Friday, June 11, 2010

ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...

பேருந்தில் ந‌ட‌த்துன‌ரிட‌ம் காசு கொடுத்து ப‌ய‌ண‌ச்சீட்டு வாங்கும்போது அடிக்க‌டி ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் இது. 5.50 ப‌ய‌ண‌ச்சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால், 4 ரூபாய்தான் திருப்பி தருவார். எப்போதும் அவ‌ர் த‌ரும் பாக்கி சில்ல‌றையில் 50 காசு குறைவாக‌ இருக்கும். வெறும் 50 காசுதானே என்று நீங்க‌ள் சொன்னாலும், அது என் காசு. இருந்தாலும் அதை கேட்காம‌ல் விட்டுவிடுவேன், கேட்காம‌லிருப்ப‌து த‌ப்பென்று தெரிந்தும். ஏனெனில்...

____________________________________________________________________________

அதே பேருந்தில் இருக்கையில் அம‌ர்ந்திருப்பேன். ம‌ற்ற‌ இருக்கைக‌ளில் அம‌ர்ந்திருக்கும் எவ‌ரும் தூங்காம‌ல் இருப்ப‌ர். ஆனால் என் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருக்கும் ஆசாமி ம‌ட்டும் தூங்கி வ‌ழிந்து, அடிக்க‌டி என் தோளில் வ‌ந்து இடித்துக்கொண்டிருப்பார். நான் இன்னும் கொஞ்ச‌ம் த‌ள்ளி உட்கார்ந்து கொள்வேனே த‌விர‌ எதுவும் சொல்ல‌மாட்டேன். ஏனெனில்...


"இதுவே ப‌க்க‌த்துல‌ ஒரு பொண்ணு இருந்தா..." என்றெல்லாம் பின்னூட்ட‌ம் வேண்டாம் பாஸ். ப‌திலைத் தெரிந்துகொண்டே கேள்வியைக் கேட்டால் நானென்ன சொல்ல‌?...;))

____________________________________________________________________________

ஒரு முறை தி.ந‌க‌ருக்கு அவ‌ச‌ர‌மாக‌ செல்ல‌ வேண்டிய‌ சூழ்நிலை. ப‌ஸ் ஸ்டாப்பில் வெகு நேர‌மாய் நின்று கொண்டிருந்தேன். தி.ந‌க‌ருக்கு செல்ல‌ வேண்டிய‌ பேருந்துக‌ள் அனைத்தும்‌, கூட்ட‌ மிகுதியால் பைசா கோபுர‌ம் போல் ஒரு ப‌க்க‌மாய் சாய்ந்து கொண்டே வ‌ர‌, ச‌ரி ஆட்டோவில் போய்விட‌லாம் என்று முடிவு செய்தேன். சிறிது நேர‌த்தில் ஆட்டோ ஒன்று வ‌ர‌, நான் கேட்ப‌த‌ற்கு முன் அருகில் நின்றுகொண்டிருந்த‌வ‌ர் "டி.ந‌க‌ர் போக‌ணும்.....எவ்ளோ" என்று கேட்டார். அந்த‌ ஆட்டோ டிரைவ‌ர் ம‌ற‌ந்து, யூனிஃபார்மோடு ம‌ன‌சாட்சியையும் கழ‌ற்றி வைத்துவிட்டார் போல‌. ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ "ஒன் ஃபிஃப்டி குடுங்க‌" என்றார். அந்த‌ ந‌ப‌ர் ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி நின்று கொண்டார். அவ‌ருட‌ன் பேசி ஒரே ஆட்டோவை பிடித்து தி.ந‌க‌ருக்கு சென்று ஆட்டோ சார்ஜை ஷேர் செய்திருக்க‌லாம். ஆனால் நான் செய்ய‌வில்லை. ஏனெனில்...

