Tuesday, August 10, 2010

எழுதுங்க‌ ந‌ர்சிம்

சோம்பேறி. ர‌கு. என்னால் ச‌ரியாக‌ உண‌ர‌ முடிகிற‌து இவ்விரு வார்த்தைக‌ளுக்கும் பெரிதொரு வித்தியாச‌ம் இல்லையென‌. வேலைப்ப‌ளு என்ப‌து ச‌ப்பைக்க‌ட்டு. அழ‌காய் ஒரு ப‌திவெழுத‌வேண்டும் என‌த் தோன்றினால், ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.

இதையாவ‌து ஒழுங்கா எழுதுடா சோம்பேறிப்ப‌ய‌லே என்று ஒரு தொட‌ர் ப‌திவிற்கு அழைத்திருக்கிறார் தோழி ப்ரியா. இதோ ஆர‌ம்பிக்க‌றேங்க‌ சுய‌புராண‌த்தை. எந்திர‌னின் அரிமா அரிமாவை ரொம்ப‌வே ர‌சித்துக்கொண்டிருக்கிறேன். அத‌னால் இப்ப‌திவின் பிண்ண‌ணி இசையாக‌ இதை க‌ற்ப‌னை செய்துகொண்டே வாசிக்க‌த் தொட‌ங்குங்க‌ள் :) கொஞ்ச‌ம் ஓவ‌ராத்தான் போறோமோ!

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்....

(என்ன‌டா விள‌ம்ப‌ர‌ம்?)




1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ர‌கு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஹுக்கும்..உண்மையான பெய‌ர் ச‌ச்சின் டெண்டுல்க‌ர். ஏங்க‌? முத‌லில் குறும்ப‌ன் என்ற‌ பெய‌ரில்தான் எழுத‌ ஆர‌ம்பித்தேன். மைலாப்பூர் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோயிலில், சாமி சிலைக‌ளுப் பின்ன‌ர் த‌மிழ் மாத‌ம் எழுதி ஒவ்வொரு பெய‌ர் எழுதியிருந்த‌ன‌ர். அப்ப‌டி நான் பிற‌ந்த‌ மாதத்திற்கு எழுதியிருந்த‌ பெய‌ர் பெரும‌ழிசைக் குறும்ப‌ர். முத‌ல்வ‌ர் இளைய‌வ‌ராக‌ இருந்த‌தால் 'முத‌ல்வ‌ன்' ஆன‌து போல் நானும் குறும்ப‌ன் ஆனேன். பின் த‌மிழ்ம‌ண‌த்தில் உலாவ‌ரும்போது இதே பெய‌ரில் வேறொருவ‌ர் இருப்ப‌த‌றிந்து, உண்மையான‌ பெய‌ரிலேயே எழுத‌லாம் என்று மாற்றிவிட்டேன். த‌விர‌ வெறும் ந‌கைச்சுவை ம‌ட்டும‌ன்றி எல்லாம் க‌ல‌ந்து எழுது என்று ந‌ட்புக‌ளின் 'மிர‌ட்ட‌ல்'க‌ளும் ஒரு கார‌ண‌ம். ஸ்ஸ்ஸ்ஸ்..இதுதான் 'குறும்ப‌ன்' 'ர‌கு'வான‌ க‌தை.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது த‌மிழ் வ‌லைப்ப‌திவுலகின் போதாத‌ நேர‌ம். வாசிப்ப‌வ‌ர்க‌ளின் ஜாத‌க‌த்தில் ச‌னியின் உச்ச‌ம். நீண்ட‌ நாட்க‌ளாக‌ நிறைய‌ ப‌திவுக‌ளை வாசித்துக் கொண்டே இருந்த‌தில், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது என்ற‌ ஏடாகூட‌மான‌ எண்ண‌ம் தோன்றியதால் வ‌ந்த‌ அபாய‌க‌ர‌மான‌ விளைவுதான் இந்த‌ வ‌லைப்பூ!

