Sunday, May 16, 2010

பேச்சில‌ர் vs ஹ‌வுஸ் ஓன‌ர்

ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் த‌ங்குவ‌த‌ற்கு வீடு வேண்டும், உங்க‌ள் ஏரியாவில் ஏதாவ‌து வீடு காலியாக‌ இருந்தால் சொல்லுங்க‌ள் என்று இணைய‌ த‌ள‌ப‌தியும், 'சுறா'வ‌ளியும், ஏழுவின் பிர‌ம்மாவும், ப‌ப்லுவிட‌ம் ப‌ல்பு வாங்குவ‌தில் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ராக‌ இருக்கும் கார்க்கி கேட்டிருந்தார். ஓப்ப‌னிங் பில்ட‌ப் ஓகேதானே ச‌கா....ஏன் இன்னும் என் அக்க‌வுண்ட்ல‌ அமெள‌ண்ட் ட்ரான்ஸ்ஃப‌ர் ஆக‌ல‌?...;) இந்த‌ மாத‌ம் ந‌ண்ப‌ர் ம‌ட்டும் வ‌ருவ‌தாக‌வும், அடுத்த‌ மாத‌ம் முத‌ல் அவ‌ருடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இர‌ண்டு பேர் அவ‌ருட‌ன் சேர்ந்து த‌ங்கிக்கொள்வ‌தாக‌ ப்ளான் என்றும் கூறினார்.

சில‌ மாத‌ங்க‌ள் முன் அலுவ‌ல‌க‌த்தில் என்னுட‌ன் ப‌ணிபுரிந்து கொண்டிருந்த‌ ந‌ண்ப‌ர் (இப்போது அவ‌ர் வேறு அலுவ‌ல‌க‌ம்) ஒருவ‌ருக்கு கால் செய்து கேட்டேன். "நான் இப்போ வேள‌ச்சேரியிலேயே இல்ல‌ங்க‌, காசி தியேட்ட‌ர் ப‌க்க‌ம் வ‌ந்துட்டேன்" என்றார். அத‌ன்பின் இன்னொரு தோழிக்கு ட்ரிங்க‌, "எங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ இப்ப‌தான் ஒரு வீடு காலியாயிருக்கு. நான் வேணும்னா கேட்டு பாக்க‌றேன்" என்றார். வீட்டு உரிமையாள‌ரிட‌ம் பேசிவிட்டு சொன்னார் "அவ‌ர் பைய‌ன் ஊருக்கு போயிருக்க‌றாராம், அவ‌ர் வ‌ந்த‌வுட‌னே கேட்டு சொல்றேன்னிருக்கார்". தோழி சொன்ன‌தை தோழி அப்டேட்ஸ் நாய‌க‌னுக்கு அப்டேட் செய்து விட்டு, இரு நாட்க‌ள் க‌ழித்து தோழியிட‌ம் மீண்டும் பேசினேன். "ஹ‌லோ, அவ‌ர் ச‌ரியாவே ப‌தில் சொல்ல‌மாட்டேங்குறார்ங்க‌, ந‌ம்ப‌ர் த‌ரேன் நீங்க‌ வேணும்னா பேசிப்பாருங்க‌" என்றார். ந‌ம்ப‌ர் வாங்கி அந்த‌ வீட்டு உரிமையாள‌ருக்கு 'செல்'லினேன்.



"ஹ‌லோ சார், என் பேரு ர‌கு, உங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ சுசிலாதான் இந்த‌ ந‌ம்ப‌ர் குடுத்தாங்க‌"

"சொல்லுங்க‌"

"ரெண்டு நாள் முன்னாடி ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர் த‌ங்க‌ற‌துக்கு வீடு வேணும், உங்க‌ளுக்கு ஏதாவ‌து இட‌ம் தெரியுமான்னு அவ‌ங்க‌கிட்ட‌ கேட்டிருந்தேன். உங்க‌கிட்ட‌ கேட்ட‌தா சொன்னாங்க‌"

"ஆமாங்க‌, என் பைய‌ன் வெளியூர் போயிருக்கான், வ‌ர்ற‌துக்கு ரெண்டு நாளாகும். அவ‌ன் வ‌ந்த‌வுட‌னே கேட்டு சொல்றேன்"

"ஹ்ம்ம்...ச‌ரி அவ‌ர் வ‌ந்த‌துக்க‌ப்புற‌ம் நீங்க‌ பேசிட்டு சொல்லுங்க‌, சும்மா வீடு பாக்க‌ற‌துக்கு ம‌ட்டும் ஃப்ரெண்ட்ஸை இன்னைக்கு வ‌ர‌சொல்ல‌ட்டுமா சார்?"

