Sunday, July 04, 2010

இதுவ‌ல்ல‌வோ வாடிக்கையாள‌ர் சேவை!

உங்க‌ள் அலைபேசியை யாரேனும் 'அடித்து'விடுகிறார்க‌ள் அல்ல‌து தெரியாம‌ல் நீங்க‌ளே தொலைத்துவிடுகிறீர்க‌ள். இந்த‌ சூழ்நிலையில் உட‌னே நீங்க‌ள் என்ன‌ செய்வீர்க‌ள்? வாடிக்கையாள‌ர் சேவை மைய‌த்தைத் தொட‌ர்பு கொண்டு உங்க‌ள் 'சிம்'மை ப்ளாக் செய்ய‌ சொல்வீர்க‌ள் ச‌ரியா?

சென்ற‌ வார‌ம் இதையேதான் என் ந‌ண்ப‌ரும் அவ‌ர‌து வோட‌ஃபோன் இணைப்பு பெற்ற‌ அலைபேசியை தொலைத்த‌போது செய்தார். சேவை மைய‌ அதிகாரியும் ந‌ண்ப‌ரின் அலைபேசி விப‌ர‌ங்க‌ளை கேட்டு அறிந்து கொண்டு அவ்வாறே செய்வ‌தாக‌ உறுதி அளித்தார். பின்பு யோசித்து பார்க்கையில் ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், வ‌ங்கி, அலுவ‌ல‌க‌ம் என‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் இந்த‌ எண்ணை கொடுத்திருப்ப‌தால், இதே எண்ணை மீண்டும் வாங்கினால் ந‌ன்றாக‌ இருக்குமென‌ தோன்றியிருக்கிற‌து ந‌ண்ப‌ருக்கு. மீண்டும் சேவை மைய‌ அதிகாரியுட‌ன் தொட‌ர்பு கொண்டு இதே எண் வேண்டுமென்றால், என்னென்ன‌ வ‌ழிமுறைக‌ள் பின்ப‌ற்ற‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கேட்ட‌றிந்தார்.


ந‌ண்ப‌ர் இருக்குமிட‌ம் குரோம்பேட்டை. என‌வே சேவை மைய‌ அதிகாரி, குரோம்பேட்டையிலுள்ள‌ வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்திலேயே புதிய‌ 'சிம்'மை பெற்றுக்கொள்ள‌லாம் என‌ தெரிவித்தார். மேலும் அவ‌ர் தெரிவித்த‌ சில‌ விவ‌ர‌ங்க‌ள்...

1. குரோம்பேட்டையிலுள்ள‌ வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்தின் வேலை நேர‌ம் காலை 10 முத‌ல் இர‌வு 8 வ‌ரை. இந்த‌ நேர‌த்திற்குள் எப்போது சென்றாலும் நீங்க‌ள் வாங்கிக்கொள்ள‌லாம்

2. இர‌ண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்ப‌ட‌ங்க‌ள்

3. குடியிருக்கும் இருப்பிட‌த்திற்கான‌ அத்தாட்சி

4. அலுவ‌ல‌க‌ அடையாள‌ அட்டையின் ஜெராக்ஸ் காப்பி (சியூஜி க‌னெக்ஷ‌ன் என்ப‌தால்)

5. புதிய‌ 'சிம்'முக்கான‌ கட்ட‌ண‌ம் ரூ.50

6. புதிய‌ 'சிம்' ஆக்டிவேட் ஆக‌ 24 ம‌ணி நேர‌ம் ஆகும்


காலை 11 ம‌ணிக்கு அலுவ‌ல‌க‌ம் வ‌ர‌வேண்டுமென்ப‌தால், ந‌ண்ப‌ர் காலை 10:15க்கே வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்திற்குச் சென்று விட‌, பின்புதான் தெரிந்த‌து.

1. குரோம்பேட்டையிலுள்ள‌ வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்தின் வேலை நேர‌ம் காலை 11 முத‌ல் இர‌வு 9 வ‌ரை. இத‌னைத் தெரிவித்த‌வ‌ர் வெளியே நின்றிருந்த‌ செக்யூரிட்டி. 10 ம‌ணிக்கே அவ‌ர்க‌ள் அலுவ‌ல‌க‌த்தைத் திற‌ந்து விட்டாலும், வாடிக்கையாள‌ர்க‌ளை உள்ளே அனும‌திக்க‌வில்லை. வ‌ந்திருந்த‌ வாடிக்கையாள‌ர்க‌ளை வெளியே வெயிலில் சாலையிலேயே நிற்க‌ வைத்த‌ன‌ர்.

2. 11 ம‌ணிக்கு உள்ளே சென்ற‌பின் த‌ன‌து பிர‌ச்னையை எடுத்துக் கூறி, த‌ன‌து இர‌ண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்ப‌ட‌ங்க‌ளைக் கொடுக்க‌, அவ‌ர்க‌ள் புகைப்ப‌ட‌ம் தேவையில்லை என்ற‌ன‌ர்!