____________________________________________________________________________


அடையார் ஆன‌ந்த‌ ப‌வ‌ன் ரெஸ்டார‌ண்ட்டுக்கு சென்று ஆசையாக‌ ஒரு ஆனிய‌ன் ர‌வாவை அள்ளி அள்ளி உள்ளே த‌ள்ளிக்கொண்டிருப்பேன். 80% முடித்த‌பின்பு மீத‌ம் இருக்கும் தோசைக்கு தொட்டுக்கொள்ள‌ சாம்பாரும் இருக்காது, ச‌ட்னியும் இருக்காது. ச‌ர்வ‌ரிட‌ம் கூப்பிட்டு கேட்டால், 'இம்மாத்துண்டு தோசைக்கு ஒரு க‌ப்பு சாம்பார் கேக்குதா' என்று அழ‌கு சென்னைத் த‌மிழில், பார்வையாலேயே ந‌ம் இராசி, ந‌ட்ச‌த்திர‌ம் கேட்காம‌ல் அர்ச்ச‌னை செய்வார். செய்தால் என்ன‌? என் ப‌சிக்கு சாப்பிடுகிறேன். என‌க்கு தேவை இர‌ண்டு க‌ப் சாம்பார், ச‌ட்னி என்றால் அவ‌ர் த‌ர‌வேண்டும். ஆனால் கேட்க‌மாட்டேன். வெறும் தோசையையே அள்ளி ம‌டித்து, ச‌மோசா ஷேப்புக்கு கொண்டு வ‌ந்த‌ பின், பூலோக‌த்தை வாயினுள் காட்டிய‌ க‌ண்ணன் போல் வாயைத் திற‌ந்து, வெற்றிலை போடுவ‌து போல் உள்ளே த‌ள்ளிவிடுவேன். ஏனெனில்...

____________________________________________________________________________

ஒரு அழ‌கான‌ பெண்ணை பார்த்து சைட் அடிக்கும்போது இருக்கும் தைரிய‌ம், அதே பெண்ணிட‌ம் முத‌ல் முறை பேசும்போது இருப்ப‌தில்லை. முத‌ல் முறை ம‌ட்டும். அது போல், பெற்றோரோ, உற‌வின‌ரோ அருகில் இருக்கும்போது, ஒரு பேஏஏஏர‌ழ‌கி க‌ட‌ந்து போனாலும், போக்கிரி விஜ‌ய் ரேஞ்சிற்கு முக‌த்தில் எந்த‌வித‌ ரியாக்ஷ‌னும் காட்டாம‌ல் இருப்ப‌துண்டு. ஏனெனில்...

____________________________________________________________________________

இன்று மெரீனாவில் காந்தி சிலை அருகே ப‌திவ‌ர் ச‌ந்திப்பு. அவ‌சிய‌ம் வ‌ர‌வும் என்று அனைத்து பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளும் ப‌திவிட்டிருப்ப‌ர். அப்ப‌திவுக‌ளை ப‌டிப்ப‌தோடு ச‌ரி. ச‌ந்திப்பில் க‌ல‌ந்துகொள்வ‌தில்லை. ஆனால் 'ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் ந‌ட‌ந்த‌து என்ன‌' என்று ம‌றுநாள் அவ‌ர்க‌ள் எழுதியிருப்ப‌தை த‌வ‌றாம‌ல் ப‌டித்து, புகைப்ப‌ட‌ம் பார்த்து யார் யாரெல்லாம் ச‌ந்திப்பிற்கு சென்றிருந்தார்க‌ள் என்ப‌தையும், யார் யாரெல்லாம் ச‌ந்திப்பு முடிந்த‌வுட‌ன் "ஸ்பெஷ‌ல் டீ" குடிப்ப‌த‌ற்கு சென்றார்க‌ள் என்ப‌தையும் அறிந்துகொள்வேன். எழுத‌ ஆர‌ம்பித்து ஒரு வ‌ருட‌ம் ஆகியும், இன்னும் ஒரு முறை கூட‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பிற்குச் சென்ற‌தில்லை. ஏனெனில்...


ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...


பேஸிக்க‌லி ஐ'ம் ஷை டைப் யூ நோ ;))


25 comments:

  1. :)

    விட்டத்தில் கூடு கட்ட வரும் சிட்டுக்குருவிகள் தடுமாறித்தவிக்கும்
    தனக்கான பௌத்தமௌனம் படர்ந்த இடம் கிடைக்கும் வரை

    மொழியை எய்தும் வரை இருக்கும் அலைவைக் கடந்து விட்டால் படைப்பு
    தன் வழியறியும் நீரோட்டம்தான்

    முயல்க !

