Monday, May 03, 2010

சுஜாதா....என்ன‌ அவ‌ச‌ர‌ம்யா உன‌க்கு!

எல்லாரும் த‌லைல‌ தூக்கி வெச்சுட்டு ஆடுறாங்க‌ளே, அப்ப‌டி என்ன‌தான் எழுத‌றாரு இவ‌ரு என்ற‌ எண்ண‌த்தோடுதான் முத‌ன் முத‌லில் "க‌ற்ற‌தும் பெற்ற‌தும்"மை வாசிக்க‌த் தொட‌ங்கினேன். வாசிக்க‌ ஆர‌ம்பித்த‌ சில‌ வார‌ங்க‌ளிலேயே நானும் த‌.தூ ஆட‌ ஆர‌ம்பித்தேன். என்ன‌ ம‌னித‌ர் இவ‌ர், அக‌நானூறு, புற‌நானூறு ப‌ற்றியும் எழுதுகிறார், அறிவிய‌லிலும் விளையாடுகிறார், ந‌ல்ல‌ ந‌ல்ல‌ க‌விதைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துகிறார்...இவ‌ர் ம‌ண்டையில் இருப்ப‌து மூளைதானா என்று விய‌ந்தேன். "ஹைக்கூ" என்னும் வார்த்தையையே இவ‌ர் மூல‌ம்தான் அறிந்தேன்.

ப‌ள்ளியில் ப‌டிக்கும்போது அறிவிய‌ல் என்றால் "அது ந‌ம்ம‌ள‌ நோக்கிதான் வ‌ருது, எல்லோரும் ஓடுங்க‌" என்ற‌ ரேஞ்சில் ஓடிய‌வ‌ன், அவ‌ர் எழுதுவ‌தை ம‌ட்டும் ர‌சித்து ப‌டிக்க‌த் துவ‌ங்கினேன். இப்போது கூட‌ சில‌ ச‌ம‌ய‌ம் நினைப்ப‌துண்டு, ப‌ள்ளியில் வ‌ரும் அறிவிய‌ல் பாட‌ங்க‌ள் எல்லாம் அவ‌ர் எழுதியிருந்தால், எல்லா‌ மாண‌வ‌/மாண‌விக‌ளும் ம‌ன‌ப்பாட‌ம் என்னும் ந‌ம‌து மோச‌மான‌ க‌ல்வி வ‌ழிமுறையை விட்டுவிட்டு, ஆர்வ‌த்துட‌ன் ப‌டிப்பார்க‌ளே என்று. இதேபோல் த‌மிழில் வ‌ரும் செய்யுள்க‌ளுக்கெல்லாம் ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசை வ‌டிவ‌ம் கொடுத்தால்....!
சென்னை வ‌ந்த‌பின் த‌னியாக‌ த‌ங்க‌ ஆர‌ம்பித்த‌போது, பொழுதுபோக்கிற்கு டிவி கூட‌ கிடையாது என‌க்கு. ஆனால் பொழுதையும், வ‌ருத்த‌த்தையும் போக்கிய‌வ‌ர் இவ‌ர்தான். இவ‌ரின் எழுத்தை வாசிக்க‌ ஆர‌ம்பித்த‌ சில‌ நாட்க‌ளிலேயே "ந‌ல்ல‌வேளை ந‌ம்மிட‌ம் டிவி இல்லை, இருந்திருந்தால் இந்த‌ க‌தைக‌ளையெல்லாம் எப்ப‌டி ப‌டித்திருப்போம்?" என்று தோன்றும‌ள‌வுக்கு என்னை ஆட்கொண்டிருந்தார். இதுவ‌ரை நான் ப‌டித்த‌ க‌தைக‌ளிலேயே ''வும், 'கொலையுதிர் கால‌ம்'மும்தான் என்னுடைய‌ மோஸ்ட் ஃபேவ‌ரைட்.