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திர‌ட்டிக‌ள். இதைத் த‌விர‌ வேறொன்றும் செய்ய‌வில்லை. நிறைய‌ பேருக்கு க‌மெண்ட் போடு அப்ப‌தான் உன‌க்கும் க‌மெண்ட் வ‌ரும் என்று ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளும், ந‌ண்ப‌ர்க‌ளும் அறிவுறுத்திய‌துண்டு. க‌மெண்ட் போட‌க்கூடாது என்று வேண்டுத‌லெல்லாம் இல்லை. அலுவ‌ல‌க‌த்தில் ச‌ற்று ப்ரைவ‌ஸி இல்லாத‌ கார‌ண‌த்தால் நிறைய‌ ப‌திவுக‌ளுக்கு க‌மெண்ட் போட‌முடிவ‌தில்லை. ஆனாலும் இய‌ன்ற‌வ‌ரை சில‌ருக்குத் தொட‌ர்ந்து க‌மெண்ட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ப்ளூக்ராஸ், 108 அவ‌ச‌ர‌ சேவை போன்று சில‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் எழுதிய‌துண்டு. பெரும்பாலும் சொந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுத‌ விரும்புவ‌தில்லை. இவ‌ள் என்னுடைய‌ தோழி என்று ஒரு பெண்ணைப் ப‌ற்றி எழுதினால்கூட‌ 'அவ‌ங்க‌ளுக்குள்ள‌ என்ன‌மோ ஓடுதுபா' என்று புற‌ம் பேசுப‌வ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ அறிவேன். அவ‌ர்க‌ள் பேசுவ‌து உண்மை இல்லையென்றாலும் இத‌னால் கிடைக்கும் காய‌ங்க‌ளும், வ‌லிக‌ளும் மிக‌ அதிக‌ம். என‌வே சொந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றியெல்லாம் அதிக‌ம் எழுதி அவ‌ல் கொடுக்க‌ விருப்ப‌மில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

குசும்பு புடிச்ச‌ கேள்வி இது. நான் எழுத‌ற‌த‌ வெச்சுலாமா ச‌ம்பாதிக்க‌முடியும்? நான் எழுதிய‌தை க‌ணிணித் திரையில் பார்க்கும்போது, யாராவ‌து ஒருத்த‌ர், ரெண்டு பேர் (இதுவே அதிக‌ம்) பாராட்டும்போது 'ம‌ச‌க்க‌லி'யின் ஆர‌ம்ப‌ இசை (ஹே ஹேஹே ஹே...) ம‌ன‌தில் வ‌ந்து போகும். அத‌ற்காக‌த்தான் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

த‌மிழில் இது ஒன்றுதான். நான் பார்த்த‌ ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளைப் ப‌ற்றியும், என் கேமிராக்குள் சிக்கிய‌ புகைப்ப‌ட‌க் கைதிக‌ளை சிறையில் அடைக்க‌வும் இரு ஆங்கில‌ வ‌லைப்பூக்க‌ளை ஆர‌ம்பித்தேன். ஆனால் தொட‌ர முடிய‌வில்லை. பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை : ஹ‌ரீஷ், ஜெய் & விக்னேஷ்வ‌ரி. ந‌ம்மால் இப்ப‌டி எழுத‌ முடிவ‌தில்லையே என்று ஏங்க‌ வைக்கும் எழுத்துக‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து. அப்ப‌டி ஏங்கும்போதெல்லாம், நேர‌ங்கால‌ம் தெரியாத மூளை "ச‌ட்டியில‌ இருந்தாத்தானே...." என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தித் தொலைக்கும்.

கோப‌ம் : ந‌ர்சிம். அவ‌ர் எழுதிய‌தை நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை. ஆனால் அவ‌ர் எழுதிய‌தைக் க‌ண்டிக்கிறேன் என்று ஆளாளுக்கு எழுத‌ ஆர‌ம்பித்த‌போதுதான் ஒவ்வொருவ‌ரின் ஆழ்ம‌ன‌ வ‌க்கிர‌ம் வெளிப்ப‌ட‌த் தொட‌ங்கிய‌து. அவ‌ர்க‌ள் எழுதிய‌ த‌ர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளை வாசிக்கும்போது இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டித்த‌வ‌ர்க‌ள்தானா என்றுகூட‌த் தோன்றிய‌து. அவ‌ர் எழுதினார், ப‌திலுக்கு நாங்க‌ எழுதினோம் என்ற‌ ச‌மாளிப்பெல்லாம் வேண்டாம். ஒருவ‌ரின் த‌வ‌றை அவ‌ருக்கு உண‌ர்த்துவ‌துதான் புத்திசாலித்த‌ன‌ம், விவேக‌ம். ஆனால் இங்கு திருப்பி அடிக்கும் 'வீர‌ர்'க‌ள்தான் நிறைந்திருந்த‌ன‌ர். வெளிப்ப‌டுத்த‌வில்லை...ஆனால் க‌டுங்கோப‌ம் கொண்ட‌து இந்த‌ வீர‌ப் ப‌திவ‌ர்க‌ள் மீதுதான்.

