Thursday, June 10, 2010

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை - 2

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை முத‌ல் பாக‌ம்


டைம் மெஷினில் இருந்த‌ திரை டிச‌ம்ப‌ர் 26, 2054 என்று க‌ண்ண‌டித்துக்கொண்டிருந்த‌து. ச‌ரியாக‌ நேர‌ம் விடிய‌ற்காலை 4:10. டைம் மெஷின் இற‌ங்க‌ மெசேஜ் வாயிலாக‌ இட‌ம் கேட்க‌, திரையில் க்ருபாள‌னியை பார்த்தான் சுன‌ந்த‌ன். க்ருபாள‌னி அண்ணா சாலை என்று டைப் செய்ய‌ சொல்ல‌, அவ‌ர் சொன்ன‌தை த‌ட்டாம‌ல் கீபோர்டில் த‌ட்ட‌ச்சினான். எந்த‌வித‌ ச‌த்த‌முமின்றி மெதுவாக‌ டைம் மெஷின் மெள்ள‌ இற‌ங்கிய‌து. டைம் மெஷினில் 'இன்விஸிபிள்' ஆப்ஷ‌ன் இருந்த‌தால் அதை யாரும் கவ‌னிக்க‌வில்லை. விடிய‌ற்காலை நேர‌மாத‌லால் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் அவ்வ‌ள‌வாக‌ இல்லை.

மெல்ல‌ மூவ‌ரும் சாலையில் இற‌ங்கி ந‌ட‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நின்றிருந்த‌ இட‌த்திற்கு எதிரே ஒரு ப‌ழ‌ம்பெரும் க‌ட்டிட‌ம் ஒன்று இருந்த‌து. அத‌ன‌ருகே சென்று பார்க்கும்போது, ஒரு டிஜிட்ட‌ல் திரையில் Good Morning...Welcome to Spencer Plaza என்ற‌ மெசேஜ் இட‌து புற‌த்திலிருந்து வ‌ல‌து புற‌த்திற்கு ஓடிக்கொண்டிருந்த‌து. மூவ‌ரும் சாலையின் ஓர‌மாக‌ ந‌ட‌ந்துகொண்டே சென்னையின் விடிய‌ற்காலை வாழ்க்கையை ர‌சித்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

காரை வானில் ஓட்டியே ப‌ழ‌க்க‌மிருந்த‌தால், இவ‌ர்க‌ள் எப்ப‌டிதான் சாலையில் ஓட்டுகிறார்க‌ளோ என்றெண்ணி மிகுந்த‌ ஆச்ச‌ரிய‌ம‌டைந்தான் சுன‌ந்த‌ன். ந‌டைபாதையின் அருகே ஒரு சிறிய‌ பூத் ஒன்று இருந்த‌து. அத‌னுள்ளே ஒரு சிறிய‌ தொடுதிரை இருந்த‌து. தொடுதிரையின் கீழே இன்றைய‌ செய்திக‌ள், சினிமா, அர‌சிய‌ல், விளையாட்டு என்று நான்கு சுட்டிக‌ள் தெரிய‌, சுன‌ந்த‌னுக்கு முத‌லில் செய்திக‌ளை அறியும் ஆர்வ‌ம் ஏற்ப‌ட்ட‌து. செய்திக‌ள் சுட்டியை தொட்ட‌வுட‌ன்

வ‌ரும் தேர்த‌லில் மீண்டும் எங்க‌ள் க‌ட்சியை ஆட்சியில் அம‌ர்த்தினால், அனைத்து ம‌க்க‌ளுக்கும், உய‌ர் ர‌க‌ காரும், த‌ங்க‌ள் விருப்ப‌த்திற்கு ஏற்ப‌ நிக‌ழ்ச்சிக‌ளை உருவாக்க‌ ஒரு சேன‌லும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்று முத‌ல்வ‌ர் உத‌ய‌நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்....