- ப‌ல‌ருக்கும் நினைவிருக்க‌லாம். விக‌ட‌னில் தொட‌ராக‌ வெளிவ‌ந்த‌து இந்த‌ க‌தை. அந்த‌ ச‌ம‌ய‌த்தில் நான் ரொம்ப‌ குட்டி பாப்பாவாக‌ இருந்த‌தினால், க‌தையை ப‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் காட்ட‌வில்லை. மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ப‌த்திரிக்கையிலோ, இணைய‌த்திலோ இந்த‌ க‌தையை ப‌ற்றி சில‌ வ‌ரிக‌ள் ப‌டித்தேன். 'ஆ'ர்வ‌ம் தாங்க‌ முடியாம‌ல், ஹிக்கின்பாத‌ம்ஸ் சென்று வாங்கினேன். வாங்கி கிட்ட‌த‌ட்ட‌ மூன்று அல்ல‌து நான்கு நாட்க‌ளிலேயே மொத்த‌ க‌தையையும் ப‌டித்து முடித்தேன். அத‌ற்கு பின் அவ‌ரின் மேலிருந்த‌ ம‌ரியாதையும், பிர‌மிப்பும்...ப‌ன்ம‌ட‌ங்கு உய‌ர்ந்த‌து என்ப‌தெல்லாம் சாதார‌ண‌ வார்த்தை. அந்த‌ உண‌ர்வு அத‌ற்கும் மேல்!

"ஆ" என்ற‌ ஒற்றை எழுத்து டைட்டிலே, இந்த‌ க‌தை க‌ண்டிப்பாக‌ ச‌ம்திங் ஸ்பெஷ‌ல் என்று உள்ளுக்குள் அலார‌ம் அடித்த‌து. க‌தையின் ஒவ்வொரு அத்தியாய‌மும் "ஆ"வென்றே முடியும். "ஆ"வென்று முடிக்க‌ வேண்டுமே என்ப‌த‌‌ற்காக‌, ஏதோ மொக்கை கார‌ண‌ங்க‌ள் எல்லாம் காண்பித்து முடிக்க‌மாட்டார். ஒவ்வொன்றிலும் ஏதாவ‌து ஒரு அவ‌சிய‌ம் இருக்கும்....அந்த‌ கால‌க‌ட்ட‌த்திலேயே, சிஸ்ட‌ம் ப்ரொக்ராமிங்கில் ப‌ய‌ன்ப‌டுத்தும் ப‌ல‌ வார்த்தைக‌ளை க‌தையில் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். நீங்க‌ள் த்ரில்ல‌ர் க‌தை விரும்பிக‌ளாக‌ இருந்தால், க‌ண்டிப்பாக‌ இக்க‌தையை வாசித்து பாருங்க‌ள். ஒவ்வொரு அத்தியாய‌ம் ப‌டித்து முடிக்கும்போதும், "ச‌ரி மீதிக்க‌தையை அப்புற‌ம் ப‌டிச்சுக்க‌லாம்" என்ற‌ எண்ண‌ம் க‌ண்டிப்பாக‌ தோன்றாது. அந்த‌ த்ரில் தொட‌ர்ந்த‌ப‌டியே இருக்கும். வேறு வ‌ழியின்றி, ப‌டித்து முடிக்க‌ மூன்று நான்கு நாட்க‌ள் ஆன‌து என‌க்கு. இந்த‌ க‌தையை வைத்து சினிமா எடுக்க‌லாம் என்று பிர‌காஷ்ராஜ் ப‌ல‌முறை த‌ன்னிட‌ம் கேட்ட‌தாக‌ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். என்ன‌ கார‌ண‌மோ, அந்த‌ முய‌ற்சி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌வேயில்லை.

கொலையுதிர் கால‌ம் - இந்த‌ வ‌ருட‌ புத்த‌க‌ க‌ண்காட்சியில் வாங்கிய‌ "மூன்று குற்ற‌ங்க‌ள்" புத்த‌க‌த்தை ப‌டித்து முடித்த‌பின், சில‌ 'கணேஷ் வ‌ஸ‌ந்த்' க‌தைக‌ளை வாங்கினேன். அதில் என்னை மிக‌வும் புர‌ட்டிபோட்ட‌து "கொலையுதிர் கால‌ம்". டைட்டிலை பார்த்த‌தும் சின்ன‌ ஸ்மைலுட‌ன், "ம‌னுஷ‌ன் எப்ப‌டிலாம் யோசிச்சிருக்க‌றார் பாரேன்" என்ற‌ எண்ண‌ம் தோன்றிய‌து. அலுவ‌ல‌க‌ம் 11 ம‌ணிக்கு என்ப‌தால் காலை எழ‌ரை ம‌ணி முத‌ல் எட்ட‌ரை ம‌ணி வ‌ரை புத்த‌க‌ம் ப‌டிப்ப‌தை தொட‌ர்ந்துகொண்டிருக்கிறேன். அப்ப‌டி ஒரு நாள் ஆர‌ம்பித்த‌துதான் "கொலையுதிர் கால‌ம்". ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌ அரை ம‌ணி நேர‌த்திலேயே நான் நிக‌ழ்கால‌த்திலிருந்து கொ.கால‌த்திற்கே சென்றுவிட்டேன். ஆர்வ‌ம் தாங்க‌முடிய‌வில்லை...ச‌ரி நைட் வ‌ந்து ப‌டிச்சிக்க‌லாம் என்று யோசித்தேன். ஹூஹூம்..ம‌ட‌ப்ப‌ய‌ ம‌ன‌சு கேட்க‌வில்லை. டீம் மேனேஜ‌ருக்கு ட்ரிங்கினேன்.

"ஹ‌லோ...ஹ்ம்..கொஞ்ச‌ம் உட‌ம்பு ச‌ரியில்ல‌, காலையில‌ருந்து கோல்ட் அதிக‌மா இருக்கு, இன்னைக்கு ஒரே ஒரு நாள் ம‌ட்டும் லீவ் எடுத்துக்க‌றேன்"

அன்று உண்மையிலேயே ஜ‌ல‌தோஷ‌த்தால் அவ‌திப்ப‌ட்டுக்கொண்டிருந்தேன். என்ன‌...'அதிக‌மா' என்ப‌து ம‌ட்டும்தான் அதிக‌மான‌ வார்த்தை. 'லேசா' என்ப‌தே அந்த‌ வாக்கிய‌த்திற்கு ஷாரூக் காஜோல் போல‌ பொருத்த‌மாக‌ இருந்திருக்கும்.

டீம் மேனேஜ‌ர் என‌க்கு லீவ் கொடுக்கும் விஷ‌ய‌த்தில் ரொம்ம்ம்ப‌ ந‌ல்ல‌வ‌ராத‌லால் பாஸிட்டிவ்வான‌ ரிச‌ல்ட்டையே எதிர்பார்த்தேன்.

"ஆங், ஓகே, உட‌ம்பு பாத்துக்க‌ப்பா, மெடிக்க‌ல் ஷாப்ல‌லாம் மாத்திரை வாங்கி போடாத‌, போய் டாக்ட‌ரைப் பாரு" என்றார்.