ந‌ர்சிம் அவ‌ர்க‌ளுட‌ன் என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ப‌ழ‌க்க‌மில்லை. நேரில் பார்த்த‌தில்லை. அலைபேசியில் பேசிய‌தில்லை. மின்ன‌ஞ்ச‌ல் தொட‌ர்பில்லை (ஒரு முறை 'ஏன் இப்போல்லாம் நீங்க‌ க்ரைம் க‌தைக‌ள் எழுத‌ற‌தில்ல‌' என்று கேட்டு மின்ன‌ஞ்ச‌லினேன்..அவ்வ‌ள‌வுதான்). அவ‌ரின் த‌ள‌த்தில் நான் இன்னும் ஃபாலோவ‌ர் ஆக‌வில்லை. ரெகுல‌ராக‌ அவ‌ர் ப‌திவுக‌ளுக்கு பின்னூட்ட‌ம் இடுவ‌துமில்லை. 'வீர‌ர்'க‌ளுக்கு முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்..நான் அவ‌ர் ஜாதியுமில்லை ;) (அவ‌ர் என்ன‌ ஜாதி என்ப‌தே ப‌திவுக‌‌ளின் மூல‌ம்தான் அறிந்தேன்). இப்ப‌டிப் ப‌ல‌ 'ல்லை'க‌ள். ஆனாலும் அவ‌ர் எழுத்தை ர‌சிக்கிறேன். அவ‌ரெழுதிய‌ இந்த‌ ஒரு ப‌திவு போதும் "வாவ்!"வென‌ வாயைப் பிள‌க்க‌ வைக்க‌. மீண்டும் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்த‌தில் ம‌கிழ்ச்சி. எழுதுங்க‌ ந‌ர்சிம் :)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

க‌ல்வி உத‌வி ப‌ற்றி எழுதிய‌போது க‌ணேஷ் வெளிநாட்டிலிருந்து தொட‌ர்புகொண்டு தானும் உத‌வ‌த் த‌யாராயிருப்ப‌தாக‌ தெரிவித்தார். எழுத்தின் தாக்க‌ம் அப்போதுதான் புரிந்த‌து. எவ்வ‌ள‌வு மொக்கையாக‌ எழுதினாலும், உற்சாக‌ப்ப‌டுத்துவ‌தில்..ச்சே..உசுப்பேத்துவ‌தில் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ங்கு அதிக‌ம் :) ம‌ற்ற‌படி, பாராட்டு......ஹும்ம்ம்ம் இந்த‌ மாதிரி ச‌ம்ப‌வ‌மெல்லாம் ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தை த‌ன்ன‌ட‌க்க‌த்துட‌னும், ஏக்க‌த்துட‌னும் தெரிவித்துக்கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ரொம்ப‌ முக்கிய‌ம்! ச‌ராச‌ரி, சோம்பேறி, சாஃப்ட்வேர் த‌மிழ‌ன் நான். அப்புற‌ம்..நாட்டுக்குத் தேவையான‌ விஷ‌ய‌ம்....I'm still happy, not married ;))



இத்தொட‌ரை தொட‌ர‌ நான் அழைக்க‌ விரும்புவ‌‌து

ஹ‌ரீஷ்

ஜெய்

விக்னேஷ்வ‌ரி



20 comments:

  1. naanthan first. kobam arumayaga ullathu

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கீங்க

    ஒரு விஷயத்த சொல்லுறதுக்கு இத்தனை டிஸ்கி எதுக்கு :)

    ReplyDelete
  3. தலைப்பு பர பரப்பா வச்சு எல்லாரையும் உள்ளே இழுக்குறீங்க..ம்ம்ம் ;

    ReplyDelete
  4. உண்மையான‌ உண‌ர்வுக‌ள் ...

    ReplyDelete
  5. சோம்பேறி. ர‌கு. என்னால் ச‌ரியாக‌ உண‌ர‌ முடிகிற‌து இவ்விரு வார்த்தைக‌ளுக்கும் பெரிதொரு வித்தியாச‌ம் இல்லையென‌. //
    உணர்ந்தால் மட்டும் போதாது. மாறணும் ஆஃபிஸர்.