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வெளியில் மிதந்து வரும் வளி,
    சாளரம் சாத்தியிருப்பின் உள்வர தவிக்கும்.நுழைக்கான பெருவழி
    பெறும் வரை...

    தனக்கான களி வரும் வரை, படைப்பைக் களையும் வழி தெளிந்து இருத்தினால்,இறுதி வரை கொண்டாட்டம்தான்.

    ஹிஹி..வேறொன்னுமில்லை. நேசமித்ரன் எஃபெக்ட்.
    :)

    ReplyDelete
  3. ஐம் ஆல்சோ சேம் லைக் யூ

    ReplyDelete
  4. ரகு நான் உங்களுக்கு நேர் எதிர்.. எதுவா இருந்தாலும் கேட்டு பாத்துருவேன்.. கிடைக்குதோ இல்லையோ அது அடுத்த விஷயம் . நம்ம மனசில் நினைப்பதை வாய் வழியே சொன்னால் தான் அடுத்தவருக்கு தெரியும்; அப்படி சொன்னா தான் முக்கால் வாசி நேரம் நம்ம நினைச்சது கிடைக்கும்.

    மத்த படி இந்த பதிவு எழுதிய விதம் சுவாரஸ்யம்

    ReplyDelete
  5. மிக ரசித்தேன்.நல்லாருக்கு ரகு.

    ReplyDelete
  6. யதார்த்தம்

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு.இயல்பாயிருக்கு.
    ஏனெனில்....எழுதின விதமும் ரசனையும் கூட
    நல்லாயிருக்குக்கு ரகு.

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  9. நீங்க மட்டுமா ரகு... பொதுவா நிறைய பேரு இப்படிதான்! ஏனெனில்.... பேஸிக்க‌லி ஷைதான்:)

    ReplyDelete
  10. இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  11. //பேஸிக்க‌லி ஐ'ம் ஷை டைப்//
    நீங்க மட்டுமா??? நானுந்தேன்!.

    ReplyDelete
  12. ந‌ன்றி நேச‌மித்ர‌ன், ஏதோ ந‌ல்ல‌து சொல்றீங்க‌...ஓர‌ள‌வுக்கு புரியுது

    ந‌ன்றி ராஜு, நீங்க‌ளுமாஆஆஆஆஆ?!

    ReplyDelete
  13. ந‌ன்றி வித்யா

    ந‌ன்றி ராஜேஷ், ஹிஹி..யூ டூ?

    ReplyDelete
  14. ந‌ன்றி மோக‌ன், சில‌ இட‌ங்க‌ளில் போல்டாக‌த்தான் இருக்கிறேன், சில‌ இட‌ங்க‌ளில்தான் இப்ப‌டி...ஏனெனில்...:)

    ந‌ன்றி விக்கி

    ReplyDelete
  15. ந‌ன்றி க‌ண்ண‌ன்

    ந‌ன்றி எல்கே

    ReplyDelete
  16. ந‌ன்றி ஹேமா

    ந‌ன்றி சாருஸ்ரீராஜ்

    ReplyDelete
  17. ந‌ன்றி ப்ரியா, நீங்க‌ளும் அந்த‌ நிறைய‌ பேர்ல‌ ஒருத்த‌ர் போல‌ருக்கு..ஹி..ஹி..:)

    ந‌ன்றி சின்ஹாசிட்டி

    ReplyDelete
  18. ந‌ன்றி அர‌சு, சேம்ப்ள‌ட்? வெரி நைஸ் :)

    ந‌ன்றி தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை, பெருசாயிருந்தாலும் உங்க‌ பெய‌ர் அருமை

    ReplyDelete
  19. கிட்டத்தட்ட எல்லாமே நானும் அனுபவிச்சவைதான்... சில சமயம் பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கறவர் தூங்கி விழறப்போ கோபம் கூட வருமே தவிர ஒரு நாளும் சொன்னதில்லை.. :)

    ReplyDelete
  20. ந‌ன்றி ஜெய், நீங்க‌ளும் அதே ர‌த்த‌ம்தானா?...;))

    ந‌ன்றி ஷ‌ர்புதீன், வ‌ந்தீங்க‌ளே :)

    ReplyDelete
  21. mithran sir comment......yevvalavu azhaga solliyirukkaanga.naanlaam yennaththa sollanga.:)

    ReplyDelete