Sunday, April 11, 2010

நான் ஒண்ணாங்கிளாஸ்தான்


என்னையும் ஆட்ட‌த்தில் சேர்த்துக்கொண்டு, ஒரு ர‌வுடியாக‌ ம‌தித்து சன்ஷைன் விருதை வ‌ழ‌ங்கியிருக்கின்ற‌ன‌ர் இரு ந‌ல்ல‌ ர‌வுடிக‌ள்..:) தோழி ப்ரியாவுக்கும், ந‌ண்ப‌ர் சைவ‌கொத்துப்ப‌ரோட்டாவுக்கும் மிக்க‌ ந‌ன்றி. அதென்ன‌ ச‌ன்ஷைன்? திமுக‌ தொட‌ர்ந்து இடைத்தேர்த‌ல்க‌ளில் வெற்றி பெறுவ‌தை குறிக்கிற‌தா? அல்ல‌து 'ச‌ம்ம‌ர் ஆர‌ம்பிச்சிடுச்சு, உஷாரா இருந்துக்கோ மாமு' என்ற‌ எச்ச‌ரிக்கையா? 'உன‌க்கு குடுக்க‌ற‌தே அதிக‌ம், இதுல‌ இப்ப‌டிலாம் குடைஞ்சினா, அவார்ட் வாப‌ஸ்' என்று அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை விடுப்ப‌த‌ற்கு முன் கேள்விக‌ளை சாய்ஸில் விட்டுவிடும்ப‌டி க‌ன‌ம் அல்ல‌து லைட்டான‌ கோர்ட்டார் அவ‌ர்க‌ளை தாழ்மையுட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருதை அவ‌ர்க‌ளிட‌மிருந்து இப்பிடிக்கா வாங்கி இவ‌ர்க‌ளுக்கு அப்பிடிக்கா பாஸ் செய்கிறேன்.

வித்யா
விக்னேஷ்வ‌ரி
மோக‌ன்
கார்க்கி
ஜெட்லி
ராஜு

***********************************************************

க‌ல்லூரி இறுதியாண்டு ப‌டிக்கும்போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது. பேருந்தில் ஃபுட்போர்டில் ப‌ய‌ணித்த‌ ஒருவ‌ன், ர‌ன்னிங்கில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கும்போது, கால் ஸ்லிப் ஆகி, விழுந்து உருண்டு புர‌ண்டு நான்கு அடி த‌ள்ளி போய் விழுந்தான். அவ‌ன் அதிர்ஷ்ட‌ம், அந்த‌ நேர‌ம் பின்னால் எந்த‌ வாக‌ன‌மும் வ‌ர‌வில்லை. ப‌ல‌மான‌ காய‌ம் ஏற்ப‌ட்ட‌தே த‌விர‌ உயிருக்கு எந்த‌ ஆப‌த்துமில்லை. இன்று பேருந்தில் ர‌ன்னிங்கில் ஏறுகிறேன், கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருக்கும்போது ஃபுட்போர்டில் ப‌ய‌ணிக்கிறேன். ஆனால் அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் என் ஆழ்ம‌ன‌தில் ப‌திந்துபோன‌தால், ர‌ன்னிங்கில் இற‌ங்குவ‌தென்றால் ம‌ட்டும், இன்னும் என‌க்கு பய‌ம்தான்.