    அழ‌காய் ஒரு ப‌திவெழுத‌வேண்டும் என‌த் தோன்றினால், ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.//
    சீக்கிரமே திருமணமாக வாழ்த்துகள். அப்புறம் சுத்தியிருக்குற எல்லாமே அழகாவே இருக்கும். :)


    இவன் பேரைச் சொன்னதும்
    பெருமை சொன்னதும்
    கடலும் கடலும் கைத்தட்டும்
    இவன் உலகம் தாண்டிய
    உயரம் கொண்டதில்
    நிலவு நிலவு தலை முட்டும்.... //
    ஆஃபிஸ்லேயே பகல் கனவா...

    இதுதான் 'குறும்ப‌ன்' 'ர‌கு'வான‌ க‌தை.//
    என்னவோ மெட்ராஸ் சென்னையான கதை ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறீங்க.

    பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)//
    வெக்கமில்லாம சொல்லிக்க. இதெல்லாம் ஒரு பொழப்பு.

    நர்சிம் பத்தி அழகா சொல்லிருக்கீங்க. ஆனா எதுக்கு வீரர்களுக்குப் பயந்து இத்தனை டிஸ்கி..

    I'm still happy, not married ;))//
    பொண்ணு தேட என்னா விளம்பரம்..

    தொடர்ந்திடலாம் ரகு.

    ReplyDelete
  6. // ந‌ம்மால் இப்ப‌டி எழுத‌ முடிவ‌தில்லையே என்று ஏங்க‌ வைக்கும் எழுத்துக‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து. //
    நாளைக்கு வந்து என்னைத் திட்டி ஒரு போஸ்ட் போடப்போறீங்களா? ;-)

    அழைப்புக்கு நன்றி ரகு... கண்டிப்பா எழுதறேன்...

    // சீக்கிரமே திருமணமாக வாழ்த்துகள். அப்புறம் சுத்தியிருக்குற எல்லாமே அழகாவே இருக்கும். :) //
    ரகு... பொண்ணுங்களுக்குதான் வாழ்க்கை அழகாகும்... நமக்கு அம்பேலாயிடும்... நம்பாதீங்க... நம்பாதீங்க... :-)

    ReplyDelete
  7. இயல்பாகவே அழகான நடை !! நிறைய எழுது ராசா !!!

    ஒய் டோண்ட் யூ ட்ரை தொடர்கதை நாவல் ?

    ReplyDelete
  8. //எழுதுங்க‌ ந‌ர்சிம் :) //
    ரிப்பீட்டு

    ReplyDelete
  9. ந‌ன்றி எல்கே

    ந‌ன்றி நேச‌மித்ர‌ன், நீங்க‌ எதை சொல்றீங்க‌ன்னு புரியுது. இந்த‌ வீர‌ சூர‌ ப‌திவ‌ர்க‌ள்...ந‌ர்சிம் என‌க்கு ந‌ண்ப‌ர், நான் அவ‌ர் ஜாதி, என‌க்கு பீர் வாங்கி கொடுத்தார், மோர் வாங்கி கொடுத்தார், அத‌னால்தான் அவ‌ரை ஆத‌ரித்து எழுதுகிறேன் என்றெல்லாம் புதிதாக‌ ந‌ர்சிம் மீது அவ‌தூறு கிள‌ப்ப‌க்கூடும் என்றெண்ணினேன். அத‌ற்காக‌த்தான் அவ்விள‌க்க‌ம் :)

    ஹி..ஹி..ந‌ன்றி மோக‌ன் :))

    ந‌ன்றி த‌ம‌ய‌ந்தி

    ReplyDelete
  10. ந‌ன்றி விக்கி

    மாற‌ணுமா? ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்ங்க‌

    உண்மைய‌ ஒத்துக்க‌ற‌துக்கும் ஒரு தில் வேணுங்க‌..இப்போ நீங்க‌ இருக்கீங்க‌..உங்க‌ளை சோம்பேறின்னு சொன்னா ஒத்துப்பீங்க‌ளா?..;)))

    ந‌ர்சிம் விஷ‌ய‌ம்... நான் பெரிய‌ வீர‌ன் இல்லைதான். ஆனா அந்த‌ 'வீர‌ர்'க‌ளுக்கு ப‌ய‌ந்து போய் டிஸ்கி போட‌ல‌. நேச‌மித்ர‌ன் அவ‌ர்க‌ளுக்கு ப‌தில் சொல்லியிருக்கேன் பாருங்க‌