ம‌ன‌துக்குள், "க‌ண்டிப்பா.....டாக்ட‌ர் க‌ணேஷை‌ போய் பார்த்து, அவ‌ர் எழுதிக்கொடுக்க‌ற‌ மாத்திரையை வ‌ஸ‌ந்த் மெடிக்க‌ல்ஸில் வாங்கிக்க‌றேன்" என்றெண்ணிக்கொண்டேன். அவ‌ரிட‌ம் ந‌ன்றி சொல்லிவிட்டு ஃபோனை வைத்த‌பின் சிறிது குற்ற‌ உண‌ர்ச்சி கூட‌ இருந்த‌து (என்னைக்கும் இந்த‌ ப‌திவு ம‌ட்டும் அவ‌ர் க‌ண்ணுல‌ ப‌டாம‌ நீதான் காப்பாத்த‌ணும் க‌ணேஷா!). ஆனால் அதெல்லாம் மீண்டும் புத்த‌க‌த்தை எடுக்கும்வ‌ரைதான். ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌பின், துளிகூட‌ த்ரில் குறையாம‌ல் த‌ட‌த‌ட‌வென்று இர‌ட்டைக்கிள‌வியை த‌ண்ட‌வாள‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி 'க‌தை' ர‌யில் 'சூப்ப‌ர் ஃபாஸ்ட்'டாக‌ ஓடிக்கொண்டிருந்த‌து. ப‌டித்து முடித்த‌ பின் "சே! என்ன‌ ம‌னுஷ‌ன்யா இவ‌ரு, சான்ஸே இல்ல‌"...இன்னும் என்னென்னமோ தோன்றிய‌து. பிற‌குதான் உண‌ர்ந்தேன், காலையிலிருந்து குளிக்க‌வுமில்லை, சாப்பிட‌வுமில்லையென‌. அத‌ற்கு பின்தான் கொ.கால‌த்திலிருந்து நிக‌ழ்கால‌த்திற்கு மீண்டும் வந்தேன்....வ‌ர‌ ம‌ன‌மில்லாம‌ல்!


வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்த்துவிட‌வேண்டும் என்று நான் நினைத்த‌ ஒரே விஐபி அவ‌ர்தான். ஏனோ அது நிறைவேறாம‌லேயே போன‌து. இப்போது இருந்திருந்தால் ஒரு ஈமெயிலாவ‌து அனுப்பியிருப்பேன் இன்றைக்கு, "ஹாப்பி ப‌ர்த்டே ஸார் :)" என்று. குறைந்த‌து இன்னும் 20 வ‌ருட‌ங்க‌ளாவ‌து இருந்திருக்க‌லாம்........என்ன‌ அவ‌ச‌ர‌ம்யா உன‌க்கு!

இதுவ‌ரை ப‌டித்த‌ கணேஷ் வ‌ஸ‌ந்த் க‌தைக‌ள்

ஆ!

நைலான் க‌யிறு

ம‌றுப‌டியும் க‌ணேஷ்

மேற்கே ஒரு குற்ற‌ம்

மீண்டும் ஒரு குற்ற‌ம்

மேலும் ஒரு குற்ற‌ம்

கொலையுதிர் கால‌ம்

வ‌ஸ‌ந்த் வ‌ஸ‌ந்த்!

இப்ப‌திவை வாசிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். க‌ணேஷ் வ‌ஸ‌ந்த் இட‌ம்பெறும் ம‌ற்ற‌ க‌தைக‌ளையும் வாசிக்க‌ ஆர்வ‌மாயிருக்கிறேன். ஆனால் என்னென்ன‌ க‌தைக‌ள் என்று தெரியாம‌ல் 'ஙே'ங்கிக்கொண்டிருக்கிறேன். ஆத‌லால், பின்னூட்ட‌த்திலோ, மின்ன‌ஞ்ச‌லிலோ அக்க‌தைக‌ளை தெரிவித்தால், மே மாத‌த்தில் ம‌ழையைக் க‌ண்ட‌து போல் மிக்க‌ ம‌கிழ்ச்சிய‌டைவேன் :)


29 comments:

 1. எந்திரன் படத்தின் வசனம் கூட அவர் எழுதியது தான். உடல் ஒத்துழைக்க மறுத்த போதும் அவருடைய கடைசி பங்களிப்பை ஷங்கரிடம் கொடுத்துவிட்டு, இனி எனக்கு என்னவானாலும் சரின்னாராம்.