சென்ற‌ வார‌ம் அலுவ‌ல‌க‌ம் முடிந்து இர‌வு 9:30 ம‌ணிக்கு வீட்டுக்கு பேருந்தில் வ‌ந்துகொண்டிருந்தேன். இர‌வு நேர‌மாத‌லால் வெறும் 15 முத‌ல் 20 ப‌ய‌ணிக‌ளே இருந்த‌ன‌ர் (M15 - மேட‌வாக்க‌ம் டூ மைலாப்பூர்). பேபி ந‌க‌ர் ஸ்டாப் அருகே போய்க்கொண்டிருக்கும்போது இற‌ங்குவ‌த‌ற்காக‌ ஃபுட்போர்டில் நின்றுகொண்டிருந்தேன். ஓட்டுன‌ர் வ‌ண்டியை கொஞ்ச‌ம் ஸ்லோவாக‌ ஓட்டினார். "சார் பேபி ந‌க‌ர் எற‌ங்க‌ணும்" என்றேன். திடீரென்று "அட‌ நிறுத்தி தொலைப்பா, எற‌ங்க‌ட்டும்" என்று கோப‌மான‌ குர‌ல், ந‌ட‌த்துன‌ரிட‌மிருந்து. ஓட்டுன‌ரிட‌ம் எரிச்ச‌லை காண்பித்த‌பின் அவ‌ருடைய‌ அடுத்த‌ டார்கெட் அடியேன். நான் இற‌ங்கிய‌வுட‌ன் என்னை பார்த்து "ஸ்லோ ப‌ண்ணா எற‌ங்க‌வேணாமா, மூணாங்கிளாஸ் பைய‌ன்கூட‌ எற‌ங்குவான்" என்று க‌த்தினார். பேருந்தில் இருந்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ரும் திரும்பி பார்க்க‌ கொஞ்ச‌ம் அவ‌மான‌மாக‌வே இருந்த‌து என‌க்கு. கூட‌வே உள்ளுக்குள் கோப‌மும் எட்டிப்பார்க்க‌, "நான் ஒண்ணாங்கிளாஸ்தான்" என்று ப‌திலுக்கு க‌த்தினேன். பேருந்து கிள‌ம்பிய‌தாலும், அவ‌ரின் வ‌ய‌தின் கார‌ண‌மாக‌வும், மேலும் வார்த்தைப்போரில் ஈடுப‌ட‌ நான் விரும்ப‌வில்லை.

உட‌ன் இற‌ங்கிய‌ ஒரு ந‌ப‌ர், "விடுங்க‌ சார், இவ‌னுங்க‌ என்னைக்கு ந‌ம்ம‌ள‌ ம‌திச்சிருக்கானுங்க‌, ர‌ன்னிங்க‌ல‌ நாம‌ எற‌ங்குனா, அதான் நிக்குதில்ல‌ அதுக்குள்ள‌ என்ன‌ அவ‌ச‌ர‌ம்னு க‌த்துவானுங்க‌. இல்ல‌னா, இப்ப‌டிதான் ____ மாதிரி ந‌ம்ம‌ மேல‌ ஏறுவானுங்க‌" என்றார். "ம்.." என்று சொல்வ‌தை த‌விர‌ என‌க்கு அப்போது வேறு வார்த்தைக‌ள் கிடைக்க‌வில்லை. ஏன் இப்ப‌டி ப‌ல‌ பேர் முன்னிலையில் என்னை திட்ட‌வேண்டும்? பேருந்து நின்ற‌வுட‌ன் இற‌ங்க‌லாம் என்று நான் நினைத்த‌து குற்ற‌மா? எத்த‌னையோ முறை 5.50 டிக்கெட்டுக்கு 6 ரூபாய் வாங்கிவிட்டு "சில்ல‌றை இல்ல‌" என்று சொல்லும்போது எதுவுமே எதிர்த்து பேசாம‌ல் அமைதியாய் இருந்திருக்கிறேன். வெறும் 50 பைசாவாக‌ இருந்தாலும் அது என்னுடைய‌ காசு. எப்போதும் Aggressiveஆ இருக்க‌ணும் இல்ல‌ன்னா நாம எப்ப‌வும் ஏமாந்துகிட்டு இருக்க‌வேண்டிய‌துதான் என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொல்வேன். ஆனால் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளின் அறிவுரைப்ப‌டி இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ கொஞ்ச‌ம் சாந்த‌மாக‌ மாறியிருக்கிறேன். இந்த‌ நட‌த்துன‌ர் என்னை ட்ரீட் செய்த‌ வித‌த்தால் அன்று இர‌வு வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌து, Aggressiveஆ இருந்தாத்தான் வேலைக்காவும் போல‌.....