"இல்ல‌, எதுக்கும் அவ‌ன் வ‌ந்துட‌ட்டும்ங்க‌, இப்போதைக்கு எதுவும் வேணாம்"

"ஏன் சார் இப்ப‌டி த‌ய‌ங்க‌றீங்க‌? அவ‌ங்க‌ ஜ‌ஸ்ட் வீடு ஓகேவான்னு ‌ம‌ட்டும்தானே பார்க்க‌ போறாங்க‌"

"உங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆயிடுச்சா?"

"இல்ல சார், ஏன்?"

"சொல்றேனேன்னு த‌ப்பா நினைச்சுக்காதீங்க‌, பேச்சில‌ர்ஸ்க்குலாம் வீடு குடுக்க‌ற‌ ஐடியா இல்ல‌, அத‌னால‌தான் நீங்க‌ சொல்ல‌ சொல்ல‌ அவாய்ட் ப‌ண்ணேன்"

"சார், நீங்க‌ சொல்ற‌து புரியுது, ப‌ச‌ங்க‌ ந‌ல்ல‌ ப‌ச‌ங்க‌ சார், ஸ்மோக்கிங், ட்ரிங்கிங்னு எந்த‌ ஹாபிட்டும் கிடையாது. உங்க‌ளுக்கு ஒரு பிர‌ச்னையும் வ‌ராது"

"எல்லாரும் ஆர‌ம்ப‌த்துல‌ அப்ப‌டித்தாங்க‌ சொல்றாங்க‌, இதுக்கு முன்னாடி ஐஐடி ப‌ச‌ங்க‌தான் த‌ங்கியிருந்தாங்க‌. ஒரே அட்ட‌காச‌ம்...பிர‌ச்னையாகி என் பைய‌ன் அவ‌ங்க‌கிட்ட‌ ச‌த்த‌ம் போட்டு, இப்ப‌தான் ஒரு வார‌ம் முன்னாடி காலி ப‌ண்ணாங்க‌. காலி ப‌ண்ண‌ப்புற‌ம் உள்ளே போய் பார்த்தா, ஏக‌ப்ப‌ட்ட‌ சிக‌ரெட் பாக்கெட்டும், பாட்டிலும் இருந்த‌து. வேலையாளுங்க‌ள‌ வெச்சு சுத்த‌ம் ப‌ண்ண‌வே ரெண்டு நாளாச்சு. அத‌னால‌ இனிமே ஃபேமிலிக்கு ம‌ட்டுமே வீடு விட‌ற‌தா டிசைட் ப‌ண்ணியிருக்கோம்"

"சார், ரெண்டு மூணு ப‌ச‌ங்க‌ த‌ப்பு ப‌ண்ணா, எல்லாரும் அப்ப‌டியிருக்க‌ மாட்டாங்க‌ சார். வேள‌ச்சேரியில‌ பாருங்க‌. நிறைய‌ இட‌த்துல‌ பேச்சில‌ர்ஸ்தான் ஸ்டே ப‌ண்ணியிருக்காங்க‌"

"தெரியும்ங்க‌, வாட‌கை கூட‌ ரெண்டாவ‌துதான் என‌க்கு, முத‌ல்ல‌ வீட்டை சுத்த‌மா வெச்சுக்க‌ணும். அதுக்கு ப‌ச‌ங்க‌ள்லாம் ச‌ரிப‌ட்டு வ‌ர‌மாட்டாங்க‌."