அடுத்து விளையாட்டு சுட்டியை தொட‌, அது ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மேனின் புகைப்ப‌ட‌த்தை ஒளிப‌ர‌ப்பிய‌து. புகைப்ப‌ட‌த்தில் அந்த‌ பேட்ஸ்மேன் த‌ன் ஹெல்மெட்டை க‌ழ‌ற்றி, பேட்டை உய‌ர்த்தி, ர‌சிக‌ர்க‌ளை நோக்கி காண்பித்த‌ப‌டி இருந்தார். புகைப்ப‌ட‌த்தின் கீழ், கொட்டை எழுத்தில் "என்னுடைய‌ ஆட்ட‌ம் இன்று திருப்தி த‌ரும் வ‌கையில் அமைந்திருந்த‌து. அத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்னுடைய‌ தாத்தா ச‌ச்சின் டெண்டுல்க‌ர்தான். அவ‌ர் கொடுத்த‌ சில‌ அறிவுரைக‌ளை பின்ப‌ற்றிய‌தால்தான் என்னால் அணிக்கு வெற்றி தேடித்த‌ர‌ முடிந்த‌து" என்று போட்டிருந்த‌து. மேலும் வேறெதையும் தெரிந்து கொள்ள‌ ஆர்வ‌மில்லாத‌தால், சுன‌ந்த‌னும், நான்சியும் மிட்டுவுடன் மீண்டும் டைம் மெஷினுக்கு திரும்பின‌ர்.

திரையை ஆன் செய்து, "மேம், இட்ஸ் சோ ஸ்ட்ரேஞ்ச், 2054ல‌ எல்லாரும் கீழே ரோட்ல‌ கார் ட்ரைவ் ப‌ண்றாங்க‌. ஹோட்ட‌ல்ஸ்லாம் நிறைய‌ மூடியிருக்கு. வொர்க்கிங் ஹ‌வ‌ர்ஸ் 6:00 டூ 11:00ன்னு போட்டிருக்காங்க‌. ஆனா ந‌ம்ம‌ 2104ல‌ பாருங்க‌, 24 ஹ‌வ‌ர்ஸும் எல்லாமே அவைல‌பிள்....திஸ் ஈஸ் ரிய‌லி எக்சைட்டிங், நான் இன்னும் ஒரு 50 வ‌ருஷ‌ம் பின்னாடி போய் பாக்க‌றேன் மேம்" என்றான்.

"ஓகே சுன‌ந்த‌ன், நான் இங்கே மானிட்ட‌ர்ல‌ பார்த்துகிட்டுதான் இருக்கேன். கோ அஹெட்..இய‌ரை ரீசெட் ப‌ண்ணி, 2004னு என்ட‌ர் ப‌ண்ணுங்க‌. அடுத்த‌து GO ப‌ட்ட‌ன்"

"தேங்க்ஸ் மேம்"

இப்போது கீபோர்டில் 2..0..0..4 என்று டைப் செய்து, 'GO'வை த‌ட்டிவிட்டு த‌ன் இருக்கையில் அம‌ர்ந்தான். இர‌ண்டு ம‌ணி நேர‌ ப‌ய‌ணத்திற்கு பின்...எங்கு இற‌ங்க‌ வேண்டும் என்று வ‌ழ‌க்க‌ம் போல் மெசேஜ் கேட்க‌, இம்முறை மேப்பை பார்த்து அவ‌னே இட‌த்தை தேர்ந்தெடுத்தான். இட‌த்தை அடைந்த‌வுட‌ன் டைம் மெஷினை விட்டு இற‌ங்கி மூவ‌ரும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். காலை நேர‌மாத‌லால், ம‌க்க‌ள் புழ‌க்க‌ம் ச‌ற்று மித‌மாக‌வே இருந்த‌து. வ‌ந்திருந்த‌ ப‌ல‌ரும் வாக்கிங் செய்துகொண்டே, ச‌க‌ வாக்க‌ர்க‌ளுட‌ன் அர‌ட்டை அடித்துக்கொண்டிருந்த‌ன‌ர். நூறு வ‌ருட‌த்திற்கு முன் வாழ்ந்த‌ ம‌க்க‌ளை பார்த்துக்கொண்டிருக்கும் ம‌கிழ்ச்சியில் த‌ங்க‌ளை ம‌ற‌ந்திருந்த‌ன‌ர் சுன‌ந்த‌னும், நான்சியும். அம்ம‌னித‌ர்க‌ள் பேசும் வித‌மும், உடைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு மிகுந்த‌ ஆச்ச‌ரிய‌த்தை அளித்த‌ன‌. ஒருவித‌ ப‌ரவ‌ச‌ நிலையிலிருந்த‌ இருவ‌ரையும், மிட்டுதான் பிடித்து உலுக்கினாள். "டேட், லுக் அட் தேர், ஐ'ம் ஸ்கேர்ட்!!!"