    ச‌ந்தோஷ‌மாயிருக்கேன்னு சொல்றேன், பொண்ணு தேட‌றேன்னு சொல்றீங்க‌ளே :(



    ஹி..ஹி..உங்க‌ளைத் திட்டியா? வேணாம் ஜெய், அப்புற‌ம் என்னை பிர‌ப‌ல‌ப் ப‌திவ‌ராக்கிடுவாங்க‌ :))

    //அம்பேலாயிடும்// அனுப‌வ‌மோ ;)))

    ReplyDelete
  11. ந‌ன்றி ர‌வி, உசுப்பேத்த‌றீங்க‌ :)

    ந‌ன்றி பாலாஜி

    ReplyDelete
  12. ரகு,
    'தொடர்பதிவு எழுத சொல்லி என்னையும் மாட்டி விட்டுட்டீங்களா..'ன்னெல்லாம் ஃபார்மலா சொல்லாம, நீங்க தொடர்பதிவுக்கு அழைத்ததை ஏற்று கண்டிப்பாக எழுதுகிறேன்.

    //யாராவ‌து ஒருத்த‌ர், ரெண்டு பேர் (இதுவே அதிக‌ம்) பாராட்டும்போது 'ம‌ச‌க்க‌லி'யின் ஆர‌ம்ப‌ இசை (ஹே ஹேஹே ஹே...) ம‌ன‌தில் வ‌ந்து போகும். அத‌ற்காக‌த்தான் எழுதுகிறேன்.//

    அழகிய வர்ணனை... ரகு ஸ்டைல...

    -
    DREAMER

    ReplyDelete
  13. ந‌ன்றி ஹ‌ரீஷ்'னு ஃபார்ம‌லா சொல்ல‌க்கூடாதுன்னு நினைச்சாலும், இந்திய‌ன் ப்ளாக‌ர் கோட் ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ன்றி ஹ‌ரீஷ்'னு சொல்லிக்க‌றேன் ;))

    ReplyDelete
  14. எல்லா பதிலும் நல்லா இருக்கு.. அதிலும்...
    "basically நா கொஞ்சம் சோம்பேறி" ன்னு சொன்னிங்களே.. :D :D
    ரசித்தேன்.. நானும் கொஞ்சம் அப்படி தாங்க..
    இதோ பிரியா, அழைத்த இந்த தொடர் பதிவையே இன்னும் எழுதலைன்னா பாருங்க..
    அவங்க கூப்பிட்டது ரெண்டு பேரு, அதுல ஒருத்தங்க நீங்க....
    இப்ப நீங்க வேற எழுதி முடிசிடீங்க.....

    இப்பவாச்சும் போயி எழுத ட்ரை பண்றேன்.. வாழ்த்துக்கள்.. :-))

    ReplyDelete
  15. appu..buildup..konjam overa erunthalum...

    rasikerathu pola erkku..

    but unga nermai romba pidichu erukku mams..

    பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ,,

    yena nanum unga followers ellaiya..apdithan...

    ReplyDelete
  16. ungakita erunthu innum ethir parkinren..

    supera erukku eluthukkal..

    (eppadi usupethinalum enga mams ragu singam)


    THANK YOU.

    SIVA

    ReplyDelete
  17. ந‌ன்றி ஆன‌ந்தி, அப்ப‌ நீங்க‌ளும் அ.இ.சோ.மு.க‌ழ‌க‌த்தைச் சேர்ந்த‌வ‌ங்க‌தானா? ரைட்டு..சீக்கிர‌ம் எழுதுங்க‌ :)

    உங்க‌ளோட‌ நைஸ் எதைக் குறிப்பிடுதுன்னு புரியுது.. ந‌ன்றி கேபிள் ச‌ங்க‌ர் ;)

    ந‌ன்றி சிவா, பார்றா! க‌ழ‌க‌த்துல‌ இன்னொரு உறுப்பின‌ர் ;))

    ReplyDelete
  18. சாரி ரகு, உங்க அளவுக்கு இல்லைனாலும் நானும் கொஞ்சம் சோம்பேறிதான். பாருங்க எவ்வளவு லேட்டா வந்து இருக்கேன். என்னுடைய அழைப்பை ஏற்றி எழுதியதற்கு மிக்க நன்றி! வெளிப்ப‌டையான‌ ப‌தில்களின் மூலம் உங்களை பற்றி தெரிந்துக்கொண்டேன்.

    //ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.//... ஆ, ர‌குவுக்கு என்னமோ ஆச்சி:)

    ReplyDelete