***********************************************************

தூத்துக்குடியில் த‌ம‌ன்னாவுக்கு ரசிக‌ர் ம‌ன்ற‌ம் ஆர‌ம்பித்து, பையா ப‌ட‌ ரிலீஸின்போது க‌ட்அவுட் வைத்து, பாலாபிஷேக‌ம் எல்லாம் செய்திருக்கின்ற‌ன‌ர். ஒரு ந‌டிக‌ரை/ந‌டிகையை இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ர‌சிக்கிறோம். அவ்வ‌ள‌வுதான் நாம் அவ‌ர்க‌ளுக்காக‌ செய்ய‌வேண்டிய‌து. இப்ப‌டி பாலை கொட்டி அதை வீணாக்குவ‌த‌ற்கு ப‌தில், குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌த்திற்கு சென்று அவ‌ர்க‌ளுக்கு மூன்று வேளை உண‌விற்கு ஏற்பாடு செய்திருந்தால் க‌ண்டிப்பாக‌ பாராட்ட‌லாம். அதை செய்யாம‌ல், இதுபோன்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ ந‌டவ‌டிக்கையில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளை என்னென்று சொல்ல‌?

ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம், "க‌ட‌வுளுக்கு செய்யும் பாலாபிஷேக‌த்திற்கு இணையாக‌ என் க‌ட்அவுட்டுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌தில் என‌க்கு உட‌ன்பாடில்லை" என்று த‌ம‌ன்னாவே இதை டிஸ்க‌ரேஜ் செய்திருக்கிறார். ச்சே, குழ‌ந்தைக்கு என்ன ஒரு ந‌ல்ல‌ ம‌ன‌சு!...:)

ஒரு போட்டி: இதுவ‌ரை இந்த‌ வ‌லைப்பூவில் எத்த‌னை முறை த‌ம‌ன்னாவின் புகைப்பட‌ம் இட‌ம்பெற்றுள்ள‌து என்ப‌தை க‌ண்டுபிடித்து, ப‌திலை மெயிலில் அனுப்பினால் ஒரு த‌ம‌ன்னா புகைப்பட‌ம் ப‌ரிசாக‌ அனுப்ப‌ப்ப‌டும் ;)

***********************************************************

இலங்கையில் 3 லட்சம் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர் ராஜபக்ச. அவரது ஆதரவாளரான கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார்.

‌இ‌ந்‌நிலை‌யி‌ல், அவர் சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தேன். அதன்படி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் விமான நிலையத்திற்குச் சென்றோம்.

ஆனால் திட்டமிட்டபடி வராமல் முன்கூட்டியே காலை 8.45 மணிக்கு விமானத்தில் சென்னை வந்துவிட்டார் ஜெயசூர்யா. ஆனா‌ல், நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. இது புதிய தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றி
என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அர‌சிய‌ல் செய்திக‌ளில் ஆர்வ‌ம் ஏற்ப‌ட்ட‌ புதிதில் என‌க்கு இவ‌ர் வித்தியாச‌மாக‌ தெரிந்தார். த‌மிழ‌க‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் என்றால் எப்போதும் வேட்டி ச‌ட்டையிலேயே இருப்பார்க‌ள் என்ற‌ பிம்ப‌ம் இவ‌ரை பார்த்த‌போது மாறிப்போன‌து. ஆனால் ஜாதியை ம‌ட்டுமே ந‌ம்பி, நானும் ஒரு ச‌ராச‌ரி அர‌சிய‌ல்வாதிதான் என்று சொல்லாம‌ல் சொல்லி செல்லாக்காசாகி போனார். ச‌ண்டிய‌ரை விருமாண்டியாக்கிய‌து கின்ன‌ஸ் புத்த‌க‌த்தில் ப‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ இவ‌ர‌து சாத‌னைக‌ளில் ஒன்று. இது போதாதென்று இப்போது இந்த‌ 'ஜெய‌சூர்யா' அறிக்கை விட்டு, சுப்பிர‌ம‌ணிய‌ சாமிக்கு நான் எந்த‌வித‌த்திலும் குறைந்த‌வ‌ன‌ல்ல‌ என்று காமெடி பீஸாகியிருக்கிறார். எ.கொ.கி.சாமி இது?!