இத‌ற்கு மேல் என்ன‌ பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவ‌ர் இல்லாததால், மேலும் பேச்சை வ‌ள‌ர்ப்ப‌தில் விருப்ப‌மில்லை என‌க்கு. "ஓகே சார், ச‌ப்போஸ் பேச்சில‌ர்ஸ்க்கு குடுக்க‌ற‌ ஐடியா இருந்தா இந்த‌ ந‌ம்ப‌ருக்கு கால் ப‌ண்ணுங்க‌" என்று சொல்லிவிட்டு அவ‌ருடைய‌ ப‌திலுக்குக்கூட‌ காத்திராம‌ல் ஃபோனை வைத்துவிட்டேன். ஆனால் அந்த‌ நாள் முழுதும் அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ள் ம‌ட்டும் ம‌ன‌தில் சுழ‌ன்ற‌டித்துக்கொண்டிருந்த‌து. பேச்சில‌ர்ஸ் என்றாலே 'இட‌ம் விட்டா இஷ்ட‌த்துக்கும் ஆடுவானுங்க‌' என்கிற‌ அள‌வில்‌தான் ம‌திப்பிட‌ப்ப‌டுகிறார்க‌ள். பொருளீட்டும் நிமித்த‌ம், வீட்டை விட்டு, உற‌வை விட்டு, ந‌ட்பை விட்டு சென்னைக்கு வ‌ந்தால் முத‌லில் எதிர்கொள்ளும் பிர‌ச்னையே த‌ங்குமிட‌ம்தான்.

மேன்ஷ‌ன் வாழ்க்கை முறை, ச‌கிப்புத்த‌ன்மை அதிகள‌வில் இருந்தால் ம‌ட்டுமே ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ ஒன்று. ஒரு பெரிய‌ அறையையே இர‌ண்டாக‌ பிரித்து, ஒவ்வொரு சிறிய‌ அறையிலும் இர‌ண்டு மூன்று பேராக‌ த‌ங்கிக்கொள்வ‌து, அசுத்த‌மான‌ காம‌ன் பாத்ரூம்....இது போன்ற‌ பிர‌ச்னைக‌ளை ப‌ற்றி மேன்ஷ‌ன் உரிமையாள‌ருக்கு எந்த‌வித‌ அக்க‌றையும் இருக்காது. ஏன் இப்ப‌டி என்று கேட்டால் கூட‌ "ம‌த்த‌வ‌ங்க‌ள்லாம் எப்ப‌டி அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிட்டு இருக்காங்க? இஷ்ட‌மிருந்தா இருங்க‌, இல்ல‌ன்னா காலி ப‌ண்ணிட்டு போயிட்டேயிருங்க‌" என்றுதான் ப‌தில் வ‌ரும் (இந்த‌ வ‌ரி க‌ற்ப‌னை அல்ல‌, திருவ‌ல்லிக்கேணியில் என் ந‌ண்ப‌னுக்கு ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌ம்). அவ‌ரைப் பொறுத்த‌வ‌ரையில் ஒருவ‌ர் அறையை காலி செய்துவிட்டு சென்றால், அந்த‌ இட‌த்திற்கு வேறொருவ‌ரை வ‌ரவ‌ழைக்க‌ அவ‌ர் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌தேயில்லை.‌ பிழைப்புக்கு சென்னையைத் தேடி ஓடிவ‌ருப‌வ‌ர்க‌ளுக்கா ப‌ஞ்ச‌ம்?

மேன்ஷ‌னை விரும்பாத‌வ‌ர்க‌ள் தேர்ந்தெடுக்கும் முறைதான், மூன்று நான்கு ந‌ண்ப‌ர்க‌ளாக‌ சேர்ந்து ஒரு வீட்டை வாட‌கை எடுத்துக்கொள்வ‌து. யாரோ சில‌ர் வீட்டை ஒழுங்காக‌ வைத்துக்கொள்ள‌வில்லை, த‌ண்ணிய‌டித்துவிட்டு ச‌த்த‌ம் போட்டுக்கொண்டிருந்த‌ன‌ர் என்ப‌தினால், எல்லா பேச்சில‌ர்ஸும் இப்ப‌டித்தான் இருப்பார்க‌ள் என்ற‌ பிம்ப‌த்தை எவ்வாறு அந்த‌ வீட்டு உரிமையாள‌ர் உருவாக்கிக்கொண்டாரோ தெரிய‌வில்லை. எல்லா இளைஞ‌ர்க‌ளுக்கும் குடும்ப‌ பொறுப்பு, பிர‌ச்னை என்று ஒரு சில‌ ஃப்ளாஷ்பேக்குக‌ள் இருக்கும். அத‌ற்கெல்லாம் ஒரு தீர்வு காண‌த்தான், எல்லோரையும் ஊரில் விட்டு விட்டு, சென்னை வ‌ந்து வாழ்க்கையினூடே ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். மெரீனாவுக்கும், ஸ்பென்ஸ‌ருக்கும், சிட்டி சென்ட‌ருக்கும், ச‌த்ய‌ம் தியேட்ட‌ருக்கும் சென்று பொழுதை போக்கிக்கொண்டிருக்க‌ யாரும் சென்னை வ‌ர‌வில்லை.