3. குடியிருக்கும் இருப்பிட‌த்திற்கான‌ அத்தாட்சி......தேவையில்லை

4. அலுவ‌ல‌க‌ அடையாள‌ அட்டையின் ஜெராக்ஸ் காப்பி (சியூஜி க‌னெக்ஷ‌ன் என்ப‌தால்)......அதுவும் தேவையில்லை

5. புதிய‌ 'சிம்'முக்கான‌ க‌ட்ட‌ண‌ம் ரூ.50......இது ம‌ட்டும் ச‌ரி

6. புதிய‌ 'சிம்' ஆக்டிவேட் ஆக‌ எடுத்துக்கொள்ளும் நேர‌ம்...15 நிமிட‌ங்க‌ள்


அவ‌ர்க‌ள் புகாரை கேட்ட‌தும் பெயரையும், பிற‌ந்த‌ தேதியையும் ம‌ட்டுமே கேட்ட‌ன‌ர். சில‌ நிமிட‌ங்க‌ளில் ப‌ழைய‌ எண்ணிலேயே புதிய‌ சிம் கிடைத்த‌து. ந‌ண்ப‌ருக்கு ம‌கிழ்ச்சி! They lived happily ever after என்ப‌து போல் இத்துட‌ன் இப்ப‌திவை முடித்துவிட‌லாம்தான்.




ஒன்று ம‌ட்டும் ம‌ன‌தை உறுத்துகிற‌து. அதென்ன‌ ப‌ண்பு..வ‌ந்திருக்கும் வாடிக்கையாள‌ர்க‌ளை உள்ளே அழைத்து அம‌ர‌வைக்காம‌ல், வெளியே சாலையில் நிற்க‌ச்செய்வ‌து? நாங்க‌ளென்ன‌ உங்க‌ள் வீட்டு செல்ல‌ப்பிராணிக‌ளா..எப்போது உண‌வு கிடைக்கும் என்று உங்க‌ளையே பார்த்து வாலாட்டிக்கொண்டு கிட‌க்க‌.

வாடிக்கையாள‌ர்க‌ளை க‌வ‌ர்வ‌த‌ற்கு, ப‌ல் தேய்ப்ப‌து முத‌ல் இர‌வு போர்வை போர்த்தி விடும் வ‌ரை பின்தொட‌ரும் நாய்க்குட்டி விள‌ம்ப‌ர‌ம், ஜுஜுக்க‌ளின் குறும்புக‌ள் என‌ இவ‌ற்றிலெல்லாம் க‌வ‌ன‌ம் செலுத்தி ர‌சிக்க‌ வைப்ப‌வ‌ர்க‌ள் அடிப்ப‌டை ம‌னித‌ப் ப‌ண்பு கூட‌ தெரியாம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ளை வாடிக்கையாள‌ர் சேவைப் ப‌ணியில் அம‌ர்த்தியிருப்ப‌து வேடிக்கை.

இதை நுக‌ர்வோர் நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டு செல்ல‌லாம் என்றெண்ணினால் வ‌ழ‌க்கு இழுத்த‌டிக்குமோ என்ற‌ அச்ச‌மே அந்த‌ எண்ண‌த்திற்குத் த‌டையாய் நிற்கிற‌து. இதுபோல‌ ஒரு எண்ண‌ம் ம‌ன‌தில் தோன்ற‌ கார‌ண‌மாயிருக்கும் இந்திய‌ நீதித்துறையே, ஐ ல‌வ் யூ சோ ம‌ச்!

வெளியே ஸ்ப்ரைட் விலை 7 என்றால் கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்தில் ம‌ட்டும் 10. இன்னும் என்னென்ன‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு எத்த‌னை இட‌ங்க‌ளில்தான் அனுச‌ரித்துக் கொண்டே போக‌வேண்டும்? மார்க்கெட்டில் புதிதாக‌ அறிமுக‌மாகும்போது கும்பிடு போட்டு வ‌ர‌வ‌ழைத்து, பின் அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு குட்டினாலும் தாங்கிக் கொள்வ‌தில் ம‌ட்டும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். எங்க‌ளின் ச‌கிப்புத்த‌ன்மையை இன்னும் ஒரு ப‌டி உய‌‌ர்த்திய‌ வோ(ட்)ட‌ஃபோனுக்கு நெஞ்சார்ந்த ந‌ன்றி!

15 comments:

  1. ஐயா,
    ரொம்ப நாளாக என் மனதில் உறுத்திகொண்டிருந்த சில சமாச்சாரங்களை நீங்கள் இன்று பிழிந்து விட்டிருக்கிறீர்கள். இது போல எல்லோரும் கேட்டால் வியாபாரிகள் கொஞ்சம் அசையலாம். நேற்று கூட ஒரு பெண்மணி சார்பாக நான் கடைக் காரரிடம் ஏதோ கேட்க அந்த பெண்மணி எனக்கென்ன வந்தது என்பது போல பொருளை வாங்கிக் கொண்டிருந்தார். நம் மக்களுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை வந்தால்தான் இன்றைய வியாபாரிகள் மாறுவார்கள். வாடிக்கையாளர்களே நமது எஜமாண்கள் என்று காந்தி சொன்னதெல்லாம் இந்த அயோக்கியர்கள் காலத்தில் செல்லாது.