க்ருபாள‌னி திரையில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒன்று அவ‌ரின் டைம் மெஷினை தாக்கி, எல்லாவ‌ற்றையும் செய‌லிழ‌க்க‌ச் செய்த‌து. எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் செய்தும், அவ‌ரால் சுன‌ந்த‌ன் குடும்ப‌த்தின‌ரோடு தொட‌ர்பு கொள்ள‌ முடிய‌வில்லை. அதிர்ச்சியில் உறைந்து போன‌ க்ருபாள‌னி த‌ன் க‌ணிணியை ஆன் செய்து, இணைய‌த்தில் சென்னை ப‌ற்றிய‌ ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை தேடிப் ப‌டித்தார். அரை ம‌ணி நேர‌ம் ப‌டித்த‌ பின், மீண்டும் சுன‌ந்த‌னோடு தொட‌ர்பு கொள்ள‌ முய‌ற்சித்தார். ஊஹும்......முடிய‌வில்லை. ஏன்? உங்க‌ளால் யூகிக்க‌ முடிகிற‌தா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவ‌ர்க‌ள் மூவ‌ரும் இருந்த‌ இட‌ம், சென்னை மெரீனா க‌ட‌ற்க‌ரை. டிச‌ம்ப‌ர் 26, 2004. காலை நேர‌ம்.

Time machine

SUnandhan

NAncy

MIttu.....


13 comments:

  1. இன்விஸிபிள் மோடு என்னாச்சு..?
    சுனாமிக்கு அதெல்லாம் தெரிஞ்சுருமா..?
    :)

    ReplyDelete
  2. வித்யாசமா டிரை பண்ணி இருக்கிங்க. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  3. 2104-ல் உதயநிதிக்கு நூறு வயசுக்கு மேல் இருக்குமே; அப்போ அவர் பையன் வேண்ணா முதல்வரா இருக்கலாம் (ஆக மொத்தம் அப்பவும் அதே குடும்பம்??)

    Liked the story. Nice

    ReplyDelete
  4. நல்ல முயற்சி ரகு

    ஒரு ரவுண்டு சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் வாசிச்சுட்டு வாங்களேன்
    :)

    ReplyDelete
  5. நன்றி LK

    நன்றி வித்யா

    ReplyDelete
  6. நன்றி ராஜு, அது வெறும் மெஷின்ணே, இய‌ற்கையோட‌ போட்டி போட்டு ஜெயிக்க‌ முடியுமா என்ன‌?..:)

    நன்றி சாருஸ்ரீராஜ்

    ReplyDelete
  7. நன்றி மோக‌ன், அவ‌ர் 2054ல‌தான் முத‌ல்வ‌ர்னு சொல்லியிருக்கேன், 2104ல‌ இல்ல‌. என்ன‌ ப‌ண்ற‌து, அவ‌ங்க‌தான் இப்போ சூப்ப‌ர் குடும்ப‌மாயிருக்காங்க‌

    ந‌ன்றி நேச‌மித்ர‌ன், நீங்க‌ சொல்ற‌து புரியுது, அவ‌சிய‌ம் வாசிக்கிறேன் :)

    ந‌ன்றி அஹ‌ம‌து இர்ஷாத்

    ReplyDelete
  8. 2104லஎம்.ஜி,ஆர் பெரியாருக்கு எல்லாம் கோயில் கட்டி கும்பாபிஷேகம் பன்னிக்கிட்டு இருப்பங்களே அதபத்தி ஏதும் எழுதவில்லை.

    ReplyDelete
  9. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  10. ஹேய், நல்லாருக்கு. இதை எப்படி மிஸ் பண்ணேன்..

    ReplyDelete