அத‌ற்காக‌ பேச்சில‌ர்ஸ் எல்லோரும் உத்த‌ம‌புத்திர‌ன்க‌ள் என்று நான் சொல்ல‌மாட்டேன். இள‌ம் வ‌ய‌து, என்ன‌ செய்தாலும் த‌ட்டி கேட்க‌ வீட்டின‌ர் யாரும் அருகில் இல்லை, 'ஒரு த‌ட‌வை ட்ரை ப‌ண்ணுடா ம‌ச்சான்' என்று தைரிய‌ம் கொடுக்கும் ந‌ட்பு வ‌ட்ட‌ங்க‌ள்....இது போன்ற‌ சூழ்நிலை க‌ண்டிப்பாக‌ த‌ம், த‌ண்ணி என்று முய‌ற்சி செய்து பார்க்க‌த்தான் தோன்றும். ஆனால் அது டாஸ்மாக்கிலோ, ரெஸ்டார‌ண்ட் பாரிலோ முடிந்துவிட்டால் யாருக்கும் பிர‌ச்னையில்லை. வீட்டினுள் த‌ண்ணிய‌டித்து, ச‌த்த‌ம் போட்டு, ந‌ம் நிலையை நாமே வெளிச்ச‌ம் போட்டுக் காட்டும்போதுதான் அக்க‌ம் ப‌க்க‌ம் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு பிர‌ச்னையாக‌ மாறுகிற‌து. இத‌னால்தான் "பேச்சில‌ரா?...ப்ச், இம்சைங்க‌!" என்ற‌ பிம்ப‌ம் வீட்டு உரிமையாள‌ர்க‌ள் ம‌த்தியில் உருவாகிற‌து. நாம் ந‌ம் த‌ங்குமிட‌த்தை ந‌ம‌து சொந்த‌ வீடாக‌ க‌ருதி, ம‌திப்ப‌ளித்து வாழ்ந்தால் ம‌ட்டுமே இது போன்ற‌ பிர‌ச்னைக‌ளை த‌விர்க்க‌ முடியும்.

18 comments:

  1. //நாம் ந‌ம் த‌ங்குமிட‌த்தை ந‌ம‌து சொந்த‌ வீடாக‌ க‌ருதி, ம‌திப்ப‌ளித்து வாழ்ந்தால் ம‌ட்டுமே இது போன்ற‌ பிர‌ச்னைக‌ளை த‌விர்க்க‌ முடியும்.//

    இதுதான் சரியான தீர்வு!!

    ReplyDelete
  2. எனக்கு இந்த விஷயத்தில் நிறையே கசப்பான அனுபவங்கள் இருக்கு. ம்ம்

    ReplyDelete
  3. ஹிஹிஹி.நீங்க பண்ன டேமேஜுக்கு காசு நான் தரணுமா?

    அப்புறம் இவ்ளோ கேவலமான பேச்சுலர்க்கு ஏன் பொண்ண தர்றானுங்க.. ஒரு நாலு கல்யாணம் பண்ன ஆளுக்கு தரலாம் இல்ல?
    (நன்றி - ஏ.ஆர்.முருகதாஸ்)

    ReplyDelete
  4. பாஸ் , எங்க போய் வீடு தேடுறீங்க ? நீங்க சொல்ற மாதிரி வீடு கெடைக்கிற கஷ்டம் எல்லாம் அப்போ.
    ஆலந்தூர் ஏரியா வாங்க . வீடு எல்லாம் only for bachelors நு போர்டு போட்டு இருப்பாங்க .