    ReplyDelete
  2. /இன்னும் என்னென்ன‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு எத்த‌னை இட‌ங்க‌ளில்தான் அனுச‌ரித்துக் கொண்டே போக‌வேண்டும்?/
    தினமும் என்னை உறுத்திக் கொண்டேயிருக்கும் கேள்வி!!!!

    ReplyDelete
  3. //மார்க்கெட்டில் புதிதாக‌ அறிமுக‌மாகும்போது கும்பிடு போட்டு வ‌ர‌வ‌ழைத்து, பின் அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு குட்டினாலும் தாங்கிக் கொள்வ‌தில் ம‌ட்டும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். //

    தொன்று தொட்டு அரசாங்கம் , தனியார் எல்லாரும் மிக கவனமாகப் பின்பற்றும் எளிய ஆனால் வலிமையான சூத்திரம் இது.

    //நம் மக்களுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை வந்தால்தான் இன்றைய வியாபாரிகள் மாறுவார்கள்.//

    உண்மை!!

    ReplyDelete
  4. ஹூம்! வோடோ போனுக்கே ஒரு மெயில் அனுப்ப‌லாமே? ப‌திலாவ‌து நிச்ச‌ய‌ம்.

    ReplyDelete
  5. தலைமுறை தலைமுறையாய் தொடரும் இவைகளுக்கு நம் தலைவலி தான் பதில் சொல்லும், தூங்குபவரெல்லாம் விழித்துக்கொண்டால் இவர்கள் பாடு திண்டாட்டம் என்பதை இந்த நிறுவனங்கள் உணர வேண்டும்

    ReplyDelete
  6. ம், சரி தான் ரகு. ஆனால் நீதித் துறைக்கு பயந்து ஒதுங்காமல் கொஞ்சம் முயற்சி எடுத்துத் தட்டிக் கேட்டால் நியாயம் கிடைக்கும். டெல்லியில் எம்.ஆர்.பி.யை விட அதிகம் 1 ரூபாய்க்குத் தண்ணீர் பாட்டில் விற்றவரை எதிர்த்துக் கேஸ் போட்டு ஒருவர் ஜெயித்த கதை தெரியும் தானே.

    ReplyDelete
  7. //ம், சரி தான் ரகு. ஆனால் நீதித் துறைக்கு பயந்து ஒதுங்காமல் கொஞ்சம் முயற்சி எடுத்துத் தட்டிக் கேட்டால் நியாயம் கிடைக்கும். டெல்லியில் எம்.ஆர்.பி.யை விட அதிகம் 1 ரூபாய்க்குத் தண்ணீர் பாட்டில் விற்றவரை எதிர்த்துக் கேஸ் போட்டு ஒருவர் ஜெயித்த கதை தெரியும் தானே.//

    அது சரி

    ReplyDelete
  8. உண்மை தான். எனக்கும் vodafone-உடன் ஒரு கசப்பான அனுபவம் நேர்ந்தது.

    வழக்கு போடுவது பொதுவாகவே கால விரயம். ஆனால் அவர்களிடம் Consumer வழக்கு போடுவேன் என சொன்னால், சில நேரம் (எல்லா நேரமும் அல்ல) வேலை ஒழுங்காய் நடக்கும்.

    ReplyDelete
  9. //இன்னும் என்னென்ன‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு எத்த‌னை இட‌ங்க‌ளில்தான் அனுச‌ரித்துக் கொண்டே போக‌வேண்டும்?//.......பொதுவா நம் எல்லோருக்குள்ளும் எழும் கேள்வி இதுவாகதான் இருக்கும். அவசியமான ஒன்றை அழகா எழுதி இருக்கிங்க ரகு.

    ReplyDelete
  10. வ‌ந்திருக்கும் வாடிக்கையாள‌ர்க‌ளை உள்ளே அழைத்து அம‌ர‌வைக்காம‌ல், வெளியே சாலையில் நிற்க‌ச்செய்வ‌து?///

    ஜெமினி மேம்பாலம் பக்கத்துலேயும் இப்படித்தான்..அந்த நாட்டை மேம்படுத்த வெயிலில் லைனில் நிற்ப்பார்கள்..என்ன செய்ய கியூ பழக்கம் சுடுகாடு வரை உறுதி நண்பா..

    ReplyDelete
  11. I appreciate You for your boldness. This is What happening anywhere? what shall we do Friend?


    Apnaa
    www.apnaafurniture.com

    ReplyDelete
  12. at least vodafone is better, they have done the service, had it been airtel or tata it would have taken 3 days to get new sim card

    ReplyDelete
  13. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    ReplyDelete
  14. //
    இன்னும் என்னென்ன‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு எத்த‌னை இட‌ங்க‌ளில்தான் அனுச‌ரித்துக் கொண்டே போக‌வேண்டும்?
    //

    :(

    ReplyDelete