***********************************************************

அடிக்க‌டி தூக்க‌த்தில், குறிப்பாக‌ விடிய‌ற்காலையில், ப‌திவில் எழுத‌ வேண்டும் என்று ம‌ன‌தில் ஏதேதோ எண்ண‌ங்க‌ள் அலைபாய்கிற‌து. சென்ற‌ வார‌த்தில் ஒரு நாள், ஒரு க‌தையே தோன்றிய‌து. எப்ப‌டி ஆர‌ம்பிக்க‌ வேண்டும், என்னென்ன‌ கேர‌க்ட‌ர்க‌ள், க‌தையில் வ‌ரும் க‌ண‌வ‌ன் ம‌னைவி ஆகியோரின் பெய‌ர்க‌ள்‌, க‌தை நட‌க்கும் நேர‌ம் என்ன‌, காலையா மாலையா, எப்ப‌டி முடிக்க‌ வேண்டும் என்ப‌து வ‌ரை எல்லாமே. சோம்ப‌லா, ட‌ய‌ர்ட்ன‌ஸ்ஸா..எதுவென்று தெரிய‌வில்லை, அந்த‌ ச‌ம‌ய‌த்தில் எழுந்து இதையெல்லாம் குறித்துக்கொள்ள‌ விருப்ப‌ம் இல்லாம‌ல் (பாதி தூக்க‌த்தில்) இருந்தேன். ஆனால் காலையில் எழுந்த‌வுட‌ன் நிறைய‌ ம‌ற‌ந்துபோய் க‌தைக்க‌ரு ம‌ட்டும் ஞாப‌க‌ம் இருந்த‌து.

இது எல்லோருக்கும் ந‌ட‌க்கிற‌தா அல்ல‌து நான் ப்ளாகோமேனியா பிடித்து அலைகிறேனா என்ப‌து தெரிய‌வில்லை. ப்ளாக‌ராண்ட‌வா, இன்னும் என்னை எப்ப‌டிலாம் சோதிக்க‌ப்போறீயோ தெரிய‌ல‌!

***********************************************************

தோழியுட‌ன் பேசிக்கொண்டிருந்த‌போது சொன்னேன், "வார‌த்துல‌ செவ்வாய், புத‌ன், வியாழ‌க்கிழ‌மைக‌ளை டெலிட் செஞ்சுட்டா எப்ப‌டியிருக்கும் இல்ல‌?". திங்க‌ள் கிழ‌மை வேலை, ம‌றுநாள் வெள்ளிக்கிழ‌மை கொஞ்ச‌ம் வேலை..அடுத்து வீக் எண்ட் ரெஸ்ட். வாவ் எப்ப‌டி இருக்கும்?! ஆனால் அந்த‌ சைடிலிருந்து பாஸிட்டிவ்வாக‌ ப‌தில் இல்லை. "கிரியேட்டிவ்வா திங்க் ப‌ண்றேனே, பாராட்டுனா என்ன‌வாம்?" என்றேன். இந்த‌ முறை வ‌ந்த‌து...பாராட்டு அல்ல‌, ப‌தில் "இதுக்கு பேரு கிரியேட்டிவ் அல்ல‌, கிறுக்கேட்டிவ்". ம்...என்ன‌ ப‌ண்ற‌து, சென்னைல‌ வெயில் அதிக‌ம்!

***********************************************************

நேற்று காலை சுமார் 11 ம‌ணி இருக்கும். சைக்கிளில் ஒருவ‌ர் இள‌நீர் விற்றுக்கொண்டிருந்தார். காலில் செருப்பு கூட‌ இல்லாம‌ல். ஒரு இள‌நீர் குடித்த‌பின்தான் அதனை க‌வ‌னித்தேன். இன்னொன்று வெட்ட‌ சொல்லிய‌பின், அவ‌ரிட‌ம் கேட்டேன், 'ஏன் இந்த‌ வெயில்ல‌ செருப்பு கூட‌ போடாம‌ இருக்கீங்க‌?'. வெறும் புன்ன‌கையை ம‌ட்டுமே ப‌திலாக‌த் த‌ந்தார். அடுத்த‌ இள‌நீரையும் குமுக்கிவிட்டு காசு கொடுத்த‌பின் சொன்னேன், 'முத‌ல்ல‌ செருப்பு வாங்கி போட்டுகிட்டு வேலை செய்ங்க‌'. பாக்கி சில்ல‌றையுட‌ன், மீண்டும் புன்ன‌கையையே ப‌திலாக‌ அளித்தார். ஏனோ ம‌ன‌து கொஞ்ச‌ம் க‌ன‌த்து போன‌து...:(



29 comments:

  1. விருதுக்கு மிக்க நன்றி;

    எண்ணி சொல்ல நேரமில்லை; இருந்தாலும் அந்த போட்டோவை எனக்கே அனுப்பவும் :))

    ReplyDelete
  2. கண்டக்டர் மேட்டர் படிச்சவுடனே, படிக்கிறப்போ நாங்க ஒரு கண்டக்டரை தண்டிச்சது ஞாபகத்துக்கு வந்துச்சி..!