  ReplyDelete
 2. அருமை... சரளா நடை.... Keep it up!
  வாத்தியாரின் ' எதையும் ஒருமுறை' படித்ததிலையா? அதில் வரும் கதாப்பாதிரங்களில், எதில் சுஜாதாவை காண்கிறீர்கள்? கணேஷா இல்லை அந்த வில்லனா? படித்துவிட்டு எனக்கொரு மெயில் அனுப்புங்களேன் ரகு.

  ReplyDelete
 3. //அந்த‌ கால‌க‌ட்ட‌த்திலேயே, சிஸ்ட‌ம் ப்ரொக்ராமிங்கில் ப‌ய‌ன்ப‌டுத்தும் ப‌ல‌ வார்த்தைக‌ளை க‌தையில் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார்//

  விக்ரம் படத்தில கூட அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாமே technically correct.

  ReplyDelete
 4. "க‌ற்ற‌தும் பெற்ற‌தும்".... நான் விரும்பி வாசித்த ஒன்று.

  //இதேபோல் த‌மிழில் வ‌ரும் செய்யுள்க‌ளுக்கெல்லாம் ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசை வ‌டிவ‌ம் கொடுத்தால்....! //.... குட் ஐடியா. விண்ணைதாண்டி வ‌ருவாயா ப‌ட‌த்தில் ம‌ன்னிப்பாயா பாட்டில் வ‌ரும் திருக்குற‌ள்களை போல....


  //இப்போது இருந்திருந்தால் ஒரு ஈமெயிலாவ‌து அனுப்பியிருப்பேன் இன்றைக்கு, "ஹாப்பி ப‌ர்த்டே ஸார் :)"//....அதனாலென்ன ரகு, இப்படி ஒரு பதிவை இன்னைக்கு அவருக்காக எழுதி இருக்கிங்களே,குட்!

  ReplyDelete
 5. dear ragu sir
  I suggest you to read the following books instead of thrillers of sujatha
  1) pathavikkaaga
  2) Madhyamar stories
  3) nylon kayiru
  4) kanavu thorizchalai

  where social themes will throw more light on your reading aspirations
  Regards
  R Kanthasamy

  ReplyDelete
 6. பதிவுலகில் சுஜாதாவின் பாதிப்பு நிறைய இருக்கிறது. சுஜாதவின் கதைகள மறுபடியும் படிக்கும் ஆவலை தூண்டியது உங்கள் பதிவு.

  ReplyDelete
 7. VISIT MY BLOG
  www.vaalpaiyyan.blogspot.com

  ReplyDelete
 8. நல்ல எழுத்து நடை!!! வாழ்த்துக்கள் ரகு.

  ReplyDelete
 9. நல்லா எழுதிருக்கீங்க ரகு. இன்னிக்கு முழுக்க இந்த மனுஷன் என் மண்டைக்குள்ள உக்காந்து பாடாப் படுத்திட்டிருக்காரு. ரியலி, வீ மிஸ் ஹிம்.

  ReplyDelete
 10. க‌ற்ற‌தும் பெற்ற‌தும்".... நான் விரும்பி வாசித்த ஒன்று

  "சுஜாதா....என்ன‌ அவ‌ச‌ர‌ம்யா உன‌க்கு!"

  அருமை... வாழ்த்துக்கள் ரகு

  ReplyDelete
 11. எதையும் ஒரு முறை தான் நான் படித்த முதல் புத்தகம்
  . என் இனிய இந்திரா,
  ஜே.கே
  கரையெல்லாம் செண்பகப்பூ
  ரத்தம் ஒரே நிறம்
  ஏன் எல்லாக் கதைகளையும் படிக்கலாம்
  மேலும் அவரது சிறுகதைகளையும் படிக்கத்தவறாதீர்கள்
  இனியன்

  ReplyDelete
 12. //
  ப‌ள்ளியில் வ‌ரும் அறிவிய‌ல் பாட‌ங்க‌ள் எல்லாம் அவ‌ர் எழுதியிருந்தால், எல்லா‌ மாண‌வ‌/மாண‌விக‌ளும் ம‌ன‌ப்பாட‌ம் என்னும் ந‌ம‌து மோச‌மான‌ க‌ல்வி வ‌ழிமுறையை விட்டுவிட்டு, ஆர்வ‌த்துட‌ன் ப‌டிப்பார்க‌ளே என்று.
  //


