஸியா இருக்கு'

'ப‌ப்ஸ் சாப்புட‌ணும் போல‌யிருந்த‌து, அதான் பேக்க‌ரி வ‌ந்தேன்...என்ன‌ சொல்லு'

'புது ஜாப் கிடைச்சிருக்கு..இன்னைக்குதான் ஜாய்ன் ப‌ண்ணேன், இன்னும் சிஸ்ட‌ம் ரெடியாக‌ல‌..சும்மாதான் உட்கார்ந்துகிட்டிருக்கேன்..அதான் உங்கிட்ட‌ பேச‌லாம்னு...'

'வாவ்! சொல்ல‌வேல்ல‌, சூப்ப‌ர்! கங்கிராட்ஸ்டா'


'தேங்க்ஸ்டா, சொல்ல‌க்கூடாதுன்னுலாம் இல்ல‌, ஜாய்ன் ப‌ண்ண‌துக்க‌ப்புற‌ம்....'


என்னை முடிக்க‌விடாம‌ல் அடுத்து ஒரு கேள்வி கேட்டான். என்ன‌ கேட்டிருப்பான் என்று ச‌ற்று யூகியுங்க‌ள்.

ட்ரீட் எப்போ?

என்ன‌ க‌ம்பெனி?

ஆஃபிஸ் டைம் என்ன‌?

எந்த‌ ஏரியா?

எவ்வ‌ள‌வு ச‌ம்ப‌ள‌ம்?

எப்ப‌டி போற‌? பைக்ல‌யா? ப‌ஸ்ல‌யா?

சாப்பாடுலாம் எப்படி?

அடுத்து என்ன‌ க‌ல்யாண‌ம்தானே?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஹுஹும்...அவ‌ன் கேட்ட‌ கேள்வி "ஆஃபிஸ்ல‌ ஃபிக‌ர்லாம் ந‌ல்லாருக்காடா?"


ந‌ண்பேன்டா!



15 comments:

  1. செஞ்சுரிக்கும், புதிய வேலைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாங்க ரகு...
    நூறுக்கு மற்றும் புது வேலைக்கு வாழ்த்துக்கள்..
    வலைசரத்துல அண்ணன் மோகன் குமார் உங்க ப்ளாக் லிங்க் கொடுத்திருந்தாரு நண்பா!
    http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_17.html
    மீண்டும் வழக்கம் போல் கலக்க வாழ்த்துக்கள்..
    ந‌ண்பேன்டா! :)

    ReplyDelete
  3. வெல்கம் பேக்ண்ணே!
    அமீரோட சமீபத்திய “பீப்ளி லைவ்” பாருங்க. அதுவும் நல்லாருக்கும்!
    அப்பறம் நியூ ஜாப்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. புது வேலைக்கு வாழ்த்துக்கள்..அப்புறம் என்னமோ சொல்ல வந்தேன் மறந்..........

    ReplyDelete
  5. புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்.

    //ஹுஹும்...அவ‌ன் கேட்ட‌ கேள்வி "ஆஃபிஸ்ல‌ ஃபிக‌ர்லாம் ந‌ல்லாருக்காடா?"//

    அது தான் நல்ல நண்பனின் அடையாளம்.

    ReplyDelete
  6. அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்....

    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Did you watch "Tare Zamin Par"? That is also based on a wornderful concept of parents harassing the children to perform in exams. If you have not watched it , please do it now.

    ReplyDelete
  9. Welcome back....

    புது வேலைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. வாங்க வாங்க‌... வாழ்த்துக்கள்!

    அப்புறம் ரகு, நண்பர் கேட்ட கேள்விக்கு என்ன பதில்? கல்யாணம் ஆகும் வரை இப்படிதான் கேட்பாங்களோ!

    ReplyDelete
  11. ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, வெல்க‌ம் பேக் :)

    ந‌ன்றி பாலாஜி, மோக‌ன் குடுத்திருந்த‌ லிங்க்குக்கு லிங்க் குடுத்த‌துக்கு ந‌ன்றி ந‌ண்பா :))

    ந‌ன்றி ராஜு, 'பீப்ளி லைவ்' டிவிடி வாங்கினேன், ப‌ய‌புள்ளைக‌ 5.1ன்னு சொல்லி ஏமாத்திபுட்டானுங்க‌. இங்கிலீஷ் ச‌ப் டைட்டில் இல்ல‌ண்ணே :(

    ReplyDelete
  12. ந‌ன்றி அஹ‌ம‌து, என்ன‌ ம‌ற‌ந்.....?

    ந‌ன்றி அன்ப‌ர‌ச‌ன், அப்ப‌டிச் சொல்லுங்க‌ :))

    ந‌ன்றி வெறும்ப‌ய‌

    ReplyDelete
  13. Thanks Jayadeva, Yes I have watched 'Taare Zameen Par'. It's definitely a fantastic attempt by Aamir. I was moved while watching the climax. Absolutely wonderful experience..

    வாங்க‌ க‌ணேஷ், எப்ப‌டியிருக்கீங்க‌? கூடிய‌ சீக்கிர‌ம் ஆன்லைன் வ‌ர‌ முய‌ற்சிக்கிறேன் :)

    வாங்க‌ ப்ரியா, ஹி..ஹி...அப்புற‌மும் இப்ப‌டித்தான் கேட்பாங்க‌ன்னு நினைக்குறேன் :))

    ReplyDelete
  14. நாங்க சொல்லும் போது உங்களால பக்க முடியலே!!! இப்பவாது பாக்க தோனுச்சே !!

    ReplyDelete