    50 பைசா திருடும் கௌரவமான பிச்சைக்காரர்கள் அவர்கள்.

    விருதுக்கு ரொம்ப நன்றிண்ணே..!

    ReplyDelete
  3. முடிக்கும்போது ஒரு டச்
    வச்சுட்டீங்க.
    உங்களுக்கும், விருது பெற்ற
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பெற்ற விருதிற்கு வாழ்த்துகளும், கொடுத்த விருதிற்கு நன்றியும் ரகு.

    Aggressiveness இருக்க வேண்டிய இடத்தில் அவசியம் இருக்க வேண்டும்.

    உங்க பேரை ரகுன்றதுல இருந்து “தமன்”ன்னு மாத்திக்கோங்க. ;)

    ஹிஹிஹி... ரொம்பக் காமெடி தான்.

    முதல்ல நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா ப்ளாக்மேனியா வியாதி இருக்குறவங்களுக்குப் பொண்ணுங்க கிடைக்கிறதில்லையாம்.

    உங்ககிட்டேயும் இருந்து தோழி அப்டேட்ஸா....

    ரொம்ப சென்ஸிடிவா இருக்கீங்க. ஐ.டி.மக்களுக்கு இல்லாத பழக்கமாச்சே.

    ReplyDelete
  5. engal sangam

    Viruthu pettra engal annan.
    Paya pada kadha nayagan aga vendiya engal blogmaniya ragu avargalkku..

    VALTHUKKALIUM..(viruthu petrathukum
    algai eluthuvatharkum...)

    KANDANANGALAIUM THIRIVITHU KOLKIROM..(adikkadi tamanavai pathi pesuvathal..)

    neriya eluthi erukkenga..
    oru kalavai pola..
    adangam mudhal...
    ellam nandraga ullathu
    anna.

    Nandri valga valamudan
    Varuthapadtha VAsippor Sangam
    ceyalalar
    Complan Surya

    ReplyDelete
  6. ///////அதென்ன‌ ச‌ன்ஷைன்? திமுக‌ தொட‌ர்ந்து இடைத்தேர்த‌ல்க‌ளில் வெற்றி பெறுவ‌தை குறிக்கிற‌தா? //////

    ஆஹா இதிலும் அரசியல் இருக்கா >????????????

    ReplyDelete
  7. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. பல நிகழ்வுகளை மிகவும் அழகாக தொடுத்து கொடுத்து இருக்கிறீர்கள் .மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  9. நீங்க சொன்ன அதே ரூட்ல டான்சி நகர் என்று ஒரு ஸ்டாப் வரும் . நான் இறங்கும்போதெல்லாம் கத்தனும் டிரைவர் ஸ்டாப் பண்ணுங்க கண்டக்டர் ஸ்டாப் பண்ணுங்கனு , நானும் விஜயநகர் தாண்டினதுமே எழுந்து நிற்ப்பேன் ஆனாலும் இந்த கண்டக்டர் என்னையும் பார்க்க மாட்டார் ஸ்டாப் ஐயும் பார்க்க மாட்டர் . ஒருதடவ நான் அவ்ளோ கத்தியும் அந்த ஆளுக்கு கேட்கல என்ன திட்டுறார் இறங்கணும்னு சொல்ல வேண்டிதானே என்று . எனக்கு வந்த கோவத்துல இனி டிக்கெட் குடுக்கும்போது ஒரு மைக்கும் சேர்த்து குடுங்க ஸ்டாப் வந்ததும் கத்துறேனு சொல்லிட்டு இறங்கிட்டேன் . இப்போ இடம் மாறியாச்சு அந்த தொல்ல இல்ல .

    ReplyDelete
  10. //குழ‌ந்தைக்கு என்ன ஒரு ந‌ல்ல‌ ம‌ன‌சு!.//

    நடக்கட்டும்....

    கண்டிப்பா மேனியா தான்.....