    ReplyDelete
  5. ரொம்ப சரியா சொன்னீங்க ரகு. இந்த விஷயத்துல தப்பு கண்டிப்பா ஹவுஸ் ஓனர்ஸ் மேல மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா அவனவன் லோன் போட்டு, கடன் வாங்கி வீடு கட்டி, அதே ஏரியால பல வருஷமா மரியாதையோட வாழ்ந்திட்டிருக்கும் போது பேச்சுலர்ஸை வாடகைக்கு விட்டால் முதலில் வீடு பாழாகுது. அப்புறம் குடிச்சு கலாட்டா பண்ணி ஓனர் பேரே கெட்டு போற அளவுக்குப் பண்ணிடறாங்க. இதெல்லாம் இல்லாம இருக்குற பசங்களை நான் ஒண்ணும் சொல்லல. ஆனா வெள்ளைத் தாளில் வெச்ச கரும்புள்ளியா இது மாதிரியான சில மாதிரிகள் தான் முன்மாதிரிகள் ஆகிடுது பேச்சுலர்சுக்கு வீடு கிடைக்காம போக.

    ReplyDelete
  6. பேச்சிலர்ஸ் மேலயும் தப்புதான்.. ஆனா, இந்த ஓனர் எல்லாம் கண்ணை மூடிட்டு பேச்சிலர்ஸ்னா இப்படிதான்னு முடிவு பண்ணக்கூடாது.. இந்த ஓனருக்கு ஒரு பொண்ணு இருந்தா, ஏற்கனவே கல்யாணமானவருக்கா பொண்ணு குடுப்பாங்க.. பேச்சிலருக்குதானே கட்டி கொடுக்கணும்?

    ReplyDelete
  7. இப்ப நீங்க என்ன சொல்ல வறீங்க?

    ReplyDelete
  8. பேச்சிலராக இருக்கும் போது நானும் இது போல கஸ்டப்பட்டிருக்கேன். பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பதென்பது மிகவும் கஸ்டம். ஆனால் ஒரு சிலர் பேச்சிலர்களுக்கு மட்டும் தான் கொடுக்கின்றனர். பேச்சிலர்கள் வீட்டை நன்றாக வைத்துக்கொள்வதில்லை என்பதெல்லாம் மிகவும் குறைந்த சதவிகிதமே உண்மை. பலரும் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்கின்றனர். அதே நேரத்தில் குடும்பமாக இருப்பவர்கள் பலரும் வாடகை வீட்டை மிகவும் மோசமாக பராமரிக்கின்றனர் என்பதும் உண்மையே. ஒரு சிலர் குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தை என ஆரம்பத்தில் சொல்லி வந்த பிறகு, தாய், தந்தை, தம்பிகள் தங்கைகள் என பெரிய பட்டாளத்தையே பின்னர் சேர்த்துவிடுகின்றனர். இதனால் தண்ணி இல்லாத இடங்களில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

    மேலும் வீட்டை காலி செய்ய சொன்னால் பொதுவில் பேச்சிலர்கள் உடனே காலி செய்துவிடுகின்றனர். ஆனால் குடும்பத்தினருக்கு கொடுத்தால் அவர்கள் காலி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

    ஆக இருப்பக்கங்களிலும் நன்மை தீமை இரண்டுமே உண்டு.