  சுஜாத் + ஆ

  ReplyDelete
 13. //கிட்ட‌த‌ட்ட‌ மூன்று அல்ல‌து நான்கு நாட்க‌ளிலேயே மொத்த‌ க‌தையையும் ப‌டித்து முடித்தேன். //

  நானெல்லாம் எடுத்த பிறகு முடிச்ச்ட்டுதான் வச்சேன். நிலா நிழல் படிச்சிருக்கிங்களா?

  அதே போல தலைமை செயலகமும், அனிதா-இளம் மனைவியும் தருகிறேன், அடுத்த முறை பார்க்கும்போது.

  ReplyDelete
 14. சொல்ல மறந்துட்டேன். ஆனாங்காங்கே சுஜாதா போல எழுத முயற்சித்திருக்கிறிர்கள்

  //லேசா' என்ப‌தே அந்த‌ வாக்கிய‌த்திற்கு ஷாரூக் காஜோல் போல‌ பொருத்த‌மாக‌ இருந்திருக்கும்//

  //"க‌ண்டிப்பா.....டாக்ட‌ர் க‌ணேஷை‌ போய் பார்த்து, அவ‌ர் எழுதிக்கொடுக்க‌ற‌ மாத்திரையை வ‌ஸ‌ந்த் மெடிக்க‌ல்ஸில் வாங்கிக்க‌றேன்/

  /ப‌ள்ளியில் ப‌டிக்கும்போது அறிவிய‌ல் என்றால் "அது ந‌ம்ம‌ள‌ நோக்கிதான் வ‌ருது, எல்லோரும் ஓடுங்க‌" என்ற‌ ரேஞ்சில் ஓடிய‌வ‌ன், /

  :)))

  ReplyDelete
 15. தல பற்றிய பதிவுக்கு தலை வணங்குகிறேன்.

  அவர் எழுதி நான் படிக்காத புத்தகம் லிஸ்ட் சொல்லிடலாம். படித்தது சொல்வது கஷ்டம். கணேஷ் வசந்த்? உடனே நினைவுக்கு வரலை ரகு..

  ReplyDelete
 16. கணேஷ் வசந்த் கதைகள் சூப்பர் என்றாலும், சுஜாதாவின் மென்மையான நாவல்கள்தான் என் ஃபேவரிட். நிறமற்ற வானவில்னு ஒரு கதை. எப்படிதான் அதை படமாக்காம வச்சுருக்காங்களோ தெரியல.

  என் ஃபேவரிட்:
  ஸ்ரீரங்கத்துக்கதைகள் (சிறுகதை தொகுப்பு, சுஜாதாவின் சொந்த அனுபவங்கள்)
  நிறமற்ற வானவில்
  இருள் வரும் நேரம் (வானம் வசப்படும், பிசி.ஸ்ரீராம் படம்)
  ஆ (கொஞ்சம் அன்னியனும், சந்திரமுகியும் போல இருக்கும்)
  என் இனிய எந்திரா (எந்திரன்)
  மீண்டும் ஜீனோ
  வசந்த்கால குற்றங்கள்
  விரும்பி சொன்ன பொய்கள் (கதையின் கடைசி ஒரு வரியில் மொத்த கதையும் புரியும்)
  நில்லுங்கள் ராஜாவே

  ReplyDelete
 17. மனுஷன் என் மண்டைக்குள்ள உக்காந்து பாடாப் படுத்திட்டிருக்காரு. ரியலி, வீ மிஸ் ஹிம்.

  :)

  ReplyDelete
 18. athu ennaovo theriala ragu
  from starting onwards
  enakum sujatha sir avargal kum otthey varthu...athavathu ethuvari avar putagam vasithathu ellai.

  but neenga eluthiyapatha

  neram kidaithal vasikanum endru thonrukirathu..

  parkalam.

  nala pagirvuirku nandri.

  valga valamudan
  surya

  ReplyDelete
 19. சுஜாதா எழுத்துக்களை வாசிப்பதே ஒரு சுகானுபவம். அதில் எளிமையும் நகைச்சுவயும் நிறைந்திருக்கும்.

  புதிதாய் வாசிக்க ஆரம்பிப்போருக்கு அவரது எழுத்து மேலும் படிக்கத்தூண்டும்.

  உங்கள் நடையும் சுஜாதா போலவே உள்ளது.

  ReplyDelete
 20. எழுத்தின் சிகரம் பற்றி உங்களின் எழுத்தில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறீர்கள் . மிகவும் சிறப்பாக இருந்தது . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

  ReplyDelete
 21. //////damildumil said...
  எந்திரன் படத்தின் வசனம் கூட அவர் எழுதியது தான். உடல் ஒத்துழைக்க மறுத்த போதும் அவருடைய கடைசி பங்களிப்பை ஷங்கரிடம் கொடுத்துவிட்டு, இனி எனக்கு என்னவானாலும் சரின்னாராம்.////////

  உண்மைதான் நானும் படித்து இருக்கிறேன் .

  ReplyDelete
 22. ந‌ன்றி ட‌மீல்டுமீல், ஆமாம் எந்திர‌ன் ரிலீஸை அவ‌ர் பார்த்திருக்க‌ணும்

  ந‌ன்றி M.S.E.R.K., இதை தொட‌ராக‌ டிவியில் பார்த்த‌தாக‌ ஞாப‌க‌ம். ப‌டித்த‌பின் க‌ண்டிப்பாக‌ மெய்ல் அனுப்புகிறேன்

  ந‌ன்றி ப்ரியா, ச‌ரியா சொன்னீங்க‌, அதுபோல‌ வ‌ந்தா ந‌ல்லாருக்கும்!

  ந‌ன்றி க‌ந்தா, நைலான் க‌யிறு ஏற்க‌ன‌வே படித்துவிட்டேன், மற்ற‌ க‌தைகளை ப‌டித்து பார்க்கிறேன்

  ந‌ன்றி ர‌மேஷ், அவ‌ர் பாதிப்பு இல்லாம‌ல் எழுதுப‌வ‌ர்க‌ள் மிக‌ மிக‌ குறைவு

  ந‌ன்றி வால்பைய‌ன், அவ‌சிய‌ம் வாசிக்கிறேன்

  ReplyDelete
 23. ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா

  ந‌ன்றி விக்கி, என‌க்கு போன‌ வார‌த்துல‌ருந்தே!

  ந‌ன்றி செந்தில்

  க‌ண்டிப்பாக‌ வாசிக்கிறேன், மிக்க‌ ந‌ன்றி இனிய‌ன் பாலாஜி

  ந‌ன்றி மாற‌ன்

  ந‌ன்றி கார்க்கி, அதென்ன‌வோ அவ‌ரோட‌ பாதிப்பை விட்டு வெளியே வ‌ர‌முடிய‌ல‌ ச‌கா :)

  ReplyDelete
 24. வாங்க‌ மோக‌ன், பொறுமையா யோசிச்சே சொல்லுங்க‌ :)

  ந‌ன்றி ஜெய், 'விரும்பி சொன்ன‌ பொய்க‌ள்'ளுக்கான‌ உங்க‌ க‌மெண்ட்டே வாசிக்கும் ஆர்வ‌த்தை தூண்டுகிற‌து, அவ‌சிய‌ம் வாசிக்கிறேன்

  ந‌ன்றி ஷ‌ர்புதீன்

  ந‌ன்றி சூர்யா, ப‌டிச்சு பாருங்க‌, அப்புற‌ம் விட‌மாட்டீங்க‌

  ந‌ன்றி சீனு, என்னோட‌ எழுத்து ந‌டையா? சார் என்னை வெச்சு...:)

  ந‌ன்றி ப‌னித்துளி ச‌ங்க‌ர்

  ReplyDelete
 25. thalaippe azhaku...:)

  //
  இதேபோல் த‌மிழில் வ‌ரும் செய்யுள்க‌ளுக்கெல்லாம் ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசை வ‌டிவ‌ம் கொடுத்தால்....!
  //

  hiyo....
  ithey pola naangalum 10th padikkum pothu pesiyirukkom:)
  inga athai paakkum pothu santhosham.

  VINNAITH THAANDI..LA ARR..ippo seithiruppaar.
  sari..yella thirukkuralaiyume seiyungalen sir nu manasukkulla sollikkitten!

  m...appuram..,
  vazhamai pol solliya vitham nallaayirunthathu!!

  vaazhthukkal !

  ReplyDelete
 26. yethaiyum vaasichchathillai......ivaraiyum:(

  aanaal,vigadan la appappo vaasichchurukken.
  ivarai paththi palar pesurathai kettirukken.
  ivar vasanam[thiraip padangalil]athikamaa rasichchurukken.
  ithileye ivar yenakku periya vishayamaathaan thonuchchu!!

  ReplyDelete
 27. ரகு,
  இந்த மனிதரைப்பற்றி எல்லோர் மனசுலயும் இருக்கிற ஆதங்கத்தை உங்க த்லைப்புல சொல்லிட்டீங்க... நான் இன்னும் 'கொலையுதிர்காலம் படிக்கல..' தேடிப்பி(ப)டிக்கிறேன்!

  நீங்க லீவ் போட்ட மேட்டரை இப்படி பப்ளிக்கா சொல்லிட்டீங்க..! தைரியம்தான்!

  நீங்கள் படித்த தலைப்புகளில்லாத கணேஷ் வசந்த் கதைகளில் எனக்கு நினைவுக்க வந்தவை

  'மலை மாளிகை'
  'நில்லுங்கள் ராஜாவே'

  உங்க லிஸ்ட்ல ஒரு 3 தலைப்பு மாட்டியிருக்கு. நானும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்(ஹி! ஹி!)

  -
  DREAMER

  ReplyDelete
 28. ந‌ன்றி இர‌சிகை, கூடிய‌ விரைவில் ர‌ஹ்மான் செய்வார் என்று ந‌ம்புவோம் :) சுஜாதா எழுத்தை வாசிச்சு பாருங்க‌, ந‌ம்மள‌ அப்ப‌டியே அடிக்ட் ஆக்கிடுவாரு :)

  ந‌ன்றி ஹ‌ரீஷ், 'கொலையுதிர் கால‌ம்' அவ‌சிய‌ம் ப‌டிங்க‌, சூப்ப‌ர் த்ரில்லர்!...ஹி..ஹி.. ந‌ம்ம‌ ப‌திவையெல்லாம் அவ‌ர் ப‌டிக்க‌மாட்டார்ங்க‌ற‌ தைரிய‌ம்தான் ;)

  நீங்க‌ குறிப்பிட்ட‌ ரெண்டு க‌தைக‌ளையும் ப‌டிச்சிட்டேன், லிஸ்ட்ல‌ குறிப்பிட‌ ம‌ற‌ந்துட்டேன், அத‌னால‌ ம‌றுப‌டியும் ஒருத‌ட‌வை ஹி..ஹி..

  ReplyDelete
 29. 'லேசா' என்ப‌தே அந்த‌ வாக்கிய‌த்திற்கு ஷாரூக் காஜோல் போல‌ பொருத்த‌மாக‌ இருந்திருக்கும்.--//

  இந்த வாக்கியத்தை ரொம்பவும் ரசித்தேன்..

  என் சுஜாதாவின்.. பேவரிட் கொலையுதிர்காலம்...

  நல்ல பகிர்வு ரகு..

  ReplyDelete