    ReplyDelete
  11. விருது பெற்ற
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    இப்படிக்கா பாஸ் பண்ணதுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. விருதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

    //ஆனால் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளின் அறிவுரைப்ப‌டி இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ கொஞ்ச‌ம் சாந்த‌மாக‌ மாறியிருக்கிறேன். இந்த‌ நட‌த்துன‌ர் என்னை ட்ரீட் செய்த‌ வித‌த்தால் அன்று இர‌வு வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌து, Aggressiveஆ இருந்தாத்தான் வேலைக்காவும் போல‌.....//

    ஒரு ந‌ட‌த்துன‌ருக்காக Aggressiveவா மாறனுமா ரகு? விடுங்க விடுங்க.... எல்லாத்தையும் கூலா எடுத்திட்டு போயிட்டே இருங்க!பொறுமையும் Politenessம் இல்லாதவங்களை என்னதான் செய்யறது சொல்லுங்க?

    விரைவில் உங்களுக்கான பெண் உங்களை தேடிவந்து சீக்கிரத்தில் இந்த தமனாவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்:)(ஆனா அதன் பிறகும் இந்த தமனாமேனியா தொடரப்போவது உறுதி:)

    //இது எல்லோருக்கும் ந‌ட‌க்கிற‌தா அல்ல‌து நான் ப்ளாகோமேனியா பிடித்து அலைகிறேனா என்ப‌து தெரிய‌வில்லை.//....
    இப்படி தைரியமா ஒத்துக்கிட்ட உங்க நேர்மை பிடிச்சிருக்கு:)

    //"இதுக்கு பேரு கிரியேட்டிவ் அல்ல‌, கிறுக்கேட்டிவ்". ம்...என்ன‌ ப‌ண்ற‌து, சென்னைல‌ வெயில் அதிக‌ம்!//.... வெயில் அதிக‌ம்னு ந‌ல்லாவே தெரியுது!

    அந்த‌ ந‌ட‌த்துன‌ர் வாழும் அதே ஊரில்தான் இந்த‌ இள‌நீர் விற்ப‌வ‌ரும் இருக்கிறார். அதிலும் காலை 11 ம‌ணி வெயிலில், காலில் செருப்பு இல்லாத‌ நிலையிலும் அவ‌ரால் ம‌ட்டும் எப்ப‌டி புன்ன‌கைக்க‌ முடிக்கிற‌து.
    சோ, aggressiveness வேண்டாமே!!!

    ReplyDelete
  15. ந‌ன்றி மோக‌ன், க‌ண்டிப்பா அனுப்ப‌றேன் ;)

    ந‌ன்றி ராஜு, உண்மைதாண்ணே

    ReplyDelete
  16. ந‌ன்றி சைவ‌கொத்துப்ப‌ரோட்டா, விருது கொடுத்த‌மைக்கும்...:)

    ReplyDelete
  17. ந‌ன்றி விக்கி, பேரை மாத்த‌ற‌தா, அது ம‌ட்டும் வேணாம்..

    //ப்ளாக்மேனியா வியாதி இருக்குறவங்களுக்குப் பொண்ணுங்க கிடைக்கிறதில்லையாம்//

    ஐயையோ, என்னாதிது, புதுசு புதுசா கிள‌ப்பி விடுறீங்க‌!

    //ரொம்ப சென்ஸிடிவா இருக்கீங்க. ஐ.டி.மக்களுக்கு இல்லாத பழக்கமாச்சே//

    மீடியாக்க‌ள்னால‌ இந்த‌ மாதிரி ஒரு நெக‌ட்டிவ் இமேஜ் க்ரியேட் ஆகியிருக்கு. ஆனா எல்லாரும் அப்ப‌டி இல்ல‌ங்க‌ற‌துதான் உண்மை. ஐ.டி. ம‌க்க‌ள் நிறைய‌ உத‌விக‌ளை தேவைப்ப‌டுவோருக்கு செய்ய‌றாங்க‌.

    ReplyDelete
  18. வாங்க‌ காம்ப்ளான் சூர்யா, ஒரு முடிவோட‌தான் இருக்கீங்க‌ போல‌..