    ReplyDelete
  9. சரிதான் , நானும் அனுபவிச்சு இருக்கேன்

    ReplyDelete
  10. //////பேச்சில‌ர்ஸ் என்றாலே 'இட‌ம் விட்டா இஷ்ட‌த்துக்கும் ஆடுவானுங்க‌' என்கிற‌ அள‌வில்‌தான் ம‌திப்பிட‌ப்ப‌டுகிறார்க‌ள். பொருளீட்டும் நிமித்த‌ம், வீட்டை விட்டு, உற‌வை விட்டு, ந‌ட்பை விட்டு சென்னைக்கு வ‌ந்தால் முத‌லில் எதிர்கொள்ளும் பிர‌ச்னையே த‌ங்குமிட‌ம்தான்.///////

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே ! இப்படியே பலர் சொல்லி , சொல்லி எந்த தவரும் தவறும் செய்ய நினைக்காதவர்களைக்கூட தவறு செய்ய தூண்டி விடுகிறது இவர்களின் தவறான கண்ணோட்டம் .
    சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  11. 'எஸ் வி சேகர் அவர்கள், ஒரு ட்ராமாவில், பேச்சுலருக்கு ஒரு அர்த்தம் சொல்லுவார்... "பேச்சுலர்" என்றால் பேச்சுத்துணைக்கு ஆளில்லாதவர், அதாவது மனைவி இல்லாதவர் அதான் பேச்சுலர்...' என்று சொல்லுவார்.. அவர் சொன்ன ஜோக்குக்கு அப்போது சிரித்திருந்தாலும், அந்தப் பட்டத்தை வைத்து சென்னையில் தனியாக வாழ்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை உங்கள் இடுகையில் படித்தபோது மிகவும் சங்கடமாகத்தான் இருக்கிறது..!

    இதற்கு தீர்வே இல்லையா..? (கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர..)

    -
    DREAMER

    ReplyDelete
  12. Hi,

    Ivanunga Veedu kodukkalenna namakku veede kedaikkatha, periya tajmahal kattitomnu nenappu, ennomo bachler pasangathaan ithellam pannuvaanga mathiri, ponnungallam rombo olukkam mathiri..

    ReplyDelete
  13. ந‌ன்றி ர‌மேஷ்

    ந‌ன்றி சைவகொத்துப்பரோட்டா

    ந‌ன்றி மோகன், உங்க‌ளுக்குமா?...:(

    ந‌ன்றி கார்க்கி, ஹாஹ்ஹா ந‌ல்ல‌ கேள்விதான்

    ReplyDelete
  14. அப்போலாம் இல்ல‌ க‌லில், போன‌ வார‌ம் ந‌ட‌ந்த‌து இந்த‌ விஷ‌ய‌ம், வ‌ருகைக்கு ந‌ன்றி

    ந‌ன்றி விக்கி, என்ன‌ ப‌ண்ற‌து? சில‌ர் ப‌ண்ற‌ த‌ப்பால‌ ப‌ல‌ரும் அவ‌ஸ்தைப‌ட‌ வேண்டிய‌தாயிருக்கு

    ந‌ன்றி இரசிகை, ஆமாங்க‌

    ந‌ன்றி ஜெய், ச‌ரியாத்தான் சொல்றீங்க‌, யார் அவ‌ங்க‌ளுக்கு புரிய‌வைக்க‌ற‌து?...:(

    ReplyDelete
  15. ந‌ன்றி வான்முகிலன், ஹி..ஹி...ஆணியே.......:))

    ந‌ன்றி மஞ்சூர் ராசா, நீங்க‌ சொல்ற‌து உண்மைதான். ஆனா சுத்த‌மா வெச்சுக்க‌ற‌துல‌ பேச்சில‌ர்ஸ், ஃபேமிலின்னு பார்க்கும்போது ஃபேமிலி ச‌த‌வீத‌ம்தாங்க‌ அதிக‌மாயிருக்கும்

    ந‌ன்றி மங்குனி அமைச்சர்

    ந‌ன்றி ச‌ங்க‌ர்

    ReplyDelete
  16. ந‌ன்றி ஹ‌ரீஷ், தீர்வு?! நிஜ‌மா தெரிய‌ல‌ ஹ‌ரீஷ்

    ந‌ன்றி க‌ஃபில், பொண்ணுங்க‌ளும் சில‌ பேர் த‌ண்ணி அடிக்க‌றாங்க‌தான், ஆனா அவ‌ங்க‌ க‌த்தி க‌லாட்டா ப‌ண்ண‌மாட்டாங்க‌. ஆனா ப‌ச‌ங்க‌ அப்ப‌டியில்லியே, அத‌னால‌தான் பிர‌ச்னை

    ReplyDelete