    ஃப்யூச்ச‌ர்ல‌யும் உங்க‌ ச‌ங்க‌த்துல‌ருந்து நிறைய‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள் தெரிவிக்க‌வேண்டி வ‌ரும் பாஸ் ;)

    அண்ணானுலாம் சொல்ல‌ வேணாம் சூர்யா, ர‌குன்னே சொல்லுங்க‌ :)

    ReplyDelete
  19. ந‌ன்றி ச‌ங்க‌ர், ஆர‌ம்பிச்சு வெச்ச‌வ‌ங்க‌ யார்னு தெரிஞ்சா க‌ண்டிப்பா கேட்போம், அர‌சிய‌ல் இருக்கான்னு :)

    ந‌ன்றி ம‌தார், ம்..டான்சி ந‌க‌ர் தெரியும், இதே பிர‌ச்னையை ப‌ல‌ர் ஃபேஸ் ப‌ண்ணி பாத்திருக்கேன், ஏதோ ப‌ஸ்ஸோட‌ ஓன‌ர் ரேஞ்சுக்குதான் ந‌ட‌த்துன‌ரோட‌ அணுகுமுறை இருக்கும். நீங்க‌ தைரிய‌மா கேட்டுட்டீங்க‌, ப‌ல‌ர் கேட்காம‌ அவ‌ங்க‌ளுக்குள்ளேயே புல‌ம்பிடுவாங்க‌ :(

    ReplyDelete
  20. ந‌ன்றி ஜெட்லி, ஹி..ஹி..இருக்க‌லாம் ;))

    ந‌ன்றி அஹ்ம‌து

    ReplyDelete
  21. ந‌ன்றி வித்யா, இப்பிடிக்கா பாஸ் ப‌ண்ண‌தை அப்பிடியே வாங்கிகிட்ட‌துக்கு

    ந‌ன்றி சாருஸ்ரீராஜ்

    ReplyDelete
  22. //ஒரு ந‌ட‌த்துன‌ருக்காக Aggressiveவா மாறனுமா ரகு? விடுங்க விடுங்க//

    ந‌ன்றி ப்ரியா, அந்த‌ நேர‌த்துல‌ அவ‌ர் பேசின‌ வித‌ம்தான் என்னை அப்ப‌டி யோசிக்க‌வெச்சுது

    //விரைவில் உங்களுக்கான பெண் உங்களை தேடிவந்து சீக்கிரத்தில் இந்த தமனாவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்:)(ஆனா அதன் பிறகும் இந்த தமனாமேனியா தொடரப்போவது உறுதி:)//

    ஹுக்கும்..அதுக்கு அப்புற‌ம் எப்ப‌டிங்க‌ தொட‌ரும்? சைல‌ன்டா ர‌சிச்சுட்டு போயிட்டே இருக்க‌வேண்டிய‌துதான் :(

    //அந்த‌ ந‌ட‌த்துன‌ர் வாழும் அதே ஊரில்தான் இந்த‌ இள‌நீர் விற்ப‌வ‌ரும் இருக்கிறார். அதிலும் காலை 11 ம‌ணி வெயிலில், காலில் செருப்பு இல்லாத‌ நிலையிலும் அவ‌ரால் ம‌ட்டும் எப்ப‌டி புன்ன‌கைக்க‌ முடிக்கிற‌து.
    சோ, aggressiveness வேண்டாமே!!!//

    ஹாஹ்ஹா, டீச்ச‌ர்கிட்ட‌ பேசி ஜெயிக்க‌ முடியுமா...ஒத்துக்க‌றேங்க‌ aggressiveness வேண்டாம்தான் :)

    ReplyDelete
  23. ந‌ன்றி அண்ணாம‌லையான்

    ReplyDelete
  24. டேங்க்ஸுப்பா...

    பாலபிஷேகம் எல்லாம் இவ்ளோ சீரியஸா எடுத்துகாதிங்க பாஸ்..அந்தந்த வயசுல சும்மா ஆடறதுதான்..

    தேவையே இல்லாமல் குடம் குடமா நெய் ஊத்தறாங்களே கோவில்ல.. அதுல தங்களுக்கு உடன்பாடு உண்டா? :))

    தோழியா???????ஆவ்வ்.. நோ நோ.. பைக் விளம்ப்ரத்துல போடற மாதிரி வார்னிங் மெசெஜ் போடனும் போலிருக்கே.. இல்லைன்னா இப்படித்தான் அடிபடுவீங்க.. :))

    ReplyDelete
  25. //பேருந்தில் ஃபுட்போர்டில் ப‌ய‌ணித்த‌ ஒருவ‌ன், ர‌ன்னிங்கில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கும்போது, கால் ஸ்லிப் ஆகி, விழுந்து உருண்டு புர‌ண்டு நான்கு அடி த‌ள்ளி போய் விழுந்தான்.//

    இதே மாதிரி நானும் விழுந்திருக்கேன் ரகு, அதுவும், நான் அப்போ மூணாங்கிளாஸ் படிக்கலே, பத்தாவதுதான் படிச்சிட்டிருந்தேன். So... விழுறதுக்கு க்ளாஸ் முக்கியமில்லே, நீங்க இந்த மாதிரி, கண்டெக்டர்கள் பேச்சுக்காக ரன்னிங்ல இறங்காம இருக்கிறதுதான் நல்லது...

    உங்க தூக்கத்தில கதை வந்த மேட்டருக்கு ஒரு சின்ன முயற்சி ட்ரை பண்ணி பாருங்க...

    தினமும் தூங்கப் போறதுக்கு முன்னாடி, ஒரு பென்(எழுதுகோல்!)-ஐயும் & நோட்பேட்-ஐயும் பக்கத்துல வச்சிக்கோங்க, காலையில எழுந்ததும், முதல் வேலையா அந்த பென்-ஐ எடுத்து நீங்க கனவுல பாத்த விஷயங்களை ஸ்பீடா குறிச்சிக்கோங்க... கவனம்: உங்களுக்கு முழிப்பு வந்ததும், விஷய்ம மறந்துக்கிட்டே வரும்). பல விஷயம் தெரிய வரும். ஒரு 2 நாளைக்கு கஷ்டமா இருக்கும், 3வது நாள்லருந்து பழகிடும். நான் இதை சமீப காலமா ஒரு SCRIPTக்காக முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சி தொகுப்பா படிச்சிப் பாக்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..! ஆச்சர்யமா பல விஷயம் நிஜத்துல நடந்த பல இன்ஸிடெண்ட்டோட சிங்க் ஆகுது.

    ReplyDelete
  26. ந‌ன்றி கார்க்கி, கோயிலில் ஊத்த‌ற‌து என‌க்கு உட‌ன்பாடு இல்லைதான், அதுவாவ‌து ஒரு தெய்வ‌ ந‌ம்பிக்கையில் செய்றாங்க‌, க‌ட்அவுட்டுக்கு செய்ய‌ணும்னு என்ன‌ அவ‌சிய‌ம்?

    தோழி மேட்ட‌ர் - ஹீரோ எப்ப‌வும் முத‌ல்ல‌ மூணு அடி வாங்கிட்டுதான் திருப்பி கொடுப்பாராம் ;))


    ந‌ன்றி ஹ‌ரீஷ், இல்லை அவ‌ர் சொன்ன‌துக்காக‌, ர‌ன்னிங்ல‌ இற‌ங்க‌மாட்டேன், இற‌ங்க‌ற‌ தைரிய‌மும் இல்ல. நீங்க‌ சொல்ற‌ பென்&நோட்பேட் மேட்ட‌ர் செம‌ இன்ட்ர‌ஸ்டிங் ஹ‌ரீஷ்...க‌ண்டிப்பா ட்ரை ப‌ண்றேன் :)

    ReplyDelete
  27. இதுவும் தெய்வ நம்பிக்கை மாதிரிதான் சகா. இல்லாத, பார்க்க முடியாத கடவுளுக்கு நெய் ஊத்தலாம்ன்னா கண் எதிர இருக்கிற தெய்வத்துக்கு ஊத்தினா என்ன தப்பு? :)

    //தோழி மேட்ட‌ர் - ஹீரோ எப்ப‌வும் முத‌ல்ல‌ மூணு அடி வாங்கிட்டுதான் திருப்பி கொடுப்பாராம் //

    ஹலோ.. அது வில்லனுக்கு.. இன்னும் ஹீரோயினுக்கும் வில்லனுக்குமே வித்த்யாசம் தெரில உங்களுக்கு... விடுங்க சகா.. :))

    ReplyDelete
  28. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete